சனி, 26 ஜனவரி, 2019

பெண்கள் அடிமை நீங்குமா?

17.07.1932 - குடிஅரசிலிருந்து..
இந்தியப் பெண்களுக்கு எத்தகைய கல்வியளிக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பலர் பலவாறான அபிப் பிராயங்களை வெளியிட்டு வருகிறார்கள். அவைகளில் பிற்போக்குடையவர்களின் அபிப்பிராயங்களை இப் பொழுது எந்தப் பெண்களும் ஒப்புக்கொள்ள தயாரில்லை. முற்போக்குடையவர்களின் அபிப்பிராயங்களையே பெண்கள் வரவேற்கத் தயாராயிருக்கிறார்கள்.
இந்தியப் பெண்கள் இதுவரையிலும் இருந்தது போலவே தங்களுக்கென்று ஒரு வித அபிப்பிராயமும், சுதந்திரமும் இல்லாமல் கல்லென்றாலும் கணவன், புல்லென்றாலும் புருஷன் என்று சொல்லுவது போல கணவனுடைய நன்மையை மாத்திரம் கருதி அடிமையாகவே இருந்து பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டும், அவைகளை வளர்த்துக் கொண்டும் வாழ்வதே சிறந்தது. இதுவே இந்தியப் பெண்களுக்கு வேண்டிய நாகரிகம், இந்நா கரிகத்தை மீறினால் இந்தியப் பெண்களின் சமுதாய வாழ்க்கையின் உயர்வு கெட்டுப்போகும் அவர்களுடைய பதிவிரதாதர்மம் அழிந்து போகும். இதனால் இந்திய நாகரிகமே மூழ்கி விடும். ஆகையால் பெண்களுக்குக் குடும்பக் கல்வியும், மதக் கல்வியும் மாத்திரம் அளித்தால் போதும் என்று பிற்போக்கான அபிப்பிராய முடையவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் ஆண்கள் இவ்விதமான அபிப்பிராயத்தை வெளியிடுவதைப் பற்றி நமக்குக்கவலை இல்லை. அவர்கள் தங்கள் சுயநலத்தைக் கருதுகின்ற பொழுது, இதற்குமேல் தீவிரமான அபிப்பிராயத் திற்குச் செல்ல முடியாது. சென்றால் அவர்களுடைய சுயநலத்திற்கு நிச்சயமாக ஆபத்து உண்டாகிவிடும். ஆனால், பெண்கள் இம்மாதிரியான அபிப்பிராயத்தை வெளியிட்டால் அது ஆச்சரியப்படத் தக்கதேயாகும். அன்றியும் அதில் வேறு ஏதாவது சூழ்ச்சி இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கவும் வேண்டும்.
சில தினங்களுக்கு முன் லண்டனில், விசியம் கிளப்பில், பம்பாய் சர்வகலாசாலைப் பெண்கள் சங்கத்தின் ஆண்டு விழாவில், சென்னை கிறிஸ்துவப் பெண்கள் கலாசாலைத் தலைவரான திருமதி. மெக்டாக்கல் என்பவர் ஒரு பிரசங்கம் செய்தார் அப்பொழுது அவர்,
பெண்மக்கள் உயர்தரக் கல்வி கற்பதனால் குற்றமற்ற பயன் உண்டாகும் என்று சொல்ல முடியாது. இந்தியப் பெண்கள் பக்தியிலும் மனோவுறுதியிலும் சிறந்தவர்கள். அவர்களுக்குக் குடும்பத்தில் மிகவும் சம்மந்தமும், பற்று தலும் உண்டு. அவர்கள் குடும்பத்திலுள்ள பற்றுதலிலிருந்து நீங்குவார் களானால் இந்திய சமுக வாழ்க்கைக்கு மிகுந்த பாதகம் ஏற்பட்டு விடும். ஆகையால் அவர்களுக்குப் போதிக்கும் உயர்தரக் கல்வியுடன் கிறிஸ்தவ மதத்தின் உயர்ந்த தத்துவங்களையும் சேர்த்துப் போதிக்க வேண்டும். இன்றேல் உயர்தரக் கல்வியால் பெண்களுக்கு மிகுந்த ஆபத்தே உண்டாகும். என்று பேசியிருக்கிறார். திருமதி. மெக்டாகல் அவர்கள் நாகரிகம் பெற்ற மேல் நாட்டுப் பெண் மணியாயிருந்தும் இவ்வாறு பேசி யிருப்பதைக் கண்டு உண்மையில் நாம் வருந்தாமலிருக்க முடிய வில்லை. ஆனால் இந்தியப் பெண்களின் சமுதாய வாழ்க்கையைப்பற்றி இந்த அம்மாளுக்கு இவ்வளவுக் கவலை தோன்றியிருப்பதைப் பற்றி ஆராயும் போது நிச்சயமாக அதில் ஒரு சூழ்ச்சியிருக்க வேண்டு மென்ற முடிவுக்கே வரலாம். அச்சூழ்ச்சியும் அந்த அம்மாளின் சொற்களிலேயே காணப்படுகின்றது. அச்சூழ்ச்சி, உயர்தரக் கல்வியுடன் கிறிஸ்துவ மதத்தின் உயர்ந்த தத்துவங்களையும் சேர்த்துப் போதிக்க வேண்டும் என்பதேயாகும். ஆகவே இது கிறிஸ்துவ மதத்தை இந்தியாவில் பரவ வைப்பதற்குச் செய்யப்படும் பிரசாரத்தைத் தவிர வேறொன்றுமல்ல என்றுதான் நாம் கூறுவோம்.
கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த திருமதி. மெக்டாகல் அவர்கள் எப்படி கிறிஸ்துவ மதக்கல்வி உயர்தரக்கல்வி கற்கும் பெண்களுக்கு அவசியம் என்ற அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்களோ இதைப் போலவே இந்திய வைதிகர்களும் பெண்களுக்கு இந்து மதக்கல்வி அவசியம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
ஆனால் இவ்வபிப்பிராயங்களை நாம் அடியோடு மறுக்கிறோம். பெண்களுக்குக் குடும்ப வாழ்க்கையில் அடிமையாயிருந்து பிள்ளைகளைப் பெற்று வளர்த்து கொண்டிருப்பது ஒன்றுதான் ஏற்றது என்ற அபிப்பிராயமே தவறாகும். இத்தகைய கட்டுப்பாடு இருக்கின்ற வரையிலும் பெண்கள் அடிமைகளாகத்தான் - அதாவது ஆண்களுடைய உதவியை நம்பித்தான் வாழ முடியும் என்பது நிச்சயம். உண்மையில் பெண்களும் ஆண்களுக்குச் சமமாக வாழ வேண்டுமானால், அவர்களும் ஆண்களைப் போலவே தாங்கள் விரும்பியக் கல்விகளைக் கற்கவும், தங்கள் அறிவுக்கும், ஆற்றலுக்கும், விருப்பத்திற்கும் இசைந்த எத்தொழில்களையும் தடையின்றிச் செய்யவும் உரிமை வேண்டியது அவசியமாகும்.
அல்லாமலும் மதக்கல்வி என்பது அவர்கள் காதில் கூட விழக்கூடாது என்பதே நமதப்பிராயம். மதத்தைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கிற ஆண் மக்களே இன்று அடிமை புத்தியினாலும், மூட நம்பிக்கைகளாலும் கிடந்து சீரழிகின்ற செய்தியைப் பற்றி நாம் அடிக்கடி கூறி வருகின்றோம். மதம் என்பதுதான் மக்களிடத்தில் அடிமை புத்தியையும் பயங்கொள்ளித்தனத்தையும், தன்னம்பிக்கையின்மையையும், மூட நம்பிக்கைகளையும் உண்டாக்கக் காரணமாயிருக்கிறது. ஆதலால் மதத்தையே அடியோடு ஒழிக்க வேண்டும் என்று பிரச்சாரஞ் செய்து வருகின்றோம். இந்த நிலையில் பெண்களுக்கு மதக் கல்வியளிக்க வேண்டும் என்னும் அபிப்பிராயத்தை நாம் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? சாதாரணமாக மதக்கல்வி கற்காவிட்டாலும், கேள்வி மூலமும், பழக்க வழக்கங்களின் மூலமும் மத விஷயமாகக் கொஞ்சம் தெரிந்து கொண்டிருக்கும் நமது பெண் மக்களின் நிலையை ஆராய்ந்தால் அதன் மோசத்தை அறியலாம். நமது பெண் மக்கள் மனதில் இன்று அடிமை புத்தியும், கோழைத்தனமும், மூட நம்பிக்கைகளும் குருட்டுப் பழக்க வழக்கங்களில் விடாபிடிவாதமும் நிறைந்திருப்பதற்குக்  காரணம் மதமே என்பதை யார் மறுக்க முடியும்? ஆதலால் பெண்களுக்கு மதக்கல்வி வேண்டும் என்று சொல்லுகின்ற அபிப்பிராயத்தை நாம் ஒரு சிறிதும் ஒப்புக் கொள்ள முடியாது.
பெண்களும் ஆண்களைப் போல் உடல் வலிமையிலும் சிறப்படைய வேண்டும், தேகப் பயிற்சி, ஆயுதப் பயிற்சி முதலிய பழக்கங்களை பெற்றிருக்க வேண்டும். தங்களை மானபங்கப்படுத்த நினைக்கும் அறிவற்ற, வெறிகொண்ட ஆண்மக்களை எதிர்த்துத் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளக் கூடிய ஆற்றலையும் பெற்றிருக்க வேண்டும். சமயம் நேரும்போது, படை வீரர்களாகச் சேர்ந்து பகைவர்களை எதிர்க்கக் கூடிய சக்தி பெண்களுக்கும் இருக்க வேண்டும். என்பதே நாகரிகம் பெற்ற மக்களின் அபிப்பிராயம். பெண்மக்களும் இவ்வபிப்பிராயத்தை முழு மனத்தோடு ஆதரிக்கிறார்கள். உலகத்தின் போக்கும் அபிப்பிராயமும் இப்படி இருக்க பெண் மக்களுக்கு உயர்தரக் கல்வி கற்பிப்பதனால் பயனில்லை என்று சொல்வதை யார் ஒப்புக் கொள்ளமுடியும்?
ஆனால் தற்காலத்தில் உள்ள கல்வி முறை மிகவும் மோசமானதென்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோம். வெறும் குமாஸ்தா வேலைக்குப் பழக்கக் கூடிய கல்வி தான் இப்பொழுது கற்பிக்கப்படுகிறதே யொழிய வாழ்க் கைக்குப் பயன்படும் கல்வி கற்பிக்கப்படவில்லை என்பது உண்மையாகும். ஆகையால் தற்காலத்திலுள்ள கல்வி முறையை மாற்றி வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய முறையிலும், சிறிதும் மதநம்பிக்கைகளும், கோழைத்தனமும், அடிமை புத்தியும் உண்டாகாத வகையிலும் உள்ள கல்வித்  திட்டத்தை ஏற்படுத்தி பெண்களுக்கும், ஆண்களுக்கும், சமத்துவமான கல்வியளிக்க ஏற்பாடு செய்வதே மக்கள் முன்னேற்றத்திற்கு ஏற்றதாகும் என்று கூறுகிறோம்.
நமது பெண் மக்கள் மனதில் இன்று அடிமை புத்தியும், கோழைத் தனமும், மூடநம்பிக்கைகளும் குருட்டுப் பழக்க வழக்கங்களில் விடாபிடிவாதமும் நிறைந் திருப்பதற்குக்  காரணம் மதமே என்பதை யார் மறுக்க முடியும்? ஆதலால் பெண்களுக்கு மதக்கல்வி வேண்டும் என்று சொல்லுகின்ற அபிப்பிராயத்தை நாம் ஒரு சிறிதும் ஒப்புக் கொள்ள முடியாது.
- தந்தைபெரியார்
- விடுதலை நாளேடு,26.1.19

ஞாயிறு, 20 ஜனவரி, 2019

சபரிமலையை அடுத்து அகஸ்தியர் கூடம்: தடையைத் தகர்த்து மலையேறினார் முதல் பெண் தான்யா சனல்



திருவனந்தபுரம், ஜன.20 கேரளாவில் நீண்டகாலமாகத் தடை விதிக்கப்பட்டிருந்த அகஸ்தியர்கூட மலைக்குப் பெண்கள் செல்ல கேரள உயர் நீதிமன்றம் அனுமதியளித்ததை அடுத்து, தான்யா சனல் என்ற 38 வயது பெண், மலையேறியுள்ளார்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம், நெய்யாறு வனச்சரணாலயத்தில் அமைந் துள்ளது அகஸ்தியர்கூடம். அகத்திய முனி வர் இங்கு தங்கி இருந்ததாக இங்குள்ள ஆதிவாசி மக்களான கனி பழங்குடியினர் நம்புகின்றனர். இந்த மலை கடல்மட்டத் தில் இருந்து 1,868 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

அகஸ்தியர்கூட மலையில், அகத்திய முனிவருக்குத் தனியாகக் கோயில் இருந் தாலும் இங்கு வழிபாடு செய்வதற்கு பெண்களுக்கு காலங்காலமாக அனுமதி யில்லை. இங்குள்ள கனி பழங்குடியைச் சேர்ந்த பெண்கள் கூட சிலை அருகே செல் வது கிடையாது. இந்த நடைமுறையைக் கனி பழங்குடியின மக்கள் பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில், இந்த மலைக்குப் பாலினப் பாகுபாடு இன்றி அனைத்துத் தரப்பினரும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று பெண்கள் நீண்ட ஆண்டு களாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

எனினும் அனுமதி கிடைக்காத நிலை யில், மலப்புரத்தைச் சேர்ந்த விங்ஸ் என்ற பெண்கள் நல அமைப்பும், கோழிக்கோட்டைச் சேர்ந்த அன்வேஷ் என்ற மகளிர் நல அமைப்பும் கேரள உயர் நீதிமன்றத்தில் தடையை நீக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தனர். இதை விசாரித்த  நீதிமன்றம், அகஸ்தியர்கூட மலைக்குப் பெண்கள் செல்ல அனுமதியளித்தது.

இதையடுத்து கேரள வனத்துறை அகஸ் தியர்கூட மலைக்கு டிரக்கிங் செல்வோருக் கான ஆன்-லைன் முன்பதிவை ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 2 மணிநேரத்தில் அனைத்தும் முடிந்தது. கடந்த 14ஆம் தேதி அகஸ்தியர் கூட மலைக்குப் பெண்கள், ஆண்கள் அனைவரும் மலையேற்றத்தைத் தொடங் கினர். ஏறக்குறைய 47 நாட்கள்  அகஸ்தியர் கூட மலைக்குச் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.

மேலும், இந்த மலைக்கு 14 வயதுக்குட் பட்ட குழந்தைகளுக்கும், உடல்ரீதியாக வும், மனரீதியாகவும் நலமாக இல்லாத வர்களுக்கும் வனத்துறையினர் பாதுகாப்பு காரணங்களாக அனுமதி மறுத்தனர்.

இந்நிலையில் கேரளத்தின் இரண் டாவது உயரமான உச்சியான அகஸ்தியர் கூட மலைக்கு முதன்முதலாக தான்யா சனல் என்னும் 38 வயதுப் பெண் சென் றுள்ளார். 2012ஆம் ஆண்டு இந்திய தகவல் துறை (அய்அய்எஸ்) அதிகாரியான தான்யா, திருவனந்தபுரத்தில் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றி வருகிறார்.

மலை ஏறியது தொடர்பாக தான்யா பேசும்போது, ''நான் உடல்ரீதியில் தகுதி யாக இருக்கிறேன். தினந்தோறும் ஒரு மணி நேரம் தவறாமல் உடற்பயிற்சி செய் கிறேன். பெண்கள், ஆண்கள் இருவரும் பலத்துடன் இருக்கவேண்டும். மலையேற் றத்தில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. இதைத் தொடர்ந்து செய்து வருகிறேன்.

எனக்கு மலையேற்றத்தில்தான் ஆர் வமே தவிர, எந்தக் கோயிலுக்கும் போக வில்லை. உள்ளூர் மக்களின் உணர்வு களைப் புண்படுத்தவில்லை'' என்றார்.

இதற்கிடையே அகஸ்தியர்கூட மலைக் குப் பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதற்கு அங்குள்ள ஆதிவாசி மக்கள் கடும் எதிர்ப் புத் தெரிவித்து வருகின்றனர்.
-  விடுதலை நாளேடு, 20.1.19
 

வெள்ளி, 11 ஜனவரி, 2019

இன்னும் பெரியாரை படிக்கவில்லையா நீங்கள்?



ஆந்திரப்பிரதேச மாநிலம் மேற்கு கோதா வரி மாவட்டத்தில் தோ கலாபள்ளி என்ற கிரா மத்தில் மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே பெண்கள் நைட்டி அணிய வேண் டும். நைட்டி அணிந்த பின் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளனர். அந்த ஊரில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினர், இந்தக் கட்டுப்பாட்டை மீறும் பெண்ணுக்கு ரூ. 2000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், இந்தத் தடையை மீறும் பெண்களைப் பற்றி சொன்னால் 1000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். பெண் விடுதலைக்கு பாடுபட்ட  தமிழகத்தின் பெரியார் போல் அங்கு யாரும் பிறக்கவில்லையோ? எனத் தோன்றுகிறது. உடையின் தடையை விட்டு வெளியே வாருங்கள் பெண்களே!

(த. இந்து, நவம்பர் - 18 பெண் இன்று)

நம் பெண்கள் புடவைக்காக நிறைய பணத்தை வீணாக்குகிறார்கள். நம் பெண்கள் தலையைக் கத்தரித்துக் கொள்ள வேண்டும். லுங்கி கட்டிக் கொள்ள வேண்டும்

- தந்தை பெரியார்

- விடுதலை ஞாயிறு மலர், 22.12.18

முதல் திருநங்கை செவிலியர் மாணவி!



தமிழ்ச்செல்வி, வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுகாவில் இருக்கும் புளியங்கண்ணு கிராமத்தைச் சேர்ந்த இவர் பல ஆண்டுகளாகவே செவிலியர் படிப்புக்காக முயன்று கொண்டிருந்தார். கடந்த ஆண்டு பி.பார்ம் படிப்பதற்காக முயன்றார். அவர் திருநர் என்ற காரணத்தால் மெரிட் லிஸ்டில் இடம்பெறவில்லை. பின் தனியார் செவிலியர் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார். ஆறு மாதம் ஆன பிறகு திருநராயிருக்கும் ஒருவர் செவிலியர் படிப்பை படிக்க முடியாது என்று கடிதம் வந்தது. கடிதத்துடன் ஒவ்வொரு அரசு அலுவலகமாக ஏறி இறங்கி போராட செய்தார். பின் இந்த ஆண்டு டிப்ளமோ இன் ஜெனரல் நர்சிங் பிரிவில் திருநர் சமூகத்தைச் சேர்ந்தவரும் செவிலியர் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் எனஅரசு ஆணை பிறப்பித்தது. தமிழ்ச் செல்விக்கு கவுன்சிலிங்கில் மட்டும் பெயர் வந்தது. தகுதிப் பட்டியலில் பெயர் இடம் பெறவில்லை. சட்டத்தின் மூலமாக உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுதாக்கல் செய்து மனித உரிமை ஆணையத்தின் மேற்பார்வையில் செயல்பட்டு அக்டோபர் 31 அன்று வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் படிப்பதற்கான அனுமதி கிடைத்தது.

சமூகத்தில் கல்வி வேலைவாய்ப்பு போன்றவற்றை பாலியல் சிறுபான்மை யினருக்கு இட ஒதுக்கீட்டை அரசு சரியான முறையில் செயல்படுத்தினால் தான் தங்களின் நிலை மாறும் என்கிறார் தமிழ்செல்வி.

-  விடுதலை ஞாயிறு மலர், 22.12.18

புதன், 9 ஜனவரி, 2019

2018இல் சாதித்த விளையாட்டு வீராங்கனைகள்

பல மைல் கல் தருணங்களை 2018இல் சந்தித்திருக் கிறார்கள் இந்திய வீராங்கனைகள்.  அவற்றில் சில முக்கியமான தடங்கள் இவை.

மேரிகோம்


மூன்று குழந்தைகளின் தாய், 36 வயது பெண் போன்ற தடைகள் எல்லாம்  மேரிகோமுக்கு எப்போதும் கிடை யாது. சென்ற ஆண்டு மட்டும் அவர் 4 தங்கப் பதக்கங் களை வென்று இந்திய குத்துச்சண்டைப் பிரிவுக்குப் பெருமைசேர்த்தார். 2018இன் தொடக்கத்தில் இந்திய ஓபனில் தங்கப் பதக்கம் வென்ற மேரிகோம், ஆண்டு இறுதியில் டில்லியில் நடைபெற்ற உலக வாகையர் பட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று 2018ஆம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவுசெய்தார். இடையே காமன்வெல்த், பல்கேரியாவில் நடைபெற்ற அய்ரோப்பியப் போட்டி யிலும் இவருக்கே தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.

பி.வி. சிந்து


2018-லும் பி.வி. சிந்துவை நோக்கி வெற்றிக் காற்று பலமாக வீசியது. இரண்டு பட்டங்கள், காமன்வெல்த், ஆசியப் போட்டி, உலக வாகையர் பட்டப் போட்டிகளில் 3 வெள்ளிப் பதக்கங்கள் என வெற்றி மேல் வெற்றி குவிந்தது. இந்திய ஓபன், தாய்லாந்து ஓபனில் இரண்டாமிடத்தைப் பிடித்த சிந்து, இறுதியாக பி.டபுள்யு. உலக டூர் ஃபைனல்ஸ் பட்டப் போட்ட்டியில் வாகையர்  பட்டம் வென்று தொடர்ச்சியாக இறுதிப் போட்டித் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மணிகா பத்ரா


டேபிள் டென்னிஸில் சென்ற ஆண்டு அறிமுக நாயகியாக அமர்க்களப்படுத்தினர் மணிகா பத்ரா. டெல்லியைச் சேர்ந்த இவர், காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் தனதாக்கினார்.

சாய்னா நேவால்


சாய்னாவுக்கு 2018 மறக்க முடியாத ஆண்டு. காமன்வெல்த்  பாட்மிண்டன் இறுதிப் போட்டியில் பி.வி. சிந்துவைத் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் கிடைத்தது. ஆசிய வாகையர் பட்டப் போட்டியிலும் வெண்கலம் இவருக்கே கிடைத்தது. தவிர இந்தோனேசியா மாஸ்டர்ஸ், டென்மார்க் ஓபன், சயீத் மோடி இண்டர் நேஷனல் போன்ற தொடர்களில் இறுதிப் போட்டிவரை முன் னேறினார். பாட்மிண்டன் வீரர் பாருபள்ளி காஷ்யப்பை மணந்துகொண்டு புதிய இன்னிங்ஸைத் தொடங்கினார்.

இமா தாஸ்


தடகளத்தில் தன்னிகரற்ற சாதனைகளைப் படைத்தார் ஹிமா தாஸ். பின்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ட்ராக் போட்டியில் 400 மீ. ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை சென்ற ஆண்டு இமாவுக்குச் சொந்தமானது. இதற்கு முன்பு எந்த இந்திய வீராங்கனையும் செய்யாத சாதனை இது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு தங்கப் பதக்கத்தையும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் வென்று தடகளத்தில் அழியா தடம் பதித்தார்.

தீபா கர்மாகர்


ரியோ ஒலிம்பிக்கில் நூலிழையில் பதக்கத்தைக் கோட்டைவிட்டது, இரண்டு ஆண்டுகள் காயத்தால் அவதிப்பட்டது என ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டில் சறுக்கல்களைக் கண்ட தீபா கர்மாகருக்கு சென்ற ஆண்டு புத்துணர்வைத் தந்தது. நீண்ட ஓய்வுக்குப் பிறகு களத் துக்கு வந்த தீபா, துருக்கியில் நடைபெற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் உலக சேலஞ்ச் கோப்பையை வென்று மீண்டும் புதிய அவதாரம் எடுத்தார்.

டுட்டி சந்த்


பயிற்சி பெறவே பெரும் சிரமங்களைச் சந்தித்த டுட்டி சந்துக்குச் சென்ற ஆண்டு மறக்க முடியாதது. ஆசிய விளையாட்டுப் போட்டி 100 மீ. ஓட்டப் போட்டியில் இவர்  வெள்ளி வென்றார். வெறும் 0.02 விநாடிகளில் தங்கத்தைக் கோட்டைவிட்டார்.

ஆனால், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பி.டி. உஷாவுக்குப் பிறகு வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமை டுட்டிக்குக் கிடைத்தது.

வினேஷ் போகத்


கடந்த சில ஆண்டுகளாக ஏமாற்றங்களைச் சந்தித்த வினேஷ், சென்ற ஆண்டு ஏற்றம் கண்டார். ஆசிய  மல்யுத்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தன்னை நிரூபித்தார் வினேஷ். ரியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டியில் யாருடன்  விளையாடும்போது  காயம் ஏற்பட்டதோ, அதே வீராங்கனையை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று சாதித்தார்.

ஹர்சிதா தோமர்


கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது ஹர்சிதா தோமருக்குப் பொருந்தும். பதின் பருவத்திலேயே சர்வதேசப் படகு வலித்தல் போட்டியில் பங்கேற்றுப் பதக்கத்தை வென்றார். இளம் வயதில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற சிறப்பு அவருக்குக் கிடைத்தது. ஹர்சிதா தற்போது 10ஆம் வகுப்பு படித்துவருகிறார்.

 -  விடுதலை நாளேடு, 8.1.19

சாதனைப் பெண்கள் - 2018

விருது பெற்றுத்தந்த மயானம்


பெரும்பாலும் ஆண்களே நிறைந் திருக்கும் மயானப் பணிகளில் பெண் ஒருவர் பணியாற்றுவதை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், சவாலான துறையில் சாதித்த முதல் பெண் என்ற தேசிய விருது சென்னையைச் சேர்ந்த  பிரவீனா சாலமனுக்கு வழங்கப்பட்டது.

அங்கீகாரம்


சென்னை ராஜீவ்காந்தி மருத்துவ மனையில் ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த திருநங்கைகள் நேயா, செல்வி ஆகியோருக்குத் தமிழக அரசு இந்த ஆண்டு நிரந்தப் பணி வழங்கியது.  அரசு வேலைக்கான வயது வரம்பை இவர்கள் கடந்திருந்தாலும் திருநங்கைகளை ஊக்கு விக்கும்வகையில் இவர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்பட்டுள்ளது.

‘அழகு’க்கு விருது


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அழகு, மத்திய அரசின் மகிளா கிஸான் விருதுக்குத் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார். தன்னுடைய 15 ஏக்கர் நிலத்தில்  விவசாயம் மேற்கொள்வதுடன் மாடு, ஆடு, கடக்நாக் கோழி போன்ற வற்றை வளர்த்தும் வருகிறார். ஆவின் முகவராக இருப்பதுடன் டீக்கடையும் நடத்திவருகிறார்.

முதன்மை அதிகாரி


சென்னையைச் சேர்ந்த திவ்யா சூரியதேவரா  அமெரிக்காவின் முன்னணி கார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி யாக நியமிக்கப்பட்டுள்ளார். 110 ஆண் டுகள் பாரம்பரியம் கொண்ட ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பெண் ஒருவர் இப்பதவிக்கு வருவது இதுவே முதல் முறை.

தாய் மண்ணே வணக்கம்




ஏழை மாணவர்களின் கல்விக்காக உலக அளவில் பிரச்சாரம் நடத்திவரும் மலாலா யூசஃப்சாய் அய்ந்தாண்டு களுக்குப் பிறகு தன் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு முதன்முறையாகச் சென்றார். பாகிஸ்தானில் தாலிபன் தீவிர வாதிகளால் சுடப் பட்டு பல்வேறுகட்ட சிகிச்சைக்குப் பிறகு உயிர்பிழைத்தவர் மலாலா. சிகிச்சைக்குப் பிறகு லண்டனில் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். தீவிர வாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டில் இருந்த மலாலா, பாகிஸ் தானுக்கு மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி யாக உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

மாற்றத்தின் அடையாளம்


பரமக்குடியைச் சேர்ந்த திருநங்கை சத்தியசிறீ ஷர்மிளா, இந்தியாவின் முதல் திருநங்கை வழக்குரைஞராகப் பதிவுசெய் திருக்கிறார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்த இவரைத் தொடர்ந்து  தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை விஜியும் பார் கவுன் சிலில் பதிவுசெய்தார்.

செய்திகள் வாசிப்பவர்...


பாகிஸ்தானின் உள்ளூர் செய்தி சேனலான கோகினூர், மார்வியா மாலிக் என்ற திருநங்கையைச் செய்தி வாசிப்பாள ராக நியமித்து உள்ளது.

அந்நாட்டிலேயே முதன்முறையாகத் திருநங்கை ஒருவரைப் பணியமர்த்திய பெருமை இந்நிறுவனத்துக்குக் கிடைத் துள்ளது. மார்வியா மாலிக், ஊடகவியல் துறையில் பட்டம் பெற்றவர்.

நோபல் பெண்கள்


உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசை  இந்த ஆண்டு மூன்று பெண்கள் பெற்றுள்ள னர்.  இயற்பியலுக்கான நோபல் பரிசை கனடாவைச் சேர்ந்த  டோனா ஸ்ட்ரிக் லேண்டு பெற்றிருக்கிறார். 55 ஆண்டுகள் கழித்து நோபல் பரிசு பெற்ற பெண் என்ற அங்கீகாரம் டோனாவுக்குக் கிடைத் துள்ளது. வேதியியலுக்கான நோபல் பரிசை அமெரிக்கரான ஃபிரான்செஸ் அர்னால்ட் பெற்றிருக்கிறார். ஈராக் நாட்டில் பெண்கள், குழந்தைகளின் உரிமைக்காகவும் அவர்கள் மீது நிகழ்த்தப் படும் வன்முறைக்கு எதிராகவும் போராடி வரும் 23 வயதான நாதீயே மூராத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பட்டுள்ளது.



போர்ப் பறவைகள்




இந்திய போர் விமானத் துறையில் நுழைந்த முதல் பெண் என்ற பெருமை யைப் பெற்றிருக்கிறார் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அவனி சதுர்வேதி. இவர் மிக்-21  பைசன் என்ற போர் விமானத்தைத் தனியாக ஓட்டிய முதல் பெண் என்ற சாதனையையும் படைத்துள் ளார்.

இவருடன் மோகனா சிங், பாவனா காந்த் ஆகியோரும் போர் விமானப் படைப் பிரிவில் சேர்ந்துள்ளனர்.

-  விடுதலை நாளேடு, 8.1.19

வெள்ளி, 4 ஜனவரி, 2019

சனாதனத்தின்மீது விழுந்த சவுக்கடி!

அய்யப்பன் கோவிலுக்குள் நுழைய


50 லட்சம் பெண்கள் மனித சுவர்




திருவனந்தபுரம், ஜன. 2 கேரளத்தை பின்னோக்கி இழுக்க முயலும் மதவாத, ஜாதிய சக்திகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில்,  620 கிலோ மீட்டர் தூரத்திற்கு 50 லட்சம் பெண்கள் மதில் (மலையாளத்தில் வனிதா மதில்) அமைத்து புத்தாண்டின் முதல் நாளில் வரலாறு படைத்துள்ளனர்.

கேரளாவை ஊடுருவிச் செல்லும் கன்னியாகுமரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாயன்று அணி திரண்ட பெண்கள் கேரளத்தின் மறுமலர்ச்சிப் பாரம்பரியத்தை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்றனர். ஏற்கெனவே திட்டமிட்டிருந்த படி ஒற்றை வரிசையிலும், பல வரிசையிலுமாக பெண்கள் தோளோடு தோள் சேர்த்து பெண்சுவரை பெரும் மதிலாக மாற்றினர். செவ்வாய் மாலை 3.45 மணிக்கு குறிப்பிட்ட இடங்களில் பெண்கள் அணி அணியாக வந்து ஒருவர் தொட்டு ஒருவராக இடைவெளி இல்லாமல் நிரம்பி நின்றனர். சரியாக 4 மணிக்கு கைகளை முன்னோக்கி நீட்டி பெண்களின் சமவாய்ப்பு, மறுமலர்ச்சிப் பாரம்பரியத்தை பாதுகாப்பது குறித்த உறுதிமொழியை அனைவரும் உரக்க ஒலித்தனர்.

4.15 வரை சுவரும், உறுதிமொழி ஏற்பும் நடந்தது. திருவனந்தபுரம் வெள்ளியம்பலத்தில் உள்ள  அய்யன் காளி சிலைக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மாலை அணிவித்து பெண்கள் மதிலுக்கு துவக்கம் குறித்தார். அதைத்தொடர்ந்து சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத், தேசிய மாதர் சம்மேளன தலைவர் ஆனிராஜா மற்றும் மகளிர் அமைப்பினர் அய்யன்காளி சிலைக்கு மரியாதை செலுத்தினர். காசர்கோடில் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா பெண் சுவரின் முதல் நபராகவும், திருவனந்தபுரத்தில் பிருந்தாகாரத் கடைசி நபராகவும் தோள் சேர்த்தனர். கொச்சியில் சுவாமி அக்னிவேஷ் பார்வையாள ராக பங்கேற்று வாழ்த்து தெரி வித்தார். திருவனந்தபுரத்தில் பெண் சுவர் நிறைவு பெற்றதும் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பிருந்தா காரத், ஆனிராஜா உள்ளிட்ட மகளிர் அமைப்புகளின் தலை வர்கள் பேசினர். இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன், சிபிஎம் முதுபெரும் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன், மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் உள் ளிட்டோர் பங்கேற்றனர். பெண்களின் வலிமையை உலகுக்கு உணர்த்திய உன்னத நிகழ்வாக மகளிர் மதில் அமைந்தது. இந்த பிரம்மாண்ட மதிலின் பகுதியாக பல்வேறு இடங்களில் முஸ்லிம், கிறிஸ்தவ பெண்கள் இடம்பெற்றிருந்தனர். திரைக் கலைஞர் ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களும், எழுத்தாளர்களும் இணைந்து நின்றனர். பெண்சுவரை வாழ்த்தும் விதமாக அனைத்து இடங்களிலும் ஆண்கள் பெருஞ்சுவர் போல் சாலையின் மறுபக்கத்தில் நின்றனர்.

உடைந்தது ஆகமத்தடை:


அய்யப்பனை இரு பெண்கள் நேரில் தரிசித்தனர்




கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து, மலப் புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்களும் சபரிமலைக்குச் சென்று அய்யப்பனைத் தரிசித்துவிட்டு வந்துள்ளனர். இதன்மூலம் சனாதனம், ஆகம வேலிகள் முறியடிக்கப்பட்டன.

இந்த நிலையில், அந்த இரு பெண்களும் தரிசித்துவிட்டு வந்த பின்னர் கோவில், கருவறை சுத்திகரிக்கப்பட்டதாம்.

அப்படி செய்வது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானதே! சம்பந்தப்பட்டவர்கள்மீது நீதி மன்ற அவமதிப்புத் தொடரப்படுமா?

எங்கே பார்ப்போம்!

- விடுதலை நாளேடு, 2.1.19