கொச்சி, டிச.3 இந்திய கடற்படை யில் பயிற்சியை முடித்து விமானி களாக 2 பெண்கள் தேர்வு செய்யப்பட் டுள்ளனர்.
பிரதிபா சிங் மற்றும் ஷிவாங்கி சிங் ஆகியோர் சமீபத்தில் விமானி களாக பயிற்சிகளை முடித்து சான்றிதழையும் பெற்றுள்ளனர். இவர்கள் இருவருக்கும் இந்தியா முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
மேலும், இந்த 2 பெண்களும் விமானிகளாக இணைந்துள்ளது, இந்திய கடற்படைக்கே பெருமையை சேர்த்துள்ளது என்று சச்சின் டெண்டுல்கரும் தனது சுட்டுரையில் பிரதிபா சிங் மற்றும் ஷிவாங்கி சிங் ஆகியோருக்கு பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் ஷிவாங்கி நேற்று கேரள மாநிலம் கொச்சி கடற்படையில் தனது பணியை தொடங்கினார்.
இதன் மூலம் இந்திய கடற்படையில் இணைந்த முதல் பெண் விமானி என்ற பெயரையும் அவர் தட்டிச்சென்றார்.
ஷிவாங்கி பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்தவர். நாளை (புதன்கிழமை) இந்தியாவின் கடற்படை தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்திய கடற்படையில் முதல் பெண் விமானியாக ஷிவாங்கி பணியை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- விடுதலை நாளேடு 3 12 19