கார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 ஜூலை, 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட உரிமம் பெற்ற முதல் இந்திய பெண்



 


பக்ரைன், ஜூலை 1- சவுதிஅரேபியாவில் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் பொறுப்பு ஏற்றபின் அங்கு பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொண்டு வருகிறார். ஊழலற்ற ஆட்சிக் காக அரசு அலுவலகங்கள் கண்காணிக்கப்படுகின் றன. சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டன. பல ஆண்டுகளாக இங்கு பெண்கள் கார் ஓட்ட அனுமதி இல்லை.

ஆனால் அவர் பெண்கள் கார் ஓட்ட அனுமதி வழங்கினார். அத்துடன் விளையாட்டு போட்டிகளை பெண்கள் நேரில் கண்டு ரசிக்கவும் ஒப்புதல் கொடுத்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த பெண்கள் கார் ஓட்டுவதற்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் கார் ஓட்டும் (டிரைவிங் லைசென்சு) உரிமம் பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை சாரம்மா தாமஸ் பெற்றுள்ளார்.

கேரள மாநிலம் பத்தினம் திட்டா பகுதியை சேர்ந்தவர். இவர் சவுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நர்சு ஆக பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே இந்திய ஓட்டு நர் உரிமம் வைத்துள்ளார். இந்த நிலையில் சவுதி அரேபியா வில் கார் ஓட்டுவதற்கான உரிமத்துக்கு விண்ணப்பித்திருந்தார். அவருக்கு கார் ஓட்டும் சோதனையும் கண் பரிசோதனையும் நடத்தப்பட்டது. இவற்றில் அவர் தேறியதால் ஓட்டுநர் உரிமம் வழங் கப்பட்டது. இளவரசர் உத்தரவை தொடர்ந்து ஊபர் உள்ளிட்ட கார்களின் ஓட்டுநர் பணிக்காக சவுதியில் உள்ள பெரும்பாலான பெண்கள் கார் ஓட்டும் பயிற்சி பெறுகின்றனர்.

-  விடுதலை நாளேடு, 1.7.18

செவ்வாய், 3 ஜூலை, 2018

சவுதி அரேபியா - கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை முடிவுக்கு வந்தது



 


ரியாத், ஜூன் 25- இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் ஷரியத் சட்டம் கடை பிடிக்கப் படுகிறது. எனவே அங்கு பெண் களுக்கு கார் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

அங்கு பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1990ஆம் ஆண்டுகளில் இருந்தே பெண்கள் உரிமை சங்கங் கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மீறி கார் ஓட்டிய  பெண் கள் கைது செய்யப்பட் டனர். அபராதமும் விதிக்கப் பட்டது.

இதற்கிடையே, நீண்ட கால கோரிக்கையை ஏற்று பெண்கள் கார் ஓட்ட விதித்தி ருந்த தடையை  சவுதி அரேபிய அரசு நீக்கியுள்ளது. அதை தொடர்ந்து 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சவுதி அரே பியாவின் ரியாத் நகரில் இன்று முதல் பெண்கள் கார் ஓட்ட ஆரம்பித்துள்ளனர். இதனால் அவர்கள் மன மகிழ்ச்சி அடைந் துள்ளனர். அவர்களுக்கு இது தன்னம்பிக்கையை கொடுக்கும் விஷயமாக கருதப்படுகிறது.

மன்னர் சல்மானின் இளைய மகனும், பட்டத்து இளவரசரு மான முகமது பின் சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சவுதி அரேபியாவில் கேளிக்கை நிகழ்ச்சிகளில் பெண்கள் பங் கேற்க அனுமதிக்கப்பட்டு வரு கின்றனர்.

அங்கு இதுவரை விளை யாட்டு போட்டிகளை பெண் கள் நேரில் சென்று பார்க்க அனுமதி இல்லை. தலைநகர் ரியாத்தில் தேசிய தின கொண் டாட்டத்தின் போது நடந்த விளையாட்டு போட்டியை பார்க்க பெண்கள் அனுமதிக்கப் பட்டனர். தற்போது கார் ஓட்ட அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

-  விடுதலை நாளேடு, 25.6.18