வியாழன், 1 ஜனவரி, 2015

இதுதான் பாரதம் குழந்தைகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி 3,400 கோடி டாலர் கொள்ளை

இதுதான் பாரதம்
குழந்தைகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி 3,400 கோடி டாலர் கொள்ளை

டில்லி, அக்.18- குழந்தைகள் உரிமைக்காக செயல்பட்டுவருபவரான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான உலகப் பயணம் (The Global March Against Child Labour) என்கிற தலைப்பில் மேற்கொண்ட ஆய்வு புள்ளிவிவரம் எச்சரிக்கை மணியை ஒலித்துள்ளது.
நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து சிறுமிகள் இந்தியா வுக்குள் கொண்டுவரப்படுகின்றனர்.  பின்னர் பாலியல் தொழிலில் கட்டாய மாகத் தள்ளப்படுகின்றனர். இது தணிவதற்கான அறிகுறியே தென்பட வில்லை. பாலியல் தொழிலில் 30 இலட்சம் பெண்கள் ஈடுபடுத்தப்பட் டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறு கின்றன.
எச்சரிக்கை மணியாக ஒலிக்கும் இப்புள்ளிவிவரம் குழந்தைகள் உரி மைக்காக நோபல் பரிசு பெற்றுள்ள கைலாஷ் சத்யார்த்திமூலம் எடுக்கப் பட்ட ஆய்வில் வெளிவந்துள்ள தகவலாகும். பாலியல் தொழிலில் தள்ளப்படுபவர்களின் பின்னணியில் உள்ள பொருளாதாரம் என்கிற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு இப் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளார்.
சட்ட விரோத வியாபாரம்
பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சிக்கான அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களுடன், இதற்கிடையே சிவப்பு விளக்கு பகுதிகளில் பணி யாற்றும் பெண்கள் குறித்து வெளி யான  எண்ணிக்கையின்படி 60 லிருந்து 90 ,லட்சம் வரை பெண்கள் சட்டவிரோத வணிகமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுளளனர். மது அருந்தும் இடங்களில், நடன மாடுமிடங்கள், மசாஜ் பார்லர்கள் ஆகியவையும் இதனுளடங்கி உள்ளன.
அதிர்ச்சி அளிக்கக்கூடிய புள்ளி விவரங்களாக, வயதான பெண்களைக் காட்டிலும், குறைந்த வயதுள்ள பெண் கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறார் கள். வயதானவர்களுடன் ஒப்பிடும் போது, வயது குறைந்த பெண்கள் நீண்ட காலத்துக்கு பாலியல் தொழி லில் பணியாற்ற முடியும் என்பதால் அதிக விலைக்கு விற்கப்படுகிறார்கள்.
இந்தியாவில் மட்டும் பாலியல் தொழிலில் பணப்பரிமாற்றம் 34,300 கோடி டாலரைத் தாண்டுகிறதாம்.
சத்யார்த்தி தன்னுடைய ஆய்வுத் தகவலாக கூறும்போது, ஏராளமான முகவர்கள் பாலியல் தொழிலுக்கான முகவர்கள், பாலியல் விடுதி உரிமை யாளர்கள், வட்டிக்கடைக்காரர்கள், சட்ட அமலாக்கத்துறை அலுவலர்கள், வழக்குரைஞர்கள், நீதித்துறையினர் மற்றும் சில கட்டங்களில் வணிகத் துக்காக பாலியல் தொழிலில் கட் டாயமாக ஈடுபடுத்தப்பட்டு பாதிக்கப் பட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இத்தொழிலின்வாயிலாக பணத்தைப் பெறுகின்றனர் என்று கூறியுள்ளார்.
2,400 கோடி டாலர் சுரண்டல்
ஆய்வுத்தகவல்களின்படி, சட்ட அமலாக்கத்துறை அலுவலர்கள் (காவல்துறையினர் மற்றும் பலர்) 2,400 கோடி டாலர் அளவில் குழந்தை களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத் துவதன்மூலம் சுரண்டலில் ஈடுபட் டுள்ளனர்.
அதேபோல், இந்தியாவில் வழக் குரைஞர்கள் மற்றும நீதித்துறையினர் 5,150 கோடி டாலர் அளவில் இலாபம் பெற்றுள்ளனர்.
குழந்தைகளைப் பாலியல் தொழி லில் ஈடுபடுத்தி சுரண்டுவதன்மூலம் ஒட்டுமொத்தமாக 30,900 கோடி டாலர்  மதிப்பில் பாலியல் தொழில் நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. அதன் சாத்தியமான ஆதாயமாக 3,400 கோடி டாலர் இருந்துவந்துள்ளது.
இந்தியாவில் கூலிவேலைக்கு பணியமர்த்தும் முகவர்களால் வீட்டு வேலைகளில் குழந்தைகள் சுமார் 36 இலட்சம் அளவில் ஈடுபடுத்தப்படு கிறார்கள் என்று ஆய்வுத்தகவல் கூறு கிறது. டில்லியில் மட்டும் 3 ஆயிரம் அலுவலகங்கள் குழந்தைகளைப் பணியமர்த்தும் முகவர்களுக்கான அலுவலகங்களாக  உள்ளனவாம்.
ஆய்வு அறிக்கையில், குழந்தைத் தொழிலாளர்கள் வீட்டுப்பணிகளில் ஈடுபடுத்த தலைநகரத்தில் உள்ள சந்தைகளில் பலகாலமாக இருந்து வரும் அளவைவிட இரண்டரை மடங்கு உயர்ந்து காணப்படுகிறது. இதில் சட்ட விரோத பணப்பரி மாற் றம்  3,500 கோடி டாலரிலிருந்து 36,100 கோடி டாலர் அளவுவரையிலும் உள் ளது என்று ஆய்வறிக்கை கூறு கிறது.
சவுக்கடி
அறியாமையில் உள்ள இந்தியா நோபல் பரிசு பெற்றவரால் விழிப்புக்கு கொண்டு வரப்படுகிறது. வளரும் நாடுகளில் வீட்டு வேலை களில் குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் பாலியல் சுரண்டல் ஆகிய வற்றின்மீது கவலை அளிப்பதாகும்.
கைலாஷ் சத்யார்த்தி கூறும்போது, பீகாரிலிருந்தும், அசாமிலிருந்தும் இந்த குழந்தைகள்அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்கிற போர்வையில் பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறார்கள்.
அவர்களில் அதிகமாக இளம் பெண்கள் உள்ளனர். அவர்கள் பணிபுரியும் இடங்களில், முதலாளி களால் ஏராளமானவகைகளில் சுரண்டப்படுகிறார்கள். வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படும் குழந்தைத் தொழிலாளர்கள்  40 விழுக்காட்டளவில் பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறார்கள் என்று கூறினார். மத்திய அரசு மனித விரோத நடவடிக்கைகள், மற்றும் சட்ட விரோத தொழில் ஆகிய வற்றைக் குறைப்பதற்கான நட வடிக்கை எடுத்துவருவதாக கூறுகிறது.
உள்துறை அலுவலக அலுவலர் கூறும்போது, பாலியல் தொழிலால் பாதிக்கப்படுவோருக்கு பொருளாதார இழப்பீடு வழங்கப்படுகிறது. பல மாநி லங்களில் பாதிப்புக்குள்ளானவர் களுக்கு (ரூ.25 ஆயிரம் முதல் ரூ.2 இலட்சம்வரையிலும்) இழப்பீடு தரும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றன. ஆனால், அதுவே நிரந் தரமானதும் அல்ல. போதுமானதும் அல்ல. அரசு சரியான புள்ளிவிவரங் களை சேகரித்து, உரிய கண்காணிப் பையும் உறுதிப்படுத்த உள்ளது. பெண்கள் கடத்தல் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவோர்குறித்து மாநில வாரியாக அறிந்துகொள்ள வாய்ப்பாக தனியே அலுவலகங் களைத் தொடங்க உள்ளோம் என்று கூறினார்.
விடுதலை,18.10.14,ப2

இந்தியா ஒளிர்கிறதா - மிளிர்கிறதா...?

     
பெண்ணை நிலவாகவும், மலராக வும், தெய்வமாகவும் போற்றிப் புகழ் கின்ற நம் பாரத புண்ணிய பூமியில் பெண்களை ஒரு போகப்பொருளாக மட்டுமே எண்ணி அவர்களிடம் பாலியல் வன்கொடுமை, வரதட்சணைக் கொடுமை ஆகியவை நாளும் அரங் கேற்றப்பட்டு வருகின்ற அவலநிலையை நாளேட்டின் வாயிலாக நாள்தோறும் காண முடிகின்றது.
பெண்கள் நாட்டின் கண்கள், பெண்களைப் படிக்க வைப்போம் - நாட்டிற் குப் பெருமை சேர்ப்போம் எனும் வெற்று முழக்கங்களால் மட்டுமே பெண் களுக்கு பெருமையும், புகழும் வந்து விட்டது.
ஆண்களுக்கு நிகராக பெண் களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டால் மட்டுமே அவர்களால் முழு சுதந்திரத்துடனும் - உரிமையுட னும் வாழமுடியும் என்பதற்கு எடுத்துக் காட்டாக நாள்தோறும் நடக்கின்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொடுமைகள் ஆகியவை நமக்கு உணர்த்தும் பாடமாகும்.
எனவேதான் தொலைநோக்குப் பார்வையோடு சமுதாய விஞ்ஞானி தந்தை பெரியார் அவர்கள் செங்கற்பட் டில் 1929-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில் மத்திய - மாநில அரசுகள் பெண்களுக்கு கல்வி - வேலைவாய்ப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வருவதற்கு ஏதுவாக சட்டம் இயற்றவேண்டும் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மா னத்தைக் கொண்டு வந்து அகிலத் தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
மேலும், ஆண்களுக்கு என்னென்ன உரிமைகள் உள்ளனவோ அத்தனை உரிமைகளும், பெண்களுக்கும் கட்டாய மாக வழங்கப்பட வேண்டும் என்று ஓர் ஆணாக இருந்துகொண்டு பெண்களுக் காக உரிமைக்குரல் கொடுத்தவர் பெண்ணுரிமைக் காவலர் தந்தை பெரியார் அவர்கள் ஆவார்.
பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? ஒரு நாளும் கிடைக்காது. அது போன்று எந்த ஆணும் தான் அனுபவித்து வருகின்ற உரிமைகளை விட்டுக்கொடுக்க ஒரு போதும் முன்வரமாட்டார்கள். எனவே பெண்கள் தங்கள் உரிமைகளை தாங்களாகவே எடுத்துக்கொள்ள முன் வரவேண்டும் எனறு கூறிய பெண்ணிய வாதி தந்தை பெரியார் அவர்களின் தொலைநோக்குச் சிந்தனைதான் இன்றளவும் மக்கள் மனதில் சுடர் ஒளியாய் எழுந்து நிற்கின்றது.
இவ்வாறு தந்தை பெரியார் அவர் கள் நீண்ட நெடுங்காலமாக பெண்கள் உரிமைக்காகவும், பெண்கள் நலனிற் காகவும், பெண் கல்விக்காகவும், பெண் விடுதலைக்காகவும் ஓங்கிக் குரல் கொடுத்ததின் பயனாய் இன்று பெண்கள் படித்து பட்டம் பெற்று பல்வேறு துறைகளில் உயரதிகாரிகளாகவும், ஊராட்சி - நகராட்சி மன்றத் தலைவர் களாகவும், மாநகராட்சி மேயராகவும் மற்றும் மாநில முதல்வராகவும் கட்சி யின் தலைவர்களாகவும், நாடாளுமன்ற பேரவைத் தலைவராகவும், நாடாளு மன்ற - சட்டமன்ற உறுப்பினர்களாக வும், மத்திய - மாநில அமைச்சர்களாக வும் அங்கம் வகித்து வீட்டிற்கும், நாட் டிற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
ஒருபுறம் மகளிர் சமுதாயம் பல்வேறு துறைகளில் - பல்வேறு நிலைகளில் மேம்பட்டு வருவதைக் கண்டு மகிழ் கின்ற அதே வேளையில் மறுபுறம் அண்மையில் (5.9.2014) தேசிய குற்ற ஆவணங்கள் அமைப்பு புள்ளி விவரங் களுடன் ஓர் வேதனை மிகுந்த செய்தி யினை வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 92 பெண்கள் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கபடுகிறார்கள் என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா முழுவதும் 2012-ம் ஆண்டில் 24 ஆயிரத்து 923 வழக்குகள் இவ்வாண்டில் பதிவாகி இருந்தன. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் (2013) 33 ஆயிரத்து 707 ஆக உயர்ந்து உள் ளது. கடந்த ஆண்டில் பாலியல் வன் முறைக்கு உள்ளான பெண்களில் 15 ஆயிரத்து 556 பேர் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்.
மேலும் இந்த குற்றத்தில் தலைநகர் டெல்லி முதல் இடத்தில் இருக்கிறிது. அங்கு ஒரு நாளைக்கு சராசரியாக 4 பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். 2012 ஆம் ஆண்டில் டில்லியில் 706 பாலி யல் வன்முறை வழக்குகள் பதிவாகி இருந்தன. 2013 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1636 ஆக அதிகரித்துள் ளது. கற்பழிப்பு குற்றத்தில் நகரங்களை பொறுத்த மட்டில் டில்லிக்கு அடுத்த இடங்களை மும்பை, ஜெய்ப்பூர், புனே ஆகிய நகரங்கள் உள்ளன என்று அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களை தேசிய குற்ற ஆவணங்கள் அமைப்பு அண்மையில் (5.9.2014) வெளியிட் டுள்ளது.
மேற்கண்ட அதிர்ச்சி மிகுந்த செய்தியை நாளேட்டின் வாயிலாக அறிந்த மகளிர் அமைப்பினர், மாதர் சங்கங்கள், மகளிர் உரிமை மாண்பாளர் கள், சமுதாய ஆர்வலர்கள், முற்போக் குச் சிந்தனையாளர்கள், மனிதநேயப் பண்பாளர்கள், பகுத்தறிவாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோர் சொல்லொண்ணாத் துயரத்தில் மூழ்கி னர். அவர்களால் பேச முடியாமல் நா தழுதழுத்தது, உதிரம் உறைந்து போனது, செய்வதறியாது திகைத்து நின்றனர்.
சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆன நிலையில் இளைஞர்களை அதிகம் கொண்டுள்ள இந்திய நாடு வளர்ந்த நாடாக - வளர்ச்சி பெற்ற நாடாக உலக அரங்கில் ஏற்றம் பெற முடியாமல் போனதற்கு முக்கியக் காரணம் பெண்ணினத்தை மதிக்கத் தவறியதாலும், பெண்களுக்கு எதிராக நாளும் நடைபெறுகின்ற பாலியல், வன் கொடுமை, வரதட்சணைக் கொடுமை, கொலை - கொள்ளை ஆகியவற்றை குறித்த நேரத்தில் தடுக்கத் தவறிய தாலும் இந்திய நாடு முன்னேற முடியா மல் இருப்பதற்கு அடிப்படைக் காரண மாகும்.
இத்தகைய அவல நிலையில் இந்தியா ஒளிர்கிறது - மிளிர்கிறது மற்றும் இந்தியா முன்னேறுகிறது - முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று ஆட்சியாளர்களால் மிகைப்படுத்திக் கூறப்படுவதை நகைப்புக்குரிய ஒன் றாகவே மக்கள் கருதுகின்றனர்
- லட்சுமிபதி, தாம்பரம்
விடுதலை,16.10.14,ப2

சர்வதேச எதிர்ப்பையும் மீறி இளம் பெண்ணைத் தூக்கிலிட்டது ஈரான்

ரானில் உளவுத்துறை அதிகாரி ஒருவரை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை
விதிக்கப்பட்ட 26 வயது இளம் பெண், சனிக்கிழமை தூக்கிலிடப் பட்டார்.
அய்ந்து ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட் டிருந்த அவரது மரண தண்டனையை நிறை வேற்ற உலகம் முழுவதிலு மிருந்து எதிர்ப்பு எழுந்தி ருந்த நிலையிலும், அத னைப் பொருள்படுத்தா மல் ஈரான் அவரைத் தூக்கிலிட்டது.
ரேஹானே ஜபாரி என்ற அந்தப் பெண், சனிக்கிழமை அதிகாலை யில் தூக்கிலிடப்பட்டதாக ஈரான் சட்ட அமலாக்க அலுவலகத்தை மேற் கோள்காட்டி அந்நாட் டின் அரசு செய்தி நிறுவ னமான அய்.ஆர்.என்.ஏ. தெரிவித்துள்ளது.
வீடுகளின் உள்ளலங் கார நிபுணரான ரேஹானே, கடந்த 2007-ஆம் மோர் தெஸா அப்துலாலி சர் பண்டி என்ற உளவுத் துறை அதிகாரியை கத்தி யால் குத்திக் கொன்றதற் காக அவருக்கு மரண தண் டனை விதிக்கப்பட்டது.
எனினும், ரேஹா னேவை பாலியல் வன் முறை செய்ய அப்துலாலி முயன்றதாகவும், தற்காப் புக்காகத்தான் அவரை ரேஹானே குத்தியதாக வும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூறி வருகின்றன.
இந்தச் சம்பவம் குறித்த விசாரணை முறையாக நடைபெறவில்லை எனக் கூறிய மனித உரிமை அமைப்புகள், ரேஹானே வுக்கான மரண தண்ட னையை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியு றுத்தி வந்தன.
விடுதலை,25.12.14ப6

ஈரோட்டில் 45 குழந்தைத் திருமணங்கள் நிறுத்தம்


ஈரோடு, அக். 26_ பெண் ணின் திருமண வயதை உயர்த்த வேண்டும், என, நீதிமன்றங்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய் துள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் நடப் பாண்டு, தடுத்து நிறுத்தப் பட்ட, குழந்தைத் திரும ணங்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித் துள்ளது.
தமிழகத்தில், பெண் சிசுக்கொலை, குழந்தைத் திருமணம் போன்ற பெண் குழந்தைகளுக்கான கொடுமை, தென்மாவட் டங்களில் உசிலம்பட்டி மற்றும் சேலம், கிருஷ்ண கிரி, தருமபுரி மாவட்டங் களில் தான், அதிகளவில் நடப்பது வழக்கம். ஈரோடு மாவட்டத்தில், 18 வய துக்கு முன்பே, பெண்க ளுக்கு திருமணம் செய்யும் வழக்கம் அதிகரித்து வரு கிறது. 'பெண்ணுக்கு திரு மண வயது, 18, என, எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
உடல், உளவியல் ரீதியாக, திரு மணத்துக்கு தயாராகி விட்டனரா என, கண்டிப் பாக எப்படி கூற முடியும். பெண்ணுக்கும், 21 வயதாக நிர்ணயிப்பது குறித்து, முடிவெடுக்க வேண்டும் என, மதுரை உயர்நீதி மன்ற கிளை, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில், கடந் தாண்டு, இம்மாவட்டத்தில், 15 குழந்தை திருமணங் கள் நடப்பதாக புகார் வந்த தையடுத்து, சமூக நலத் துறை, வருவாய்த்துறையி னர், திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
ஆனால், 2014 இல் செப்., வரை, 45 குழந் தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலும் குடும்ப சூழ்நிலை, திருமணம் நடத்தினால், தங்கள் பாரம் குறையும் என்பது உட்பட பல காரணங்களால், குழந்தைத் திருமணம் நடப்பதாக கூறப்படுகிறது.
ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை கண் காணிப்பாளர் கண்ணன் கூறியதாவது: பெண்ணுக்கு, 18 வயது, ஆணுக்கு, 21 வயதும் நிரம்பினால் மட் டுமே, திருமணம் சட்டப் படி செல்லுபடியாகும். ஈரோடு மாவட்டத்தில், நடப்பாண்டு, 45 குழந் தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
பெரும்பாலும், பெற்றோர்களிடம், வயது குறித்த சந்தேகத்தினால் தான், இதுபோன்ற திரு மண ஏற்பாடுகள் நடக் கின்றன. 18 வயது முடிந்த வுடன் தான், பெண்ணுக் குத் திருமணம் செய்ய வேண்டும், என, பெற் றோர்களுக்கு தெரிவ தில்லை. 18 வயது துவங் கினாலே, திருமண ஏற் பாடுகளை செய்கின்றனர்.
மலைவாழ் பகுதி மட்டு மின்றி, அனைத்து வட் டாரங்களிலும் குழந்தைத் திருமண ஏற்பாடு நடக் கிறது. புகாரின் பேரில், நடவடிக்கை எடுத்து, இது போன்ற திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படு கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
விடுதலை,26.10.14.ப8

பெண்களுக்காக போராடினால் தவறா?

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப் பட்டிருந்த தடை சமீபத்தில் நீக்கப்பட்டது. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே கார் ஓட்ட லாம், இரவு 8 மணிக்கு மேல் கார் ஓட்டக்கூடாது, கார் ஓட்டும்போது மேக் அப் போட்டிருக்கக்கூடாது, அப்பா, சகோதரன், கணவன், மகன் என்று யாராவது ஓர் ஆணின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்று ஏகப்பட்ட நிபந்தனைகளுடன்தான் பெண்களுக்கு கார் ஓட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிபந்தனைகளைக் கேட்டால் அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் இதுபோன்ற நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி கிடைக்கவே பெரும் போராட்டத்தை சவுதி அரேபியாவில் பெண்கள் நடத்தியிருக்கிறார்கள். அனுமதி கிடைத்ததற்கும் போராட்டங்கள் நடைபெற்றதற்கும் முக்கியக் காரணம் மனல் அல் ஷாரிஃப்.
கல்வி மற்றும் மருத்துவத்தில் மட்டுமே பெண்களைப் பெருமளவு வேலைசெய்ய அனுமதிக்கும் நாட்டில், கம்ப் யூட்டர் இன்ஜினீயர் ஆனார் ஷாரிஃப். மதத்தின் பெயரால் கண்மூடித்தனமாகப் பின்பற்றப்படும் பல விஷயங்களைக் கேள்விக்கு உட்படுத்தும் பெண்ணாக இருந்தார். பெண்கள் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்புகளில் பங்கேற்று வந்தார். 2012ஆம் ஆண்டு காரோட்டிச் சென்றபோது, தன் தோழியைப் படம் பிடிக்கச் செய்தார். தன் பெயர், வேலை, பெண்கள் ஏன் கார் ஓட்ட வேண்டும் போன்ற பல விஷயங்களையும் பேசியபடியே காரை ஓட்டினார். வீடியோவை யூடியூபில் வெளியிட்டார். உடனே வேகமாகச் செய்தி பரவியது. முதல் நாளில் மட்டும் சுமார் 6 லட்சம் பேர் அந்த வீடியோவைப் பார்த்திருந்தனர். சவுதி காவல்துறை, ஷாரிஃபைக் கைது செய்தது. 6 மணி நேரத்துக்குப் பிறகு வெளியில் வந்தார்.
மறுநாள் பள்ளிக்குக் கிளம்பும்போது, அம்மா, நாம் கெட்டவர்களா? என்று கேட்டான் ஷாரிஃபின் மகன். காரணம் புரியவில்லை. பிறகுதான் யூடியூப் பார்த்த அவனது பள்ளி நண்பர்கள், உன் அம்மாவை ஜெயிலில் தள்ளிவிடுவார்கள் என்று சொன்ன விஷயம் தெரிந்தது. அதிர்ச்சியில் உறைந்து போனார் ஷாரிஃப். தெருவிலோ இன்னும் நிலைமை மோசமாக இருந்தது. ஷாரிஃப் நடந்து சென்றபோது ஒருவன், பெரிய கல்லால் தாக்கினான். நல்லவேளை ஷாரிஃப் தப்பித்துக்கொண்டார். நேரிலும் தொலைபேசியிலும் இமெயில்களிலும் பாலியல் வன்முறை செய்துவிடுவதாகவும் கொன்றுவிடுவதாகவும் மிரட்டினார்கள்.
மோசமான அனுபவங்களால் ஷாரிஃபின் மனம் இன்னும் வலிமையடைந்தது. மீண்டும் கார் ஓட்டினார். இந்த முறை அவருடன் சகோதரரும் அமர்ந்திருந்தார். காரை நிறுத்திய காவல்துறை, விசாரணை செய்தது. ஒன்பது நாட்கள் அவரைச் சிறையில் அடைத்தது. கார் ஓட்டக் கூடாது, மீடியாவில் பேசக் கூடாது என்ற நிபந்தனையுடன் வெளியில் வந்தார் ஷாரிஃப்.
எதிர்ப்பும் ஆதரவும்
பெண்கள் கார் ஓட்டும் உரிமைக்காகப் போராட்டங்களை நடத்த முடிவு செய்தார் ஷாரிஃப். பேஸ்புக், ட்விட்டர் மூலம் பெண்களின் ஆதரவைத் திரட்டினார். ஜூன் 7 அன்று 12 ஆயிரம் பேர் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, களத்தில் குதித்தனர். போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். அவரது வீடியோ, பேஸ்புக் போன்றவை அழிக்கப்பட்டன.
கார் ஓட்டும் போராட்டத்தால், ஷாரிஃபின் கணவர் அவரை விவாகரத்து செய்துவிட்டார்.
ஆண்கள் துணையின்றி பெண்கள் தனியாக வசிக்க அனுமதி இல்லை. அதனால் குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார் ஷாரிஃப். அலுவலகத்திலும் பிரச்சினை. ஒரே நேரத்தில் ஷாரிஃபைக் கெட்டவராகப் பாதிப் பேரும், நல்லவராகப் பாதிப் பேரும் பார்த்தனர். கார் ஓட்டும் போராட்டம் நியூயார்க் டைம்ஸில் வெளிவந்தது. உலகத்தின் கவனத்தைப் பெற்றது. உலகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் ஷாரிஃப்பைப் பாராட்டின. விருது கொடுக்க அழைத்தன.
மதவாதிகளும் அரசாங்கமும் பெண்கள் போராட்டங்களை ஒடுக்கினாலும், பல்வேறு விதங்களில் மீண்டும் மீண்டும் போராட்டம் புத்துயிர் பெற்றுக்கொண்டே வந்தது. கையெழுத்து இயக்கங்கள் நடத்தப் பட்டன. சவுதி அரேபியாவில் வசிக்க இயலாத சூழ்நிலை உருவானது. பிரேஸில் நாட்டுக்காரரை மறுமணம் செய்துகொண்டார் ஷாரிஃப். துபாய்க்குக் குடிபெயர்ந்தார். வெளிநாட்டுக்காரரிடம் குழந்தை வளரக் கூடாது என்று தடை வாங்கினார் முதல் கணவர். அதனால் ஷாரிஃப்பின் பெற்றோரிடம் குழந்தை வளர்ந்து வருகிறது. வார இறுதியில் சவுதிக்கு வந்து மகனைப் பார்த்துவிட்டுச் செல்கிறார் ஷாரிஃப். குடும்பத்தை இழந்து, குழந்தையைப் பிரிந்து, இன்னொரு நாட்டில் வசிக்க நேர்ந்தாலும் ஷாரிஃப் மன உறுதியுடன் பெண்களுக்கான போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறார். இந்தப் படிப்புதான் படிக்க வேண்டும், ஆண்களோடு வேலை செய்யக் கூடாது, இசை கேட்கக் கூடாது, சினிமா பார்க்கக் கூடாது என்று எத்தனை எத்தனையோ கட்டுப்பாடுகள் பெண்களுக்கு விதிக்கப்பட் டிருந்தன. போராடாமல் இருந்திருந்தால் இன்று ஷாரிஃப் கம்ப்யூட்டர் துறைக்குள் நுழைந்திருக்க முடியாது. பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதித்த தடையையும் நீக்கியிருக்க முடியாது. போராட்டங்களைத் தவிர வேறு எந்தச் செயலும் முன்னேற்றத் துக்கு அழைத்துச் செல்லாது என்கிறார் ஷாரிஃப். சின்னத் துளிகளில்தானே ஆரம்பிக்கிறது பெரிய மழை!
விடுதலை,30.12.14  .