திங்கள், 1 ஏப்ரல், 2024

கருநாடக மாநிலத்தில் மகளிர் நாள் கழகப் பிரச்சார செயலாளர் கருத்துரைவிடுதலை நாளேடு
Published March 16, 2024

உடுப்பி, மார்ச் 16- பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான கருநாடக மாநில மகளிர் கூட்டமைப்பு 2024 மார்ச் 8 ஆம் நாள் கருநாடக மாநிலம் உடுப்பி நகரில், உலக மகளிர் நாள் விழாவை மிகச்சிறப்பாக நடத்தி யது. கருநாடக மாநிலத் தின் பல்வேறு மாவட்டங் களில் இருந்து பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இவ் விழாவில் திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தொடக்க உரையாற்றினார்.

அவர் உரையாற்று கையில் தமிழுக்கும், கன் னட மொழிக்கும் உள்ள ஒற்றுமைகளைக் குறிப் பிட்டு திராவிடமொழிக ளின் அடையாளம் தமிழ் என் பதையும், இன்றைய சமூக அரசியல் சூழ்நிலை யில் திராவிட மாநிலங்க ளின் ஒற்றுமையை முன் னெடுக்க வேண்டும் என்றும், அதனை பெண்களால் தான் சாதிக்க முடியும் என்றும், ஏனெனில் பெண் கள்தான் எல்லையற்றவர் கள், பெண்களால் ஆண் கள் உருவாக்கிய ஜாதி மத இன மொழிப் பிரிவினைகளை, தடைக ளைத் தாண்டி சிந்திக்க முடியும் என்றும், தந்தை பெரியாரின் சிந்தனை வழியில்தான் தடைக ளைத் தாண்டி சிந்திக்கும், செயல்படும் பெண்கள் உருவாக முடியும் என் றும், இந்தியாவில் பெண் களுக்கெதிராக திட்ட மிட்டு வன்முறையை நிகழ்த்தும் மதவெறி அமைப்புகளை பெண் கள் அடையாளம் காண வேண்டும் என்றும் குறிப்பிட்டுப் பேசினார்.

நிகழ்வில் பங்கேற்ற பெண்கள் திராவிட மாநி லங்களின் ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை பலத்த கையொலி எழுப்பி வர வேற்றார்கள்.

வியாழன், 22 பிப்ரவரி, 2024

தமிழ்நாட்டில் முதல் முறை ரயில்வே பயணச்சீட்டு பரிசோதகராக திருநங்கை நியமனம்

 திண்டுக்கல், பிப். 10- திருநங்கைகள் சமுதாயத்தில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கு போராடி வருகின்றனர். அதே நேரம் திருநங்கைகளுக்கு வேலை கிடைக்குமா? என்ற கேள்வியை தகர்த்து ஒரு சில திருநங்கைகள் திறமையால் சாதித்து வருகிறார் கள். சுயதொழில் மட்டுமின்றி ஒன்றிய, மாநில அரசு பணிகளிலும் திரு நங்கைகள் அசத்தி வருகின்றனர்.
அந்த வகையில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டுப் பரிசோதகராக திருநங்கை சிந்து 8.2.2024 அன்று பதவி ஏற்றார். இதன்மூலம் தெற்கு ரயில்வேயின் முதல் திருநங்கை பயணச்சீட்டுப் பரிசோதகர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

இதுதொடர்பாக திருநங்கை களுக்கு முன்னுதாரணமாக திகழும் சிந்து கூறுகையில், எனது சொந்த ஊர் நாகர்கோவில் ஆகும். நான் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் எர்ணா குளத்தில் ரயில்வே பணியில் சேர்ந் தேன். 14 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லுக்கு மாறுதலாகி வந் தேன். ரயில்வே மின்சாரப் பிரிவில் பணியாற்றினேன்.
இதற்கிடையே சிறு விபத்தில் எனக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மின்சாரப் பிரிவில் இருந்து வணிக பிரிவுக்கு மாற்றப் பட்டேன். பயணச்சீட்டுப் பரிசோ தகர் பயிற்சியை முடித்து, பதவி ஏற்றுள்ளேன். இது எனது வாழ் நாளில் மறக்க முடியாத நிகழ்வு ஆகும். திருநங்கைகள் மனம் தளர்ந்து விடக்கூடாது.
கல்வி, உழைப்பு மூலம் எந்த உயரத்தையும் எட்ட முடியும். அதை மனதில் கொண்டு திருநங் கைகள் முன்னேற வேண்டும் என்றார்.

சனி, 10 பிப்ரவரி, 2024

பெண்களுக்கு சம வாய்ப்பு-சம உரிமை-பொருளாதார மேம்பாடு உட்பட்ட புதிய மகளிர் கொள்கை


புதன், 24 ஜனவரி, 2024

புதிய பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடக்கம்


Published November 10, 2023

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.11.2023) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், புதிய பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட 7 இலட்சத்து 35 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்து அடையாளமாக ஆறு மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” தொடக்கம்!


விடுதலை நாளேடு,
Published July 24, 2023

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.7.2023) தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட”ப் பயனாளிகளின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைத்து, விண்ணப்பம் செய்ய வந்த மகளிருடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்கே.என். நேரு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் 

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வளர்ச்சி ஆணையர்,  முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம்,  தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி. சாந்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

(செய்தி விவரம்: 2 ஆம் பக்கம் காண்க)

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

பெண்களே, சட்டங்களை அறிந்து கொள்க!


9

வாழ்வூதியம் மற்றும் பராமரிப்புச் சட்டங்கள் ஏராளமாக இருந்த போதிலும், பெண்கள் வெறுங்கையுடன் இருக்கிறார் கள். மோசமான திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையைச் சந்திக்கப் போராடுகிறார்கள். ஏனெனில் இந்தச் சட்டங்கள் பெண்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பையும் வழங்க வில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஏப்ரல் 23, 1985இல், ஷா பானோ பேகம் என்ற ஒரு முஸ்லிம் பெண், தனது கணவரால் விவாகரத்து பெற்றவர்.

ஆனால் உச்ச நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு மூலம் வாழ்வூதிய உரிமையை பெற்றார். பாதிக்கப்பட்ட, விவா கரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண்ணுக்கு வாழ்வூதியம் அளித்து தீர்ப்பு வழங்கியது. இருப்பினும், இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று அன்றைய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப் பட்டது. சமூகத் தலைவர்கள் குர்ஆனில் இருந்து மேற்கோள் காட்டி, தீர்ப்பு இஸ்லாமிய சட்டத்திற்கு முரண்படுவதாகக் கூறினர்.

அன்றைய அரசாங்கம் பின்னர் முஸ்லிம் பெண்கள் (விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 1986அய் இயற்றியது. இது ஷிசிஇன் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்தது. விவாகரத்துக்கு 90 நாட்களுக்குப் பிறகு முஸ்லிம் விவாகரத்து பெற்றவர்களின் உரிமைகளை அவர்களின் மேனாள் கணவர்களிடமிருந்து கட்டுப்படுத்தியது. இந்த காலம் இஸ் லாமிய சட்டத்தில் இத்தா என்று அழைக்கப்படுகிறது. பல சர்ச்சைகளைத் தூண்டிய இந்தச் சட்டம், ஷா பானோவை வீட்டுப் பெயராக மாற்றியது.

பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பராமரிப்புக்கான கோரிக்கையை வடிவமைப்பதில் நீதிமன்றம் நியாயமாக இருக்கும் என்பது உத்தரவின் முக்கிய அம்சமாகும். வழங்கப் பட்ட நிரந்தர வாழ்வூதியத்தின் அளவு, வழக்குதாரர்களின் நிலை மற்றும் பராமரிப்பு செலுத்தும் வாழ்க்கைத் துணை களின் திறனுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்று நிரந்தர வாழ்வூதியம் செலுத்துவதற்கான அளவுகோல் விகிதத்தை நிர்ணயித்துள்ளது. கணவரின் நிகர வருமானத்தில் 25% வாழ்வூதியமாக நியாயமான மற்றும் சரியான தொகை என்று நீதிமன்றம் கூறியது. விவாகரத்து செய்யப்பட்ட மனைவியின் நிதிநிலை வாழ்வூதியத்தின் அளவை தீர்மானிக்கும் போது முக்கியமானதாக இருக்கும். எனவே, சவுத்ரிகள் வழக்கில் நீதிமன்றம் நிர்ணயித்த பெஞ்ச்மார்க் ரேட் இங்கே வேலை செய்யக்கூடும் என்று சட்ட ஆதாரம் கூறுகிறது.

பின்னர் நவம்பர் 2020இல், உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி, பிரிந்து செல்லும் மனைவிகள் மற்றும் குழந்தைகளுக்கு அவர்கள் நீதிமன்றத்தில் விண்ணப்பித்த நாளிலிருந்து கணவர்களிடமிருந்து வாழ்வூதியம் மற்றும் பராமரிப்புக்கு உரிமை உண்டு. நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா மற்றும் ஆர். சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கணவரால் பிரிந்து செல்லும் பெண்கள் மிகவும் நெருக்கடியான சூழ் நிலையில் இருப்பதாகவும், தங்களையும் தங்கள் குழந்தை களையும் பராமரிக்க வழியின்மையால் அவர்கள் பெரும் பாலும் ஏழ்மையான நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் கூறி யது. 67 பக்கத் தீர்ப்பில், குடும்ப நீதிமன்றங்கள், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் மற்றும் கீழ் நீதிமன்றங்கள் பின்பற்றுவதற்கான சீரான மற்றும் விரிவான வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.

இந்த நீதிமன்றங்கள் பராமரிப்பு மற்றும் வாழ்வூதியம் எவ்வாறு பார்க்கப்பட வேண்டும் என்பதற்கான ஒரு வடிவத்தை இது உருவாக்கியது. மகாராட்டிராவைச் சேர்ந்த பெண் ஒருவர், கணவரிடமிருந்து பிரிந்து, தனக்கும், மகனுக்கும் வாழ்வூதியம் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு பல மாதங்களாக இழுத்தடிக் கப்பட்டு வந்தது. பல பராமரிப்புச் சட்டங்கள் இருந்தபோதிலும், மோசமான திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையைச் சந்திக்க முடியாமல் பல ஆண்டுகளாக பெண்கள் வெறுங்கையுடன் உள்ளனர் என்று உச்ச நீதிமன்றம் கவனித்தது.

நீதிபதி மல்ஹோத்ரா தனது தீர்ப்பில், “விண்ணப்பம் செய்யப்பட்ட தேதியிலிருந்து பராமரிப்பு வழங்கப்பட வேண் டும் என்ற கருத்து, பிரிந்து செல்லும் மனைவி மற்றும் சார்ந் திருக்கும் குழந்தைகளை ஏழ்மை மற்றும் அலைச்சலில் இருந்து பாதுகாப்பதே பராமரிப்புச் சட்டங்களின் முதன்மை நோக்கம் என்ற நியாயத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. விண்ணப்பித்த நாளிலிருந்து பராமரிப்புப் பணம் செலுத்தப் படாவிட்டால், பராமரிப்புக் கோரும் தரப்பினர், விண்ணப் பத்தை நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட்ட நேரத்தின் காரணமாக, வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும்.

வாழ்வூதியம் செலுத்தும் பொறுப்பு நீதிமன்றங்களால் கணவர்களின் மீது தள்ளப்பட்டது. கணவன் தனது பிரிந்த மனைவிக்கு பணம் செலுத்தத் தவறினால், அவர் தனது சொத்துக்களை இணைத்தல் உட்பட சிவில் தடுப்புக்காவலில் அடைவார். மனைவியைப் பராமரிக்கும் தார்மீகக் கடமையி லிருந்து கணவன் விடுபட முடியாது என்று நீதிமன்ற உத்தரவு தெளிவாக இருந்தது. அவர் திறமையானவராகவும் கல்வித் தகுதி பெற்றவராகவும் இருந்தால், தனக்கு வருமான ஆதாரம் இல்லை என்ற கணவரின் வேண்டுகோள், அவருக்கு பரா மரிப்பு வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும். குழந்தை களின் கல்விச் செலவுகளை பொதுவாக தந்தையே ஏற்க வேண்டும்.

ஆனால், மனைவி வேலை செய்து போதுமான வரு மானம் ஈட்டினால், செலவுகளை இரு தரப்பினரும் விகிதாச் சாரப்படி பகிர்ந்து கொள்ளலாம் என்று நீதிபதி மல்ஹோத்ரா குறிப்பிட்டார். சமகால சமூகத்தில் திருமணங்கள் ஒரு நியாய மான காலத்திற்கு நீடிக்காது என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, கணவன் தனது மனைவிக்கு வாழ்நாள் முழுவதும் நிரந்தர வாழ்வூதியம் வழங்க உத்தரவிடுவது சமமாக இருக் காது என்றும் நீதிமன்றம் கவனித்தது.

எனவே, வாழ்வூதியம் வழங்கும்போது திருமண காலமும் பரிசீலிக்கப்படும். CrPCஇன் பிரிவு 125 பல ஆண்டுகளாக ஒன்றாக வாழும் இணையினரையும் உள்ளடக்கும் என்று தீர்ப்பு மீண்டும் வலியுறுத்தியது. நீதிமன்றத் தீர்ப்பின்படி, மேற்கூறிய பிரிவின் கீழ் பராமரிப்பு வழங்குவதற்கு திருமணத் திற்கான கண்டிப்பான ஆதாரம் முன் நிபந்தனையாக இருக்கக் கூடாது.

திங்கள், 29 மே, 2023

பெண்கள் பற்றி பார்ப்பனர்கள் பேச யோக்கியதை உண்டா?

  

கேள்வி: சோ அவர்கள் ஆசிரியராக இருந்தபோது, பெண்களுக்கு எதிரான கருத்துகளை துணிந்து சொல்லியும், எழுதியும் வந்தார். இந்த விஷயத்தில் தாங்கள் எப்படி?

6

பதில்: சோ பெண்களை எதிர்க்கவில்லை, இட ஒதுக்கீட்டைத் தான் எதிர்த்தார். அதுதான் இன்றும் நம் நிலை. பெண்களின் இடஒதுக்கீட்டை எதிர்க்க, எந்தப் பத்திரிகைக்கும் துணிவில்லை நாம் துணிவாக எதிர்க்கிறோம்.

- துக்ளக்கில் குருமூர்த்தி (29.3.2023)

பெண்களை எதிர்க்கவில்லை - பெண்கள் இட ஒதுக்கீட்டை ஏன் எதிர்க்க வேண்டும். ஆண்டாண்டுக் காலமாகக் கல்வி வாசனையின்றி அடுப்பங்கரைப் பிள்ளைப் பூச்சிகளாக அமுக்கப்பட்ட பெண்கள் படிப்பதற்கும், உத்தியோகங்களில் அடி எடுத்து வைப்ப தற்கும் இடஒதுக்கீட்டின் மூலம் வாய்ப்புக் கதவைத் திறந்து விட்டால், அக்கிரகாரத்தில் இழவு விழ வேண் டுமா?

காரணம் அவர்களின் மனுதர்மப் புத்தி! - வேலைக் குச் செல்லும் பெண்கள் ஒழுக்கம் குறைவானவர்கள் என்று சொன்னவர்தானே அவாளின் ஜெகத்குரு சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி.

Sankaracharya against quota for women in politics, virtually rejected for the demand for separate reservation for women (‘The Pioneer'. 17.3.1997).

பெண்களுக்கு இடஒதுக்கீடு கூடாது என்று சங்கராச்சாரியார் சொன்னார். அவாளின் சீடர்களான சோவும், குருமூர்த்தியும் அவரது காலைப் பூஜை செய்து அப்படியே அப்பட்டமாகத்தானே வழி மொழி வார்கள்.

விதவைப் பெண்கள் தரிசு நிலத்திற்கு ஒப்பான வர்கள் என்று சொன்னவரும் சாட்சாத் இதே சங்க ராச்சாரியார்தான்.

அதனைக் கண்டித்து காஞ்சி சங்கரமடம் முன் மறைந்த திருமகள் தலைமையிலும், மகளிர் அணி பொறுப்பாளர்களான புலிவலம் ராஜலட்சுமி மணியம், ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், கு.தங்கமணி முதலியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுண்டே! (9.3.1998).

சோவின் சீடரான திருவாளர் குருமூர்த்தி அய்யர் வாளின் யோக்கியதை தான் என்ன?

சென்னையில் தனியார் மருத்துவமனை 10ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட இவர் ‘இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30 சதவீதம் தான் உள்ளனர்' (செய்தி 25.8.2019) என்று பேசி பெண் களிடம் வசமாக வாங்கிக் கட்டிக் கொள்ளவில்லையா?

இவர்கள்தான் இப்பொழுது துணிந்து எழுது கிறார்கள்.

நாங்கள் பெண்களை எதிர்க்கவில்லை - பெண்களுக்கான இடஒதுக்கீட்டைத்தான் எதிர்க்கிறோம் என்று.

அதாவது உண்மையா? பெண்களை இவர்கள் எதிர்க்கவில்லையா?

பெண்களைப் பற்றி திருவாளர் சோ.ராமசாமி என்னென்ன வெல்லாம் எழுதினார்? 

மாதிரிக்கு இதோ எடுத்துக்காட்டுகள்:

மனுவாதி பக்கம் திரும்புக!

கேள்வி: பெண்களைப் பற்றி உங்களின் உண்மை யான அபிப்பிராயம் தான் என்ன?

பதில்: உயர்ந்தவர்கள். அப்படி இருக்க விருப்பம் இல்லாதவர்கள். (18.3.2009)

கேள்வி: பெண்களுக்கு சமஉரிமை என்றால் உங்களுக்கு ஏன் கசக்கிறது?

பதில்: யார் இப்படியெல்லாம் என்னைப் பற்றி புரளி கிளப்பி விடுகிறார்களோ, தெரியவில்லையே! பெண் களுக்குச் சம உரிமை தேவைதான். மாமியார், மருமகள் ஆகியோருக்குச் சம உரிமை வந்தால், அது வரவேற்கத் தக்கதுதான். (22.4.2009)

கேள்வி: பெண்களிடம் எதைக் கற்றுக் கொள்ள வேண்டும்?

பதில்: என்ன தவறு செய்தாலும், அந்தத் தவறை தான் செய்யாதது போலவும், மற்றவர்கள்தான் அதற்குக் காரணம் என்பது போலவும் நடந்து கொள்கிற திறமை, அதைக் கற்றுக் கொண்டால் ஆண்களும் கூட நிம்மதியாக இருக்கலாமே! (20.5.2009)

கேள்வி: மத்திய அமைச்சரவையில் பெண் அமைச் சராக தமிழகத்திலிருந்து ஒருவர் கூட நியமிக்கப் படவில்லையே?

பதில்: தப்பித் தவறி ஏதாவது நல்லது நடக்கிற மாதிரி தெரிந்தால் போதும் உங்களைப் போல் பலருக்கு ஆட்சேபம் வந்துவிடுகிறது. யார் கண்டது? உங்கள் குறை தீராது என்று சொல்லிவிட முடியுமா என்ன? குடும்பத்தில் சமநீதி காண்பதற்கு வழி பிறந்தால், உங்கள் குறை நீங்கிவிடலாமே! (17.6.2009)

கேள்வி: மக்களவையில் மகளிருக்காக இட ஒதுக் கீடு மசோதா நூறு நாள்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று குடியரசுத் தலைவர் தனது உரையில் கூறி யுள்ளாரே?

பதில்: சில தண்டனைகள் சொன்னபடி நடப்ப தில்லை. அஃப்ஸல் தூக்குத் தண்டனை அப்படியே பெண்டிங் ஆக இருக்கிறதே? அந்த மாதிரி இதுவும் தொங்கலில் விடப்பட்டால்தான் உண்டு. (24.6.2009)

கேள்வி: மக்களவை சபாநாயகர் பெண் என்றால் இனி அமளியின்றி சபை நடைபெறுமா?

பதில்: ஒரு வீட்டில் பெண்கள் அதிகாரம் ஓங்கி இருந்தால், அந்த வீட்டில் அமளி, துமளி இல்லாமல் போய்விடுமா? அந்த மாதிரிதான் இதுவும். (1.7.2009)

கேள்வி: இந்தியாவில் உள்ள 617 ஹைகோர்ட் நீதிபதிகளில் 45 பேர்தான் பெண் நீதிபதிகளாக உள்ளனர். மேலும் 6 ஹைகோர்ட் நீதிபதிகளில் ஒரு பெண் நீதிபதி கூட இல்லை. அதே போல் சுப்ரீம் கோர்ட்டிலும் ஒரு பெண் நீதிபதி கூட இல்லை. (டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3.8.2009) இது குறித்து தங்கள் கருத்து என்ன? 

பதில்: நாடு சுதந்திரம் அடைந்தபோதும், அதைத் தொடர்ந்து சில வருடங்களிலும் பெண் நீதிபதிகளே இருந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். இப்பொழுது 45, 61 என்றெல்லாம் கணக்கு வருகிறது. சரி, சுதந்திரம் அடைந்தபோதும், அதைத் தொடர்ந்து சில ஆண்டுகளிலும், நீதித் துறையிடம் மக்களுக்கு இருந்த நம்பிக்கை இப்பொழுது இருக்கிறதா? நீதித் துறையில் பெண்களின் எண்ணிக்கை வளர்ந்து என்ன முன்னேற்றம் காணப் பட்டது? அந்த எண்ணிக்கையை அதிகமாக்குவதால், மேலும் என்ன முன்னேற்றம் வந்து விடும்? (2.9.2009)

கேள்வி: பெண்கள் சிறப்பு ரயில் திட்டம் பெண்கள் இட ஒதுக்கீட்டுக்கான அச்சாரம் என்று ப.சிதம்பரம் கூறுகிறாரே?

பதில்: அப்படியானால் சிறப்பு ரயில் ஓட்டாமலேயே, இத்தனை காலமாக பெண்கள் பலர் எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளைப் பெற்றிருக்கிறார்களே, அதெல்லாம் என்ன? கள்ளப் பயணம் மாதிரி, அதுவும் கள்ளப் பதவிகளா? (2.9.2009)

கேள்வி: பெண்களால் ரகசியத்தைக் காப்பாற்றவே முடியாது என்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளதே?

பதில்: பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே, மஹாபாரதத்தில், இது மிகத் தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது. அது ஆண் ஆதிக்கத் தீர்ப்பு; இன்று சொல்லப்பட்டிருப்பது, ஆராய்ச்சியின் முடிவு. அதை ஏற்காதவன் மூடநம்பிக்கையில் உழல்பவன். (14.10.2009)

கேள்வி: பெண்கள் நாட்டின் கண்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில்: இருக்கலாம். அந்தக் கண்களின் பார்வை யைச் சரி செய்கிற மூக்குக் கண்ணாடிகள்தான் ஆண் கள் என்பதும் சரியாக இருக்கலாமே! (4.11.2009)

கேள்வி: கருநாடகாவில், ஷோபாவின் அமைச்சர் பதவி தியாகத்தாலும், பா.ஜ.க. மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் செய்து வைத்த சமரசத்தாலும் கருநாடக பா.ஜ.க. அமைச்சரவையின் சிக்கல் தீர்ந்துள்ளதே? பெண்களின் பெருமை இப்போதாவது தங்களுக்குப் புரிந்திருக்குமே?

பதில்: புரிகிறதே! ஒரு பெண்மணி தன் பதவியை விட்டு விலகுவதாலும், மற்றொரு பெண்மணி தனக்கு எந்தப் பதவியையும் நாடாமல் சமரசம் தேடியதாலும் பிரச்சினை தீர்ந்திருக்கிறது. அதாவது பெண்களில் பதவியை நாடாமல் இருக்கிற வரை பிரச்சினைகள் தீர வழியுண்டு. இதைத்தானே நீங்கள் சுட்டிக் காட்டு கிறீர்கள். புரிகிறது. (21.2.2009)

மேற்கண்ட கேள்வி பதில்கள் எல்லாம் இடம் பெற்ற பத்திரிகை எதுவாக இருக்க முடியும்?

21 ஆம் நூற்றாண்டின் மனுவின் தத்துப் புத்திரனாக இருக்கக்கூடிய திருவாளர் சோ ராமசாமியின் துக்ளக் கில் எழுதப்பட்டவைதான் இவை.

இவை ஒவ்வொன்றிற்கும் தனியே பதவுரை, பொழிப்புரை, கருத்துரை தேவைப்படாது.

பட்டப்பகலில் சூரியனுக்கு விலாசமா தேவை?

பார்ப்பனர்களா?

பழைய காலமெல்லாம் மாறிவிட்டது

இன்றைக்கு எவ்வளவோ மாற்றம்

எவன் அவுட்டுத்திரி வைத்திருக்கிறான்?

எவன் பஞ்சகச்சம் வைத்துக் கட்டுகிறான்?

காலமாற்றம் அவர்களையும் விட்டு வைக்கவில்லை என்று அவாளுக்காக வக்காலத்து வாங்கும் ஆசாமிகள் நம்மவாளிடத்திலே உண்டு.

மாற்றமா? அது வெளிப்புறத்தில்தான்.

தோற்றத்திலும் மாற்றம் இருக்கிறது. மறுக்கவில்லை.

ஆனால் உள்ளத்தில் மாற்றம் உண்டா? எண்ணத் தில் ஏற்பட்டுவிட்டதா மாற்றம்? சிந்தனையில் சிறிதா வது முன்னேற்றம் உண்டா என்றால் இல்லை - இல்லவே இல்லை என்பதற்கு ஆணி அடித்தாற் போன்ற எடுத்துக் காட்டுதான் மேலே எடுத்துக் காட்டப் பட்டவை.

எந்த ஓர் இடத்திலாவது பெண்கள் என்றால் அவர் களுக்கு மனிதக் கூறுதான் என்று ஏற்றுக் கொள்ள இடம் இருக்கிறதா?

பெண்கள் உயர்ந்தவர்கள்தானாம். ஆனால் இப்படி இருக்க விருப்பம் இல்லாதவர்களாம்.

உயர்ந்தவர்களாக இருக்க விருப்பம் இல்லாதவர்கள் எப்படி உயர்ந்தவர்களாக இருக்க முடியும்?

இப்படி ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் அந்தர் பல்டி அடிக்கும் ஆசாமிகள்தான் அவாள் அகராதியில் அறிவாளியோ அறிவாளி!

ஒரு முறை பின்பொறியால் சிரித்துத் தொலையுங்கள்.

இதில் ஒரு வெட்கக்கேடு என்ன தெரியுமா?

இவ்வளவு இழிவாகப் பெண்களை இந்தப் பார்ப்பான் விமர்சித்திருந்தாலும், கொச்சைப் படுத்திக் கூவினாலும், முற்போக்கு முத்திரை குத்தி அலையும் எந்தப் பெண்கள் அமைப்பும் அது பற்றியெல்லாம் மூச்சு விடுவதில்லை. ஒரு கண்டன அறிக்கைகூட கொடுப்பதில்லை.

திராவிடர் கழகம்தான் தீயாக எழவேண்டும். விடுதலைதான் வேங்கைப் புலியாக பாயவேண்டும்.

எழுத்துக்கு எழுத்து செம்மையாகக் கொடுக்கும் சாட்டை பெரியார் திடலில்தான் இருக்கிறது. கருஞ்சட்டைக்காரரின் கையில்தான் அது சுழன்று கொண்டே இருக்கிறது.

பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு பற்றிய பிரச்சினையில் இருவேறு கருத்துகள் உண்டு. ஒன்று உள் ஒதுக்கீடு இல்லாத இட ஒதுக்கீடு; இன்னொன்று உள்ஒதுக்கீடு இருந்தே தீரவேண்டும் என்கிற வற்புறுத்தல்.

மூன்றாவது ஒரு கூட்டம் இருக்கிறது. அதுதான் சோ போன்ற மனுதர்ம மலத்தை மடியில் கட்டிக் கொண்டு அலையும் கூட்டம்.

தினமணி என்ற பெயர் இருக்கும்; இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற நாமம் இருக்கும்; கோயங்கா வீட்டுக் கணக்கப் பிள்ளையான குருமூர்த்தி வடிவத்திலும் இருக்கும்.

பெண்களுக்கு இடஒதுக்கீடு கூடவே கூடாதாம். அது வீண் வேலையாம். இந்தச் சட்டம் வருவதால் பெண்களுக்குப் புதிதாக ஆகப் போவது ஒன்றும் கிடையாதாம்; வெறும் கண்துடைப்புதானாம்.

பெண்கள் மீதான அக்கறை காரணமாகச் சொல்லப் படுவதா இவை? அல்ல, அல்ல. பெண்கள் மீதான வக்கிரக் குணத்துடன் வடிகட்டி எழுதப்படும் வருணா சிரமவாதிகளின் குமட்டல்கள் இவை.

டெக்கான் கிரானிக்கல் (9.3.2010) ஆங்கில நாளேட் டில் (பக்கம் 2 இல்) திருவாளர் சோ ராமசாமியின் பேட்டி வெளிவந்துள்ளது.

அப்பட்டமான மனுதர்மத்தின் அசல் அக்மார்க் முத்திரையுடன் கருத்துச் சொல்லியிருக்கிறார்.

"சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும் பெண் களுக்கான சட்டங்களை இயற்றவில்லையா? பின் எதற்காக பெண்களுக்கென்று தனி ஒதுக்கீடு? அதனால் என்ன பலன் ஏற்பட்டு விடப் போகிறது?

பெண்களுக்கான தொகுதிகள் ஒதுக்கப் பட்டால் அந்த இடத்தில் யார் நிறுத்தி வைக்கப்படுவார்கள்? ஏற்கெனவே சட்ட மற்ற உறுப்பினர்களாக, நாடாளு மன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களின் மனைவிமார் களோ மகள்களோதான் நிறுத்தி வைக்கப்படுவார்கள்?

தேர்ந்தெடுக்கப்படும் இந்தப் பெண்கள் ஆண் களின் பினாமியாகத் தானிருப்பார்கள்" என்று மூக்கால் அழுகிறார்.

உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட பொழுதும் இதே கூட்டம் இந்த வகையில்தான் மண்ணை வாரி இறைத்தது.

உள்ளாட்சிகளில் பெண்கள் போய் உட்கார்ந்ததால் என்ன கெட்டுப் போய்விட்டது? எதில் தோல்வி அடைந்துவிட்டார்கள்?

வாய்ப்புக் கொடுப்பதற்கு முன்பே வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்வது ஆற்றாமையின் வெளிப்பாடு. மனுதர்ம குயுக்தியின் கோணல் புத்தி!

543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் குறைந்த பட்சம் 181 பெண்கள் வீற்றிருக்கப் போகிறார் களே - பொறுக்குமா இந்தப் பூதேவர்களுக்கு? வீங்கி வெடித்திட மாட்டார்களா?

தங்கள் உரிமைகளுக்காக இன்னொருவரிடம் கையேந்தி நின்ற காலத்திற்குக் கல்தா கொடுக்கப் பட்டுவிட்டதே!

ஆண்களுக்கு உள்ள ஒவ்வொரு உரிமையும் தங்களுக்கும் வேண்டும் என்று ஓங்கிக்குரல் கொடுப் பார்களே - அது இன்னொரு வகையில் இந்த ஈரோட்டுக் கிழவனாரின் கொள்கைக்கு அல்லவா வெற்றியாக முடியும்?

தமிழ்நாட்டில் ஒளி வீசிய பெரியார் சரக்கு டில்லிப் பட்டணம் வரை அம்பலம் ஏறிவிட்டதே என்ற ஆத்திரத்தில் அம்மிக் குழவியை எடுத்து வயிற்றில் குத்திக் கொள்கிறது சோ கூட்டம்.

33 சதவிகிதத்துக்காகப் போராடும் பெண்களின் கவனம் இந்த மனுவாதிகளின் பக்கமும் திரும்பும் நாள் எந்நாளோ!