சனி, 28 மார்ச், 2020

கருக்கலைப்பு குற்றம் அல்ல: நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது

வெலிங்டன், மார்ச் 21-  நியூசி லாந்து நாட்டில் கருக்கலைப்பு என்பது குற்றம். இதற்கு அங்கு 1977ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஒரு சட்டம் வழிவகுத்து இருந்தது.

இந்த நிலையில், அந்த நாட்டின் குற்றவியல் சட்டத் தில் இருந்து, கருக்கலைப்பு குற்றம் என்று கூறப்பட்ட பிரிவை நீக்க நியூசிலாந்து அரசு முடிவு செய்தது.

இதற்கான மசோதா, அந்த நாட்டின் நாடாளுமன் றத்தில் கொண்டு வரப்பட் டது. இந்த சட்ட மசோதா வுக்கு ஆதரவாக 68 ஓட்டுக ளும், எதிராக 51 ஓட்டுகளும் விழுந்தன. இதனால் மசோதா நிறைவேறியது.

முதலில் இது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த நியூசிலாந்து அரசு முடிவு செய்தது. பின்னர் அந்த முடிவை கைவிட்டது.

இப்போது கருக்கலைப்பு குற்றம் அல்ல என்று ஆக்கப் படுவதால், ஒரு சுகாதார பிரச்சினையாக மட்டுமே கருதப்படும் என நியூசிலாந்து நீதித்துறை அமைச்சர் ஆண்ட்ரூ லிட்டில் ஒரு அறிக்கையில் கூறி உள்ளார்.

நியூசிலாந்து நாட்டில் கடந்த 40 ஆண்டுகளாக மருத் துவ சிகிச்சைகளில், குற்றமாக கருதப்படுகிற ஒரே மருத்துவ முறை கருக்கலைப்பு என்று இருந்து வந்தது. இப்போது அது குற்றம் என்ற நிலையில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.

இனி நியூசிலாந்தில் பெண் கள் 20 வாரங்கள்வரை கர்ப் பத்தை கலைத்துக்கொள்ள தடை ஏதும் இல்லை.

- விடுதலை நாளேடு 21 3 20

சனி, 14 மார்ச், 2020

கிரீஸின் முதல் பெண் அதிபர் பதவியேற்பு

ஏதென்சு, மார்ச் 14- தென் கிழக்கு அய்ரோப்பிய நாடான கிரீ ஸின் முதல் பெண் அதிபரா கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கேதரீனா சாகில்லாரொ போலு, வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கிரீஸ் அரசியலில் பெண் கள் மிகக் குறைந்த எண்ணிக் கையிலேயே உயர் பதவிக்கு வருவதாகவும் பிரதமர் கிரி யாகோஸ் மிட்ஸோதாகிஸ் தலைமையிலான அமைச்சர வையில் ஏறத்தாழ அனைவ ருமே ஆண்களாக இருப்பதா கவும் விமர்சிக்கப்பட்டு வரு கிறது.

இந்த நிலையில், அந்த நாட்டின் அதிபர் பதவிக்கு உயர்நீதிமன்ற முன்னாள் நீதி பதியான கேதரீனா சாகில்லா ரொபோலுவின் பெயரை மிட்ஸோதாகிஸ் கடந்த ஜன வரி மாதம் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில், அவருக்கு ஆதரவாக 261 வாக் குகளும், எதிராக 33 வாக்கு களும் பதிவாகின.

இந்த நிலையில், சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு அவர் நாட்டின் அதிபராக தற்போது பொறுப்பேற்றுக் கொண்டு உள்ளார்.

கரோனா வைரஸ் பரவ லைத் தடுப்பதற்கான முன் னெச்சரிக்கை நடவடிக்கை யாக, அவரது பதவியேற்பு நிகழ்ச்சியின்போது நாடாளு மன்றத்துக்கு ஒரு சில உறுப் பினர்களே வந்திருந்தனர் என்று தகவல்கள் தெரிவிக் கின்றன.

- விடுதலை நாளேடு 14 3 20

திங்கள், 9 மார்ச், 2020

பெரியாரும் பெண்களும்

பெரியார் இல்லையெனில் பெண் விடுதலை சாத்தியமில்லை!

இந்திய விடுதலைக்கு முன்னரே ‘பெண் விடுதலை’ பற்றி முழங்கியவர் பெரியார். ஆணாதிக்கச் சிந்தனைகளால் பல நூற்றாண்டுகளாய் அடிமைகளாக இருந்த பெண்ணின விடுதலைக்கு வித்திட்டவர்.  ‘The second sex’ எனும் புத்தகம் அதிகப் பக்கங்களைக் கொண்ட உலகப் பெண்ணியவாதிகளின் ‘கைடு’. அதற்கு இணையாய் அறுபதே பக்கங்களில் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்கிற புத்தகத்தை எழுதிய மேதை தந்தை பெரியார்.

பெரியார் பேசிய பெண் விடுதலை என்பது மிகவும் தனித்துவமானது. காத்திரம் நிறைந்தது. சமூகம் பேசத் தயங்கிய பெண்ணியக் கருத்தியலை முற்போக்காக மிகவும் தீவிரமாகப் பேசியது. அடிமைத்தனம் எந்த வகையில் இருந்தாலும் அதை கொஞ்சமும் எதிர்க்கத் தயங்கவில்லை. பெண் விடுதலைக்கு தடைகளாய் இருக்கும் சாதி, மதம், கடவுள், தேவையற்ற சடங்கு சாஸ்திர, சம்பிரதாயங்கள் என்று அனைத்தையும் கடுமையாய் சாடி.. சுக்கு நூறாக்கியது.

பெண்கள் சம உரிமை பெற வேண்டுமென்றால் கல்வியறிவு அடிப்படை என்பதை உணர்ந்து, பெண்களின் கரங்களில் இருக்கும் கரண்டிகளைப் பறிக்க வேண்டுமென்றார். பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தார். கும்மி கோலாட்டங்களை மறந்து விட்டு, ஆண்களைப் போல எல்லா விளையாட்டுக்களிலும் ஈடுபட வேண்டும்.  அப்போது தான் பெண்களுக்கும் பலமும், தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படும் என்ற நிதர்சனத்தை முன்வைத்தார்.

ஆண்களைப் போல் பெண்களும் சுயமாக இருப்பதும், பொருளாதார சுதந்திரத்திற்கு வழி வகை செய்வதும் மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார்.
இளவயது திருமணத்தால் பெண்கள் மன ரீதியிலும், உடல் ரீதியிலும் பெரிதும் பாதிக்கப்பட, அதனை வன்மையாக எதிர்த்தார். வெறும் பிள்ளை பெறும் இயந்திரமா பெண் என்றவர், ஆணாதிக்கத்தை சாட்டையால் அடிக்கும் கேள்விகளை தொடர்ந்து எழுப்பினார். கட்டாயத் திருமணங்களை ஒழிக்க நினைத்தவர், மறுமணங்களை ஊக்குவித்தார். தாலியை அடிமைச் சின்னமாகக் கருதியவர்,  திருமணம் ஆனவர், ஆகாதவர் என்ற வேறுபாட்டைக் காட்டுவதற்கு பெண்களுக்கு தாலி என்றால் ஆண்களுக்கான அடையாளம் என்ன?  என்கிற  கேள்வியை
வைத்தார்.

பெண்கள் எந்த உடை அணிய வேண்டும் என அவர்கள் முடிவு செய்யட்டும். அவர்கள் அலமாரியில் உங்களுக்கென்ன வேலை? என மௌனிக்கும் கேள்விகளை எழுப்பியவர், கெட்ட வார்த்தைகள்கூட பெண்ணின் ஒழுக்கத்தை விமர்சிப்பதாய் மட்டுமே இருக்கின்றது எனச் சாடினார்.
இச்சமூகம் பெண்ணுக்கு இழைத்த அநீதியைத் தொடர்ந்து தோலுரித்தவர், கற்பு என்பது பெண்களை அடிமைப்படுத்தவே உருவாக்கப்பட்டது என்றும், உண்மையில் அப்படி ஒன்றில்லை எனவும், அப்படியே இருந்தாலும், ஆண்களுக்கு அது ஏன் இல்லை என்று வினவினார்.

 ஓர் ஆண் எப்படித் தான் விரும்பும் பெண்ணைத் திருமணம் செய்கிறானோ, அதேபோல பெண்ணும் தான் விரும்பும் ஆணைத் திருமணம் செய்யலாம் என்றார். கற்புக்காக உண்மையான அன்பை, காதலை மறைத்து, காதலும்-அன்பும் இல்லாதவனுடன் வாழும் சமூகக் கொடுமை அழிய வேண்டுமென துணிந்து பேசினார். பெண் மறுமணம், திருமண விடுதலை, பெண்களுக்கும் சொத்தில் உரிமை போன்ற கருத்துகளைக் கொண்டு, ஆண்மை என்கிற பதம் அழியாமல் பெண் விடுதலை சாத்தியம் இல்லை என்று ஆணித்தரமாகக் கூறினார்.

அந்தக் காலத்தில் கணவனை இழந்த பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாது. நகைகள் எதுவும் அணியக் கூடாது. பூ மற்றும் பொட்டு வைத்தல் கூடாது, வெள்ளைச் சேலையினை மட்டுமே உடுத்த வேண்டும்.  குறிப்பாக பிராமண சமூகத்தில் பெண்கள் தங்கள் தலைமுடியை மழித்து மொட்டைப் போடும் பழக்கமும் இருந்தது. கணவனை இழந்த பெண்கள் படும் துயரைப் பார்த்தவர், அவர்களின் மறுமணத்திற்காக வலிமையாகக் குரல் கொடுத்தார். தான் பேசியும் எழுதியும் வந்த சீர்திருத்தங்களை தன் வீட்டில் இருந்தே தொடங்கினார் பெரியார். திருமணமாகி ஒரே மாதத்தில் கணவனை இழந்த தன் தங்கையின் 10 வயது மகளுக்கு மறுமணம் செய்து வைத்தார்.

கோவில்களில் பெண்களைப் பொட்டு கட்டுதல் எனும் பெயரில் தேவதாசிகளாக உருவாக்கினார்கள். இதனால் பாலியல் தொழில் வளர்ந்தது. இதனை பெரியார் மிகவும் வன்மையாகக் கண்டித்தார். விலைமாதர் நிலைக்கு ஒரு பெண்ணைத் தள்ளுவதும் ஆண் வர்க்கம்தானே? ஏன் ஆண்களுக்கு இந்த சொல் வழக்கில் இல்லை என்ற காத்திரமான கேள்விகளை முன் வைத்தார்.

வெறும் பேச்சளவில் அவர் எதையும் சொல்லவில்லை. தன் வீட்டிலேயே பெண்களுக்கான முறைசாரா அமைப்பு ஒன்றையும் ஏற்படுத்தி, அதில் பெண்கள் தங்கள் பிரச்னைகளைப் பேச வசதி செய்து கொடுத்துள்ளார். வீட்டைவிட்டு வெளியேறும் பெண்கள், அநாதரவான பெண்கள்
தங்குவதற்காக ஒரு விடுதி ஒன்றையும் நடத்தி இருக்கிறார் பெரியார். 1920களிலேயே மனைவியையும், இளைய சகோதரியையும் பொது வாழ்வில் ஈடுபடச் செய்தார். பெரியாருடன் மனைவி நாகம்மையாரும், தங்கை கண்ணம்மாளும் கூட கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டனர்.

பெண் விடுதலையை சுயமரியாதை இயக்கத்தின் ஒரு செயல்பாட்டாகக் கருதினார் பெரியார். சமுதாயம் சார்ந்த பெண்ணியத்தை தமிழ்நாட்டில் முதல் முறையாக அறிமுகம் செய்து வைத்தார். ‘தனியாக வாழும் பெண்கள், கணவனை இழந்த பெண்கள், பாலியல் தொழில் செய்யும் பெண்கள் என்று தம்மைக் கருதிக்கொள்வோர் சிறப்பாக மாநாட்டில் பங்கேற்க வேண்டும்’ என்று  1928  செங்கல்பட்டில் நிகழ்ந்த முதல் சுயமரியாதை மாகாண அழைப்பிலேயே பெரியார் எழுதுகிறார். அந்த மாநாட்டில் பல தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது…

* 16 வயதுக்குக் கீழுள்ள பெண்களுக்குத் திருமணம் நடத்தக் கூடாது.
* திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்யும் உரிமை பெண்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.
* கணவனை இழந்த பெண்களின் மறுமணம் வரவேற்கப்பட வேண்டும்.
* ஜாதி, மதக் கட்டுப்பாடு இல்லாமல் ஆண், பெண் இருவரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப வாழ்க்கைத் துணையினை தாங்களே தேர்வு செய்யலாம்.
* பெண்களுக்கும் சொத்துரிமை வழங்க வேண்டும்.
* பெண் தான் விரும்பும் எந்தத் துறையிலும் வேலை செய்யலாம்.
* ஆரம்பக் கல்வி ஆசிரியர் பணியிடங்களைப் பெண்களுக்கே ஒதுக்க வேண்டும்
போன்றவை முக்கியமான தீர்மானங்கள்.
தான் வாழும் காலமெல்லாம்
பெண்களின் அடிப்படை உரிமைகளுக் காகக்  குரல் கொடுத்தவர் பெரியார்.  பெண்கள் மாநாட்டில், பெண்களால் வழங்கப்பட்ட பெரியார் என்கிற பட்டத்துக்கு நூறு சதவிகிதமும் உரித்தானவர். பெரியார் என்றொருவர் இல்லை என்றால், இன்று தமிழ்நாட்டில் பெண்களுக்கான 33% இட
ஒதுக்கீட்டை நாம் பெற்றிருக்க முடியாதுதான்.
http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=6364&id1=118&issue=20200301
- குங்குமம் வெளியீடான தோழி இதழ், 1.3.20

வியாழன், 5 மார்ச், 2020

பிபிசி 100 பெண் கள்" பட்டியலில் இடம் பெற்ற 7 இந்தியர்கள் யார் யார்?

மார்ச் 8 உலக மகளிர் உரிமைநாள் - "பிபிசி 100 பெண் கள்" பட்டியலில் இடம் பெற்ற 7 இந்தியர்கள் யார் யார்?

பன்முகத் தன்மை கொண்ட வியக்கத்தக்க பெண்களை பிபிசி சிறப்பித்தது, ஒப்பனையாளர் பாபி பிரவுன், அய்.நா. துணைச் செயலாளர் அமினா முகமது, செயற்பாட்டாளர் மலாலா யூசப்ஜாய், தடகள வீராங்கனை சிமோனே பிலெஸ், ஆடை வடிவமைப்பாளர் அலெக் வெக், இசைக் கலைஞர் அலிசியா கீஸ், ஒலிம்பிக் குத்துச்சண்டை வாகையர் நிகோலா ஆடம்ஸ் ஆகியோரும் இந்தப் பட்டியலில் அடங்குவர்.

ஆரண்யா ஜோஹர்,

கவிஞர்

பாலின சமத்துவம், மன ஆரோக் கியம் மற்றும் உடல் நேர்மறை செயல்பாடு பற்றிய விடயங்களை வெளிப்படுத்த ஆரண்யா கவிதை பாடுதலை ஓர் ஊடகமாகப் பயன் படுத்துகிறார். `அறிவுக்கான பிரவுன் கேர்ள்ஸ் வழிகாட்டி' என்ற அவரு டைய நிகழ்ச்சியை யூடியூப்பில் மூன்று மில்லியனுக்கும் மேற்பட் டோர் பார்த்துள்ளனர். எதிர்காலம் பற்றிய அவருடைய தொலைநோக்குப் பார்வை: ``வேலை பார்க்கும் துறைகளில் பெண்கள் அதிக அளவில் பங் கேற்றால் உலக அளவில் ஜிடிபி வளர்ச்சி 28 டிரில்லியன் அளவுக்கு அதிகரிக்கும். உலகில் பாதி மக்கள் தொகையையும் அவர்களுடைய திறமையையும் நாம் எதற்காகக் கட்டுப் படுத்த வேண்டும்? பாலின ரீதியில் சமத்துவமான உலகம் எப்படிப்பட்டதாக இருக்கும்? அதில் இருந்து நாம் எவ்வளவு தொலைவில் இருக்கிறோம்?''

சுஷ்மிதா மொகந்தி,

விண்வெளி ஆய்வாளர்

`இந்தியாவின் விண்வெளிப் பெண்மணி' என்று புகழப்படும் விண்கல வடிவமைப்பாளரான சுஸ்மிதா இந்தியாவின் முதலாவது விண்வெளி ஆய்வு தொடர்பான நிறுவனத்தை தொடங்கியுள்ளார். பருவநிலை செயல்பாடு வழக் குரைஞரான இவர், விண்வெளியில் இருந்து பருவநிலை மாற்றத்தைக் கண்காணித்துப் புரிந்து கொள்வதற்கு தனது தொழிலைப் பயன்படுத்துகிறார். எதிர்காலம் பற்றிய அவருடைய தொலைநோக்குப் பார்வை:``அடுத்த மூன்று அல்லது நான்கு தலைமுறைகளில் நமது தாய் பூமி வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்காது என்று அஞ்சுகிறேன். பருவநிலை மாற்றம் தொடர்பாக செயல்பட வேண்டிய அவசரத்தை மனிதகுலம் விரைவில் அறிந்து கொள்ளும் என்று நான் நம்புகிறேன்.''

வந்தனா சிவா,

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்.

1970களில் மரங்களை வெட்டா மல் பாதுகாப்பதற்காக, மரத்தை சுற்றி நின்று மரத்தை கட்டிப் பிடித் துக் கொள்ளும் இயக்கத்தில் ``மரங் கள் மீதுஉண்மையான நேசம் கொண் டவராக'' இருந்தவர். இப்போது உலக பிரசித்தி பெற்ற சுற்றுச்சூழல் இயக்க தலைவர், மாற்று நோபல் பரிசு வென்றவர், இயற்கையின் காவ லர்களாக பெண்களைப் பார்க்கும் `சுற்றுச்சூழல் பெண் ஆர்வலர்.' ``பேரழிவு மற்றும் சீர் குலைவு நிலையில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்தி, நமது பொதுவான எதிர்காலத்துக்கான விதையை விதைப்பவர் களாக பெண்கள் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.''

நட்டாசா நோயல்,

யோகா நிபுணர்

நட்டாசா யோகா நிபுணர், யோகா மற்றும் உடல் ஆரோக்கிய பயிற்சி தரும் ஆசிரியையாக உள்ளார். மூன்றா வது வயதில் தாயை இழந்துவிட்ட நிலையில், குழந்தையாக இருந்த போதே அத்துமீறலுக்கு ஆளானவர் என்ற முறையில், மன உளைச்சல் நிறைந்த குழந்தைப் பருவம் பற்றி சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவ ராக, இந்த உடல் ஆரோக்கிய பயிற்சியாளர் இருக்கிறார். ``ஒவ்வொரு மனிதரும் அதிகாரம் பெற்றிருக்கும் சூழ்நிலையில் வாழக் கூடியதாக எதிர்காலம் இருக்க வேண்டும் என்பது எனது நம்பிக்கையாக உள்ளது. சம அளவிலான வாய்ப்புகள், சம அளவிலான அடிப்படை உரிமைகள்... ஒவ்வொருவரும் தங்களுடைய உணர்வுப்பூர்வமான அறிவுத் திறனையும், அய்.க்யூ.வையும் வளர்த்துக் கொள்ள பாடுபடுவது என இருக்கும் என்று நம்புகிறேன். உண்மையான மனிதர்கள் உருவாக்கப்படுவார்கள் என்று அழுத்தமாக, விழிப்போடு நம்புகிறேன்.''

பிரகதி சிங்,

மருத்துவர்

படித்துப் பட்டம் பெற்ற மருத்துவர் என்ற முறையில் பாலியல் நாட்டமின்மை குறித்து பிரகதி சிங் ஆராய்ச்சியைத் தொடங்கிய போது, பாலுறவு கொள்வதில் தங்களுக்கு நாட்டம் இல்லை என்றாலும், பெற் றோர்கள் திருமண ஏற்பாடு செய்யும் சூழ்நிலையை எதிர்கொள்ள வேண் டியிருப்பதாக நிறைய பேர் அவரிடம் தெரிவித்தனர்.எனவே பாலியல் உறவு அல்லாத தொடர்புகளை வைத்துக் கொள்ள விரும்பு வோரின் சந்திப்புகளுக்கு அவர் ஏற்பாடு செய்யத் தொடங் கினார். இப்போது அவர் இந்தியன் ஏசஸ் என்ற பாலியல் உறவில் நாட்டம் இல்லாதவர்களுக்கான இணைய தளத்தை நிர்வகித்து வருகிறார்.

``குறைந்த `பலம்', அதிக `மன உறுதி' - என்ற நமது பெண்ணியத்தில் ``பெண்மைத் தன்மை'' குணாதிசயங்களை அதிகமாக ஊட்ட முயற்சிக்க வேண்டிய தருணம்.''

சுபலட்சுமி நந்தி,

பாலின சமத்துவ நிபுணர்

பெண்கள் குறித்த ஆராய்ச் சிக்கான பன்னாட்டு மய்யத்தில் பணியாற்றும் சுபலட்சுமி, ஆசியா வில் பாலின சமத்துவத்தை மேம் படுத்தும் பணிகளில் 15 ஆண்டு களுக்கும் மேலாக ஈடுபட்டு வரு கிறார். பெண் விவசாயிகளின் உரி மைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பெண்கள் கல்வியை மேம்படுத்துதல் பற்றி அவர் கவனம் செலுத்தி வருகிறார்.``பெண்களை புறக்கணித்துவிட முடியாத ஒரு எதிர்காலம் உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. விவசாயத் தோட்டங் களில், வனங்களில், தொழிற்சாலைகளில், தெருக்களில், வீடுகளில் அவர்களுடைய உழைப்பு - அனைத்துமே அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படும். பெண்கள் தாங்களாகவே அமைப்பு ரீதியாக இணைவார்கள். ஒட்டுமொத்த பொருளா தாரம் மற்றும் சமூகத்தின் மேம்பாட்டுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை அவர்களே முன்னெடுத்துச் செல்வார்கள். பெண்களின் உழைப்புக்கு, ஊதியத்துடன் கூடிய மற்றும் ஊதியம் இல்லாத உழைப்புக்கு, முக்கியத்துவம் தரும் வகையில் அரசின் தகவல்களும் கொள்கைகளும் அமையும்.''

பர்வீனா அகாங்கெர்,

மனித உரிமை ஆர்வலர்

`காஷ்மீரின் இரும்புப் பெண் மணி' என்று பர்வீனா அழைக்கப்படு கிறார். இளம் வயதில் இருந்த அவரு டைய மகன் 1990இல், இந்திய நிர்வா கத்துக்கு எதிராக காஷ்மீரில் போராட் டம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது காணாமல் போனார்.`காஷ்மீரில் காணாமல் போன ஆயிரக்கணக் கான' பேரில் அவரும் ஒருவர் - இதனால் காணாமல் போனவர்களின் பெற்றோர்களின் சங்கம் (ஏ.பி.டி.பி.) என்ற அமைப்பை பர்வீனா தொடங்கினார். தனது மகன் காணாமல் போய்  30 ஆண்டாகும் நிலையில், தனது மகனை மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது என்கிறார் பர்வீனா.

``திணிக்கப்பட்ட நடவடிக்கையால் காணாமல் போதல் நடவடிக்கைக்கு என் மகனை இழந்த சோகத்தால், நீதி மற்றும் பொறுப்பேற்கும் நிலைமையை வலியுறுத்தி போரா டும் உத்வேகம் ஏற்பட்டது. உலகை நல்ல இடமாக, குறிப்பாக பெண்களுக்கு நல்ல இடமாக மாற்றுவதற்காகப் பாடுபட வேண்டும் என்பது என்னுடைய விருப்ப லட்சியம். பெண் களின் பிரச்சினைகளுக்கு முதன்மையான முக்கியத்துவம் தர வேண்டியது இன்றைய உலகில் கட்டாயம். குறிப்பாக மோதல்கள் மற்றும் போர் நடைபெறும் பகுதிகளில் உள்ளவர்களுக்கு இது அவசியமானது.

''டில்லியில் அக்டோபர் 22 ஆம் தேதி நடைபெறும் "பிபிசியின் 100 மகளிர்" எதிர்கால மாநாடு நிகழ்ச்சியில் இவர்களில் அனைவரையும் அல்லது பெரும்பாலான வர்களை நீங்கள் சந்திக்கலாம்

 - விடுதலை நாளேடு  3.3.20