திங்கள், 1 ஏப்ரல், 2024

கருநாடக மாநிலத்தில் மகளிர் நாள் கழகப் பிரச்சார செயலாளர் கருத்துரைவிடுதலை நாளேடு
Published March 16, 2024

உடுப்பி, மார்ச் 16- பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான கருநாடக மாநில மகளிர் கூட்டமைப்பு 2024 மார்ச் 8 ஆம் நாள் கருநாடக மாநிலம் உடுப்பி நகரில், உலக மகளிர் நாள் விழாவை மிகச்சிறப்பாக நடத்தி யது. கருநாடக மாநிலத் தின் பல்வேறு மாவட்டங் களில் இருந்து பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இவ் விழாவில் திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தொடக்க உரையாற்றினார்.

அவர் உரையாற்று கையில் தமிழுக்கும், கன் னட மொழிக்கும் உள்ள ஒற்றுமைகளைக் குறிப் பிட்டு திராவிடமொழிக ளின் அடையாளம் தமிழ் என் பதையும், இன்றைய சமூக அரசியல் சூழ்நிலை யில் திராவிட மாநிலங்க ளின் ஒற்றுமையை முன் னெடுக்க வேண்டும் என்றும், அதனை பெண்களால் தான் சாதிக்க முடியும் என்றும், ஏனெனில் பெண் கள்தான் எல்லையற்றவர் கள், பெண்களால் ஆண் கள் உருவாக்கிய ஜாதி மத இன மொழிப் பிரிவினைகளை, தடைக ளைத் தாண்டி சிந்திக்க முடியும் என்றும், தந்தை பெரியாரின் சிந்தனை வழியில்தான் தடைக ளைத் தாண்டி சிந்திக்கும், செயல்படும் பெண்கள் உருவாக முடியும் என் றும், இந்தியாவில் பெண் களுக்கெதிராக திட்ட மிட்டு வன்முறையை நிகழ்த்தும் மதவெறி அமைப்புகளை பெண் கள் அடையாளம் காண வேண்டும் என்றும் குறிப்பிட்டுப் பேசினார்.

நிகழ்வில் பங்கேற்ற பெண்கள் திராவிட மாநி லங்களின் ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை பலத்த கையொலி எழுப்பி வர வேற்றார்கள்.

வியாழன், 22 பிப்ரவரி, 2024

தமிழ்நாட்டில் முதல் முறை ரயில்வே பயணச்சீட்டு பரிசோதகராக திருநங்கை நியமனம்

 திண்டுக்கல், பிப். 10- திருநங்கைகள் சமுதாயத்தில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கு போராடி வருகின்றனர். அதே நேரம் திருநங்கைகளுக்கு வேலை கிடைக்குமா? என்ற கேள்வியை தகர்த்து ஒரு சில திருநங்கைகள் திறமையால் சாதித்து வருகிறார் கள். சுயதொழில் மட்டுமின்றி ஒன்றிய, மாநில அரசு பணிகளிலும் திரு நங்கைகள் அசத்தி வருகின்றனர்.
அந்த வகையில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டுப் பரிசோதகராக திருநங்கை சிந்து 8.2.2024 அன்று பதவி ஏற்றார். இதன்மூலம் தெற்கு ரயில்வேயின் முதல் திருநங்கை பயணச்சீட்டுப் பரிசோதகர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

இதுதொடர்பாக திருநங்கை களுக்கு முன்னுதாரணமாக திகழும் சிந்து கூறுகையில், எனது சொந்த ஊர் நாகர்கோவில் ஆகும். நான் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் எர்ணா குளத்தில் ரயில்வே பணியில் சேர்ந் தேன். 14 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லுக்கு மாறுதலாகி வந் தேன். ரயில்வே மின்சாரப் பிரிவில் பணியாற்றினேன்.
இதற்கிடையே சிறு விபத்தில் எனக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மின்சாரப் பிரிவில் இருந்து வணிக பிரிவுக்கு மாற்றப் பட்டேன். பயணச்சீட்டுப் பரிசோ தகர் பயிற்சியை முடித்து, பதவி ஏற்றுள்ளேன். இது எனது வாழ் நாளில் மறக்க முடியாத நிகழ்வு ஆகும். திருநங்கைகள் மனம் தளர்ந்து விடக்கூடாது.
கல்வி, உழைப்பு மூலம் எந்த உயரத்தையும் எட்ட முடியும். அதை மனதில் கொண்டு திருநங் கைகள் முன்னேற வேண்டும் என்றார்.

சனி, 10 பிப்ரவரி, 2024

பெண்களுக்கு சம வாய்ப்பு-சம உரிமை-பொருளாதார மேம்பாடு உட்பட்ட புதிய மகளிர் கொள்கை


புதன், 24 ஜனவரி, 2024

புதிய பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடக்கம்


Published November 10, 2023

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.11.2023) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், புதிய பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட 7 இலட்சத்து 35 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்து அடையாளமாக ஆறு மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” தொடக்கம்!


விடுதலை நாளேடு,
Published July 24, 2023

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.7.2023) தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட”ப் பயனாளிகளின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைத்து, விண்ணப்பம் செய்ய வந்த மகளிருடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்கே.என். நேரு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் 

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வளர்ச்சி ஆணையர்,  முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம்,  தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி. சாந்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

(செய்தி விவரம்: 2 ஆம் பக்கம் காண்க)

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்