சென்னை, மார்ச் 7-_ கர்ப்பப்பை அகற்றப்பட்ட சென்னையை சேர்ந்த 27வயது பெண்ணிற்கு அவரது தாயே வாடகை தாயாக இருந்து குழந் தையை பெற்றுக்கொடுத் துள்ளார். இதுகுறித்து சென்னை வடபழனியில் உள்ள ஆகாஷ் குழந்தை யின்மை சிகிச்சை மைய மருத்துவமனையின் நிர் வாக இயக்குநர்கள் டாக் டர் காமராஜ், டாக்டர் ஜெயராணி காமராஜ் ஆகி யோர் வெள்ளியன்று (மார்ச் 6) செய்தியாளர்களி டம் கூறியது வருமாறு:
சென்னையை சேர்ந் தவர் 27வயது பெண் லட் சுமி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் திருமண மாகி 10ஆவது மாதமே கருவுற்றார். ஏழாவது மாதத்தில் நஞ்சுபிரிந்து அதிகப்படியான உதிரப் போக்கு வெளியாகி தாயின் நலன் கருதி அறுவைச் சிகிச்சை செய்யப் பட்டது. அப்போது இறந்த குழந் தையை வெளியே எடுத் தனர். வெளியே எடுத்த பின்னரும் கர்ப்பப்பை சுருங்காமல் உதிரப் போக்கு அதிகமாகி அதை நிறுத்து வதற்கு எவ்வித மருத்துவ முறையும் சரிவராததால் தாயை காப்பாற்ற வேண்டி கர்ப்பப்பையை அகற்றி விட்டனர்.
இதனால் அந்த இளம் பெண் குழந்தையும் இல் லாமல் கர்ப்பப்பையும் இல்லாமல் நிலைகுலைந்து போனார். இந்தநிலையில் அந்த பெண்ணிற்கு வாடகை தாய் மூலமாக முதலில் குழந்தைபேறுக்கு ஏற்பாடு செய்யப் பட்டபோது அது தோல்வியில் முடிந்தது. இதன்பின்னர் 2013 ஆம் ஆண்டு அந்த பெண், அவ ரது கணவர், பெண்ணின் தாயார் ஆகியோர் எங் களது மருத்துவமனைக்கு வந்தனர். நாங்கள் அவர் களிடம் சொந்தங்களில் யாராவது வாடகை தாயாக இருக்கலாம் என்று சொன்ன போது அந்த பெண்ணின் 61வயது தாயே அதற்கு முன்வந்தார்.
அவர் ஏற்கனவே 3 பெண் குழந்தைகளை பெற்றெடுத்து மாத விலக்கு நின்று 5 ஆண்டுகளான நிலையில் தன் மகளுக்காக தானே வாடகைத் தாயாக மாறி ஒரு குழந்தையை சுமந்து பெற்றெடுத்தது மிகப்பெரிய சாதனை யாகும்.
பெண்ணின் கரு முட்டைகளும் அவரது கணவரின் விந்தணுக்களையும் அந்த தாயின் கர்ப் பப்பையில் பொருத்தி மருத்துவமனையின் தீவிர கண்காணிப்பில் வைக்கப் பட்டார். கடந்த நவம்பர் மாதம் அவர் 2.7 கிலோ எடையில் பெண்குழந் தையை பெற்றுக் கொடுத் தார். தாயே தனது மக ளுக்கு குழந்தை பெற்றுக் கொடுத்திருப்பது இது உலகில் இரண்டாவது முறையாகும்.
ஏற்கனவே லண்டன் நாட்டைச் சேர்ந்த கர்ப் பப்பை அகற்றப்பட்ட ஒரு இளம் பெண்ணிற்கு அவரது தாயாரே கர்ப்பப்பையை தானமாக தந்தார். ஸ்வீடன் நாட்டில் மாற்று உடல் உறுப்புகள் பொருத்தப் படுவதை போல் கர்ப் பப்பை மாற்று அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள் ளப்படுகிறது. அங்கு அந்த லண்டன் தாயின் கர்ப் பப்பை அகற்றப்பட்டு மக ளுக்கு பொருத்தப்பட்டது. பின்னர் அந்தப்பெண் தனது கணவரோடு சேர்ந்து இயல்பாக கருவுற்றார்.
பின்னர் குழந்தையை பெற்றெடுத்தார். இந்த விஞ்ஞான வளர்ச்சியை பார்த்து உலகமே ஆச்சரிய மடைந்தது.
இந்தியாவில் 2வது முறை
இந்தியாவில் தாயே தனது மகளுக்காக குழந் தையை பெற்றுக்கொடுத் திருப்பது இது இரண் டாவது முறையாகும். தமிழகத்தில் இதுவே முதல்முறை. குஜராத்தை சேர்ந்த தம்பதிகள் பிரிட் டனில் வசித்துவந்தனர். அந்த பெண்ணிற்கு கர்ப் பப்பை அகற்றப்பட்ட நிலையில் குஜராத் மாநிலம் ஆனந்த் நகருக்கு வந்து தனது தாயாரின் கர்ப்பப் பையில் தனது குழந் தையை பெற்றெடுத்தார். அதுதான் இந்தியாவில் தாயே மகளுக்கு குழந்தை பெற்றுக்கொடுத்த முதல் நிகழ்வாகும்.
-விடுதலை,7.3.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக