திங்கள், 1 ஏப்ரல், 2024

கருநாடக மாநிலத்தில் மகளிர் நாள் கழகப் பிரச்சார செயலாளர் கருத்துரை



விடுதலை நாளேடு
Published March 16, 2024

உடுப்பி, மார்ச் 16- பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான கருநாடக மாநில மகளிர் கூட்டமைப்பு 2024 மார்ச் 8 ஆம் நாள் கருநாடக மாநிலம் உடுப்பி நகரில், உலக மகளிர் நாள் விழாவை மிகச்சிறப்பாக நடத்தி யது. கருநாடக மாநிலத் தின் பல்வேறு மாவட்டங் களில் இருந்து பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இவ் விழாவில் திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தொடக்க உரையாற்றினார்.

அவர் உரையாற்று கையில் தமிழுக்கும், கன் னட மொழிக்கும் உள்ள ஒற்றுமைகளைக் குறிப் பிட்டு திராவிடமொழிக ளின் அடையாளம் தமிழ் என் பதையும், இன்றைய சமூக அரசியல் சூழ்நிலை யில் திராவிட மாநிலங்க ளின் ஒற்றுமையை முன் னெடுக்க வேண்டும் என்றும், அதனை பெண்களால் தான் சாதிக்க முடியும் என்றும், ஏனெனில் பெண் கள்தான் எல்லையற்றவர் கள், பெண்களால் ஆண் கள் உருவாக்கிய ஜாதி மத இன மொழிப் பிரிவினைகளை, தடைக ளைத் தாண்டி சிந்திக்க முடியும் என்றும், தந்தை பெரியாரின் சிந்தனை வழியில்தான் தடைக ளைத் தாண்டி சிந்திக்கும், செயல்படும் பெண்கள் உருவாக முடியும் என் றும், இந்தியாவில் பெண் களுக்கெதிராக திட்ட மிட்டு வன்முறையை நிகழ்த்தும் மதவெறி அமைப்புகளை பெண் கள் அடையாளம் காண வேண்டும் என்றும் குறிப்பிட்டுப் பேசினார்.

நிகழ்வில் பங்கேற்ற பெண்கள் திராவிட மாநி லங்களின் ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை பலத்த கையொலி எழுப்பி வர வேற்றார்கள்.