செவ்வாய், 29 செப்டம்பர், 2015

தொழில் உலகில் சிறந்த பெண்கள்



ஆண்கள் அதிக அளவில் பங்களிக்கும் வியாபார உலகில் அதிக திறமை வாய்ந்த பெண்களாகத் திகழும் மங்கையர் வரிசை இதோ...
Sheryl Sandberg
உலகம் முழுவதும் பல கோடி மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஃபேஸ்புக்கின் முதுகெலும்பு இவரே. சி.ஓ.ஓ. பதவியில் இருக்கும் 45 வயதான ஷெரில், 2013இல் அவர் எழுதிய புத்தகத்தின் மூலம் (Lean In) மேலும் புகழடைந்தவர். இவரது புத்தகமும் ஹாட் லிஸ்ட்டில் இடம் பெற்றிருக்கிறது. டெக்னாலஜி துறையில் இருக்கும் அதிக வருமானம் பெரும் சிலரில் ஒருவர் இவர்.
Abigail Johnson
அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான ஃபிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ் தலைவர் பதவியை அலங்கரிக்கும் அபிகெய்ல், 52 வயது ஆனவர். 2012 முதல் இப்பதவியில் இருக்கிறார். உலகின் டாப் 10 பணக்காரப் பெண்மணிகள் பட்டியலிலும் இவர் இடம் பெறுகிறார்.
Pat Woertz
61 வயதான பேட்வோர்ட்ஸ் ADM என்ற உணவுப் பதப்படுத்துதல் மற்றும் கமாடிட்டி நிறுவனத்தின் சி.இ.ஓ. மற்றும் சேர்மனும் கூட. 2006 முதல் இந் நிறுவனத்தை தலைமை ஏற்று நடத்துகிறார்.
Irene Rosenfeld
சேர்மன் மற்றும் சி.இ.ஓ. பதவியில் இருப்பவர் அய்ரின் ரோசன்ஃபெல்ட். உலகம் முழுதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களை கொண்ட மாடலீஜ் இன்டர் நேஷனல் உணவு நிறுவனத்தின் உயரிய தலைவர். 61 வயதான இவர் அடுத்த 4 ஆண்டுகளில் நிறுவனத்தின் மிகப்பெரிய மாறுதலுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்.
Meg Whitman
டெக்னாலஜி துறையில் முக்கிய நிறுவனமான ஹெச்.பி.யின் சேர்மன், சி.இ.ஓ. மற்றும் பிரசிடென்ட், 58 வயதான மெக் விட்மென். பி அண்ட் ஜி, வால்ட் டிஸ்னி, இபே போன்ற நிறுவனங்களின் வளர்ச்சியில் முக்கியப் பணியாற்றி ஹெச்.பி.க்கு வந்திருப்பவர். 58 வயதான மெக், உலகின் சிறந்த வியாபார வல்லுநர்களில் ஒருவரும் கூட.
Ellen Kullman
டுபண்ட் என்னும் கெமிக்கல், பயோ அறிவியல் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் சி.இ.ஓ. பதவியில் இருக்கிறார், 58 வயதான எல்லன் குல்மென். தனது பதவி காலத்தில் நிறுவனத்தின் பங்கு மதிப்பை பன்மடங்கு உயர்த்திய பெருமைக்குரியவர்.
-விடுதலை,17.3.15

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

கர்ப்பப்பை அகற்றப்பட்ட பெண்ணிற்கு தாயே வாடகைத் தாயாக இருந்து குழந்தை பெற்றார்


சென்னை, மார்ச் 7-_ கர்ப்பப்பை அகற்றப்பட்ட சென்னையை சேர்ந்த 27வயது பெண்ணிற்கு அவரது தாயே வாடகை தாயாக இருந்து குழந் தையை பெற்றுக்கொடுத் துள்ளார். இதுகுறித்து சென்னை வடபழனியில் உள்ள ஆகாஷ் குழந்தை யின்மை சிகிச்சை மைய மருத்துவமனையின் நிர் வாக இயக்குநர்கள் டாக் டர் காமராஜ், டாக்டர் ஜெயராணி காமராஜ் ஆகி யோர் வெள்ளியன்று (மார்ச் 6) செய்தியாளர்களி டம் கூறியது வருமாறு:
சென்னையை சேர்ந் தவர் 27வயது பெண் லட் சுமி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் திருமண மாகி 10ஆவது மாதமே கருவுற்றார். ஏழாவது மாதத்தில் நஞ்சுபிரிந்து அதிகப்படியான உதிரப் போக்கு வெளியாகி தாயின் நலன் கருதி அறுவைச் சிகிச்சை செய்யப் பட்டது. அப்போது இறந்த குழந் தையை வெளியே எடுத் தனர். வெளியே எடுத்த பின்னரும் கர்ப்பப்பை சுருங்காமல் உதிரப் போக்கு அதிகமாகி அதை நிறுத்து வதற்கு எவ்வித மருத்துவ முறையும் சரிவராததால் தாயை காப்பாற்ற வேண்டி கர்ப்பப்பையை அகற்றி விட்டனர்.
இதனால் அந்த இளம் பெண் குழந்தையும் இல் லாமல் கர்ப்பப்பையும் இல்லாமல்  நிலைகுலைந்து போனார். இந்தநிலையில் அந்த பெண்ணிற்கு வாடகை தாய் மூலமாக முதலில் குழந்தைபேறுக்கு ஏற்பாடு செய்யப் பட்டபோது அது தோல்வியில் முடிந்தது. இதன்பின்னர் 2013 ஆம் ஆண்டு அந்த பெண், அவ ரது கணவர், பெண்ணின் தாயார் ஆகியோர் எங் களது மருத்துவமனைக்கு வந்தனர். நாங்கள் அவர் களிடம் சொந்தங்களில் யாராவது வாடகை தாயாக இருக்கலாம் என்று சொன்ன போது அந்த பெண்ணின் 61வயது தாயே அதற்கு முன்வந்தார்.
அவர் ஏற்கனவே 3 பெண் குழந்தைகளை பெற்றெடுத்து மாத விலக்கு நின்று 5 ஆண்டுகளான நிலையில் தன் மகளுக்காக தானே வாடகைத் தாயாக மாறி ஒரு குழந்தையை சுமந்து பெற்றெடுத்தது மிகப்பெரிய சாதனை யாகும்.
பெண்ணின் கரு முட்டைகளும் அவரது கணவரின் விந்தணுக்களையும் அந்த தாயின் கர்ப் பப்பையில் பொருத்தி மருத்துவமனையின் தீவிர கண்காணிப்பில் வைக்கப் பட்டார். கடந்த நவம்பர் மாதம் அவர் 2.7 கிலோ எடையில் பெண்குழந் தையை பெற்றுக் கொடுத் தார். தாயே தனது மக ளுக்கு குழந்தை பெற்றுக் கொடுத்திருப்பது இது உலகில் இரண்டாவது முறையாகும்.
ஏற்கனவே லண்டன் நாட்டைச் சேர்ந்த கர்ப் பப்பை அகற்றப்பட்ட ஒரு இளம் பெண்ணிற்கு அவரது தாயாரே கர்ப்பப்பையை தானமாக தந்தார். ஸ்வீடன் நாட்டில் மாற்று உடல் உறுப்புகள் பொருத்தப் படுவதை போல் கர்ப் பப்பை மாற்று அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள் ளப்படுகிறது. அங்கு அந்த லண்டன் தாயின் கர்ப் பப்பை அகற்றப்பட்டு மக ளுக்கு பொருத்தப்பட்டது. பின்னர் அந்தப்பெண் தனது கணவரோடு சேர்ந்து இயல்பாக கருவுற்றார்.
பின்னர் குழந்தையை பெற்றெடுத்தார். இந்த விஞ்ஞான வளர்ச்சியை பார்த்து உலகமே ஆச்சரிய மடைந்தது.
இந்தியாவில் 2வது முறை
இந்தியாவில் தாயே தனது மகளுக்காக குழந் தையை பெற்றுக்கொடுத் திருப்பது இது இரண் டாவது முறையாகும். தமிழகத்தில் இதுவே முதல்முறை. குஜராத்தை சேர்ந்த தம்பதிகள் பிரிட் டனில் வசித்துவந்தனர். அந்த பெண்ணிற்கு கர்ப் பப்பை அகற்றப்பட்ட நிலையில் குஜராத் மாநிலம் ஆனந்த் நகருக்கு வந்து தனது தாயாரின் கர்ப்பப் பையில் தனது குழந் தையை பெற்றெடுத்தார். அதுதான் இந்தியாவில் தாயே மகளுக்கு குழந்தை பெற்றுக்கொடுத்த முதல் நிகழ்வாகும்.
-விடுதலை,7.3.15

வாடகைத்தாயாக மாறிய பாசமிகு அம்மா

மகளிர் நாள் சிறப்புச் செய்தி: மகனின் குழந்தை ஆசையை நிறைவேற்ற வாடகைத்தாயாக மாறிய பாசமிகு அம்மா
லண்டன், மார்ச் 8-_ பெண், ஆணை அண்டி வாழ் பவள் என்ற கற்பித்ததற்கு நேர் மாறாக ஆண்தான், வாழ்வின் ஆதி முதல் அந் தம் வரை தாய், சகோதரி, மனைவி, மகள், மருமகள் என்று, வாழ்வில் உறவு களாக வரும் பெண்க ளைப் பற்றிக் கொண்டே வாழ்கிறான். அப்படி ஒரு ஆண் _ பெண்ணைப் பற் றிய கதை இது.
இங்கிலாந்தைச் சேர்ந்த கைல் செசானுக்கு(27) குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். ஆனால் அவரால் ஒரு குழந்தைக்கு அப்பாவாக முடியாது. காரணம் கைல் ஒரு திருநங்கை. தன்னால் ஒரு பெண்ணுடன் உட லுறவு கொள்ள முடியாது என்றாலும் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்ற எண்ணம் கைலை வாட்டி வதைத்தது.
தொடக்கத்தில் குழந் தையை தத்தெடுக்கலாம் என்று நினைத்த கைலுக்கு செயற்கை கருத்தரிப்பைப் பற்றி தெரிய வந்தது. உடனே ஒரு செயற்கை கருத்தரிப்பு மய்யத்தை தொடர்பு கொண்டார். அவர்கள், தன்னார்வலரி டமிருந்து கருமுட்டையை பெற்று கைலின் விந்தணு வுடன் அதை உருமாற்றி வாடகைத்தாயின் கருப் பையில் வைத்து குழந்தை பெறும் முறை பற்றி விவ ரித்தனர்.
அவர்களின் அடுத்த கேள்வி உங்களுக் காக வாடகைத் தாயாக இருக்கப்போவது யார்? கைல் தனக்கான வாட கைத்தாயை தீவிரமாக தேட ஆரம்பித்தார். முத லில் தன்னுடைய உற வுக்காரப் பெண்களிடம் கேட்டார். தொடக்கத்தில் இசைவு தெரிவித்த அவர் கள் தங்கள் சகோதரனின் மகனை எப்படி சுமப்பது என்று யோசித்து முடியா தென்று மறுத்து விட்ட னர்.
பலரைச் சந்தித்தும் எந்தப் பலனுமில்லாத நிலையில், இனி தன் ஆசை நிறைவேறாதென்று முடிவு செய்த கைல் வாழ் வின் இறுதி நம்பிக்கையாக தனது அம்மாவிடம் தன் குழந்தைக்கு வாடகைத் தாயாக இருக்க முடியுமா? என்று கேட்டுள்ளார். தன் மகனின் குழந்தை ஆசையை நன்கு அறிந்த அம்மா மேரி ஒரு கணம் கூட யோசிக்காமல் சம்மதித் தார். தன் கணவரின் ஒப் புதலுடன் கருத்தரித்தார்.
தனது 47-ஆவது வயதில் கைலை சுமந்த அதே கருப்பையில் அவனது மக னையும் சுமந்தார். கடந்த ஆண்டு முழு வளர்ச்சிய டைந்த நிலையில் பிறந்த அந்த குழந்தைக்கு தற் போது எட்டு மாதமாகிறது.
தன் குழந்தைக்கு மைல்ஸ் என்று பெயர் வைத்த கைல் தனது தகப்பனாகும் ஆசைக்காக சட்ட ரீதியாகவும், பொரு ளாதார ரீதியாகவும் (சிகிச்சை செலவு சுமார் 15 லட்சம்) பல சிக்கல் களை எதிர்கொண்டார். அந்த போராட்டங்களில் வெற்றி பெற்ற பின்னும் பல விமர்சனங்களை எதிர் கொண்டார்.
மைல்ஸ், மேரியை எப்படிக் கூப்பிடு வான் அம்மாவா இல்லை பாட்டியா? என்று பல குரூரமான கேள்விகளால் கைல் மன வேதனைக்கு ஆளானார். இதுகுறித்து கைல் கூறுகையில்: நான் செய்த காரியத்தை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியா தென்று எனக்கு புரிகிறது. நான் ஆசைப்பட்டு திரு நங்கையாக இருக்க வில்லை. நான் திருநங்கை யாகத்தான் பிறந்தேன்.
பாலினத்தை வைத்து நான் தந்தையாவதை இந்த சமூகம் தடுக்க முடி யுமென்று நான் நம்ப வில்லை. எனக்கு ஒரு வீடு இருக்கிறது. அதேபோல் எனக்கென்று ஒரு உறவு வேண்டும்.
நான் பொது மக்கள் வரிப்பணத்தில் ஒன்றும் இதைச் செய்ய வில்லை. சூப்பர் மார்க் கெட்டில் கஷ்டப்பட்டு வேலை செய்து கிடைத்த பணத்தில்தான் இதை செய்கிறேன். இதில் மற்ற வர்களுக்கு என்ன பிரச் சினை என்று எனக்குப் புரியவில்லை. என்கிறார்.
இங்கிலாந்து நாட்டில் தனி ஆளாக வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற முதல் ஆண் கைல் தான். ஆனால் இந்த சாத னைக்குக் பின்னால் இருந் தது மேரி என்ற பெண். எல்லா சாதனைகளுக்கும் பின்னால் மட்டுமே இருக்கும் பெண்....
-விடுதலை,8.3.15

பெண்ணடிமைஒழிய மார்ச் 8 உலக மகளிர் நாள்!



2014-இல் வெளியிடப்பட்ட மனித வள மேம்பாட்டு அறிக்கையின் படி, (Human Development Report 2014)148 நாடுகளில் பாலின சமத்துவத்தில் 132-வது இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா!! நாம் அனைவரும், வெட்கப் பட வேண்டிய இத்தகவலோடு, இந்த நாளை கொண்டாடலாம்!!
அய்யோ! பொம்பளப் புள்ளயா? என்று குழந்தை பிறந்தவுடன் கேட்கும் குரல் நகர்ப்புறங்களில் பெரிதளவில் இல்லையென்றாலும், இன்றும் இக்குரல் கிராமப்புறங்களில் கேட்டுக் கொண்டே தான் இருக்கின்றன. இந்தியாவில் 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி , 1000 ஆண்களுக்கு 940 பெண்களே உள் ளனர். தமிழகத்தின் மக்கள் தொகைப் படி பார்த்தால், ஆண்களை விட 1,28,920 பெண்கள் குறைவாக உள்ளனர்.
பிறப்பதற்கே உரிமை மறுக்கப்படுகின்ற இந்தியா போன்ற கலாச்சாரக் காவலர்கள் நிரம்பி வழியும் நாடுகளில் பெண்ண டிமைத் தனத்திற்குப் பல்வேறு கோர முகங்கள் உண்டு! பிறப்பிலிருந்து இறப்பு வரை பெண்களைத் துரத்தித் துரத்தித் துன்புறுத்துகின்றன சமூகத்தில் நிலவும் பாலினப் பாகுபாடுகள்!
இப்படி மனித இனத்தின் சரி பகுதி இருக்கும் பெண் களை வதைத்துக் கொண்டிருக்கும், பெண்ணடிமையின் வேர் எது? என்று ஆராய்ந்து பார்த்தோமேயானால், அதற் குக் காரணம், கலாச்சாரம், பண்பாடு, மதம் ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்ட இச்சமூகம், ஆண்மைக்கும் பெண்மைக் கும் வகுத்து வைத்திருக்கும் இலக் கணமே! என்பது புலப்படும்.
ஆம்பளப் புள்ள மாதிரி, பொம்பளப் புள்ள மாதிரி 21-ஆம் நூற்றாண்டிலும், இக்கூச்சலை ஓர் ஆணாதிக்க சமூகத் தில் கேட்டுக் கொண்டே தான் இருக் கிறோம்!! சிறுவயது குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கும் போதே அவர்களிடையே பாகுபாடுகளை விதைக்க ஆரம்பிக் கிறோம் நாம்.
ஆண் குழந்தைகளுக்கு கார், துப்பாக்கி, சில நேரங்களில் பிளாஸ்டிக் வாளைக் கூட வாங்கிக் கொடுத்து வன்மையைக் கற்பிக்கும் நாம், பெண் குழந்தைகளுக்கு பொம்மை, சமைத்து விளையாட சின்ன செப்புச் சாமான்கள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்து மென்மையையும், சமையல் துறை உன்னுடையது என்பதையும் கற்பிக்கிறோம்.
பிஞ்சுகளின் மனதில் பாலினப் பாகுபாடுகளின் முதல் அடியை எடுத்து வைக்கும் நாம், அவர்கள் வளரும் போதும் பல பாகுபாடுகளைக் கற்பிக்கின்றோம்.
குறிப்பாக, பதின்ம வயதில் (Teen age) பொம்பளப் புள்ள மாதிரி அடக்கம் ஒடுக்கமா இரு; வாய மூடு; மெதுவா அமைதியா பேசு; ஆம்பளப் பையன் மாதிரி நடக்காத மெதுவா நட என்ற பேச்சுகளை அனைத்து பெண்களும் கேட்டிருப் பார்கள்.
அதே வேளையில் என்ன வேண்டுமானாலும் பேசுவதற்கும், எப்படி வேண்டுமானாலும் நடப்பதற்கும், நடந்து கொள்வதற்கும் ஆண்களை இச்சமூகம் அனுமதிக்கிறது. நண்பர்களோடு வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பும் நேரத்தில் கூட ஆண்மைக்கொரு இலக் கணம்; பெண்மைக்கொரு இலக்கணம்!
பெண்களே அதிகமாக உணர்ச்சி வசப்படுவார்கள்; ஆண்கள் வலிமை யான உள்ளம் கொண்டவர்கள் என்ற ஆணாதிக்கக் கூற்று தான், பொம்பளப் புள்ள மாதிரி அழாதே என்றும் பொம் பளப் புள்ள மாதிரி வெக்கப் படாதே என்றும் ஆண்களைப் பார்த்து நம்மைச் சொல்ல வைக்கிறது. அழுவதில் கூட பாலின ரீதியான ஓர் இலக்கணத்தைக் கற்பிக்கிறோம் நாம். காதல் போன்ற இயற்கை உணர்ச்சிகளிலும் இச்சமூகம் இவ்விலக்கணத்தை விட்டுவைக்கவில்லை.
காதலை முதலில் வெளிப்படுத்தும் உரிமை ஆண்களுக்கே உரியது. காதலுக்கான காப் பிரைட் ஆண்களிடம் மட்டுமே உள்ளது போலவும், காதலில் தோல்வியடைவதும், ஏமாற்றப்படுவதும் ஆண்கள் மட்டும் தான் என்றும், ஒரு பெண்ணுக்கு ஓர் ஆணைப் பிடித்திருந்தாலும் அதை வெளிப்படுத் தாமல், அதனை அந்த ஆண் வெளிப்படுத் தும் வரை பொறுமை காக்க வேண்டும்; அது தான் பெண்மைக்கழகு என்றும், அன்றிலி ருந்து இன்று வரை வளைவு நெளிவுகளை வர்ணித்து பெண்களைப் போகப் பொரு ளாக மட்டுமே சித்தரிக்கும் பெரும்பாலான தமிழ் திரைப்படங்கள் தவறாமல் கற்பிக்கின்றன.
செக்ஸ். இவ்வார்த்தையைக் கொண்டாடும் உரிமை ஆண்களுக்கே! அதைப் பற்றி அனைத்தும் அறிந்து வல்லு நர்களாக இருப்பதே ஆண்மைக்கழகு. உடலுறவைப் பற்றி அறிவியல்பூர்வமாக அறிந்திருந்தாலும், கற்றிருந்தாலும் அதை மறைத்து தெரியாதது போல் வெட்கப்படு வதே பெண்மைக்கழகு என்ற கற்பிதமும் ஆண் எதையும் செய்யலாம்; பெண் அடங்கியிருக்க வேண்டும் என்ற கற்பித மும் தான் பெண்களை, பாலியல் வன்முறை களுக்கும், குடும்ப வன்முறைகளுக்கும் ஆளாக்குகிறது.  அழகு பெண்மைக்குரியது; அறிவு ஆண்மைக்குரியது, என்ற முட்டாள் தனமான இலக்கணம் பெண்கள் படித்து, பல துறைகளில் சாதித்து, பொருளாதார சுதந் திரம் அடைந்துவிட்ட இக்காலக்கட்டத்தி லும் தொடர்கிறது. அதே போல், கற்பு என்ற அடிமைச் சொல்லும் பெண்மையின் இலக்கணமாகவே இன்றும் உள்ளது.
இப்படி வாழ்க்கையின் அனைத்துக் கூறு களிலும், ஆண்மை மற்றும் பெண்மையின் இலக்கணங்களைத் தொடர்ந்து கற்பித்துக் கொண்டே இருக்கிறது இச்சமூகம் கேட்டால் இது தான் நம் கலாச்சாரம் என்று சொல்வார்கள் கலாச்சாரக் காவலர்கள். ஆண்மைக்கும், பெண்மைக்கும் இச்சமூகம் கற்பிக்கும் இந்த இலக்கணங்கள் தான் பெண்களை நல்ல அடிமைகளாகவும், ஆண்களை எஜமானர்களாகவும் வளர்த் தெடுக்கின்றன. இதனால் தான், பெண்கள் 21-ம் நூற்றாண்டிலும் சிறந்த அடிமை களாகவே உள்ளனர்.
21-ஆம் நூற்றாண்டில் பெண்களின் நிலை
திருமண அமைப்பு முறை பெண்களை எப்போதும் அடக்கி ஆள்கிறது. பெண் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு ஓரளவிற்கு சாத்தியப்பட்டுள்ள இக்காலக்கட்டத்திலும், பெண்கள் கல்வி அறிவுள்ள, பிள்ளை பெற்று வளர்க்கின்ற, சிலர் குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவு கின்ற அடிமைகளாகவே திருமண அமைப்பு முறைக்குள் வாழ்கின்றனர்.
இதனை நிரூபிக்கிறது மத்திய குடும்ப மற்றும் சுகாதார கணக்கெடுப்பு  III [National Family Health Survey–III (2005-06)].
ஒரு மனிதர் சுதந்திரமாக வாழ்வதற்கு தான் எடுக்கும் முடிவுகளைச் சார்ந்து வாழ்வது மிக மிக அவசியமான ஒன்றாகும். மேலே கூறப்பட்டுள்ள கணக்கெடுப்பில் காட்டப்பட்டுள்ள முடிவுகள் எதுவும் பெரிய முடிவுகள் அல்ல.
ஆனால் அப்படிப்பட்ட அற்பமான முடிவுகளை எடுப்பதற்குக் கூட தன் கணவனையோ அல்லது தான் வாழும் சூழலையோ சார்ந்தே இருக்க நிர்பந்திக்கப் படுகிறாள் பெண்!
ஆயுள் முழுவதும் அடுப்பங்கரையி லேயே கிடந்து மடிவதற்காகவே ஒரு தனி இனம் இருக்க வேண்டும் என்பது பச்சை வர்ணாசிரமத்திலும் பன்மடங்கு மோசமான கொள்கை [குடிஅரசு 18.03.1947] என்று பெண்களை சமையலறைக்குள் முடக்கும் அடிமைத்தனத்திற்கெதிராக 1947-லேயே குரலெழுப்பியுள்ளார் பெரியார்.
ஆனால் இன்றும், சமையல் அறை பெண்களின் டிப்பார்ட்மெண்ட்டாகவே உள்ளது என்பதை நிரூபிக்கிறது இப்புள்ளி விவரம். சமையல் மற்றும் வீட்டு வேலை களில் ஆண்கள் ஒரு நாளைக்கு 19 நிமிடங்களை மட்டுமே செலவிடுகின்றனர்; ஆனால் பெண்களோ 298 நிமிடங்கள் (5 மணி நேரத்திற்கு 2 நிமிடங்கள் குறைவு) செலவிடுகின்றனர்.
உச்சநீதிமன்ற நீதிபதி களாகவும், உயர்நீதிமன்ற நீதிபதிகளாகவும், சுய தொழில் செய்யும் தொழிலதிபர்களாக வும், சிறந்த ஆளுமைகளாகவும், பல்கலைக் கழகத் துணைவேந்தர்களாகவும், விஞ் ஞானிகளாகவும், பொதுநல இயக்கங்களில் தொண்டாற்றுபவர்களாகவும், மிகக் குறை வான எண்ணிக்கையிலேயே பெண்கள் இருக்கின்றனர்.இவையனைத்திற்கும் ஆண்மை, பெண்மை என்ற கற்பிதங்கள் தான் காரணம்!!
இந்நிலை மாறி பெண்கள் விடுதலை பெற...
பல பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வதே தங்களுக்களிக்கப்பட்ட மிக உயரிய உரிமை என்று கருதி திருப்தி அடைந்து விடுகிறார்கள். ஆனால், பெரியார் கூறியது போல், அழகு மற்றும் அலங்காரப் பைத்தியம் இருப்பதால் தான் இன்றும் பெண்கள் போகப் பொருட் களாகவே உள்ளனர். அழகு என்னும் விலங்கைத் தங்கள் மூளையில் இருந்து உடைத்தெறிந்தால் தான் பெண்ணைப் பொருளாகப் பார்க்கும் தன்மை(Objectification)  அழிந்து மனிதர்களாக மதிக்கும் நிலை உண்டாகும்! மேலும், பெண்களுக்குச் சம உரிமை வேண்டும் என்ற எண்ணம் முதலில் பெண் களின் மனதில் ஆணித்தரமாக எழ வேண்டும்.
ஏன்? இக்கேள்விக்குப் பெரியார் 6.4.1946-ல் குடிஅரசு ஏட்டில் எழுதியதைப் படித்தால் பதில் கிடைக் கும். பெண்கள் தங்கள் ஜீவசுபாவத்துக் காகத் தாங்களே முயற்சியெடுத்துக் கட்டுப்பாடுகள் என்னும் விலங்குகளை தகர்த்தெறிய முற்பட்டா லொழிய தங்களை வாசனைத் திரவியங்கள் போலவும், உடையணிகள் போலவும் மதித்து, அனுபவித்துக் கொண்டு வரும் ஆண்களாலும், எப்படிப்பட்ட சமதர்ம ஆட்சியாலும், பொதுவுடமைக்கார ருடைய புரட்சியாலும், விடுதலை ஏற் படாது - பெரியார் (குடிஅரசு 6.4.1946)
உயிரியல் அடிப்படையில் பார்த்தோ மேயானால் பிறப்புறுப்புகளையும், இனப்பெருக்கத்திற்கான உறுப்புகளை யும் தவிர, ஆண்களுக்கும், பெண்களுக் கும் எவ்வித வேறுபாடும் இல்லை. இதைத் தான் மக்களைப் படித்த சமூக விஞ்ஞானி பெரியார் அங்க அமைப் பிலன்றி அறிவின் பெருக்கிலோ, வீரத் தின் மாண்பிலோ ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏற்றத்தாழ்வான வித்தியாசம் இல்லை என்றார்.
பெண்களை அடிமைப்படுத்துவதற் காக, ஓர் ஆணாதிக்க சமூகத்தால் கற்பிக்கப்பட்ட கற்பிதங்கள் தான் ஆண்மை, பெண்மை என்னும் கூறுகள்!!
இனியாவது நம் குழந்தைகளை ஆண் களாகவோ, பெண்களாகவோ வளர்க் காமல், மனிதர்களாக வளர விடுவோம்!! ஏனெனில், ஆண்மையையும் (Masculinity) பெண்மையையும் (Feminity)  அழித்தொழித்து, மனிதத்தை Humanity) வென்றெடுப்பதே பெண்ணுரிமைப் போரின் இறுதி இலக்கு என்பதைத் தான் அறிவு ஆசான் பெரியார், வன்மை, கோபம், ஆளும் திறன் ஆண்களுக்கு சொந்தம் என்றும் சாந்தம், அமைதி, பேணும் திறன் பெண்களுக்கு சொந்தம் என்றும் சொல்வதாவது, வீரம், வன்மை, கோபம், ஆளும் திறன் புலிகளுக்கு சொந்தம் என்றும் சாந்தம், அமைதி, பேணும் திறன் ஆட்டுக்கு சொந்தம் என்றும் சொல்வது போன்றே ஒழிய வேறில்லை.நாம் வேண்டும் பெண் உரிமை என்பது என்னவெனில், ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வன்மை, கோபம், ஆளும் திறன் உண்டு என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதேயாகும் என்கிறார்.
எனவே ஆண்மையையும் பெண் மையையும் அழிப்பதற்குப் பெரியாரின் பெண்ணியமே ஓர் பேராயுதம்!! ஆகை யால், பெண்களே! குறிப்பாக, மகளிர் தினத்தை கோலப் போட்டியோடும், மெஹந்தி போட்டியோடும் கொண் டாடிக் கொண்டிருக்கும் பெண்களே!! பெரியார் கண்ட புரட்சி பெண்களாக மாறுங்கள்!! இலக்கை அடையுங்கள்!!!
- யாழ்மொழி
-விடுதலை,8.3.15

சனி, 19 செப்டம்பர், 2015

திருமிகு முத்துலட்சுமி அம்மாளின் தீர்மானம்



திருமிகு முத்துலட்சுமி அம்மாள் அவர்கள், பள்ளிக் கூடங்களில் மதக்கல்வி போதிக்கப்பட வேண்டும் என்று ஒரு தீர்மானம் கொண்டு வந்திருப்பதாய் பத்திரிகைகளில் பார்த்தோம்.
இது ஒரு பைத்தியக்காரச் செயல் என்பதே நமது அபிப்பிராயம். அம்மையார், மதத்திற்கு என்ன பொருள் கொண்டிருக்கின்றார் என்பது  நமக்கு விளங்கவில்லை.
திரு. அம்மையார் இஷ்டப்படி நமது ஆண் பெண் மக்களுக்கு நமது மதம் என்று சொல்லப்பட்ட இந்து மதப் படிப்பை சொல்லி வைப்பதாயிருந்தால், அந்த மதப்படிப்புப்படி அவர்கள் நடப்பதாயிருந்தால், திரு.முத்துலட்சுமி அம்மையார் டாக்டர் வேலையையும் சட்டசபை அங்கத்தினர் பதவியையும் விட்டுவிட்டு சட்டி கழுவ  வேண்டும் என்பதை அம்மையார் அறிந்தாரோ இல்லையோ நமக்குக் தெரியவில்லை.
அல்லது நாம்தான் மதக் கொள்கைக்கு மீறி சட்டசபை உபதலைவராகக் கூட உயர்ந்துவிட்டோம். இனிமேல் நமக்கு என்ன குறை என்றும் இனி எந்தப் பெண்மணியும் நம் பதவிக்கு வராமல் சட்டி கழுவுகின்ற வேலையிலேயே இருக்கட்டும் என்கின்ற எண்ணம் கொண்டும் மதத்திற்குத் திரும்பி விட்டார்களோ என்றும் எண்ணவேண்டியிருக்கின்றது.
தவிர அம்மையார் சட்டசபையில் கொண்டு வந்திருக்கும் பெண்களை  சாமி பேரால் பொட்டுக்கட்டி விபசாரியாக்கும் வழக்கத்தையும், சிறு குழந்தைகளுக்கு கல்யாணம் செய்து 10, 12 வயதில் குழந்தை பெறும்படியான வழக்கத்தையும் நிறுத்த வேண்டுமென்று கொண்டு வந்த தீர்மானங்களுக்கு விரோதமாக பேசினவர்கள் எல்லாம் மதத்தையே பிரதானமாக வைத்து ஆசேபித்ததை அதற்குள்ளாக மறந்து விட்டார்களா?
அல்லது அம்மையாராவது அம்மத சம்பந்தமான ஆசே பணைக்கு ஏதாவது சமாதானம் சொன்னார்களா என்று கேட்கின்றோம்.
ஒழுக்கமான காரியங்களையும் கூட செய்வதற்கு அனுமதி இல்லாத இப்பேர்ப்பட்ட  மதத்தை கட்டிக்கொண்டு அழவேண்டிய அவசியம் அம்மையாருக்கு ஏற்பட்டதன் இரகசியம் நமக்கு விளக்கவில்லை. அது எப்படியோ போகட்டும்.
இது சமயம் அம்மையின் நிலைக்கு நாம் வருந்துவதோடு இருந்து கொண்டு மற்ற சட்டசபை அங்கத்தினர்கள் இத் தீர்மானத்தை நிறைவேற்றுவது நமது மனித தன்மைக்கும் சுயமரியாதைக்கும் ஆபத்து என்பதாக தெரிவித்து கொள்ளுகின்றோம்.
(குடிஅரசு, 1928)
-விடுதலை,12.9.15

சனி, 5 செப்டம்பர், 2015

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு ஊதியத்துடன் 3 மாத விடுப்பு

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு ஊதியத்துடன் 3 மாத விடுப்பு


பாலியல் புகார்களை விசாரிக்க உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஒவ்வொரு துறைக்கும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக ஒரு பெண் இருப்பார். அந்நிறுவனத்தில் பெண் அதிகாரி இல்லையென்றால், வேறு நிறுவனத்தின் பெண் அதிகாரி குழுவின் தலைவராக அமர்த்தப்படுவார். குழுவின் பெரும்பாலான உறுப்பினர்களும் பெண்ணாக இருப்பர்.
பாதிக்கப்பட்ட பெண்களை வேறு இடத்திற்கு மாற்றப் பரிந்துரைக்கவும் இக்குழுவிற்கு அதிகாரம் உண்டு.
பாலியல் பாதிப்புக்காளான 3 மாதத்திற்குள் புகார் அளிக்க வேண்டும். குற்றவாளியின் ஊதியத்தை நிறுத்தி வைக்கப் பரிந்துரைக்கவும் இக்குழுவிற்கு அதிகாரம் உண்டு. குற்றவாளி சாட்சிகளை மிரட்டியும், ஆதாரங்களை அழித்தும் செயல்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வன்புணர்ச்சிக்கு ஆளாகிப் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஊதியத்துடன் மூன்று மாத விடுப்பு வழங்கப்படும் என்று மத்தய அரசு அறிவித்துள்ளது.
-உண்மை,1-15.8.15

பணிக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தீர்வுகள்

மன இறுக்கம்:
இது பொதுவாக எல்லோருக்கும் இக்காலத்தில் பொதுவாகிப் போனாலும், பெண்களுக்கு இது சற்று கூடுதலாகவுள்ளது. காரணம், அவர்களின் சூழல், பாலினம், உடலமைப்பு, மாதவிலக்கு போன்றவை. குடும்பப் பொறுப்பு, குழந்தைகள் பராமரிப்பு, கணவன் குடும்பப் பொரியோர்களை கவனித்தல் என்று பலவற்றிற்கு இடையே பணிக்குச் செல்லும் நிலை. பாலியல் சீண்டல், வக்கிரம், வதந்தி, அவதூறு என்று பல்வேறு தாக்குதல்கள். இவற்றிற்கெல்லாம் ஈடுகொடுத்து, சமாளித்து தன் பணியை வெளியிடங்களுக்குச் சென்று செய்ய வேண்டியுள்ளது. இதனால் பெண்களுக்கு மன இறுக்கம், மன உளைச்சல் போன்றவை தவிர்க்க இயலாததாகிறது.
வேலையைச் சரியாகச் செய்ய வேண்டும்; குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும், குறையில்லாமல், குற்றம் சொல்லாமல் முடிக்க வேண்டும் என்பன போன்ற எண்ணங்கள் அவளை மேலும் இறுக்கம் கொள்ளச் செய்கின்றன. இதனால் பணி செய்யும்போது பதட்டம், கூட்டங்களில் பேசும்போது நடுக்கம், உடல் வியர்த்தல், இதய நோய், வயிற்றுப் புண் உருவாகுதல் போன்று சில உடல் ரீதியான பாதிப்புகளையும் பெண்கள் ஏற்க வேண்டியுள்ளது.
இதைத் தவிர்க்க, திட்டமிட்டு, முன்கூட்டியே பணிகளைச் செய்ய வேண்டும். கடைசி நேரத்தில் செய்ய முனைவதை மாற்றிக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணுவதைத் தவிர்க்க வேண்டும். நம் மனதுக்கு நாம் சரியாக இருக்கிறோம் என்று நிறைவுகொள்வது தேவையற்ற உளைச்சலைப் போக்கும்.
யாரிடமும் அளவோடு பழகுவது; ஆண்களிடம் எல்லையோடு பழகுவது; பிறர் பற்றிக் குறை கூறாதிருத்தல்; குறையைப் பிறர் சொன்னால், அதுகுறித்து கருத்துக் கூறாதிருத்தல் போன்ற செயல்பாடுகள் மூலம் இறுக்கத்தைத் தவிர்க்கலாம்.
மாற்றாக, நகைச்சுவை படிப்பது, இசை கேட்பது; மனம்விட்டுப் பேசிச் சிரிப்பது, 10 நிமிடம் தேவையானபோது அமைதியாய் இருப்பது, ஏதாவது இரண்டு மூன்று யோகாசனங்களை நாள்தோறும் காலையில் செய்வது போன்றவை இப்பிரச்சினைகளுக்குத் தீர்வாகும்.
மாதுளை, கொத்தமல்லி கீரை, கறிவேப்பிலை துவையல், வெள்ளறிப் பிஞ்சு, கீரை, பழங்கள் ஒவ்வொன்று எடுத்துக் கொள்வது, உடல் நலம் கெடாமல் காக்கவும், மன இறுக்கம், குருதிக் கொதிப்பு போன்றவற்றைக் குறைக்கவும் பயன்படும்.
பணிசார்ந்த பாதிப்புகள்
கணினியில் அதிகம் ஈடுபடுவதால் கண் பாதிக்கப்படுதல்; விரல் மூட்டுகள் பாதிக்கப்படுதல், பருத்தி, அச்சுக் கூடங்கள், இரசாயனக் கூடங்களில் பணியாற்றுவதால் நுரையீரல் பாதிக்கப்படுதல் போன்று பல தொழில்சார் பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு.
இவற்றின் பாதிப்பு அதிகமாவதைத் தடுக்க (தவிர்க்க), தொடர்ந்து அப்பணியில் ஈடுபடுவதைத் தவிர்த்து, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை பத்து நிமிடங்கள் ஓய்வு கொடுத்து மீண்டும் செய்வது வேண்டும். தொலைக்காட்சியோ, மின்மோட்டாரோ தொடர்ந்து பயன்படுத்தாமல் 15 நிமிடம் நிறுத்தி மீண்டும் இயக்கினால் அவை நீண்ட காலம் உழைக்கும் என்பது போலத்தான் இதுவும்.
உடல்பருமன் மற்றும் மூலம்
உட்கார்ந்து, உடலுழைப்பின்றியே பல வேலைகளும் செய்யப்படுவதால் உடல் பருமன் ஏற்படும். இதன்மூலம் சர்க்கரை, இதயநோய்கள், மூலநோய் வாய்ப்புண்டு.
இப்பாதிப்புகளைக் குறைக்க அல்லது தடுக்க ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து சற்று நடந்துவிட்டு வந்து மீண்டும் உட்கார வேண்டும்.
சோற்றுக்கற்றாழை, மாதுளை, வெங்காயம், கீரைகள், பழங்கள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். காரம், உப்பு அதிகம் சேர்க்காத உணவை உண்ண வேண்டும். பொறித்த உணவு, பொட்டல உணவுகள் அறவே கூடாது.
முதுகுவலி, கழுத்துவலி:  உட்கார்ந்து வேலை செய்வதால் இவை வர வாய்ப்புண்டு. அதைத் தவிர்க்க மேற்சொன்ன முறைப்படி நடந்து கொள்வதோடு, யோகாசனங்கள் ஒன்றிரண்டு செய்வதும், முடக்கற்றான் கீரை கடைந்தோ, தோசையில் கலந்தோ சாப்பிடுதல் நல்லது.
குளிர்ந்த இடங்கள் குளிரூட்டப்பட்ட அறைகள், தண்ணீர் புழங்கும் இடங்களில் பணியாற்றுவோர் குளிர் சார்ந்த நோய்களால் தாக்கப்பட வாய்ப்புண்டு. அவர்கள் சூடான பானங்கள் பருகுதல், கையுறை, காலுறை அணிதல், ஏ.சி. அறையை விட்டு 10 நிமிடம் வெளியில் வந்து மீண்டும் சென்று அமர்தல் போன்றவை பாதிப்பைக் குறைக்கும். முடிந்த மட்டும் ஏ.சி. பயன்பாட்டைக் குறைத்து வியர்வை வெளியேற வாய்ப்பளிப்பதுதான் உடல் நலத்திற்கு நல்லது.
மாதவிலக்கு
இதனால் பெண்கள் ஒவ்வொரு மாதமும் பாதிக்கப்படுகின்றனர். வயிற்றுவலி, சாப்பிட முடியாமை, குமட்டல், அசதி போன்றவை வரும். சோற்றுக் கற்றாழை தொடர்ந்து உண்ணுதல் நல்ல பயன் தரும். வழக்கமான உடற்பயிற்சி இந்த தொல்லைகளைக் குறைக்கும்.
-உண்மை,1-15.8.15

பெண் இயக்குநரை நியமிக்காத நிறுவனங்கள்: விளக்கம் கோருகிறது அரசு

தங்களது நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் ஒரு பெண் இயக்குநரைக் கூட நியமிக்காத தனியார் நிறுவனங்களிடம் மத்திய அரசு விளக்கம் கோரியுள்ளது.
சட்ட விதிகளின்படி, ரூ.100 கோடி பங்கு மூலதனம் அல்லது ரூ.300 கோடி விற்பனை வருமானம் கொண்ட நிறுவனங்கள், தங்களது இயக்குநர் குழுவில் குறைந்தது ஒரு பெண்ணையாவது நியமித்திருக்க வேண்டும். ஆனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள், இந்த விதிகளைப் பின்பற்றவில்லை எனத் தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில், தேசியப் பங்கு சந்தை மற்றும் மும்பைப் பங்கு சந்தை ஆகியவை 700-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு அதுதொடர்பான அறிவிக்கையை ஏற்கெனவே அனுப்பியிருந்தது.
இதைத் தவிர, இந்திய பங்குப் பரிவர்த்தனை வாரியமும் (செபி) பெண் இயக்குநர் நியமன விதிகளைப் பின்பற்றுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், பெண் இயக்குநரை நியமிக்காத நிறுவனங்களிடம் பெரு நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகம் விளக்கம் கோரியுள்ளது. அந்நிறுவனங்கள் அளிக்கும் விளக்கங்களின் அடிப்படையில் தேவையான மேல் நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-உண்மை,16-31.8.15

வியாழன், 3 செப்டம்பர், 2015

இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள்

பெண்கள் இடம் பெறாத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள் ளோம். ஆனால், ஒவ்வொரு துறையிலும், ஒரு பெண் முதல் முறையாக நுழையும் போது, அதில் உள்ள பல் வேறு பாதகங்களையும் அனுபவித்து, அவருக்குப் பின் வரும் பெண்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
அதுபோன்று பல்வேறு துறைகளில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்த பெண்களின் பட்டியலை இங்கு காணலாம்.
* முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதீபா பாட்டில் 2007
* முதல் மத்திய அமைச்சர் - ராஜ்குமாரி அம்ருதா கவுர் (1947 - 57)
* முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு (1947 - 1949)
* மாநிலங்களவை முதல் பெண் பேரவை துணைத் தலைவர் - வயலட் ஆல்வா
* முதல் பெண் முதல்வர் (உத்திரப்பிரதேசம்) - சுசேதா கிருபளானி (1963 - 1967)
* குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - மனோகர நிர்மலா ஹோல்கர் (1967)
* முதல் பெண்  அய்ஏஎஸ் அதிகாரி - அன்னா ராஜன் ஜார்ஜ்
* மக்களவை முதல் பெண் பேரவைத் தலைவர் - மீரா குமார் (2009)
* மகசேசே விருது பெற்ற முதல் பெண்மணி  - அன்னை தெரசா (1962)
* இந்திய தேசிய காங்கிரசின் தலைவரான முதல் பெண்மணி - அன்னிபெசன்ட் (1917)
* காங்கிரஸ் தலைவரான முதல் பெண்மணி - சரோஜினி நாயுடு (1925)
* ஏர்மார்ஷல் பதவி வகித்த முதல் பெண்மணி - பத்மாவதி பந்தோ பாத்யாயா (2004)
* பால்கே விருது பெற்ற முதல் நடிகை - தேவிகா ராணி ரோரிச் (1969)
* புக்கர் பரிசு பெற்ற முதல் எழுத்தாளர்  - அருந்ததி ராய் (1997)
* மிஸ்வேர்ல்ட் பட்டம் பெற்ற முதல் பெண்மணி - ரீத்தா ஃபரியா பவல் (1966)
* மிஸ்யூனிவர்ஸ் பட்டம் பெற்ற முதல் பெண்மணி - சுஷ்மிதா சென் (1994)
* பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண்மணி - இந்திராகாந்தி (1971)
* ஆஸ்கார் விருது பெற்ற ஒரே பெண்மணி - பானு அதய்யா
*  முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி (1966)
* உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி - எம்.பாத்திமா பீவி (1989)
* உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி - (கேரளா) அன்னா சாண்டி (1959)
* உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி - (இமாச்சல்) - லீலா சேத் (1991)
* அய்.நா. பொதுச்சபையின் முதல் பெண் தலைவர் - விஜயலட்சுமி பண்டிட்
* முதல் பெண் அய்பிஎஸ் - கிரண்பேடி (1972)
* விண்வெளி சென்ற முதல் பெண்மணி - கல்பனா சாவ்லா
* எவரஸ்டில் ஏறிய முதல் பெண்மணி - பச்சேந்திரி பால்
* ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் பெண்மணி - சுரதி ஸாஹா
* ஏழு வளைகுடாக்களை நீந்திக் கடந்த முதல் பெண்மணி - பிலா சவுத்ரி
* ஞானபீட விருது பெற்ற முதல் பெண்மணி - ஆஷாபூர்ணா தேவி (1976)
* ஒலிம்பிக் போட்டியில் போட்டியிட்ட முதல் பெண்மணி - நீலிமா கோஷ் (1952)
* லெப்டினன்ட் ஜெனரல் பதவி வகித்த முதல் பெண்மணி - புனிதா அரோரா (2004)
விடுதலை,1.9.15

‘மகளிர் தினம்’ ஏன் கொண்டாடுகிறோம்?

‘மகளிர் தினம்’
ஏன் கொண்டாடுகிறோம்?
ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி அன்று உலகெங் கும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அய்க்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.
சர்வதேச மகளிர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்படு கிறது. ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிட வேண்டும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
18 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். வீட்டு வேலைகளை செய்வதற்காக பெண்களை வீட்டுக்குள் ளேயே முடக்கி வைத்திருந்தனர். பெரும்பாலான பெண் களுக்கு ஆரம்ப கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது.
1857 ஆம் ஆண்டு நிலக்கரிச் சுரங்கங்கள், தொழிற் சாலைகள், நிறுவனங்களில் பணி வாய்ப்பு தரப்பட்டது. பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது. ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.
இதனால் பெண்கள் மிகுந்த வருத்தமடைந்தனர். ஆண் களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி குரல் எழுப்பினர். அப்போதைய அமெரிக்க அரசு இதற்கு செவி கொடுக்கவில்லை. இதனால் அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள் கிளர்ச்சியில் இறங்கினர்.
1857 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி இதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தை அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் ஒடுக்கினர். அதன் பிறகு 1907 ஆம் ஆண்டு சம ஊதியம், சம உரிமை கேட்டு பெண்கள் போராடத் தொடங்கினர். 1910 ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டில், பெண் கள் உரிமை மாநாடு நடந்தது. இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துகொண்டு, தங்களது ஒற்றுமையை உலகிற்கு அவர்கள் காட்டினர்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் 8 ஆம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறை வேற்ற வலியுறுத்தினார். பல்வேறு தடங்கல்களால் இந்தத் தீர்மானம் நிறைவேறவில்லை.
1920 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண் டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.
இதையடுத்து 1921 ஆம் ஆண்டு முதல் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1975 ஆம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக அய்.நா பிரகடனப் படுத்தியது. தற்போது ரஷ்யா, உக்ரைன், உஸ்பெகிஸ்தான், வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஆர்மேனியா, அஜர்பைஜான்,
பெலாரஸ், புர்கினியா பெசோ, கம்போடியா, கியூபா, எரித்திரியா, கஜகஸ்தான், மால்டோவா, மங்கோலியா, மான்டேநெக்ரோ, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினத்துக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான மகளிர் தின கருப்பெருளாக அய்.நா. முன்மொழிந்திருக்கும் நோக்கம், ‘‘பெண்களுக்கு எதிரான வன்முறையை தக்க நேரத்தில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வாக்குறுதி கொள்வோம்’’ என்பதே.
-விடுதலை,1.9.15

பெண்கள் கருக்கலைப்பு ஏற்றுக்கொள்ளலாம்-போப் பிரான்சீஸ்

காலமாற்றம் - கருத்துமாற்றம்?
மதத்தில் மாற்றம்: பெண்கள் கருக்கலைப்பு ஏற்றுக்கொள்ளலாம்-போப் பிரான்சீஸ்
வாடிகன், செப். 2_ நேற்று (1.9.2015) கருக்கலைப்பை பாவமற்றதாக கருதி மன்னித்துவிட வேண்டும் என்று கிறித்தவர்களின் தலைமை மதத் தலைவ ராக உள்ள போப் பிரான் சீஸ் குறிப்பிட்டுள்ளார். கத் தோலிக்கப் பழமைவாதி களை பின்னுக்குத் தள்ளி, கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்கள், கருக்கலைப்பு செய்கின்ற மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரையும் மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
போப் பிரான்சீஸ் புனிதப்பார்வை (Holy See) இதழில் 8.12.2015 முதல் 20.11.2016 முடிய Ôகருணை ஆண்டாகÕ கத் தோலிக்கக் கிறித்தவர்கள் அனுசரிக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த கருணைக்காலத் தில் மூன்று கோடி மக்கள் பாவமன்னிப்பு கோரி புனித யாத்திரையாக உல கெங்கிலும் இருந்து வாடி கனுக்கு வருகிறார்களாம்.
போப் குறிப்பிடுகை யில், “முரண்பாடுகளுடன் உள்ள எதனுடனும் பிடி வாதமாக இருப்பதில்லை என்று நான் முடிவெடுத் துள்ளேன். விருப்பத்து டன் கருக்கலைப்பு செய்து கொள்பவர்களின் செயலை, பாவம் எனக் கொள்ளா மல், கருக்கலைப்பை செய்து கொண்டு மனப்பூர்வமாக மன்னிப்பைக் கோருபவர் களுக்கு மன்னிப்பை வழங்க வேண்டும் என்று எதிர்வரும் அய்ம்பதாம் ஆண்டில் அனைத்து கிறித் துவ மத குருக்களையும்
கேட்டுக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அய்ம்பதாம் ஆண்டு விழாவையொட்டி போப் பிரான்சீஸ் அளித்துள்ள செய்தியாக கருக்கலைப்பு செய்பவர்களை
மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண் டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
அர்ஜெண்டினா மதக் குரு ஒருவர் குறிப்பிடு கையில், “அதிகப்படியான விழிப்புணர்வின் காரண மாகவே கருக்கலைப்பு குறித்த முடிவு ஏற்பட்டு உள்ளது.
பலரும், கருக் கலைப்புக்கு மாற்றாக வேறு எதுவும் இல்லை என்றே நம்புகின்றனர். அழுத்தங்களின் காரண மாகவே பெண்களில் சிலர் கருக்கலைப்புக்கு உடன்படுகிறார்கள். கருக் கலைப்பு செய்து கொண்டு, மதக்கருத்துகளுக்கு விரோதமாக, வருத்தமான முடிவுகளை எடுத்து, இதயத்தில் மாறாத வடுக் களுடன் உள்ள பல பெண் களை சந்தித்திருக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
மருத்துவரீதியாக கருக் கலைப்பு செய்து கொள்ள வேண்டிய அவசியத்துக்கு ஆளாகும் பெண்கள், தங் களைக் காத்துக்கொள்வ தற்காக கருக்கலைப்பு செய்து கொள்ள விரும்பினாலும், பிற்போக்கான மதக்கருத் துகளின் காரணமாக சில நாடுகள் இன்னமும் கருக் கலைப்புக்கு எதிரான சட்டங்களைக் கொண் டுள்ளன. இதனால் பெண் கள் அவதிப்படுவதும், உயிரிழப்பதுமான நிலை இருந்து வருகிறது.
1928, 1929, 1930ஆம் ஆண்டுகளில்  குடும்ப கட்டுப்பாடு, கருக்கலைப்பு,  பெண்கள் பிள்ளை பெறுவதில் அவர்களுக்கு உள்ள உரிமைகுறித்து    தந்தை பெரியார் Ôகுடி அரசுÕ இதழ்களில் எழுதி, கர்ப்ப ஆட்சி என்கிற பெயரில் தனி நூலாகவே வெளிவந்தது.
தந்தை பெரியார் கூறியபோது கத்தோலிக்க கிறித்தவம் உள்ளிட்ட பிற்போக்கு மதவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.
இப்போதோ, போப் கருக்கலைப்பை பாவகர மானது என்று எண்ணா மல் மன்னிக்கலாம் என்று கூறியுள்ளதன்மூலம், பழை மைவாதம் பேசுகின்ற  மதம் மாற்றத்துக்கு உள் ளாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பெரியார் உலக மயமா கிறார்.
-விடுதலை,2.9.15