சனி, 28 நவம்பர், 2015

ஒரு பெண்ணைக் கைது செய்வதற்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!இந்திய அரசியல் சாசனம் நாட்டுக் குடிமக்களுக்கு பல அடிப்படை உரிமைகளை அளித்துள்ளது. நாட்டுப் குடிமக்களுக்கு, அவர்கள் விருப்பப்படி, நாட்டு நலனுக்கு ஏற்ற முறையில், மக்களின் நன்மைகளை வலியுறுத்தும் வகையில் பல சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த உரிமை, குடிமக்களோ அல்லது அயல்நாட்டுவாசிகளோ, குற்றம் செய்தால், அவர்களுக்கு மறுக்கப்படுகிறது.
சட்டம், ஒழுங்கை நிர்வகிக்கும் காவல்துறை, அவர்கள் கைது செய்ய உரிமை பெற்றுள்ளது. காவல்நிலையக் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, வன்முறை, சித்திரவதை நடக்க வாய்ப்பிருக்கிறது. அடிப்படை உரிமைகளின் அத்துமீறலுக்கு வழிவகுக்கிறது.
ஒரு குடிமகனைக் கைதுசெய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றிய முதல் திருப்புமுனை தீர்வு D.K.Basu Vs. State Case என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்திலிருந்து வந்தது. இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டவரை கைது செய்து, காவலில் எடுத்து விசாரணை செய்ய, காவல்துறை மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைக் குறித்து உச்சநீதிமன்றம் சில குறிப்பிட்ட வழிகாட்டுதல்களைஅறிவித்துள்ளது.
இதனால், போலீஸ் காவலில் குற்றம் சாட்டப்பட்டவர் இருக்கும்போது, சித்திரவதைக்கு ஆளாகாமல் தடுக்க முடியும். ஆனால், இந்தியாவில் பெண்கள் குற்றங்களுக்காகக் கைது செய்யப்படும்பொழுது பல சூழ்நிலைகளில் அவர்கள் காவல் நிலையத்தில் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடுகிறது. பெண்கள் பல காவல் நிலையங்களில் பாலியல் கொடுமைகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உச்சநீதிமன்றமும், அரசியல்வாதிகளும் சேர்ந்து பெண்களின் பாதுகாப்பிற்காக பல வழிகாட்டுதல்களை ஏற்படுத்தியுள்ளார்கள்.


பெண்களைக் கைது செய்யும்போது காவல்துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:-
1.    கைது செய்யப்பட்ட பெண்களை, ஆண் குற்றவாளிகளிடமிருந்து பிரிக்கப்பட்டு, தனி லாக்-_அப்பில் அடைக்கப்பட வேண்டும். தனியாக லாக்_அப் இல்லாவிட்டால், பெண்களை தனி அறைகளில் அடைக்க வேண்டும். மேலும், பெண்கள் கைது செய்யப்படும்போது, பெண் அதிகாரிகளின் மேற்பார்வையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2.    பெண்களை, சூரிய அஸ்தமனம் -_ சூரிய உதயம் இடையே அதாவது இருட்டியபிறகு, கைது செய்யக்கூடாது. ஆண் காவலர்களால் பெண்கள், பாலியல் தொல்லைகளுக்கு காவல் நிலையத்திலேயே ஆளாக்கப்பட்டதால், இந்த விதி உருவாக்கப்பட்டது.
3.    மூன்றாவதாக, பெண்களை, சிறுமிகளை காவல் நிலையத்திற்கோ, வேறு இடங்களுக்கோ விசாரணை செய்ய அழைக்கக்கூடாது. அவர்கள் வசித்துவரும் வீட்டில்தான் விசாரணை மேற்கொள்ள வேண்டும். விசாரணை செய்ய வேண்டிய நேரமும், முறையும் பெண்களுக்கு கூச்சத்தை, அவமானத்தை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும்.
4.    பெண் கைதிகளுக்கு, அல்லது வேறு பெண்களுக்கு மருத்துவ சோதனை செய்ய பெண் மருத்துவர்களையே அனுமதிக்க வேண்டும். பெண் அதிகாரிகள் மேற்பார்வையில் இந்த மருத்துவ பரிசோதனை கையாளப்பட வேண்டும். பெண் கைதிகள் குழந்தை பெற்றால், Prenatal and Postnatal Care  பராமரிப்பு அளிக்க வேண்டும்.
5.    பெண்கள் பேறுகாலத்தில் இருந்தால், அவர்களை கைது செய்வதைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமல்ல, கருவில் இருக்கும் சிசுவும் சேதமுற வாய்ப்புகள் இருப்பதால், இந்த முடிவை முடிந்த அளவிற்குத் தவிர்க்க வேண்டும். மேலும், கருத்தரித்த பெண்களை கட்டுப்படுத்தக் கூடாது.
ஓரளவு சுதந்திரம் அளிக்க வேண்டும். பெண்களையும், சிறுமிகளையும் பெண் காவலர்கள் அல்லது பெண் அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும். பெண் காவல் அதிகாரிகள் முன்னிலையிலேயே அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
 -உண்மை இதழ்,1-15.6.15

திங்கள், 16 நவம்பர், 2015

இந்து சகோதரிகாள்!


பி.ஜே.பி., மற்றும் ஆர். எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவாரைச் சேர்ந்த இந்துத் துவ அமைப்பில் இருக்கும் பெண்கள்  சிந்திப்பதற் கான உண்மைகள், தக வல்கள் ஏராளம் உண்டு!
வடமொழியிலிருந்து சுலோகம் ஒன்று ஆங்கி லத்தில் மொழி பெயர்க்கப் பட்டு இந்தியன் எக்ஸ் பிரஸ் ஏட்டில் முதல் பக்கத்தில் வெளி வந்தது.
Only when fire will cool, the moon Burn, or the ocean fill with tasty water will a woman pure.
(இந்தியன் எக்ஸ்பிரஸ் 24.12.1990)
எப்பொழுது தீ தென்ற லாக மாறுகிறதோ, நிலா நெருப்பாக மாறுகிறதோ, அல்லது கடல் சுவை நீரால் நிரப்பப்படுகிறதோ, அப் போதுதான் ஒரு பெண் ணும் தூய்மையான வளாக இருப்பாள் - இது தான் இந்தியன் எக்ஸ் பிரஸ் வெளியிட்ட ஆங்கி லத்தில் இருந்த சுலோகத் தின் பொருளாகும்.
விடுதலை வெளி யிட்டு இருந்தால் வேறு கண்ணோட்டத்தில் பேசக் கூடும்; வெளியிட்டது இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு அல்லவா?
பி.ஜே.பி. - இந்து முன்னணி வகையறாக்கள் என்பதைவிட இவ்வமைப் புகளில் உள்ள சகோதரிகள் சிந்திக்க வேண்டும். இந்த அமைப்புகள் கூறும் இந்து ராஜ்ஜியத்தில் இவைதானே சட்டாம்பிள்ளைகள்?
கணவன் இறந்தவுடன் மனைவியும் உடன்கட்டை ஏ(ற்)றும் கொடுமை இந்த அர்த்தமுள்ள (?) இந்து மதத்தில்தானே இருந்தது.
வெள்ளைக்காரன் கிறிஸ்தவன் - அவன் இந்த நாட்டைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விட்டான் என்று ஆக்ரோசமாக வார்த்தைகளைக் கொட்டு வார்கள்; அந்த வெள்ளைக் காரன் சதி என்ற உடன் கட்டை ஏ(ற்)றுதலை சட் டப்படி ஒழிக்காவிட்டால் ஒரு வசந்த்ரா ராஜே ராஜஸ் தான் முதல் அமைச்சராக இருக்க முடியுமா? ஒரு விஜயலட்சுமி பண்டிட் அய்.நா.வின் தலைவராக வந்திருக்க முடியுமா? ஒரு சிவசங்கரி எழுத்தாளராக  உலா வர முடியுமா?

கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங்கால் சதி (உடன்கட்டை) தடை செய்யப்பட்டபோது, இந்திய இராணுவத்தின் கமாண்டர் - இன் - சீஃப் சர் சார்லஸ் நேப்பியரை பார்ப்பனர் குழு ஒன்று சந்தித்து, இந்துக்களின் தேசிய பழக்க வழக்கங் களில், கலாச்சாரங்களில் தலையிடுவதில்லை என்று பிரிட்டீஷ் மகாராணி உறுதி அளித்திருப்பதை அவருக்கு நினைவுப்படுத் தினார்கள்.
அதற்குக் கமாண்டர் - இன் - சீஃப் நேப்பியர் சொன்ன பதில் தான் அலாதியானது. ஆம் அழகானது!
என்னுடைய நாட்டி லும் ஒரு பழக்கம் இருக் கிறது. பெண்களை உயி ருடன் எரிக்கும் ஆண் களைத் தூக்கில் தொங்க விடுவதுதான் அந்தப் பழக் கம். நாம் எல்லோரும் நமது தேசங்களின் வழக்கப்படி தான் நடக்கிறோம் என்று பதிலடி (தி வீக் - அக் டோபர் 11-17 (1987) கொடுத் தாரே பார்க்கலாம்! வந்த பார்ப்பனக் குழுவோ கப்-சிப்! என்ன சொல்கிறீர்கள் இந்துத்துவா சகோதரிகளே?
- மயிலாடன்
விடுதலை,28.9.15

ஞாயிறு, 15 நவம்பர், 2015

ஓர் திறந்த மடல்டாக்டர் இள.பதக், அகமதாபாத் பெண்கள் செயற்குழுவை நிறுவியவர்; இன்றைய அதன் தலைவர்.
குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, இந்திய வணிக மற்றும் தொழில் கூட்டமைப்பின் (Ficci)
பெண்கள் அமைப்பின் 29ஆவது அமர்வில் பேசி யுள்ளதை ஊடகங்கள் செய்தியாக்கி யுள்ளன. அந்த பெண்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு டாக்டர் பதக் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதம் தான் இது:
ஊடகங்களில் வெளியாகும் செய்திகளிலிருந்து நமது முதல்வர் நரேந்திரமோடியின் சரளமான பேச்சைக் கண்டும் கேட்டும் நீங்கள் வியப்படைந்திருப்பீர்கள். குஜராத்தில் உள்ள பெண்களைப் பற்றியா அவர் பேசியுள்ளார்? இல்லை. குஜராத்தில் உள்ள உண்மை நிலையை உங்களுக்குத் தெரிவிக்க ஆசைப்படுகிறோம்.
குஜராத்தில் பெண்களின் எண் ணிக்கை குறைந்து போய் விட்டது. 2001-இல் 1000 ஆண்களுக்கு 921 பெண்கள் இருந்தனர். 2011இல் 918 ஆகக் குறைந்துவிட்டது. இதே பத்தாண்டுகள் கட்டத்தில் டில்லியில் அது 45ஆகவும் ராஜஸ்தானில் 4 ஆகவும் உயர்ந்துள்ளது.
18ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த பெண் சிசுக் கொலையைப்பற்றி மோடி பேசியுள்ளார்.
2011இல் அரசு பெண் களுக்கான சோனோகிராபி (Sonography) மருத்துவமனைகளை மூடியுள்ளது 2012லும் மற்றும் சில மூடப்பட்டன. மேற்கொண்டு எந்த செயல்பாடும் இல்லை. இதுதான் மோடியின் அரசு!
திருமணமான பெண்களைப்பற்றிய 2006ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 15 முதல் 49 வயதான பெண்களில் 55லு விழுக்காடு சோகை நோய் பிடித்தவர்களாக உள்ளனர்.
60.8 விழுக்காடு கருவுற்ற பெண்கள் ஊட்டச்சத்து குறைந்தவர்களாகவும் சோகை பிடித்தும் உள்ளனர். 1998-_99 இல் 74.05 விழுக்காடு பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்டோரின் 6.-38 மாதங்கள் வயது கொண்ட குழந்தைகள் ஊட்டச் சத்து குறைந்தவர்களாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2005-_2-006ல் அந்த எண்ணிக்கை 79.8 விழுக்காடு ஆக உயர்ந்துள்ளது. சென்ற தேர்தலின் போது இது எடுத்துப் பேசப்பட்ட பொழுது, அதற்கான அமைச்சர், குழந்தைகளுக்கான செறிவூட்டப்பட்ட அந்த உணவுப் பொட்டலங்கள் எங்கே என்று தேடப் போனார்? இதுதான் குஜராத்தின் நிர்வாகம்!
தாய்மார்களின் மரண எண் ணிக்கையும் சிசுக்களின் மரண எண் ணிக்கையும் குறையவில்லை. குஜராத் தில் ஒன்று, அவர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்; அல்லது நோஞ் சான்களாக வாழ்ந்து கொண்டுள்ளனர்!
அரசு மருத்துவமனைகளிலும், தாலுகா அல்லது மாவட்ட மருத்துவ மனைகளிலும் மகப் பேறு மருத்துவர்கள் நியமிக்கப்படாததால், இளம் தாய்மார்கள் மடிகிறார்கள். பெரும் நகரங்களில் அத்தகைய மருத்துவர்கள் உண்டு. அதனால் பல பெண்கள் ஆம்புலன்சுகளிலும், பேருந்துகளிலும் குழந்தை பெற நேரிடுகிறது. இளம் பெண்களின் உயிர் பற்றி அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இளம் பெண்களின் உயிர் பற்றியோ, ஏன் இளம் ஆண்களின் உயிர் பற்றியோ அரசு கவலைப்படுவதாகத் தெரிய வில்லை. அவர்களைக் காப்பாற்றுவதற் கான எந்தத் திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை. அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனை மருத்துவர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தார். குஜ ராத்தில் பலர் பறவைக் காய்ச்சலால் தினமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெண்களுக்கான கல்வி இலவசம் என்று சொல்லப்படுகிறது. சென்ற இரண்டு வருடங்களாக, அதற்கான பள்ளிகளையும் கல்லூரிகளையும் ஊக்குவிப்பதை நிறுத்தி விட்டது. நல்ல கல்வி வேண்டுமானால் தற்பொழுது பெண்கள், மிக அதிகமான பணம் கொடுத்தால்தான் பெற முடியும் அதுதான் குஜராத்தின் நிர்வாகம்! உள்ளாட்சி நிர்வாகங்களில் பெண் களுக்கு 50 விழுக்காடு இடம் வேண்டும் என மோடி பேசுகிறார். ஆனால், டாக்டர் திருமதி க. மாலானி குஜராத்தின் கவர்னர்தான் ஒரு பெண்ணாக இருந்தும் கூட அந்த சட்டம் நிறைவேறுவதற்கான கையெழுத்தை இடவில்லை. ஏனென் றால், கட்டாய வாக்களிப்பு பற்றிய மற்றொரு தீர்மானத்துடன் அது இணைக்கப்பட்டிருந்தது. தனித் தனியாகப் பிரித்து சட்டமுன் வரைவு களை நிறைவேற்றி அனுப்பினால், தான் கையெழுத்து இடத் தயாராக இருப்ப தாகச் சொல்லி, கவர்னர் திருப்பி அனுப்பி விட்டார். அதற்காக கவர்னர் தான் ஒரு பெண்ணாக இருந்தும், கையெழுத்திடாமல் திருப்பி விட்டார் என்று குற்றம் சுமத்தப்படுகிறது. அவர் பெண்ணாக இருந்தாலும்கூட என்பது அழுத்தம் கொடுத்துச் சொல்லப் படுகிறது. இதே போல அரை உண்மைகளே மட்டும் சொல்வதுதான் மோடியிசத்தின் சிறப்பு.
மோடி, குஜராத் கவர்னரைச் சிறுமைப்படுத்த வேண்டும். ஏனென் றால், அவர் விரும்பாத லோக் ஆயுக் தாவை நிறுவ கவர்னர் நடவடிக்கை எடுத்தார். நீண்ட நாட்களாக கொண்ட அந்தத் தொடர் சண்டை உச்சநீதிமன்றத்தில் உள்ளது.
2012 மே மாதத்தில் குஜராத்தில் 422 மகளிர் பஞ்சாயத்துக்கள் அமைக்கப் பட்டன. ஓட்டெடுப்பு இல்லாமல் ஒப்புதல் மூலமே பெண்கள் நியமிக்கப் பட்டனர். இந்த முறை ஜனநாயக உரிமையை மறுப்பதுடன், கிராம அளவில் வல்லமையோ செல்வாக்கோ மிக்கவர்களுக்கே சாதகமாக அமையும். பல நேரங்களில் கணவன்மார்களின் பிரதிநிதிகளாக பெண்கள் செயல் புரிய நேருகிறது. பெண்கள் தனிமைப் பொறுப்பிலிருக்கும் பஞ்சாயத்துக் களைப் பற்றி பெருமையாகப் பேசும் மோடி, அரசியல் சட்டப்படி உயர்நிலையிலுள்ள ஒரு பெண்ணான கவர்னரைப்பற்றி, சுயமரியாதைபற்றி கவலைப்படவில்லை. கூட்டம் முடிந்த வுடன் மக்கள் சிரித்துக் கொண்டே வீடு திரும்பும் வரை மோடியின் ஒட்டுகளுக்கும் பஞ்சமில்லை. அதனால் அவர் ஏன் மற்றவர் மான மரியாதை பற்றி கவலைப்பட வேண்டும்?
சென்ற பத்தாண்டுகளாக குஜராத் தில் குற்றங்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. ஒவ்வொரு நாளும் கொள் ளைகள், முதியவர் மற்றும் பெண்கள் கொலைகள் கூடி வருகின்றன.
குற்றம் ஆண்டு             ஆண்டு    2001    2012
பாலியல் வன்முறை                     235      413
ஆட் கடத்தல்                                 731    1329
மற்ற குற்றங்கள் குறைந்தனவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. காவல் நிலையங்கள் குற்றங்களைப் பதிவு செய்ய விரும்புவதில்லை. காரணம், குற் றங்கள் மிகுந்தால், அவர்கள் கண்டிக் கப்படுவார்கள். அரசின் கண்ணோட் டத்தில் குறைந்த குற்றப் பதிவுகள், மாநிலத்தை குற்றமில்லாததாகக் கூட்டும் அல்லவா?
வாணிகம் குஜராத்திகளின் ரத்தத் தில் ஊறிப்போன ஒன்று பல பெண்கள் சொந்தத் தொழில்களை நடத்துகின்றனர்.
அவர்கள் உணவு வகைகள் மட்டுமில்லாமல் ஆடை அணிகலத் தொழில் உரிமையாளர்களாகவும் உள்ளனர்; சிறந்தும் விளங்குகின்றனர். ஆனால் லிஜ்ஜாத் அப்பளம் பழங்குடி பெண்களால் தயாரிக்கப்படுவதில்லை. அது ஒரு தவறான செய்தி.
மோடி முதல்வராக இருந்தும்கூட, குஜராத்தில் நீண்ட நாட்களாக பெண்கள் வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்து வருகின்றனர்.
-விடுதலை ஞா.ம.,27.4.13

பெண்களுக்குப் பாதுகாப்பு


பாலியல் கொடுமைகளிலிருந்து மகளிரைக் காப்பாற்றக் கூடிய "ஷாக்' அடிக்கும் உள்ளாடைகள் வந்து விட்டன. சென்னையைச் சேர்ந்த ஆட்டோமொபைல் பொறியாளர்கள் பிரா போன்ற பெண்களின் உள்ளாடையில் 3800 கிலோ வாட் ஷாக் அடிக்கும் அமைப்பு, குளோபல் நிலைநிறுத்தும் சிஸ்டம் (GPS) மற்றும் மொபைல் தொலை தொடர்பு (GSM) கருவிகளை இணைத்து புதியதொரு சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். மனிஷா மோகன், ரிம்பி திரிபாதி, நீலாத்ரி பாசுபால் ஆகிய மூவரும் இணைந்து மேற்சொன்ன சாதனத்துக்கு "சமூக கவச சாதனம்' எனப் பெயரிட்டுள்ளனர். இந்த உள்ளாடையை பயன்படுத்தும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும்போது காவல்துறை மற்றும் பெண்ணின் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பும். சம்பவம் நடைபெறும் இடத்தை ஜி.எஸ்.எம். கருவி காட்டிக் கொடுத்துவிடும். இதுமட்டுமின்றி, 3800 கிலோ வாட் திறன் கொண்ட மின்சாரத்தை வெளிப்படுத்தி ஷாக் அடிக்கும். பெண்ணை நாடி வந்தவன் அப் பெண்ணைத் தொடுவதற்குக் கூடப் பயப்படுவான். இந்தக் கருவி 82 முறை இதுபோல ஷாக் அடிக்குமாம்!
-விடுதலை ஞா.ம.,27.4.13

கர்நாடகாவில் பெண்களுக்குஇட ஒதுக்கீடு


பெங்களூரு, அக்.11 கர்நாடக அரசுத்துறை வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளித்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கர்நாடக அரசுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநிலத்தில் தற்போது அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதில் மேலும் 3% உயர்த்தி 33 சதவீத மாக வழங்குவதற்காக கர்நாடக அரசு ஊழியர் சேவை விதிமுறை சட்டம் 1977இல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மூலம் ஏ, பி குரூப் பணியிடங்கள் உட்பட பி குரூப் பணியிடங்கள் வரை அனைத்திலும் பெண்களுக்கு 33% இட ஒதுக் கீடு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-விடுதலை,11.10.15

சனி, 14 நவம்பர், 2015

எல்லாமே இருக்கு நம் விவசாயத்தில்!

பூட்டன், பாட்டன், தந்தை இவர்கள் அனைவரும் பரம்பரையாகச் செய்துவந்த விவசாயத்தை நாம் ஏன் புறக்கணித்தோம் என்ற கேள்வி திவ்யாவை வேறொரு தளத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. எம்.பி.ஏ., முடித்து விட்டு மாதம் கிட்டத்தட்ட எண்பதாயிரம் ரூபாய் சம்பாதித்த திவ்யாவை விவசாயத்தை நோக்கித் திருப்பியது எது?
திவ்யாவின் சொந்த ஊர், சென்னிமலையை அடுத்த கவுண்டன்பாளையம். அப்பா வாசுதேவனுக்கு விவசாயமும் வியாபாராமும் தொழில். அம்மா சுசீலா, இல்லத்தரசி. கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ஆறரை ஆண்டுகள் தனியார் நிறுவனங்களில் பணியாற்றினார் திவ்யா. கைநிறைய சம்பளம் கிடைத்தாலும் ஏதோ ஒரு போதாமை உணர்வு அவரது மனதுக்குள் நெருடிக்கொண்டே இருந்தது.
அப்பாவுக்கு வியாபாரத்தில் ஆயிரம்தான் வருமானம் வந்தாலும் எங்க தென்னந்தோப்புல இருந்து கிடைச்ச வருமானத்தைதான் என் படிப்பு செலவுக்குக் கொடுப்பார். ஒரு நாள் அதைப் பத்தி யோசிச்சப்பதான் விவசாய வருமானம் எவ்வளவு தனித்துவமானதுன்னு புரிஞ்சுக்கிட்டேன்.
நாமளும் விவசாயத் துறையில ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. நாலு மாசம் ஒரு பயோ டெக் கம்பெனியில வேலை பார்த்தி ருந்ததால, விவசாயத்தைப் பத்தியும் விவசாயிகளோட நிலை பத்தியும் என்னால் ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிந்தது என்று சொல்லும் திவ்யா, தான் பார்த்துவந்த வேலையைத் துறந்தார்.
கோயம்புத்தூரில் விவசாய ஆலோசனை மய்யம் தொடங்கும் திவ்யாவின் முடிவுக்கு வீட்டில் பலத்த எதிர்ப்பு.
என்னோட இந்த முடிவை எல்லாருமே எதிர்த்தாங்க. ஏ.சி. அறையில் உட்கார்ந்து வேலை பார்த்த நீ, சேத்துல இறங்கி வேலை செய்வியா?ன்னு என் கணவரே கேட்டார் - சொல்லும்போதே சிரிப்பு பொங்குகிறது திவ்யாவுக்கு. வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரையும் சமாதானப்படுத்திவிட்டு தன் வேலைக்கான அடுத்த கட்டப் பணியில் இறங்கினார்.
பெண்களால் இயங்கும் மய்யம்
இந்தியா முழுவதும் உள்ள தொழில்நுட்ப நிபுணர்கள் இந்த ஆலோசனை மய்யத்தின் ஆலோசகர்களாக இருக்கிறார்கள். பல மாநிலங்களில் இருக்கும் இயற்கை வேளாண் இடுபொருள் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறார் திவ்யா. தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் ஆறு மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொண்டது திவ்யாவின் வேளாண் அறிவை விசாலமாக்கியது.
விவசாயிகளுக்குத் தொழில்நுட்ப உதவி வழங்கவும், அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கவும் இங்கே விவசாய மருத்துவர்கள் இருக்கிறார்கள். முழுக்க முழுக்கப் பெண் ஊழியர்களைக் கொண்டு செயல்படுவது இந்த மய்யத்தின் இன்னொரு சிறப்பம்சம்!
-விடுதலை,10.11.15

வெள்ளி, 13 நவம்பர், 2015

நேபாள நாடாளுமன்றத் தலைவராக முதல் முறையாக பெண் தேர்வுநேபாள், அக். 17_ நேபாள நாடாளுமன்றத் தின் தலைவராக முதல் முறையாக பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நேபாளத்தில் புதிய அரசு பதவியேற்றுள்ளதை அடுத்து, நாடாளுமன்றத் தலைவராக நேபாள மாவோயிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அன்சாரி கர்தி மகர் (37), வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
தங்களது கட்சி சார் பில் நிறுத்தப்பட்ட அனு ராதா தபா மகரின் வேட்பு மனுவை நேபாள தொழிலா ளர்கள் மற்றும் விவசாயி கள் கட்சி திரும்பப் பெற் றுக்கொண்டதை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் களால் அன்சாரி கர்தி மகர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கு முன்பு, நாடா ளுமன்றத்தின் துணைத் தலைவராக அன்சாரி கர்தி மகர் பதவி வகித்து உள்ளார். இதேபோல, நாடாளுமன்ற துணைத் தலைவராக கங்கா பிர சாத் யாதவ் என்ற பெண் ஒருமனதாக வெள்ளிக் கிழமை தேர்வு செய்யப் பட்டார்.
புதிய அரச மைப்பு பிரகடனப்படுத்தப் பட்டதை அடுத்து, நேபா ளத்துக்கான அரசியல் சாசனத்தை எழுதுவதற் காக இருந்த அரசியல் நிர்ணய சபை, நாடாளு மன்றமாக மாற்றப்பட்டது. அதையடுத்து, நேபா ளத்துக்கு புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-விடுதலை,17.10.15

புதன், 11 நவம்பர், 2015

பெண் எனும் ஓர் ஆற்றல் அச்சமூட்டும் ஒரு செய்தி


- முனைவர் பேரா. ந.க. மங்களமுருகேசன்
தமிழகத்தையும், இந்தியாவையும் மட்டுமல்லாது சீனா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட பெரும்பாலான தெற்காசிய நாடுகளையும் அச்ச மூட்டும் ஒரு விஷயம் இது பாலியல் வன்கொடுமை என்று இப்போது அதிகம் பேசப்படும் விஷயமா? இல்லை அதைவிட மிக மிக முக்கியமான அடிப்படை விஷயம் இது. அது -_- இது. விகிதாச்சார வேறுபாடு
பெண் குழந்தைகளின் பிறப்பு வீதத்தில் படிப்படியாக ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வீழ்ச்சி குறித்த தகவல்கள் இவை. ஆண் குழந்தை களுக்குச் சமமான பெண் குழந்தை களின் இந்த விகிதாச்சார வேறுபாடு உலகின் பெண் குழந்தைகள் அதாவது பெண்கள் அரிதாகும் ஒரு சூழலை ஏற்படுத்திவிடக் கூடிய ஆபத்துதான் அது.
பெரியாரும், திரு.வி.க.வும்
பெண்ணிய சிந்தனாவாதிகளான தந்தை பெரியாரும், தமிழ்த் தென்றல் திரு.வி.க.வும் போற்றி வளர்த்த பெண்மைக்கு மட்டுமல்ல, பெண்ணி யத்துக்கு மட்டுமல்ல, பெண் குழந்தை களின் எண்ணிக்கைக்கே ஏற்படும் குறைவுச் சிக்கல் இது. பெண்களின் முன்னேற்றத்திற்கான தலையாய விஷயங்கள், பெண்களின் இடஒதுக் கீடு, பெண்களின் நலனுக்கான சட்டப் பாதுகாப்புகள், ஆண்களுக்கு இணையான வாய்ப்பு ஆகியன குறித்தெல்லாம் பேசப்பட்டாலும் கூடப் பெண் குழந்தை களின் பிறப்பு பெரிய சோதனைக்கு, வேத னைக்கு ஆளாகிவிடும் உண்மை இது.
ஒன்றே போதும்
நாமிருவர் நமக் கிருவர் என்பதெல்லாம் போய், நாமிருவர் நமக்கொருவர் என்று ஆனபின், குடும்பம் ஒன்றுக்குக் குழந்தை ஒன்று எனும் குழந்தைகளின் எண்ணிக்கை விகிதாச்சார அடிப்படையினை அடைந்தபோது பெண் குழந்தையின் எண்ணிக்கை மிகவும் சரிந்தது. ஒரே ஒரு குழந்தை மட்டுமே போதும் எனும் எண்ணம் கொண்ட பெற்றோர், அந்த ஒன்றும் ஆண் குழந்தையாக இருக்கையில் அத்தோடு போதும் பிள்ளைகள் என்று நிறுத்தி விடுகின்றனர். இது பிறப்பு விகிதக் கணக்கீட்டில் பலத்த வேறுபாட்டை ஏற்படுத்தி விட்டது. இன்னும் பிறக்கும் முதல் மகவு ஆண் மகவு வேண்டும் என எண்ணும் பெற்றோரே பெரும்பான்மை.
முதல் குழந்தை ஆணாக இருந்தால் அடுத்த குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆர்வமுடையவர்கள் தயங்காமல் அடுத்த குழந்தையைப் பெற விழைகின்றனர். அடுத்துப் பெண் பிறந்தால், ஆஸ்திக்கு ஓர் ஆண், ஆசைக்கு ஒரு பெண் எனப் பழமொழியைப் பகிர்ந்து கொண்டு நிறைவு அடைகின்றனர். முதல் குழந்தை பெண் எனில் அடுத்து ஆண்தான் பிறக்க வேண்டும் எனும் மனப்போக்குப் பெரும்பான்மை இந்தியப் பெற்றோர்களிடம் உண்டு என்று தெற்காசிய நாடுகளின் குழந்தைப் பிறப்பு விகிதாச்சாரத்தின் அடிப்படையிலான அய்.நா.வின் புள்ளி விவரங்கள் துள்ளி வரு கின்றன.
பெற்றோர்களின் இத்தகு மனப் போக்கே பெண் சிசுக்களின் பிறப்பு வீதத்தில் மாபெரும் வீழ்ச்சியை உண்டாக்கியது.
பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தைக் குறைப்பன 1. பெண் சிசுக் கொலைகள் 2. செலக்டிவ் அபார்ஷன் (கருச்சிதைவு) 3. வறுமை 4. உளவியல் மூடநம்பிக்கைகள், 5. விலைவாசி உயர்வு என ஆய்வில கண்டறிந்துள்ளனர்.
பெண் சிசுக் கொலை: பெண் சிசுக்கொலை புரியும் பேய்கள், மாபாவிகள், இரக்கமில்லா அரக்கமன நிலையாளர் இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமல்ல எல்லா மாநிலங்களிலும் பரவிக் கிடக்கின்றனர். நம் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் எத்தனை கருத்தம்மாக்கள் வந்தாலும், தொட்டில் குழந்தைகள் திட்டம் வந்தாலும், வலிமையான சட்டங்கள், வாதங்கள் வைத்த போதும், கடுமையான தண்டனை விதித்தபோதிலும் அங்கொன்றும் இங்கொன்றும் கமுக்கமாக நடைபெற்றுக் கொண்டுள்ளன என்பது வேதனைக்குரியதே.
பெண் சிசுக்கொலைக்கு வறுமை, ஆண் வாரிசு வேண்டும் எனும் அவா, பெண் சிசுக் கொலை என்பது கொடூரச் செயல் என்ற உணர் வின்மை, அதிக வரதட்சணை கொடுக்க வேண்டிய சமூகச் சூழல், பெண் குழந்தைகளுக்கு மரபு வழியே செய்யப்படும் செலவினம், கல்விச் செலவு என்று முதன்மைக் காரணங் களை அடுக்கினால் இதனை எவரும் ஏற்க மாட்டார்கள்.
தொட்டில் குழந்தை
2001-இல் அரசுக் கட்டில் எறிய அம்மையார் அறிவித்த தொட்டில் குழந்தைத் திட்டம் இந்தியாவில் மட்டுமல்லாது உலக நாடுகளிலும் அனேக கவனம் பெற்ற திட்டம் என்று அரசு கூறுகிற 3200--_க்கும் அதிகமான பெண் குழந்தைகளும், 520 ஆண் குழந்தைகளும் காப்பாற் றப்பட்டதோடு, 2088 பெண் குழந் தைகளும் 372 ஆண் குழந்தைகளும்,  ஆக மொத்தம் 2460 குழந்தைகள் உள் நாட்டிலும், 197 குழந்தைகள் வெளி நாட்டிலுமாகத் தத்தெடுப்புத் திட்டத்தின் கீழ் தத்தெடுக்கப் பட்டுள்ளன என்று அரசின் புள்ளி விவரம் கொட்டினாலும், பிறப்பு விகிதத்தில் பெண் குழந்தைகளின் சரிவைச் சரிக்கட்ட இத்திட்டம் உதவி யுள்ளது என்று கூறத்தான் முடியும். பெண் சிசுக்கள் கொலையைத் தடுக்கும் நல்ல செயல் என்று பாராட்டி விட்டுப் போகலாம்.
செலக்டிவ் அபார்ஷன்
ஆண் - பெண் வீதத்தில் ஏற்பட் டுள்ள கவலை தரும் சரிவு இருபது ஆண்டுகளாகத்தான் வேகமடைந்து வருகிறது. அல்ட்ராசோனோகிராபி எனும் கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என ஸ்கேன் செய்து பார்க்கும் முறை நகர்ப்புற மய்ய நிலைக் குடும்பங்களிலே நன்கு அறிமுகமானதிலிருந்து இச்சரிவு அளவுக்கு மிஞ்சி வேகம் காணத் தலைப்பட்டிருக்கிறது. இந்திய அரசு கருவிலிருக்கும் சிசுவை ஸ்கேன் செய்து பார்க்கும் வழக்கத்தைத் தடை செய்துள்ளது.
இரண்டு கடுமையான சட்டங் களை Pre-Natal Diagnotic Technique gululation Act 1974, Medical Termination of Pragnation Act 1971 என்பதை நிறை வேற்றியது. ஆனாலும் நிலையில் மாற்றம் ஏற்பட்டு விடவில்லை. படித்த நடுத்தரப் பிரிவு அறிவியல் வளர்ச்சியை - அறிவியல் கண்டு பிடிப்பான தொலைக்காட்சியை, ஜாதகம், ஜோதிடம், வாஸ்து, கர்த்தரின் சுவிசேஷப் பிரசங்கம் என்று செல வழிக்கிறதோ அது போல் சுயநலனை முன்னிட்டு இயல்பு வாழ்க்கைக்கு முர ணாக, எவ்வித வெட்கமும் இல்லாமல் பயன்படுத்தத் தயங்குவதில்லை என்பதற்கு இதுஒரு கோடிப் பெண் சிசுக்கொலைகள் ஓர் எடுத்துக்காட்டு.
பாதகமான வழிமுறைதான் ஸ்கேன் வாயிலாகப் பிறக்கும் முன்பே சிசுக்கள், ஆணா, பெண்ணா எனக் கண்டறிந்து அழிக்கப்படும் முறை என அறிவியல்மீது குறை காணப்பட்டது. ஸ்கேன் வாயிலாகக் கண்டறிந்துபெண் குழந்தை எனில் செலக்டிவ் அபார்ஷன் எனும் முறையில் சிசுக்கள் கருவிலேயே கொல்லப்படுவதைத் தடுக்கவே 1994-ல் இயற்றப்பட்ட சட்டம் வந்தது. அச்சட்டப்படி அனைத்து அலட்ரா சோனோகிராபி கருவிகளும் பதிவு செய்யப்பட வேண்டும். கருவுற்றி ருக்கும் பெண்ணின் வயிற்றில் இருக்கும் சிசுவின் பாலினம் குறித் துத் தெரிவிக்கக் கூடாது. மீறுபவர் களுக்கு அபராதம் மட்டுமின்றிச் சிறைத் தண்டனையும் உண்டு.
ஆனால் மக்கள் இதைப் பொருட் படுத்தாமல் பணம் வாயிலாக நினைத்ததைச் சாதித்துக் கொள்வ தாகக் கூறப்படுகிறது.
உண்மைதான்
கீழ்க்கண்ட தகவல் அது உண்மை தான் என்று காட்டும் அரியானாவில் பணக்காரக் குடும்பங்களில் 1000 ஆண் குழந்தைகளுக்கு நிகரான பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 541. ஆனால் ஏழைக் குடும்பங்களில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 1567 எனும் அளவில் பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தியாவில் 1000 ஆண் குழந்தைகளுக்கு நிகர் பெண் குழந்தைகளின் வீதம் 957.
வறுமை
அய்.நா.வின் பன்னாட்டு ஆய்வறிக்கையின் அடிப்படையில், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கவும், ஆணுக்கு நிகரான எண்ணிக்கையில் இருந்து பெரிதும் வேறுபடவும் வறுமையும் காரணம் என மக்கள் நலம், பெண்கள் குழந்தைகள் நலனுக்கான செய்தி ஏடுகள் கூறுகின்றன. குழந்தைகளில் ஆண் குழந்தை பெண் குழந்தை எனும் பாகுபாடு காட்டப்படும் வேறுபாட்டு நிலை, ஏழைக் குடும்பங்களில் உணவில் முன்னுரிமை ஆண் குழந்தைக்கே என்றாகிறது. இது பெண் குழந்தை கள் பலவீனமடைந்து டைபாய்டு, மஞ்சள் காமாலை, மூளைக் காய்ச்சல் பரவும் போது சரி விகித உணவோ, மருத்துவ உதவியோ கிட்டாமல் வாழ்வு மறுக்கப்பட்டவை ஆகின்றன.
உளவியல் அடிப்படையான விளிம்பு நிலை, மத்திய தர, மேல் மத்திய தரக் குடும்பங்களிலும் பெண் குழந்தையைக் காட்டிலும் ஆண் குழந்தைக்கான வரவேற்பு என்றுமே அதிகமாகத் தானிருக்கிறது. ஏனென் றால் பெண்ணை மணம் செய்து கொள்ள மணமகள் வீட்டில் இன்னும் பேராசையோடு எதிர்பார்க் கப்படும் நாகரிகப் பிச்சை எனும் உணர்வு இல்லாமல் எதிர்பார்க்கும், வரதட்சணை, தலைத் தீபாவளி, தலை ஆடி, தலைப்பொங்கல் சீர் வரிசை கள், தலைப்பிரசவம், காதணி விழா தாய்மாமன் சீர் ஆகியன பொரு ளாதார நிர்ப்பந்தங்கள் எந்தக் கட்டத்திலும் பெண் வீட்டாருக்கு முடிவடைவதில்லை.
சுயமரியாதைத் திருமணங்கள், காதல் திருமணங்கள் மேற்கொள்ளும் குடும்பங்களில் சமூகப் பழிக்கு அஞ்சியோ, அல்லது தந்தை பெரியார் காட்டிய, திராவிட இயக்கம் காட் டிய வழிமுறைகள், வலியுறுத்தலின் பயனாலோ இதுமுற்றிலும் மறை யாவிடினும் மறைந்து விடுவது ஓர் ஆறுதல் பெண்ணைப் பாதுகாத்து வளர்த்து, படிப்பு அளித்து, உரிய வயதில் புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைப்பதோடு திருமணத்திற்குப் பின்னரும் அதன் வாழ்வு கவலை படர்ந்ததாக இல்லாமல் நிம்மதியாய், நிறைவுடன் இருக்க வேண்டுமே எனும் கவலை எப்போதும் பெண்ணைப் பெற்றவர்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டே, அரித்துக் கொண்டே இருக்கும்.
செலக்டிவ் அபார்ஷன் ஏன்? மூடநம்பிக்கை ஊட்டும் ஊடகங்கள்
தினசரிகளில் காணும் வரதட் சணைக் கொலைகள், தொலைக் காட்சிகள் பளிச்சிடும் நிஜம், சொல்வதெல்லாம் உண்மை  ஆகியன பார்த்து எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் பெண் என்பதாலேயே கீழாக மதிக்கப்பட்டு, அடக்கி வைக்கப்பட்டு இழிவுபடுத் தப்படும் பெண்களைப் பற்றிய செய்திகள், கணவன் மனைவி கருத்து வேறுபாடுகளை, பிரிந்து வாழும் பெற்றோரால் பேதலித்து விடப்பட்டு நிற்கும் குழந்தைகள் ஆகிய செய்திகளை வெளிச்சப்படுத்தும் மட்டமான ரசனைக்குத் தீனி போடும் சில மட்டமான ஊட கங்கள் ஆகியன, படிப்பறிவு குறை வான பெண்டிரையே மட்டுமல்லாது, ஆட வரிடையேயும் உள வியல் அடிப்படை யில் பெண் குழந்தை யென்றாலே பெற்ற வயிற்றில் பெரு நெருப்பைக் கட்டிக் கொண்ட நிலை எனும் மூடத் தனத்தை வளர்க் கிறது. இதன் விளைவுதான் தென் மாவட்டங்களில் கருக்கலைப்பு முயற்சிகள்.
விளிம்பு நிலை மக்கள் இடையே, முதலாவதாக, தான் பட்ட துன்பம், அனு பவித்த அல்லல்கள் அத்தனையும் தன்செல்லமகள் அனுபவிக்கக்கூடாது எனும் விரக்தியே பெரும்பாலான சிசுக் கொலைகளுக்குக் காரணமா கின்றன.
ஆண் பிள்ளைகளை வரிசையாகப் பெறுவது மட்டும் தான் காரண மில்லை இறைவன் கொடுத்தது என்று பெற்றுத் தள்ளுபவர்கள், பெண் குழந்தை எனில் மட்டும் அதுவும் இறைவன் கொடுத்தது என்று எண்ண வேண்டியதுதானே. இது மட்டும் என்ன கடவுள் நம் பிக்கையோ, செலக்டிவ் அபார்ஷ னுக்கு இரண்டாவதாக முதன்மைக் காரணங்களாக இருப்பவை, தாம் பெற்ற குழந்தையை வளர்க்கும் பொறுப்பில் இன்றைய மாடர்ன் ஏஜ் பெற்றோர்களுக்கு இருக்கும் நடைமுறைச் சிக்கல்களையும் கூற வேண்டும்.
கணவன், - மனைவி இருவரும் மிக இளம் வயதில் உயர் பதவியில் இருப்பவர்களாயின் ஆண் அல்லது பெண் என ஒரே குழந்தையோடு  குழந்தை பேற்றை முடித்துக் கொள்கின்றனர். அடுத்த முறை தாய்மையடையும் நிலைவரின் ஆண் குழந்தையா, பெண் குழந்தையா எனும் நிகழ்வின் அடிப்படையில் அது செலக்டிவ் அபார்ஷன் செய்யத் தூண்டுகிறது.
ஒன்றாயின், இரண்டாயின்
ஒரே குழந்தை எனில் அதன் தேவைகளை முழுமையாக நிறை வேற்றிக் குழந்தையின் விருப்பங்களை நிறைவடையச் செய்வது என்பது பெற்றோர்களுக்கு எளிதாக தோன்றுகிறது. இதே இரண்டு குழந்தைகள் எனில் செலவுகளும் இரண்டு மடங்காகுமே என விண்ணைத் தொடும் விலைவாசி, உயர்வினால் யோசிக்கத் தொடங்கி அதன் விளைவால் செலக்டிவ் அபார் ஷன் முறையில் இரண்டாம் குழந்தை பெண் எனில் அதைக் கருவிலேயே கொலை செய்து விடுகின்றனர்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு
பெண் சிசுக் கொலை குழந்தைகள கடத்தல் உள்ளிட்டவை தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாகத் திகழ்வது ஆப்கானித்தான். 2ஆவது இடத்தில் காங்கோவும், 3ஆவது இடத்தில் பாகிஸ்தானும், நான்காவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. இதனைப் பெண் உரிமைக்காக சட்டபூர்வ தகவல், சட்ட ஆதரவு ஆகியவற்றின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
தமிழக நிலை
தமிழக மக்கள் தொகையில் பெண் குழந்தைகளின் விகிதாச்சாரம் தமிழகத்தில் மக்கள் தொகை 7,21,38,958. இதில் ஆண்களின் எண்ணிக்கை 3,71,89,229. பெண்களின் எண்ணிக்கை 3,49,49,729.
குறைந்து வரும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தால் 2030-இல் பெண் குழந்தைகளைவிட ஆண்கள் 20 விழுக்காடு அதிகமாக இருப்பார்கள் என லண்டனில் பன்னாட்டு மக்கள் நல, வளர்ச்சிக் கான ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் சமூகத்தில் ஆண்கள் திருமணம் செய்யத் தேவையான பெண்கள் கிடைக்காமல் பற்றாக் குறை நிலவும். உரிய வயதில் திரு மணத்திற்கும் பெண் கிடைப்பது தாமதமாவதால் திருமணத் தடை ஏற்பட்டு மனச்சிதறல் அடையும். பலவீனமான வக்கிரபுத்தி ஆண் களால் சிறுமிகள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகலாம்.
வரதட்சணை வாங்கிய காலம் போய், பொருத்தமான பெண் கிடைக்காமல் மகன்களின் திரு மணம் தாமதமாகி விடும் எனும் பயத்தினால், மாப்பிள்ளை வீட் டாரே கல்யாணச் செலவுகளை, ஏற்றுக் கொண்டு பெண்ணுக்கு இத்தனை சவரன் நகை போடுகிறோம் என்று பெண் வீட்டடாரிடம் பேசி மணம் செய்து கொள்ளும் நிலை- நல்லதுதான் - என்றாலும்  மணப் பெண்கள் டிமாண்ட் என்பது வதந்தி இல்லை என்பது உண்மை யாகலாம். எழுத்தாளர் சுஜாதா ஒரு கதை ஒன்றில் எழுதியது போல் பெண்கள் உலகின் அதிசயங்களில் அரிதான விஷயங்களில் ஒன்றென வும் ஆகலாம்.
எந்த நாட்டின் வளர்ச்சிக்கும் மனித வளம் இன்றியமையாதது.
பெண் கடவுள்களை வணங்கு கிறான். சக்தி என்று போற்றுகிறான். ஆணுக்குப் பெண் இளைப்பில்லை மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று பாரதி பாடலை முழுமையாக முழங்குகிறான். ஆனால் பெண் குழந்தைகளைச் சுமையாகக் கருது கிறான். இந்த நிலை மாற வேண்டும். ஆணுக்கும் பெண்தான் மிகச் சிறந்த துணையாக அமைய இயலும் ஆதலால், ஆண் குழந்தைகளுக்குச் சமமாகப் பெண் குழந்தை பிறப்பைப் போற்ற வேண்டும். எங்கள் வீட்டு மகாலட்சுமி என்று போலித்தனமாகக் கூறுவது மறைய வேண்டும்.
-விடுதலை ஞா.ம.,23.2.13

பெண்ணின சாதனைக்குப் பாதை போட்டவர்கள்

மேரி ஆன் டகாம்ப் ஷார்லீப்பிரிட்டனின் முதல் மருத்துவர்

தேசிய அளவிலும், ஏன் உலக அளவிலும் சாதனை படைத்த பல பெண்களை பற்றி பார்ப்போம்.
பிரிட்டனின் முதல் மருத்துவர்
பிரிட்டனிலும் அதன் காலனி நாடுகள் எதிலும் மருத்துவம் படிக்கப் பெண்கள் அனுமதிக்கப்படாத காலத்தில், முதன்முதலில் 1875இல் சென்னை மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார் பிரிட்டனைச் சேர்ந்த மேரி ஆன் டகாம்ப் ஷார்லீப். அதற்கு முன்னர் அமெரிக்காவில் மட்டுமே பெண்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
ஷார்லீபுக்குப் பிறகு மிசஸ் ஒயிட், பியேல், மிட்ஷெல் ஆகிய மூன்று ஆங்கிலோ-இந்தியப் பெண்களும் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர்.
சென்னையில் படித்த பிறகு இங்கிலாந்தில் உள்ள ராயல் லண்டன் மருத்துவப் பள்ளியில் படித்து, பிரிட்டனின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையை ஷார்லீப் பெற்றார். சென்னையில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையை நிறுவியவர் இவரே.
பெண்களின் வழிகாட்டி டோரதி தி லா ஹே
சென்னையின் முதல் கல்லூரி ராணி மேரி கல்லூரி. இதுவே தேசிய அளவில் மூன்றாவது பெண்கள் கல்லூரி, தென்னிந் தியாவின் இரண்டாவது கல்லூரியும்கூட. 1914இல் இந்தக் கல்லூரி நிறுவப்படக் காரணமாக இருந்தவர் டோரதி தி லா ஹே. 1936 வரை அவரே கல்லூரி முதல்வராகச் செயல்பட்டார்.
மதராஸ் மாகாண பெண்களின் உயர்கல்வி வளர்ச்சியில் ராணி மேரி கல்லூரியின் பங்கு ஈடு இணையற்றது. கல்லூரி தொடங்கப்பட்ட காலத்திலேயே குழந்தைத் திருமணம் காரணமாக, சின்ன வயதிலேயே கணவரை இழந்த பெண்கள் இங்கே படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார்கள். இங்கே சிறப்பாகப் படித்த பெண்கள் மாநிலக் கல்லூரியில் மேற்படிப்பைத் தொடர்ந்தார்கள்.
முதல் வாக்குரிமை
பிரிட்டனிலும் அதன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதற்கான தீர்மானத்தை, 1921இல் முதலில் நிறைவேற்றிய சட்டப்பேரவை மதராஸ் மாகாண சட்டப்பேரவைதான்.
அந்த வகையில் பெண் களுக்கான சுதந்திரம், சமஉரிமை சார்ந்த பயணம் தேசிய அளவில் சென்னையில்தான் தொடங்கியது. அதன் பிறகுதான் பம்பாய் மாகாணமும், ஒருங்கிணைந்த மாகாணமும் இதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றின.
இதிலும் வாக்கு வித்தியாச அடிப்படையில் சென்னையே முதலிடம் பிடித்தது. மாகாணத்தின் 90 உறுப்பினர்களில் 40 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாகவும், 40 பேர் வாக்கு அளிக்காமலும் இருந்தனர். 10 பேர் மட்டுமே தீர்மானத்தை எதிர்த்தது வரலாற்று சாதனையாக மாறியது. 1917இல் சர்வதேச பெண்கள் வாக்குரிமை இயக்கத்துடன் தொடர்புடைய இந்திய பெண்கள் சங்கத்தை  அன்னி பெசன்ட், டோரதி ஜின்ராஜ தாசா, மார்கரெட் கசின்ஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கினர்.
இந்த அமைப்பின் பணிகளைத் தொடர்ந்தே மதராஸ் மாகாண சட்டப்பேரவையில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
-விடுதலை,22.9.15

செவ்வாய், 10 நவம்பர், 2015

பெண்கள் சுதந்திரத்தில் தமிழ்நாட்டுக்கு முதலிடம்

பெண்கள்சுதந்திரத்தில்தமிழ்நாட்டுக்குமுதலிடம் கடைசி இடத்தில் மேற்கு வங்காளம்


தேசிய அளவில் குடும்ப நலன் தொடர்பாக 2011ஆ-ம் ஆண்டு நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் பெண்களிடையே கருத்து கேட்கப்பட்டது. திருமணமான குடும்பப் பெண்களில் படித்தவர்களின் செல்வாக்கு வீட்டில் எப்படி இருக்கிறது? அவர்கள் பேச்சு எடுபடுகிறதா? குடிநீர்த் தேவையை எப்படி சமாளிக்கிறீர்கள்? மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்களா? என்பது குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் நாட்டிலேய மேற்கு வங்காளத் திலும், ராஜஸ்தான் மாநிலத்திலும்தான் குடும்பத்தில் பெண்கள் நிலை மிகவும் பின்தங்கி உள்ளது. மேற்கு வங்காளத்தில் பெண்கள் கருத்துரிமை கூட இல்லாத நிலையில் வாழ்கின்றனர் என்ற கசப்பான உண்மையை சுட்டிக் காட்டியுள்ளது. குடிநீர் பிடிப்பதற்காக அன்றாடம் 2 மணி நேரத்தை பெண்கள் செலவிடுவதாகவும், அடுப்பு எரிப்பதற்காக விறகு சேகரிக்க 6 மணி நேரம் மேற்குவங்க பெண்கள் அலைவதாகவும் இந்த அறிக்கை வருத்தத்துடன் குறிப்பிடுகின்றது.
அம்மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் வாதிகள், எழுத்தாளர்கள், சிந்தனை வாதிகள் என்று புகழப்படும் வெகு சில பெண்களின் முன்னேற்றத்தை மட்டுமே அளவுகோலாக வைத்து பார்க்காமல், ஆழ்ந்து நோக்கினால் ஆண்- பெண் பிறப்பு விகிதாச்சாரம், பெண்கள் கல்வியறிவு ஆகியவற்றை எல்லாம் பின்னுக்கு தள்ளும் வகையில் குடும் பங்களில் கருத்து கூறுவதற்கு கூட பெண் களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கப் படாத நிலையில் ஆணாதிக்கம் ஓங்கி உள்ளது. கணவனின் அனுமதி இல்லாமல் பெற்றோரைப் பார்ப்பதற்கு கூட பெண்களால் முடியவில்லை. வீட்டிற்குத் தேவையான சாதனங்களை வாங்குவதில் தொடங்கி என்ன சமையல் செய்ய வேண்டும் என்பது வரை பெண்ணின் ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டுள் ளன. 1 கோடியே 70 லட்சம் பெண்கள் திறந்தவெளி கழிப்பிடங்களையே உபயோகிக்கின்றனர். 58 சதவீத பெண்களுக்கு பள்ளிகளில் போதிய கழிப்பிட வசதி இல்லை. மேற்கு வங்க மாநிலம் நிலையான முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்றால் சமு தாயத்தில் நிலவும் பெண்களுக்கு எதி ரான அடக்குமுறைகள் முடிவுக்கு வர வேண்டும் என்றும் அந்த ஆய்வு பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில் பெண்கள் கல்வியறிவு, அதிகபட்ச இலக்கு 65 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மேற்கு வங்க பெண்கள் 71 சதவீத கல்வி யறிவில் தேறியவர்களாக இருந்தபோதும் பெண்ணுரிமை செயலாக்கத்தில் அம் மாநிலம் மிகவும் பின் தங்கியே உள்ளது. தேசிய அளவிலான பெண்ணுரிமை இலக்கு 37 சதவீதமாக உள்ளது. ராஜஸ் தான் மாநிலமும் மேற்கு வங்காளத்தை போலவே உள்ளது.   ஆனால் இந்தி யாவிலேயே சர்வசுதந்திரத்துடன் குடும்பத் தலைவியாக நிர்வாகம் செய்யும் ஒரே மாநிலமாக தமிழ்நாடு தலை சிறந்தும், தலை நிமிர்ந்தும் நிற்கின்றது. தமிழ்நாட்டில் 49 சதவீதம் பெண்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப் படுகிறார்கள். தமிழகத்துக்கு அடுத்த இடத்தில் மராட்டியத்தில் பெண்கள் சுதந் திரம் 45 சதவீதமாகவும், ஆந்திராவில் 40 சதவீதமாகவும் உள்ளது.
-விடுதலை ஞா.ம.,28.9.13

ஞாயிறு, 8 நவம்பர், 2015

சாதிக்கப் பிறந்த டச்யானா மெக்ஃபேடன்


வேடிக்கையைப் பாருங்கள், எல்லோரும் என்னைத் துரத்த முயற்சி செய்கிறார்கள், ஆனால், நான்தான் அவர்களைத் துரத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறேன் என்கிறார் டச்யானா மெக்ஃபேடன்.
பாஸ்டன், நியூயார்க், சிகாகோ, லண்டன் என்ற நான்கு மாரத்தான் பட்டங்களையும் ஒரே ஆண்டில் பெற்றவர் இவர்! ஆரோக்கியமானவர்களிலோ, மாற்றுத் திறனாளிகளிலோ இந்தச் சாதனையைச் செய்தவர்கள் இதுவரை யாரும் இல்லை. தன்னுடைய நாடான அமெரிக்காவுக்குப் பெருமையும் உலகம் முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்குத் தன்னம் பிக்கையும் பெற்றுத் தந்திருக்கிறார் 26 வயது டச்யானா.
முதுகெலும்பில் துளையுடன் இடுப்புக்குக் கீழே இயங்காத தன்மையோடு, ரஷ்யாவில் பிறந்தார் டச்யானா. பிறந்த 3 வாரங்களுக்குள் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் குழந்தையைக் காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். ஆனால் டச்யானாவின் அம்மாவால் ஏற்பாடு செய்ய இயலவில்லை. மூன்று வாரங்களுக்குப் பிறகும் குழந்தை உயிரோடு இருந்ததில் மருத்துவர்களுக்கு ஆச்சரியம்.
குழந்தையை ஆதரவற்றவர்கள் இல்லத்தில் சேர்த்துவிட்டார் அம்மா. மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த அந்த இல்லத்தால் டச்யானாவுக்கு ஒரு சக்கரநாற்காலிகூட ஏற்பாடு செய்ய இயலவில்லை. ஆறு ஆண்டுகள்வரை தோள்களைக் கால் களாகவும் கைகளைப் பாதங்களாகவும் பயன்படுத்தி நகர்ந்து வந்தார் டச்யானா.
அமெரிக்காவைச் சேர்ந்த டிபோரா மெக்ஃபேடன் அரசாங்க அலுவல் காரணமாக ரஷ்யாவுக்கு வந்தார். ஆதரவற்றவர் இல்லத்தில் டச்யானாவைச் சந்தித்தார். நோய்களோடு உடல் பலமின்றி இருந்த டச்யானாவைத் தத்தெடுக்க முடிவு செய்தார் டிபோரா. ஆனால் டச்யானா நீண்ட நாட்கள் உயிர் வாழ வாய்ப்பில்லை என்றார்கள் மருத்துவர்கள்.
ஆனாலும் தன் எண்ணத்தில் உறுதியாக இருந்தார் டிபோரா. அதற்கு ஒரு காரணமும் இருந்தது. சிறுவயதில் டிபோராவுக்கு வந்த மர்மக் காய்ச்சல், அவரை மாற்றுத் திறனாளியாக மாற்றியிருந்தது. அதிலிருந்து மீண்டு, நீச்சல் வீராங்கனையாக மாறி, அரசாங்க அலுவலகத்தில் வேலை செய்து வந்தார் டிபோரா.
ரஷ்ய மொழி மட்டுமே அறிந்திருந்த அந்த நோஞ்சான் குழந்தை, ஆங்கிலம் பேசும் அம்மாவுடன் அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்தது. முதல் காரியமாக ஒரு சக்கர நாற்காலி வாங்கிக் கொடுத்தார் டிபோரா. பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சில அறுவை சிகிச்சைகளும் டச்யானாவுக்கு அளிக்கப்பட்டன. உடல் தேறியதே தவிர, அவரின் பாதி உடல் இயங்கும் வாய்ப்பை நிரந்தரமாக இழந்துவிட்டிருந்தது.
பள்ளியில் சேர்ந்ததும் ஆர்வத்தோடு படித்தார் டச்யானா. ஓய்வு நேரங்களில் விளையாட்டுகளில் ஈடுபட வைத்து, அவரது தசைகளை வலுவாக்கினார் டிபோரா. நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ், சக்கர நாற்காலி கூடைப் பந்து, பனி சறுக்கு ஹாக்கி, ஸ்கூபா டைவிங் என்று வரிசையாகக் கற்றுக்கொண்டு களத்தில் இறங்கினார் டச்யானா.
இறுதியில் சக்கர நாற்காலி ஓட்டப் பந்தயத்தில்தான் அவரது ஆர்வம் நிலைகொண்டது. தன்னுடைய வலுவான தோள்கள் மூலம் எளிதில் வெற்றிகளைக் குவிக்க ஆரம்பித்தார் டச்யானா. பள்ளியில் மற்ற மாணவர்களுடன் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்வதற்கு டச்யானாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எவ்வளவோ பேசிப் பார்த்தார். சக்கர நாற்காலி ஓட்டம் பாதுகாப்பற்றது என்று சொன்னார்கள்.
ஓடுவதற்காகவே உருவாக்கப்பட்ட சக்கர நாற்காலி என்பதால் ஆபத்தில்லை என்று விளக்கினார். ஆனாலும் ஒரு மாற்றுத் திறனாளியை மற்றவர் களுடன் ஓட வைக்கப் பள்ளி நிர்வாகம் விரும்பவில்லை. டச்யானாவுக்கு என்று சக்கர நாற்காலி ஓட்டப் பந்தயங்கள் தனியாக நடத்தப்பட்டன. வேறு யாரும் கலந்துகொள்ளாததால் மைதானத்தில் தனியாக ஓடிக்கொண்டிருந்தார் டச்யானா.
இந்த நிகழ்ச்சி அவரை வெகுவாகப் பாதித்துவிட்டது. சாதாரணமானவர்களையும் மாற்றுத்திறனாளிகளையும் சமமாக நடத்த வேண்டும் என்று டச்யானாவும் டிபோராவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். பதக்கங்களுக்கோ, பணத்துக்கோ இவர்கள் போட்டிகளில் பங்கேற்க நினைக்கவில்லை. எல்லோரையும் போலத் தாங்களும் என்பதை உணர்த்துவதற்கே போட்டிகளில் பங்கேற்கிறார்கள்.
அதனால் பள்ளிகளில் எல்லோருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாகப் பள்ளிகளிடையே தனிப் போட்டிகளையும் நடத்தலாம் என்று தீர்ப்பு வெளியானது.
இந்தச் சட்டம் டச்யானா சட்டம் என்றே அழைக்கப்பட்டது. அமெரிக்காவின் 13 மாநிலங்களில் இந்தச் சட்டம் அமலுக்கு வந்தது. 2013ஆம் ஆண்டில் அமெரிக்கா முழுவதும் பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகளுக்குச் சமவாய்ப்பு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
15 வயதில் மாற்றுத் திறனாளிகளுக்கான கோடை ஒலிம்பிக் போட்டியில், 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்ற டச்யானாவின் வெற்றி வேகத்தை இன்று வரை குறைக்க முடியவில்லை. இரண்டு ஆண்டுகளில் தங்கப்பதக்கம் பெற்று உலகச் சாம்பியனாக மாறியதோடு, 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் புதிய சாதனையையும் படைத்தார் டச்யானா.
டச்யானா இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 2010 நியூயார்க், 2011 சிகாகோ, 2011 லண்டன், 2015 பாஸ்டன் மாரத்தான் போட்டிகளில் தொடர்ந்து வாகையர் பட்டங்களைப் பெற்றார். 2013ஆம் ஆண்டில் மட்டும் நான்கு மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு அனைத்திலும் சாம்பியன் பட்டங்களை வென்றார்.
இதுவரை யாரும் செய்யாத உலகச் சாதனை இது! அந்த ஆண்டே 6 தங்கப் பதக்கங்களை வென்று உலக வாகையர் பட்டங்களையும் குவித்தார். மேலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் தன்னம்பிக்கை வகுப்புகள் எடுக்கிறார். கவுன்சிலிங் கொடுக்கிறார். மாற்றுத்திறனாளிகளின் உரிமை களுக்காகப் பல்வேறு வகையில் போராடிவருகிறார்.
-விடுதலை,7.7.15

இரண்டாவது மனைவிக்கு ஓய்வூதியம் மறுத்த கணக்கு அதிகாரியின் உத்தரவு ரத்து

சென்னை, ஜூலை 4_ முதல் மனைவியை விவா கரத்து செய்யாமல், இரண் டாவது திருமணமான பெண்ணுக்கு, ஓய்வூதியத் தொகை மறுத்தது சரி யல்ல என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
கோவை மாவட்டத் தில், தலைமை கான்ஸ்ட பிளாக பணியாற்றியவர், ஸ்டான்லி. 1973 இல், சுகந்தி என்பவரை திரு மணம் செய்தார். கருத்து வேறுபாட்டால், 1975 இல், இருவரும் பிரிந்தனர்.
அதைத்தொடர்ந்து, 1976 இல், சுசிலா என்ற மேரி மார்கரெட் என்ப வரை, திருமணம் செய் தார். முதல் திருமணம் நிலுவையில் இருக்கும் போதே, இரண்டாவது திருமணம் நடந்தது. ஈரோடு நீதிமன்றத்தில், சுகந்தி வழக்கு தொடுத்து, 2003 இல், திருமண முறிவு பெற்றார்; 2005 இல், சுகந்தி இறந்தார். பணி யில் இருந்து, 2001 இல் ஓய்வு பெற்ற ஸ்டான்லி, ஓய்வூதியம் பெற்று வந் தார்.
2011 அக்டோபரில், ஸ்டான்லி இறந்தார். குடும்ப ஓய்வூதியம் வழங் கும்படி, சுசிலா, விண் ணப்பித்தார். அதை, முதன்மை கணக்கு அதி காரிக்கு, கோவை மாவட்ட காவல்துறை  கண்காணிப் பாளர் பரிந்துரைத்தார்.
விண்ணப்பத்தை, முதன்மை கணக்கு அதி காரி நிராகரித்தார். 'முதல் திருமணம் நிலுவையில் இருக்கும் போது, இரண் டாவது திருமணம் நடந் ததால், குடும்ப ஓய்வூதியம் பெற, சுசிலாவுக்கு தகுதி யில்லை' என, கூறப்பட் டது. முதன்மை கணக்கு அதிகாரியின் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சுசிலா, மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த, நீதி பதி அரிபரந்தாமன் பிறப் பித்த உத்தரவு வருமாறு:
மனுதாரர் உடன், 1976 முதல், சாகும் வரை, ஸ்டான்லி வாழ்ந்துள் ளார். இருவருக்கும், 1976 இல், திருமணம் நடந் துள்ளது. அந்த திருமணம் செல்லாது என்று யூகித் தாலும், சுசிலா உடன் தான் சேர்ந்து வாழ்ந்துள் ளார் என்பதை, கணக்கு அதிகாரி கூட மறுக்க வில்லை. இறந்தவரின் மனைவி சுசிலா தான் என, ஓய்வூதியம் விண் ணப்பத்தை, கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பரிந்துரைத்துள்ளார். மேலும், 2003 இல், முதல் திருமணம் முடிவுக்கு வந்து விட்டது.
எனவே, குடும்ப ஓய்வூ திய விண்ணப்பத்தை, முதன்மை கணக்கு அதி காரி நிராகரித்தது சரி யல்ல. முறையான திரும ணம் இல்லாமல், சேர்ந்து வாழும் உறவு முறை, ஏற்றுக் கொள்ளப்படு கிறது. அதன் மூலம், சட் டப்பூர்வ உரிமை கோர வும், உரிமை உள்ளது. முதன்மை கணக்கு அதி காரியின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது.
கணவர் இறந்த நாளில் இருந்து, இதுநாள் வரை, குடும்ப ஓய்வூதியத்தை அனு மதித்து, தொடர்ந்து வழங்கவேண்டும்.  இவ் வாறு, நீதிபதி அரிபரந் தாமன் உத்தரவிட்டுள்ளார்.
-விடுதலை,4.7.15

ஆப்கானிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக முதல் பெண் நீதிபதி நியமனம்


காபூல், ஜூலை 1-_ ஆப்கானிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக முதல் பெண் நீதிபதியை நியமித்து அந் நாட்டு அதிபர் அஷ்ரப் கனி உத்தரவிட்டுள்ளார்.
சிறுவர் நீதிமன்ற நீதிபதியாகவும், பெண் நீதிபதிகள் சங்கத் தலைவராகவும் உள்ள அனிசா ரசவுவியை, ஒன்பது பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் நீதிபதியாக கனி நியமித்துள்ளார். இம்மாத துவக்கத்தில் அவரது நியமனத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அதிபரின் உத்தரவு தாமதமாக நேரிட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதியாக அனிசாவை நியமித்துள்ளதாக நேற்று அறிவித்த அதிபர் அஷ்ரப் கனி, நாட்டில் முதன் முறையாக உச்சநீதிமன்ற நீதிபதியாக பெண் நீதிபதி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இதன் மூலம் நீதித்துறையின் அமைப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்று கூறினார்.
ஆப்கான் அரசியலைப்பு சட்டப்படி உச்சநீதி மன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் ஒருவர், 10 ஆண்டுகள் அப்பதவியில் நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


-விடுதலை,1.7.15

சனி, 7 நவம்பர், 2015

இந்து மதத்தில் பெண்கள் நிலை?

-விடுதலை ஞா.ம.,31.10.15

இந்து மதத்தில் பெண்கள் நிலை

பெண்களின் அந்தஸ்து பற்றி
1.    நாரதர் (ஸ்மிருதிக்குக் கர்த்தாவான ரிஷி) கூறுகிறார்: எவனொருவன் வாங்கின கடனையோ, பொருளையோ திரும்பக் கொடுக்கவில்லையோ அவன், கடன் கொடுத்தவனுடைய வீட்டில் ஒரு அடிமையாகவாவது ஒரு வேலைக்காரனாகவாவது ஒரு ஸ்திரியாகவாவது, ஒரு நாலுகால் மிருகமாகவாவது பிறப்பான்.
2.    மனு (இந்துச் சட்டம் செய்தவராய், வேத முறைகளை முதன்முதலில் வெளியிட்டவராய், இன்றைக்கும் மக்கள் யாவரும் பின்பற்ற வேண்டிய சட்டதிட்டங்களைச் செய்தவராய் உள்ளவர்) கூறுவது: ஒரு மனைவி, ஒரு மகன், ஒரு அடிமை ஆகியோர் சொத்துக்களை வைத்திருக்க யோக்கியதை அற்றவர்களாவார்கள். அவர்கள் என்ன சம்பாதித்தாலும் அதெல்லாம் அவர்கள் எவர்களுக்கு உரிமையுடையவர்களோ அவர்களைச் சேரும்.
3.    போதாயனர் கூறுவது _: எந்த மனிதனும் பெண்களுக்கு இரவலோ, கடனோ கொடுக்கக் கூடாது; அடிமைகட்கும், குழந்தைகட்கும்கூட ஒன்றும் இரவல் தரக்கூடாது.
4.    மத விதிகள் கூறும் நூல்களில் ஒன்றாகிய ராமாயணம் உரைப்பது: தப்பட்டைகள், பயிரிடுபவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், மிருகங்கள், பெண்கள் ஆகிய இவர்கள் எல்லாம் கடுமையான முறையினால் ஒடுக்கி வைக்கப்பட வேண்டும்.  _ (சுந்தர காண்டம் 5)
5.    மனு கூறுகிறார்: பகலும் இரவும் மாதர்கள் அவர்களுடைய சொந்தக் காரர்களை அண்டியே இருக்கும்படியாகச் செய்யப்பட வேண்டும். பெண்களைக் குழந்தைப் பருவத்தில் தகப்பன்மாரும், வாலிப காலத்தில் புருஷன்மாரும், வயது முதிர்ந்த காலத்தில் பிள்ளைகளும் காப்பாற்றுகிறார்கள் _ ஒரு பெண் ஆனவள் ஒருபோதும் சுயேச்சையாயிருக்கத் தகுதியுடையவளல்லள். அவளுடைய வாழ்வு பூராவும் நல்லவர்களாகவோ, கெட்டவர்களாகவோ, அலட்சியக் காரர்களாகவோ இருக்கும்படியான மற்றவர்களுடைய இரக்கத்தினால் வாழ்பவளாகவே இருக்க வேண்டும். ஏனெனில் பெண்கள் அவ்வளவு அற்ப ஜீவர்களாகவே இருக்கிறார்கள்.
6.    உத்தமஸ்திரீக்கு மனுவுரைக்கும் யோக்கியதாம்சமென்னவெனில், அவளுடைய தகப்பன் அவளை எவனுக்குக் கொடுத்திருக்கின்றானோ அவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் அவனையே அவள் மரியாதை செய்யட்டும்... ஒரு புருஷன் துர்நடத்தையுடையவனாயினும், இன்னொரு மாதினிடம் அன்பு கொண்டவனாயினும், நல்ல தன்மைகளில்லாதவனாயினும், அவனைத் தெய்வம்போலவே கருதுகிறவள்தான் புண்ணிய ஸ்திரீயாவாள். (அத். 5, 154)
7.    மனு, ஒரு மாதானவள், எவ்வளவு நல்லவளாகவும், உத்தமமானவளாகவும் இருப்பினும், அவள் தன் கணவனுடைய குணங்களையுடையவளா கத்தான் இருப்பாள். மேலும் அவர் சொல்லுவது: ஒரு மங்கையானவள் தான் மணம் செய்துகொண்ட ஒரு புருஷன் என்ன குணங்களையுடை யவனாயிருக்கின்றானோ அதே குணங்களையே அவளும் அடை வாள் _ எதுபோலவெனில் கடலில் போய்க் கலக்கிற ஆற்றைப்போல்.
(அத்தியாயம் 9, 22)
8. போதாயனர் உரைப்பது: மாதர்கள் அறிவே இல்லாதவர்கள்: அவர்கள் சொத்துரிமை கொள்ளும் யோக்கியதையற்றவர்கள்.
திராவிடர் கழகத்தை எதிர்ப்போரே - இவற்றை ஏற்றுக் கொள்கிறீர்களா?
-உண்மை இதழ்,16-30.2015