செவ்வாய், 29 செப்டம்பர், 2015

தொழில் உலகில் சிறந்த பெண்கள்



ஆண்கள் அதிக அளவில் பங்களிக்கும் வியாபார உலகில் அதிக திறமை வாய்ந்த பெண்களாகத் திகழும் மங்கையர் வரிசை இதோ...
Sheryl Sandberg
உலகம் முழுவதும் பல கோடி மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஃபேஸ்புக்கின் முதுகெலும்பு இவரே. சி.ஓ.ஓ. பதவியில் இருக்கும் 45 வயதான ஷெரில், 2013இல் அவர் எழுதிய புத்தகத்தின் மூலம் (Lean In) மேலும் புகழடைந்தவர். இவரது புத்தகமும் ஹாட் லிஸ்ட்டில் இடம் பெற்றிருக்கிறது. டெக்னாலஜி துறையில் இருக்கும் அதிக வருமானம் பெரும் சிலரில் ஒருவர் இவர்.
Abigail Johnson
அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான ஃபிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ் தலைவர் பதவியை அலங்கரிக்கும் அபிகெய்ல், 52 வயது ஆனவர். 2012 முதல் இப்பதவியில் இருக்கிறார். உலகின் டாப் 10 பணக்காரப் பெண்மணிகள் பட்டியலிலும் இவர் இடம் பெறுகிறார்.
Pat Woertz
61 வயதான பேட்வோர்ட்ஸ் ADM என்ற உணவுப் பதப்படுத்துதல் மற்றும் கமாடிட்டி நிறுவனத்தின் சி.இ.ஓ. மற்றும் சேர்மனும் கூட. 2006 முதல் இந் நிறுவனத்தை தலைமை ஏற்று நடத்துகிறார்.
Irene Rosenfeld
சேர்மன் மற்றும் சி.இ.ஓ. பதவியில் இருப்பவர் அய்ரின் ரோசன்ஃபெல்ட். உலகம் முழுதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களை கொண்ட மாடலீஜ் இன்டர் நேஷனல் உணவு நிறுவனத்தின் உயரிய தலைவர். 61 வயதான இவர் அடுத்த 4 ஆண்டுகளில் நிறுவனத்தின் மிகப்பெரிய மாறுதலுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்.
Meg Whitman
டெக்னாலஜி துறையில் முக்கிய நிறுவனமான ஹெச்.பி.யின் சேர்மன், சி.இ.ஓ. மற்றும் பிரசிடென்ட், 58 வயதான மெக் விட்மென். பி அண்ட் ஜி, வால்ட் டிஸ்னி, இபே போன்ற நிறுவனங்களின் வளர்ச்சியில் முக்கியப் பணியாற்றி ஹெச்.பி.க்கு வந்திருப்பவர். 58 வயதான மெக், உலகின் சிறந்த வியாபார வல்லுநர்களில் ஒருவரும் கூட.
Ellen Kullman
டுபண்ட் என்னும் கெமிக்கல், பயோ அறிவியல் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் சி.இ.ஓ. பதவியில் இருக்கிறார், 58 வயதான எல்லன் குல்மென். தனது பதவி காலத்தில் நிறுவனத்தின் பங்கு மதிப்பை பன்மடங்கு உயர்த்திய பெருமைக்குரியவர்.
-விடுதலை,17.3.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக