வியாழன், 7 அக்டோபர், 2021

கடினமான காலத்தில் உதவிய லாரி ஓட்டுநர்களுக்கு ஒலிம்பிக் மங்கை மீராபாய் சானு நன்றி

 

பளுதூக்குதல்தான் தன்னுடைய எதிர்காலம் என மீரா பாய் சானு முடிவு செய்தாலும் பயிற்சியை விட அதற்காக அவர் மேற்கொள்ளும் பயணம் மிகவும் சிரமத்தை கொடுத்துள்ளது.

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான  49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே வீராங்கனையான மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

 ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளி வென்ற முதல் வீராங்கனை என்கிற பெருமையையும் மீராபாய் சானு பெற்றுள்ளார்.

 வறுமையின் பிடியில் வாழ்க்கையை ஓட்டிய  குடும்பத்தில் பிறந்து இன்று வரலாற்றில் முத்திரை பதித்துள்ளார்.

மீராபாய் சானு மணிப்பூர் மாநிலம் இம்பால் பகுதியில் உள்ள நோங்போங் கக்சிங் கிராமத்தில் பிறந்தவர்மீரா பாய் சானுதான் வீட்டில் கடைக்குட்டிசிறுவயது முதலே பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்துள்ளார்விறகுகளை வெட்டி அவற்றை சுமந்து வந்து வறுமையை போக்க வேண்டிய சூழலில்தான் வளர்ந்தார்.

பள்ளிப்படிப்பும் மிகவும் சிரமத்துடனே படித்து வந்தார்பளுதூக்குதல்தான் தன்னுடைய எதிர்காலம் என மீரா பாய் சானு முடிவு செய்தாலும் பயிற்சியை விட அதற்காக அவர் மேற்கொள்ளும் பயணம் மிகவும் சிரமத்தை கொடுத்துள்ளதுஇவரது கிராமத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பயிற்சி மய்யத்துக்கு செல்வது பெரும் சவாலாக இருந்துள்ளதுபோக்குவரத்து வசதியும் கிடையாது.  தடைகளை எல்லாம் படிகளாய் மாற்றி தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருந்தார்.

தனது கிராமத்தின் வழியே இம்பால் நகருக்கு மணல் ஏற்றிக்கொண்டு செல்லும் லாரிகளில் உதவி  கேட்டு பயணித்துள்ளார்இந்த லாரி ஓட்டுநர்களும் பல ஆண்டுகளாக மீரா பாய் சானுவை இலவசமாக ஏற்றி சென்று உள்ளனர்ஓட்டுநர்களின்  உதவியால் தடையின்றி தனது பயிற்சியை தொடர்ந்துள்ளார்ஓட்டுநர்கள் அளித்த இலவச பயணத்தால் அவருக்கு போக்குவரத்துக்கான செலவு மிச்சமானதுஅந்தப்பணத்தின் மூலம் தனது உணவை பார்த்துக்கொண்டார்டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீரா பாய் சானு தனக்கு உதவிய அந்த லாரி ஓட்டுநர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

லாரி ஓட்டுநர்கள்கிளீனர்கள் என 150 பேரை தனது வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்து உள்ளார்அவர்களுக்கு சட்டை ஆடை உள்பட பல  பரிசளித்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்இதுகுறித்து  மீரா பாய் சானு கூறியதாவது:-

வீட்டிலிருந்து பயிற்சி மய்யத்துக்குச் செல்ல எனக்கு வழக்கமாக உதவி வழங்கிய லாரி ஓட்டுநர்களை பார்க்கவும் அவர்களின் ஆசியை பெறவும் விரும்பினேன்என் கடினமான காலங்களில் அவர்கள் எனக்கு மிகவும் உதவினார்கள்மணல் ஏற்றிச்செல்லும் லாரிகளை தேடிக் கொண்டிருக்கிறேன்அவர்களுக்கு இப்போது என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கிறேன்இந்த பயணத்தில் எனக்கு உதவிய அனைவரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து நன்றியை தெரிவிக்க முயற்சிக்கிறேன் என உணர்ச்சிப்பொங்க பேசினார்.

ஒலிம்பிக் 2021: உலகம் வியந்த திறமைப் பெண்கள்

 

விளையாட்டுத் துறையில் பெண்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததுகாரணம் உடல் வலுவீரம்உறுதிதுணிச்சல் என்று ஆண்களுக்கான குணங்களாக வரையறைக்கப்பட்டவை எல்லாமே விளையாட்டுடன் நேரடி தொடர்பில் இருப்பவைஅப்படியொரு துறையில் பெண்கள் கால்பதிக்கிறபோதுஇருவிதமான கற்பிதங்கள் உடையும்மேலே குறிப்பிட்டவை பெண்களுக்கும் பொதுவானவை என்பதை உணர்த்துவதுடன் ஆண்களுக்கான குணங்கள் என்று இந்தச் சமூகம் வரையறைத்து வைத்திருக்கும் குணங்கள் மீதான கேள்வியையும் எழுப்பக்கூடும்.டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளை அப்படியொரு முக்கியச் செயல்பாட்டுக்காகக் கொண்டாட வேண்டும். 1896இல் ஏதென்ஸ் நகரில் முதன்முதலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஒரேயொரு பெண்கூட இல்லாத நிலையில் 2020ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கில் 49 சதவீதப் பெண்கள் பங்கேற்று பாலினச் சமத்துவத்தை நெருங்கிவிட்டனர்ஒவ்வொரு போட்டியிலும் ஒரு வீராங்கனையாவது இருக்க வேண்டும் என்று பன்னாட்டு ஒலிம்பிக் கழகம் வலியுறுத்தியுள்ளதுஅதற்கேற்பபெண்கள் அதிக அளவில் பங்கேற்கும் வகையில் போட்டிகளையும்ஆண்களும் பெண்களும் இணைந்து பங்கேற்கும் கலப்புப் போட்டிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

 முதல் பதக்கம்

 2020 ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்று பெண்களுக்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுஅவரைத் தொடர்ந்து குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா அடுத்த பதக்கத்தை உறுதிபடுத்தினார்இந்தப் பிரிவில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மூன்றாம் இந்தியர் இவர்வட்டு எறிதலில் கமல்பிரீத் கவுர்இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்இந்தப் பிரிவில் இறுதிச் சுற்றை எட்டிய முதல் இந்தியர் இவர்.இந்திய ஆக்கி அணியின் வந்தனா கட்டாரியாதென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் மூன்று கோல்களை எடுத்து ஆட்ரிக் அடித்தார்ஒலிம்பிக் ஆக்கிப் போட்டியில் ஆட்ரிக் அடித்த முதல் இந்திய வீராங்கனை வந்தனா.வரலாற்று வெற்றி தன் நாட்டுக்கான முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்று பன்னாட்டு கவனத்தைப் பெற்றிருக்கிறார் பிலிப்பைன்ஸ் நாட்டின் பளுதூக்கும் வீராங்கனை ஹிடில்யன் டியாஸ். 30 வயதாகும் இவர் பங்குபெறும் நான்காம் ஒலிம்பிக் இதுமூன்று போட்டிகளின் அழுத்தத்தால் நம்பிக்கை தகர்ந்துபோயிருந்த இவர்இந்தப் போட்டியோடு ஓய்வுபெற நினைத்திருந்தார்அதற்கு முன் தன் திறமையை நிரூபித்துவிடும் உறுதியோடு பங்கேற்றவர்தங்கம் வென்று வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.அட்லாண்டிக் பெருங்கடலின் மய்யத்தில் இருக்கும் தீவுக்கூட்டங்களில் பெர்முடாவும் ஒன்றுஅதைப் போன்ற சிறு நாட்டிலிருந்து ஒலிம்பிக்கில் பங்கேற்பதே அசாத்திய சாதனைஅதிலும் அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறார் ஃப்ளோரா டஃப்பிடிரையத்லான் வீராங்கனை யான இவர்பெர்முடா சார்பாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற இருவரில் ஒருவர்.33 வயதாகும் இவர்முழங்காலிலும் காலிலும் பல்வேறு காயங்களால் அவதிப்பட்டுவந்தார்வெற்றிக் கோட்டைத் தொடும் ஓட்டத்தில் காயமெல்லாம் பொருட்டல்ல என்பதைத் தான் வென்ற தங்கப் பதக்கத்தின் மூலம் நிரூபித்துள்ளார் ஃப்ளோரா.பெர்முடாவின் முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்த பெருமையும் இவருக்குத்தான்.

இந்திய மகளிர் ஆக்கி அணிக்கு முதலமைச்சர் வாழ்த்து

 

சென்னைஆக.7-  இந்திய மகளிர் ஆக்கி அணி பதக்கத்தை வெல்லும் அளவிற்கு செயல்திறனை வெளிப்படுத்தினர் என்று முதலமைச்சர் மு..ஸ்டாலின் கூறியுள்ளார்.

32ஆவது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன.  இதில்நேற்று  (6.8.2021) நடைபெற்ற ஒலிம்பிக் மகளிர் ஆக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி இறுதிவரை போராடி இங்கிலாந்து அணியிடம் 4-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்துள்ளது.

இந்தியா 3 கோல்கள் அடித்த நிலையில்இங்கிலாந்து 4 கோல் அடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளதுஇப்போட்டியில் முதல் பாதியில் இந்தியா முன்னிலை பெற்று வந்த நிலையில்இரண்டாம் பாதியில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்ஒலிம்பிக் ஆக்கிப் போட்டியில் இந்தி யாவை முதன்முறையாக அரையிறுதி வரை கொண்டு சென்றதற்கு வாழ்த்துகள் என்று முதலமைச்சர் மு..ஸ்டா லின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில்ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஆக்கி அணியினரின் ஆட்டம் பதக்கம் பெற்ற பிறரின் முயற்சிகளுக்கு சற்றும் குறைவில்லாததுஇந்திய மகளிர் ஆக்கி அணி பதக்கத்தை வெல்லும் அளவிற்கு செயல்திறனை வெளிப் படுத்தினர்ஒலிம்பிக் ஆக்கி போட்டியில் இந்தியாவை முதன்முறை யாக அரையிறுதி வரை கொண்டு சென்றதற்கு வாழ்த்துகள்என்று கூறியுள்ளார்.

அனைத்துக் கல்லூரிகளிலும்

ஆகஸ்ட் 9 முதல் இணைய வகுப்புகள்

உயர்கல்வித்துறை உத்தரவு

சென்னைஆக.7 அனைத்து கல்லூரிகளிலும் 9ஆம் தேதி முதல் இணைய வகுப்புகளை தொடங்க உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கு இணைய வழியில் பருவத் தேர்வுகள் நடத்தப்பட்டுவருகின்றனதற் போது கரோனா பரவல் தணிந்துள்ள நிலையில் கல்லூரி களை திறப்பது தொடர்பாக உயர்கல்வித் துறை ஆலோ சனை செய்துவருகிறது.

இந்தநிலையில்அனைத்து கல்லூரிகளிலும் 2021-2022 கல்வியாண்டுக்கான இணைய வகுப்புகளை வரும் 9ஆம் தேதி முதல் தொடங்க உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அனைத்து பேராசிரியர்கள்பணியாளர் 9ஆம் தேதி முதல் கல்லூரிகளுக்கு நேரில் வருகை தரவும் உத்தர விடப்பட்டுள்ளது.

பொறியியல்கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வருகிற 9ஆம் தேதி முதல் இணைய வகுப்புகள் தொடங் கப்படும் என்று அமைச்சர் .பொன்முடி தெரிவித்தார்.

ஒலிம்பிக் 2021: முதல் இந்திய படகோட்டி

 

பரவலாக அறியப்படாத விளையாட்டைத் தேர்ந்தெடுப்பதற்குத் துணிச்சல் வேண்டும் என்றால்அதில் அடையாளம் கிடைக்க ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டும் என்பது சவாலானதுஇந்த இரண்டையும் ஏற்றுக்கொண்டதால்தான் இன்று உலக அரங்கில் இந்தியாவின் அடையாளங்களுள் ஒருவராக மாறியிருக்கிறார் நேத்ரா குமணன்சாகச விளையாட்டுகளாக அறியப்படுபவை எல்லாமே ஆண்களுக்குத்தான் கைவரும் என்கிற நினைப்பைத் தங்கள் திறமையால் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றியமைத்தபடியே இருக்கிறார்கள் பெண்கள்நேத்ராவும் அப்படித்தான்கடலில் சறுக்கிச் செல்லும் பாய்மரப் படகோட்டும் வீராங்கனையான இவர்டோக்கியோவில் ஜூலை 23 முதல் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவிருக்கிறார்இதன் மூலம்இந்தப் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்தியப் பெண் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார்.

சென்னையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இவரது கனவு விளையாட்டல்ல இதுபள்ளி நாட்களின் கோடை விடுமுறைகளில் ஒவ்வோர் ஆண்டும் ஏதாவது ஒரு பயிற்சி வகுப்பில் மகளைச் சேர்த்துவிடுவாராம் நேத்ராவின் அம்மாடென்னிஸ்சைக்கிள் ஓட்டுவதுகூடைப் பந்துபரதநாட்டியம் என்று பலவற்றையும் முயன்றவரது மனம் பாய்மரப் படகுப் போட்டியில் நிலைகொண்டுவிட்டதுஅதுதான் தான் செல்ல வேண்டிய பாதை என்பதை முடிவெடுத்து அதில் முழு மூச்சுடன் இறங்கிவிட்டார்தொடர்ச்சியான பயிற்சிகள் மூலம் தன்னை அந்த விளையாட்டுக்கு முழுமையாக ஒப்புக்கொடுத்தார் நேத்ரா. 2014, 2018ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்றார்அவற்றில் வாகை சூடாத மனக்குறையை 2020ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று நிவர்த்திசெய்தார்பாய்மரப் படகுப் போட்டியில் உலகக் கோப்பை வென்ற முதல் இந்தியப் பெண்ணும் இவர்தான்.

மனத்துக்கும் பயிற்சி

ஒலிம்பிக் போட்டிகளில் வெல்வதுதான் விளையாட்டுத் துறையில் ஈடுபடுகிறவர்களின் அதிகபட்ச இலக்காக இருக்கும்நேத்ராவும் அந்த இலக்கை நோக்கிச் செல்வதற்கான தகுதியைப் பெற்றுவிட்டார்ஒலிம்பிக் போட்டியில் இரண்டு முறை பதக்கம் வென்ற ஹங்கேரிப் பயிற்சியாளர் தாமஸ் எசெஷ் என்பவரிடம் பயிற்சிபெற்றுவரும் நேத்ரா.ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகக் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து பயிற்சிபெற்றுவரும் தனக்குக் கிடைத்த அங்கீகாரமாகத்தான் ஒலிம்பிக் நுழைவைப் பார்க்கிறார்.

கரோனா ஊரடங்கால் கல்லூரி வகுப்புகள் ஆன்லைனில் நடந்ததால் ஒரு பக்கம் படிப்பும் மறுபக்கம் பயிற்சியுமாக இருந்திருக்கிறார்லேசர் ரேடியல் எனப்படும் தனிநபர் பாய்மரப் படகோட்டும் பிரிவில் பங்கேற்கவிருக்கிறார் நேத்ராபெருங்கடலில் சீறிப்பாயும் அலைகளுக்கு நடுவே தனியாகப் படகோட்டிச் செல்வது மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அதைக் கையாள்வதற்கும் சேர்த்தே பயிற்சி தரப்படுகிறதுநேத்ராவின் முதல் ஒலிம்பிக் போட்டி இது என்பதால் அவருக்கு மட்டுமல்லஅனைவருக்குமே அவர் பதக்கம் வெல்ல வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.