விடுதலை வாசகர்களே! திராவிடர் இயக்கமும், விடுதலையும், சமுதாய விழிப்புணர்வுக்கும், மறு மலர்ச்சிக்கும், ஆற்றிவரும் தொண்டு அளப்பரியது. இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும், இயற்றப் பட்ட சட்டங்கள் பெரும்பாலும், திராவிட இயக்கத்தின் அயராத பணியின் காரணமாகவே ஏற்படுத்தப் பட்டவை என்பதை திராவிட இயக்க வரலாற்றை அறிந்தவர்கள் அனைவரும் அறிவர்.
அத்தகைய சட்டங்களையும், சமூகத்திற்குத் தேவையான சட்டங்களையும் வாசகர்கள் எளிய முறையில் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அறிவுரையை தமிழர் தலைவர் அவர்கள் வழங்கியதன் தொடர்பாக அறிவோம் சட்டம்'' என்ற தொடர் துவக்கப்படுகிறது. கழகத் தோழர்கள் உள்ளிட்ட அனைத்து விடுதலை வாசகர்களும் புரிந்துகொள்ளும் வகையில் இத்தொடர் அமைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள், சமுதாய சீர்திருத்தச் சட்டங்கள் போன்ற வைகளை தொகுத்து வழங்க முனைந்துள்ளோம். வாசகர்கள் படித்துப் பயன் பெறுவார்கள்.
3. பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்
பெண்களின் பாதுகாப்புக்காக தனிச்சட்டங்கள் பல உள்ளன என்பதையும் பிற சட்டங்கள் பலவற்றில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களின் நலனை உறுதி செய்யவும், பல சட்டப்பிரிவுகள் உள்ளன என்பதை பொதுவாக நாம் அனைவரும் குறிப்பாக பெண்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு தனிச்சட்டங்கள் இயற்ற, அரசியல் சட்டப்பிரிவு 15(3) வகை செய்கிறது, அதனடிப் படையில் பெண்களின் பாதுகாப்பிற்காகவும், முன்னேற்றத் திற்காகவும் கீழ்க்கண்ட சட்டங்கள் இயற்றப்பட்டன.
பெண்களின் பாதுகாப்புக்காக தனிச்சட்டங்கள் பல உள்ளன என்பதையும் பிற சட்டங்கள் பலவற்றில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களின் நலனை உறுதி செய்யவும், பல சட்டப்பிரிவுகள் உள்ளன என்பதை பொதுவாக நாம் அனைவரும் குறிப்பாக பெண்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு தனிச்சட்டங்கள் இயற்ற, அரசியல் சட்டப்பிரிவு 15(3) வகை செய்கிறது, அதனடிப் படையில் பெண்களின் பாதுகாப்பிற்காகவும், முன்னேற்றத் திற்காகவும் கீழ்க்கண்ட சட்டங்கள் இயற்றப்பட்டன.
1. குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாது காத்தல் சட்டம், 2005,
2. வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961
3. The Immoral Traffic (prevention) Act
4. Muslim Women Protection of Rights on Divorce Act 1986
5. Family Couts Act 1984
6. National commission for Women Act 1990
7. Commission of Sati (prevention) Act 1987
8. Human Rights Act 1993
9. Women's Rights to property Act 1937.
10. The Divorce Act 1869.
இந்த சட்டங்கள் தவிர அரசியல் சட்டம், திருமணம் சட்டம், வாரிசு சட்டம், சுவிகாரச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், சாட்சியச் சாட்டம், கருக்கலைப்பு சட்டம், தொழிற்சாலைகள் சட்டம், பணியாளர் காப்பீட்டுச் சட்டம், போன்ற பல சட்டங்களிலும், பெண்களுக்கான உரிமைகள், பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளன. இனி ஒவ்வொரு சட்டங்களையும் தனித்தனியாக பார்ப்போம்.
2. வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961
3. The Immoral Traffic (prevention) Act
4. Muslim Women Protection of Rights on Divorce Act 1986
5. Family Couts Act 1984
6. National commission for Women Act 1990
7. Commission of Sati (prevention) Act 1987
8. Human Rights Act 1993
9. Women's Rights to property Act 1937.
10. The Divorce Act 1869.
இந்த சட்டங்கள் தவிர அரசியல் சட்டம், திருமணம் சட்டம், வாரிசு சட்டம், சுவிகாரச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், சாட்சியச் சாட்டம், கருக்கலைப்பு சட்டம், தொழிற்சாலைகள் சட்டம், பணியாளர் காப்பீட்டுச் சட்டம், போன்ற பல சட்டங்களிலும், பெண்களுக்கான உரிமைகள், பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளன. இனி ஒவ்வொரு சட்டங்களையும் தனித்தனியாக பார்ப்போம்.
1) குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாத்தல் சட்டம் - 2005 ஒரு பெண்ணுடைய உடல் நலம், பாதுகாப்பு, உயிர், உடல், உறுப்பு அல்லது நல வாழ்வுக்கு மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ ஊறு விளைவித்தல் அல்லது காயப்படுத்துதல் அல்லது அவ்வாறு செய்ய முயற்சித்தல், தகாத உடலுறுப்பு உணர்வுகளைப் புண்படுத்துதல், பொருளாதார ஊறு விளைவித்தல் அல்லது மதிப்புமிக்க காப்பீட்டு ஆவணங்களைப் பெறும் நோக்கத்தில் ஒரு பெண்ணை அல்லது அவரது உறவினரை மிரட்டும் வகையில் துன்புறத்துதல், தீங்கு செய்தல், காயம் ஏற்படுத்துதல் அல்லது பயமுறுத்துதல் ஆகியவை குடும்ப வன்முறையாகும்.
மாநில அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையான பாதுகாப்பு அலுவலர்களை பணியமர்த்தும். அவர்கள் கூடுமானவரையில் பெண்களாக இருத்தல் வேண்டும். ஒரு பெண்ணுக்கு குடும்ப வன்முறை செய்யப்பட்டால் அவர் இந்தப் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தரவேண்டும். அந்த தகவலைப் பெற்ற அலுவலர் ஒரு அறிக்கையினை குற்றவியல் நடுவருக்கும் காவல் நிலையத்திற்கும் அனுப்ப வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் விருப்பத்தின் பேரில் ஒரு பாதுகாப்பான தங்குமிடம் ஏற்பாடு செய்து அதன் விவரங் களை குற்றவியல் நடுவருக்கும் காவல் நிலையத்திற்கும் பாதுகாப்பு அலுவலர் அறிக்கை தரவேண்டும். அப் பெண் ணுக்கு தேவையான மருத்துவப் பரிசோதனையும் அந்த அலுவலர் செய்வார்.
இந்த பாதுகாப்பு அலுவலர் குற்றவியல் நடுவரின் கட்டுப்பாட்டிலும் மேற்பார்வையிலும் பணிபுரிய வேண்டும். இந்தச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தொண்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்ட உதவி, மருத்துவம், நிதி மற்றும் இதர உதவிகளைச் செய்யலாம். பாதிக்கப்பட்ட பெண் குற்றவியல் நடுவரிடம் புகார் செய்யலாம். அப்புகாரைப் பெற்ற குற்றவியல் நடுவர் விசாரணை நாள்பற்றிய அறிவிப்பை பாதுகாப்பு அலுவலர் மூலமாக எதிர்வாதி மற்றும் பிற நபர்களுக்கு சார்வு செய்ய ஆணையிடலாம், குற்றவியல் நடுவர் இரு தரப்பாரையும் தொண்டு நிறுவனத்தைச் சார்ந்த உறுப்பினரிடம் ஆலோ சனை பெற உத்தரவிடலாம். வழக்கு விசாரணை குற்றவியல் நடுவரின் தனியறையில் நடத்தலாம்.
குடும்ப உறவு முறையிலுள்ள பெண் ஒருவருக்கு பங்கீடு செய்யப்பட்ட வீட்டில், உரிமை இருந்தாலும் இல்லாவிட்டாலும் தங்குவதற்கு உரிமை உண்டு. அவ்வீட்டிலிருந்து அவரை சட்டப்படியில் அல்லாது வெளியேற்ற முடியாது. பாதிக்கப்பட்ட பெண்ணின் சீதனம் அடங்கிய சொத்துக் களை உரிமை மாற்றம் செய்ய, வங்கி பாதுகாப்பு பெட்டகங்களை வங்கி கணக்குகளை பயன்படுத்த குற்றவியல் நடுவர் தடை விதிக்கலாம்.
குடும்ப வன்முறை தொடரவும் தடைவிதிக்கலாம். குடும்ப வன்முறை செய்யாமல் இருக்க எதிர்வாதியிடமிருந்து வாக்குறுதிப் பத்திரம் தருமாறு குற்றவியல் நடுவர் கோரலாம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு உத்தரவிடலாம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது குழந்தைக்கும் இழப்பீடு தர எதிர்வாதிக்கு குற்றவியல் நடுவர் உத்தரவிடலாம். இழப்பீடு வழங்க உத்தரவிடும் போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கைத் தரம், மன உளைச்சல், உணர்ச்சிக் கொந்தளிப்பு அடங்கிய காயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கவும் குற்றவியல் நடுவருக்கு அதிகாரம் உண்டு, குற்றவியல் நடுவரின் ஆணைகளின் நகல்கள், புகார் கொடுத்தவர், எதிர்வாதி, காவல் நிலையம், தொண்டு நிறுவனம் ஆகிய வற்றிற்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும். பாதுகாப்பு ஆணையை அல்லது இடைக்கால பாதுகாப்பு ஆணையை எதிர்வாதி மீறினால் ஓராண்டு வரை நீடிக்கக்கூடிய சிறைத் தண்டனை அல்லது இருபதாயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதித்து தண்டனைக்குள்ளாவார்.
குற்றவியல் நடுவரால் பிறப்பிக்கப்பட்ட பாதுகாப்பு ஆணை அல்லது இடைக்கால பாதுகாப்பு ஆணையை நிறைவேற்றத் தவறும் பாதுகாப்பு அலுவலர் ஓராண்டு வரை நீடிக்கக் கூடிய சிறைத்தண்டனை அல்லது இருபதாயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதித்து தண்டனைக்குள்ளாவார். (தொடரும்)
-விடுதலை,21.6.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக