1925 இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் மனைவி, பெண் குழந்தைகளுக்கு சொத்து உரிமை வழங்கப்பட்டது.
1929 குழந்தை திருமணத் தடைச் சட்டம் இயற்றப்பட்டது.
1955 திருமணச் சட்டப்படி பெண்களின் திருமண வயது 17 வயதாக அறிவிக்கப்பட்டு, தற்பொழுது 21 வயதாக உயர்த்தப்பட்டு பின்பற்றப் படுகின்றது.
1956 வாரிசுரிமைச் சட்டம், பெற்றோர்களின் சொத்துக்களையடைய பெண்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
1956 விதவைகள் மறுமணச் சட்டம், விதவைகள் மறுமணத்தை அங்கீகரிகத்து சட்டம்.
1961 மகப்பேறு நலச்சட்டம் - மகப்பேறு காலத்தில் பெண்கள் விடுப்பு எடுக்கவும் அக்காலத்தில் ஊதியம் பெறவும் உறுதி செய்யப்பட்டது.
1961 வரதட்சணை ஒழிப்புச் சட்டம் (1984 இல் திருத்தப்பட்டது). வரதட்சணை வாங்குபவர்களுக்கு சிறைத் தண்டணை.
1986 பெண்களை அநாகரிகமாகக் காட்டுவதை தடை செய்யும் சட்டம்.
1989 வாரிசுரிமைச் சட்டம் - பெண்களுக்குப் பரம்பரை சொத்தில் சமபங்குரிமை.
1990 பெண்களுக்கான தேசிய ஆணையம்.
1994 குழந்தை பிறப்புக்கு முன் பாலியல் பகுப்பாய்வு நுட்பங்கள் சட்டம் - பெண் சிசுவை கருவிலே அழிப்பதை தடுப்பதற்கு சட்டம்
2005 குடும்ப வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு சட்டம்.
2013 பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, தடை, தீர்வு சட்டம்.
-விடுதலை,22.8.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக