செவ்வாய், 23 மார்ச், 2021

பாரதியை தோலுரித்த நிவேதிதா

நிவேதிதா

1906இல் கல்கத்தா டம்டம் விமான நிலையத்தில் நிவேதிதா  என்ற  அன்புருவைப் பாரதி சந்தித்துப் பேசினார். நிவேதிதா என்ற நோபிள், "உமக்குத் திருமணம் ஆகி விட்டதா?" என்றார். "ஆம், மணமாகி ஒரு பெண் குழந் தையும் இருக்கிறாள்" என்றார் பாரதி.

"இம்மாநாட்டிற்கு உங்கள் மனைவியை ஏன் அழைத்து வரவில்லை? விடுதலை உணர்வை அவர்களுக்கு ஏற் படுத்த வேண்டாமா?" இது நிவேதிதையின் கேள்வி.

"எங்கள் சமூகத்தில் மனை வியைப் பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் வழக்கம் இல்லை" என்றார் பாரதியார்.

"உங்கள் பாதி (பெட்டர் ஹாஃப்) மனைவி. அந்தப் பாதியை அடிமைப்படுத்தி விட்டு, மறுபாதியான நீங்கள் உரிமை கேட்பது என்ன நியாயம்? உங்கள் மனைவிக்கு முதலில் சுதந்திரம் தாருங்கள். நீங்கள் தனி, அவள் தனி என நினைக்காது உங்களின் பிரிக்க முடியாத பாதி, தேவி என நினைத்துப் போற்றுங்கள்" என்கிறார் நிவேதிதா.

(ஆர்.எஸ்.எஸ். வார இத ழான "விஜயபாரதம்" 12.3.2021 பக்கம் 11,12)

இதைவிட பாரதியாரின் இரட்டை வேடத்தை யாரால் தான் அம்பலப்படுத்த முடி யும்?

பெண் விடுதலை என் றாலே பெரியாரை முன்னிறுத் தாது பாரதியைத் தூக்கிப் பிடிக் கும் பேச்சாளர்கள் அல்லது எழுத்தாளர்களின்  கண்களை வெளிநாட்டுப் பெண்மணி ஒருவர் திறந்திருக்கிறார்.

"எங்கள் சமூகத்தில் மனை வியைப் பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் வழக்க மில்லை" என்றாராம் பாரதி.

இதன் பொருள் என்ன? எங்கள் சமூகம் என்கிறாரே அந்த 'எங்கள் சமூகம்' என்பது எது? எல்லோருக்கும் தெரிந் ததே!

ஏற்கெனவே இருந்த அந்தப் பாசி பிடித்த சனாதனக் குட்டையிலிருந்து வெளியே வருவதும்,  வெளியேற்றுவதும் தான் ஒரு முற்போக்குவாதியின் சிந்தனையாக இருக்க முடியும். ஆனால் பாரதியால் அதனைச் செய்ய முடியவில்லை என்ற உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும்.

கிட்டத்தட்ட அதே கால கட்டத்தில், ஈரோட்டில் நடை பெற்ற மதுவிலக்குப் போராட் டத்திலும் சரி, 1924இல் நடை பெற்ற வைக்கம் போராட்டத் திலும் சரி தம் இணையர் நாகம்மையாரையும், தங்கை கண்ணம்மையாரையும் ஈடு படுத்தியவர் தந்தை பெரியார் என்பதை எண்ணிப் பாருங்கள்.

இருவருக்கும் இடையே உள்ள முரண்பாடு என்ன என்பது விளங்கும்.

- மயிலாடன்

திங்கள், 22 மார்ச், 2021

உலக வர்த்தக அமைப்புக்கு முதல் பெண் தலைவர்

புதன், 3 மார்ச், 2021

பரோடா சமஸ்தானத்திலுள்ள இந்துப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, இந்துச் சமுதாயச் சட்டத்தை திருத்திப் புதிய சட்டம்