செவ்வாய், 11 ஜூன், 2019

மகளிருக்கு மட்டும்.... டாக்சி!



பயணங்கள் பெண்களுக்குப் பாதுகாப் பானவையா என்ற கேள்விக்கு, ‘ஆம்’ என்ற பதிலைச் சொல்லும் பெண்களின் சதவீதம் மிகக் குறைவு. பொதுப் போக்கு வரத்தோ தனியார் நிறுவனங்களின் போக்குவரத்து சேவையோ எதுவாக இருந்தாலும் பெண்கள் பாதுகாப்பு உணர்வுடனும் ஆசுவாசத்துடனும் பயணம் செய்ய முடிவதில்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் மகளிர் மட்டும் பேருந்துகளும் ரயிலில் மகளிர் மட்டும் பெட்டிகளும் பெண்களுக்கு ஓரளவு கைகொடுக்கின்றன.

பயணங்களில் தொந்தரவு இருக்கிறது என்பதற்காகப் பெண்கள் வீட்டுக்குள் ளேயே முடங்கிக் கிடக்க முடியாது. படிக்கவோ வேலை நிமித்தமாகவோ அவர்கள் பயணப்பட வேண்டியிருக்கிறது. இரு சக்கர வாகனப் பயணம், குடும்ப உறுப்பினருடனான பயணம் போன்றவை எல்லாப் பெண்களுக்கும் வாய்ப்பதில்லை. இப்படியான சூழலில் வேலைக்குச் செல்லும் பெண்களின் தேவையை உணர்ந்து மகளிர் மட்டும் டாக்சி சேவைகளைச் சில நிறுவனங்கள் அறிமுகப் படுத்திவருகின்றன. கோ வையில் ‘ரெட் டாக்சி’ நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பிங்க் டாக்ஸி’ சேவையும் அப்படியொரு நோக்கம் கொண்டதுதான். பெண்கள் இயக்கும் இந்த டாக்சியில் ஆண்கள் பயணிக்க அனுமதி இல்லை. பெண்களும் பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களும் காலை 6 மணி முதல் இரவு 10.30 மணிவரை பயணிக்கலாம். இரண்டு மாத சோதனை ஓட்டத்துக்குப் பெண்களிடையே கிடைத்த வரவேற்பையடுத்து  ஜூன் 6 முதல் கோவையில் முழுமையாக இந்த சேவையை  ‘ரெட் டாக்சி’ நிறுவனத்தினர் அறிமுகப்படுத்தவிருக்கின்றனர்.

தற்போது ஏழு ‘பிங்க் டாக்சி’கள் கோவை மாநகரில் இயங்கிவருகின்றன. இதற்கென ஏழு பெண் ஓட்டுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெண்களுக் காகச் செயல்படுத்தப்படும் இந்த முயற் சிக்கு ஆரம்பம் முதலே நல்ல வரவேற்பு கிடைத்துவருவதாக ரெட் டாக்சி நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். அதற் குக் காரணம் ஓட்டுநர்கள்.

பயணிகளின்


மன நிறைவு


மூத்த ஓட்டுநரான சிவராணிக்கு 47 வயது. துடிப்புடன் பேசுகிறார். “நாங்க டாக்சியை ஓட்டிட்டுப் போவதை பாத்துப் பலரும் ஆச்சரியப்படுவார்கள்.  பயணம் செய்யும் பெண்கள் குடும்ப உறவுபோல எங்களிடம்  பேசிக் கொண்டு வருவார்கள். சில நேரம் அவர்களுடைய பிரச்சினைகளைக்கூட சொல்லிப் புலம்பு வார்கள். எங்களுடன் செல்பி எடுத்துக் கொள்வார்கள். பேருந்து நெரிசலில்  ஆண்களோட பயணம் செய்வதை விட இப்படி என்னை மாதிரி பெண் ஓட்டுநர் ஓட்டுகின்ற கால் டாக்சியில் செல்வது அவர்களுக்குப் பிடித்திருக்கிறது" என்கிறார் சிவராணி.

சக டாக்சி ஓட்டுநர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் எனக் கேட்ட தற்கு, “நெரிசல் அதிகமாக இருக்கும் இடத்தில் எங்களைப் பார்க்கும் டாக்சி ஓட்டுநர்களும் ஆட்டோ  ஓட்டுநர்களும், ‘அக்கா நீங்கள் முதலில் போங்கள் என்று வழிவிடுகிறார்கள். தெரியாத இடங் களுக்கு வழி கேட்கும் போது, ‘நீங்கள் எங்க தொழிலுக்கு வந்தது ரொம்ப மகிழ்ச்சி. எந்த உதவி வேணும்னாலும் கூப்பிடுங்கள்’ என்று சொல்லி ரொம்ப ஆதரவாக  இருக்கிறார்கள். சாஃப்ட்வேர் கம்பெனிகளில்  வேலை செய்யும் பெண் கள், ரயில் நிலையம், விமான நிலையத்திலிருந்து தனியாக வருகின்ற பெண்கள், ‘நாங்கள் இப்போது எந்தச் சிரமமும் இல்லாம நிம்மதியாக வீட்டுக்குப் போ கிறோம்’ என்று எங்களிடம் சொல்லுவது மனசுக்கு நிறைவாக இருக்கு” என்றார் உற்சாகத்துடன்.

முன் இருக்கைச் சுதந்திரம்


தனது சொந்த மாருதி ஆம்னி வாகனத்தில் 2013 முதல் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுவந்த துடியலூரைச் சேர்ந்த நித்ய புவனேஸ்வரி (37) கடந்த ஒரு மாதமாக ‘பிங்க் டாக்சி’யை இயக்கி வருகிறார். “ஆண் கள் ஓட்டுநராக  இருக்கின்ற  டாக்சியில் சில பொண்ணுங்க முன்பக்க இருக்கையில் உட்காரத் தயங்கு வார்கள். ஆனா, இப் போது எங்களுடன் முன்பக்க இருக்கையில் உட்கார்ந்து பெண்கள் மனம் விட்டுப் பேசி கொண்டு வரு கிறார்கள்” என்கிறார் அவர்.

பாதுகாப்பு அம்சம்


‘பிங்க் டாக்சி’ பயணத்தின்போது எங்கேனும் பிரச்சினை ஏற்பட்டால் உதவிக்கு அழைக்க ‘பேனிக் பட்டன்’ வசதியை ஏற்படுத்தி உள்ளனர். அந்த பட்டனை அழுத்தியவுடன் டாக்சி நிறுவனத்தின் கால் சென்டருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுவிடும். உடனே ஜிபிஎஸ் வசதியுடன் கார் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து, அருகிலுள்ள டாக்சி ஓட்டு நரையும் மெக்கானிக்கையும் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘பிங்க் டாக்சி’ நிறுவனர்களில் ஒருவரான தீபக் கூறும்போது, “பெண் ஓட்டுநர்கள் தேவை என வாட்ஸ் அப், ஃபேஸ்புக், நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்தோம். ஆனால், டாக்சி ஓட்டு நராக வர பலருக்கும் முதலில் தயக்கம் இருந்தது. அவர்களுக்கு நம்பிக்கை அளித்து, பாது காப்பு அம்சங்களை விளக் கிய பிறகு விருப் பத்தோடு ஏற்றுக் கொண்டனர். பெண் களின் பாதுகாப்பு கருதியும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கிலும்தான் பெண்களுக் கான இந்த  டாக்சி சேவையைத் தொடங்க விருக்கிறோம். பெண் ஓட்டுநர் களுக்கு எந்த நேரக் கட்டுப்பாடும் விதிக் கப்பட வில்லை. அவர்கள் விருப்பப்படி எந்த எட்டு மணி நேரம் வேண்டுமானாலும் பணிபுரியலாம். எங்களின் சேவையைப் பயன்படுத்திய பல வாடிக்கையாளர்கள், ‘அதே ஓட்டுநரையே மீண்டும் அனுப் புங்கள்’ எனக் கேட்கும் அளவுக்கு நம்பிக் கையைப் பெற்றுவரு கிறோம்” என்றார்.

- விடுதலை நாளேடு,11.6.2010 9