வெள்ளி, 14 அக்டோபர், 2022

உலகிற்கு தடுப்பூசி தந்த பெண்கள்!

 

பெண்ணால் முடியும்! : உலகிற்கு தடுப்பூசி தந்த பெண்கள்!

செப்டம்பர் 1-15,2021

தகவல் : சந்தோஷ்

கொரோனா ஒன்றாவது அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை என மனித குலத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்-கிறது. இந்த நிலையில் தடுப்பூசி போட்டுக்-கொண்டவர்கள் தப்பித்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை, மக்களிடையே உருவாகி இருக்கிறது. குறுகிய காலத்தில் ஒரு நோய்த் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது என்பது மருத்துவ உலக வரலாற்றில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தத் தடுப்பூசிகளைக் கண்டு-பிடிப்பதற்கு உழைத்த விஞ்ஞானிகள் யார் யார் என்பதை கொஞ்சம் அறிவோம்.

‘கோவிஷீல்டு’ என்ற தடுப்பூசிக்கு அதைக் கண்டறிந்த விஞ்ஞானக் குழுவிற்கு தலைமை தாங்கி வழிநடத்தியவர் ‘சாரா கில்பர்ட்’ என்ற பெண் விஞ்ஞானி. அவருடைய பங்கு இதில் மிகவும் முக்கியமானது. ‘கோவேக்சின்’ இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி-யாகும். விஞ்ஞானிகள் குழுவிற்கு தலைமை-யேற்று வளர்த்தெடுப்பதில் பெரும் பங்காற்றியவர் ‘சுமதி’ என்ற பெண் விஞ்ஞானி.

 

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரித்த ‘‘ஜேன்சன்’ (Janssen) என்ற தடுப்பூசியைத் தயாரிப்பதில் மிக முக்கிய பங்காற்றியவர் டச்சு நாட்டைச் சேர்ந்த ‘Elena smolyarchuk’ என்னும் பெண் விஞ்ஞானி. இந்தத் தடுப்பூசிதான் ஏனைய தடுப்பூசிகளைவிட சக்தி வாய்ந்தது என்று இப்போது உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்தத் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு அடிப்படையான ஓர் ஆய்வை நடத்தியதும் ஒரு பெண் என்பதுதான் இதில் மிகவும் முக்கியமானது. அவரது பெயர் ‘கேட்டலின் கேரிகோ’. ஹங்கேரியில் பிறந்து தற்போது அமெரிக்காவில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார்.

நோய்த் தொற்றுகளைக் கண்டுபிடிப்பது தொடர்பான ஆராய்ச்சிகளில் அவர் 22 ஆண்டுகளாக தன்னை ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார். அவர் கண்டுபிடித்த ஒரு மகத்தான மருத்துவப் புரட்சிதான் mRNA என்ற புதிய நுட்பவியல் ஆகும். இதை அவர் கண்டுபிடித்ததன் வழியாகத்தான் இன்றைக்கு இந்த நோய்களில் இருந்து தடுக்கின்ற தடுப்பு ஊசிகளையும் கண்டுபிடிக்க முடிந்தது என்பது மிகவும் அடிப்படையான ஒரு செய்தி ஆகும். உலகத்தில் இதற்கு முன் mRNA என்ற மருத்துவ நுட்பவியலை இதுவரை கற்பனையில் கூட எவரும் சிந்தித்தது இல்லை. அத்தகைய கண்டுபிடிப்பை உலகிற்கு வழங்கி மகத்தான புரட்சியைச் செய்து காட்டியிருப்பவர், இந்த கேட்டலின் கேரிகோ என்ற அமெரிக்காவில் பணியாற்றுகின்ற, ஹங்கேரியப் பெண் விஞ்ஞானி.

கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைக்கும், நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க வந்த போது கூடியிருந்த சுகாதாரப் பணியாளர்கள் எழுந்து நின்று கைதட்டி, கண்ணீருடன் அந்த விஞ்ஞானிக்கு வரவேற்புக் கொடுத்த போது ‘என்னுடைய 22 ஆண்டு கனவு இப்போது வெற்றி பெற்றிருக்கிறது’ என்று அவர் மனம் நெகிழ்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். இந்த ஆண்டு நோபல் பரிசுக்குத் தகுதி படைத்த ஒரே ஒரு விஞ்ஞானி இவராகத்தான் இருக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அறிவியல் உலகிலும், மருத்துவ உலகிலும்,  ஆண்கள் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. பெண் விஞ்ஞானிகள்  புறக்கணிக்கப் படுகிறார்கள். இந்தியத் திருநாட்டில் பெண்களுக்கான ஒடுக்குமுறைகள் வேறு வேறு வடிவத்தில் இருந்தாலும், அய்ரோப்பிய நாடுகளில் பெண்களுக்கான ஒடுக்குமுறைகளை முறியடித்து இந்த உலகம் முழுவதும் நோயினால் தவித்த மக்களைக் காப்பாற்றி அதற்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்த இந்தப் பெண் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வோம்.

சனி, 9 ஜூலை, 2022

நோபல் பரிசு பெற்ற முதல் இஸ்லாமிய பெண்

வெள்ளி, 1 ஜூலை, 2022

திருச்சிக்கு பெருமை சேர்த்த திராவிடர் கழக மகளிர் கலந்துரையாடல்!

வெள்ளி, 20 மே, 2022

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய புதிய உறுப்பினர்கள் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர்


தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களை இன்று (21.2.2022) தலைமைச் செயலகத்தில்தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள .எஸ்.குமரிஉறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் மாலதி நாராயணசாமிபி.கீதா நடராஜன்பி.சீத்தாபதிஎம்.எஸ்.கே.பவானி இராஜேந்திரன்ஆர்.ராணிகே.சிவகமசுந்தரிஎம்.வரலாட்சுமி ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் நியமனம்

 

சென்னை, பிப்.19 தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவராக ஏ.எஸ்.குமாரியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் மாநில மகளிர் ஆணைய தலைவி மற்றும் 9 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். இந்த ஆணை யம் பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறது.பெண்கள் பாதுகாப்புக்கு தேவையான அதிகாரங்களைப் பெற்ற ஒரு சட்ட ரீதியான அமைப்பாகும். தமிழ்நாடு மகளிர் ஆணையம் பெண்கள் சம்பந்தப்பட்ட சட்டங்கள் பற்றி பொதுமக்களிடையே விழிப் புணர்வு ஏற்படுத்த பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்தாண்டு தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக் கப்பட்டனர். இந்நிலையில், இந்த ஆணையம் தற்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு மகளிர் ஆணைய தலை வராக ஏ.எஸ்.குமாரியை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. மேலும், ஆணையத்தின் உறுப்பினர்களாக, மாலதி நாரா யணசாமி, கீதா நடராஜன், சீதாபதி, மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்பி எஸ்.கே.பவானி ராஜேந்திரன்,   சட்டமன்ற உறுப்பினர்கள் கே.சிவகாமசுந்தரி, எம்.வரலட்சுமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


வியாழன், 19 மே, 2022

‘ஆஃப்டர் ஆல் ஹேர்தானே’ என்று நான் மொட்டை அடித்துக்கொண்டதற்கு பெரியார்தான் காரணம்!


    எனது அப்பா, ராஜாஜியுடன் நெருக்கமாக இருந்த அரசியல் ஆளுமை. ஆனால், பெரியாரின் மறுமலர்ச்சிக் கொள்கைகள் பற்றி எங்களிடம் நிறையப் பேசுவார். தொலைக்காட்சியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை வழங்கி வந்த போது அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் எனக்கு ‘பெண் ஏன் அடிமை ஆனாள்?’ என்கிற பெரியாரின் புத்தகத்தைப் பரிசளித்தார். அதற்கும் முன்பு பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள என்னை அழைத்திருந்தனர். அப்போதும் இதே புத்தகத்தை எனக்குப் பரிசாகக் கொடுத்தார்கள்.

    அந்தப் புத்தகம் என்னை வெகுவாகப் பாதித்தது. அந்தப் புத்தகத்தின் பின்னே இருந்த சிந்தனை வீச்சு, முறைமை அசாதாரணமானது. ‘யுத்தம் செய்’ படத்தில் நடித்தபோது, நான் மொட்டை அடித்துக்கொள்ளக் கொஞ்சம்கூடத் தயங்கவில்லை. ‘போடா... ஆஃப்டரால் ஹேர்தானே’ என்று ஜாலியாக மொட்டை அடித்துக்கொண்டேன்! அதற்குப் பெரியார்தான் காரணம். மொட்டை அடித்துக்கொண்டு ஷவரின் கீழ் நின்றபோது கிடைத்த விடுதலை உணர்வு அளப்பரியது. பெரியாரின் கடவுள் நம்பிக்கை சார்ந்த கொள்கையில் நான் மாறுபட்டவள். ஆனால், தீண்டாமை, சமத்துவமின்மை, பெண்ணடிமைத்தனம் போன்றவற்றுக்கு எதிராகச் செயல்பட்டு பெரியார் கொண்டுவந்த மாற்றங்களின் காரணமாகத்தான் இன்று தமிழ்நாடு தனித்துவமான கலாச்சாரம் கொண்டதாக இருக்கிறது. அந்த விஷயத்தில் நான் பெரியாரின் தீவிர விசிறி!

    திருமணப் பரிசாக எனது பெரிய மாமனார் எனக்குத் திருக்குறளைப் பரிசளித்தார். எப்போதாவது குழப்பம் ஏற்பட்டால், அந்தத் திருக்குறள் புத்தகத்தின் ஏதாவதொரு பக்கத்தைத் திறந்து கண்ணில் படும் குறளையும் அதன் விளக்கவுரையும் வாசித்தால் அங்கே தீர்வு இருக்கும். அப்படியொரு வேதம் அது. நான் திரைப்படங்களை இயக்கத் தொடங்கும் முன்பு, எனக்குப் பரிசளிக்கப்பட்ட மற்றொரு புத்தகம் சுஜாதாவின் ‘திரைக்கதை எழுதுவது எப்படி?’ புத்தகம். அது திரைக்கதை எழுதும் தன்னம்பிக்கையைக் கற்றுக்கொடுத்தது. ஆனால், தமிழில் திரைக்கதையை எழுத முடியும் என்கிற தன்னம்பிக்கையை எனக்குக் கொடுத்தது ‘பாரதியார் கவிதைகள்’ நூல். மொழியின் ஆற்றலை பாரதியார் வழியாகப் பெற்றேன் என்று சொல்லுவேன். ‘பாரதியார் கவிதை’களை எனக்குப் பரிசளித்தவர் வானதி சீனிவாசன்.

- லெட்சுமி ராமகிருஷ்ணன்,
நடிகர், இயக்குநர், தொலைக்காட்சி ஆளுமை. 
நன்றி: 'இந்து தமிழ் திசை' பக்.6 - 5.3.2022

சனி, 1 ஜனவரி, 2022

மருத்துவராகப் போகும் முதல் பழங்குடியின மாணவி!

 

கல்வி என்பதே பெருங்கனவாக இருக்கும் பழங்குடியின மாணவிமருத்துவராகும் தன் லட்சியத்தின் முதல்படியைத் தொட்டுள்ளார்நீட் தேர்வில் வெற்றிபெற்றதன் மூலம்கல்வியே பெண்களின் முன்னேற்றத்துக்கான கருவி என்பதை நிரூபித்துள்ளார்.

கோவை திருமலையாம் பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ரொட்டிக்கவுண்டனூர் அருகே உள்ளது நஞ்சப்பனூர் கிராமம்இங்கே மலசர் பழங்குடியினத்தைச் சேர்ந்த 50 குடும்பங்கள் வசிக்கின்றனகுடிசைகளில் வசிக்கும் அவர்களின் வாழ்வாதாரம்விவசாயக் கூலி வேலை மட்டுமேஇங்கிருந்து பள்ளி சென்றவர்களில் யாரும் 12ஆம் வகுப்பைத் தாண்டவில்லைஇந்நிலையில்அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மாணவி சங்கவிநீட் தேர்வில் 202 மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சி பெற்றுள்ளார்இதன்மூலம் அந்தச் சமுதாயத்திலிருந்து மருத்துவராகப்போகும் முதல் மாணவி என்கிற பெருமையை சங்கவி அடைய உள்ளார்.

சங்கவியின் அப்பா முனியப்பன்விவசாயக் கூலித் தொழிலாளிஅம்மா வசந்தாமணி. 10ஆம் வகுப்பு வரை குமிட்டிபதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்ற சங்கவி, 11, 12 வகுப்புகளை பிச்சனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்றுள்ளார்பிளஸ் 2 தேர்வில் 1,200-க்கு 874 மதிப்பெண் பெற்று, 2018இல் முதல்முறையாக நீட் தேர்வெழுதியுள்ளார்அப்போது தேர்ச்சிக்கு 6 மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றதால் வாய்ப்பு தவறிப்போனது. 2018இல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கபிச்சனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்ஆசிரியர்கள் உதவியுள்ளனர்அப்போதுபள்ளிக் கல்வித்துறை மூலம் கோவை புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஒரு மாதம் நடைபெற்ற நீட் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு சங்கவி பயிற்சி பெற்றுள்ளார்.

அரசின் உதவித்தொகையைக் கொண்டு மட்டுமே படிக்க முடியும் என்கிற சூழலில்தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்த சங்கவியிடம் ஜாதிச் சான்று இல்லைபத்து நாட்கள் மட்டுமே அங்கு படித்த அவர்மேற்கொண்டு படிக்கவில்லைசுற்றியிருந்த யாரிடமும் ஜாதிச்சான்று இல்லாததால்அதை ஆவணமாகக் காண்பித்துச் சான்று பெற முடியாமல்போனதுசங்கவிக்குச் ஜாதிச்சான்று பெற அவரது தந்தை இரண்டு ஆண்டுகள் போராடியுள்ளார்.

கரோனா முதல் அலை பரவத் தொடங்கிஊரடங்கு அமலில் இருந்தபோதுநஞ்சப்பனூர் கிராமத்துக்குத் தன்னார்வலர்கள் உதவச் சென்றுள்ளனர்அப்போது சங்கவிக்குச் ஜாதிச்சான்று கிடைக்காதது குறித்து ஊடகங்கள் மூலம் மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தி சான்று பெற வழிவகை செய்துள்ளனர்பல தடைகளைக் கடந்து சாதித்துள்ள சங்கவியிடம் பேசினோம்.

2020 மே மாதம்மாரடைப்பால் அப்பா உயிரிழந்துவிட்டார்எனது நிலையை அறிந்துதனியார் நீட் தேர்வு பயிற்சி மய்யத்தில் சேர தன்னார்வலர்கள் உதவினர்.  கடந்த ஆண்டு நவம்பர் கடைசியில் அங்கு சேர்ந்துஒன்றரை மாதம் பயிற்சி பெற்றேன்கரோனா இரண்டாவது அலையாலும்திறன்பேசி இல்லாத காரணத்தாலும் இணைய வழி பயிற்சி வகுப்புகளைத் தொடர முடியவில்லைநான் பள்ளியில் படித்தபோது இருந்த பாடத்திட்டமும் மாறியிருந்ததுஅம்மாவுக்குக் கண் அறுவை சிகிச்சை செய்திருந்த சூழலில்கையில் இருந்த புதிய பாடத்திட்ட புத்தகங்கள்பயிற்சி மய்யத்தில் அளித்த மெட்டீரியல்களை வைத்து வீட்டிலேயே தேர்வுக்குப் படித்தேன்கரோனா பரவல் குறைந்த பிறகுஒரு மாதம் பயிற்சி மய்யத்திலேயே தங்கி பயின்றேன்அந்தப் பயிற்சி எனக்குக் கைகொடுத்ததுபழங்குடியின மாணவர்கள் மருத்துவ படிப்புப் பயில 108 முதல் 137 மதிப்பெண்கள் கட்-ஆஃப் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில்நான் 202 மதிப்பெண்கள் பெற்றுள்ளதால்அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று சொல்லும் சங்கவிபழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுககு உரிய வழிகாட்டுதல்களோதொடர்ந்து படிப்பதற்கான ஊக்கமோ கிடைப்பதில்லை என்கிறார்அரசு அதிகாரிகள் எங்களிடம் வந்தால் மட்டுமே அவர்களை அணுகி உதவி கேட்க முடியும் என்கிற சூழல் உள்ளதுஎனவேபழங்குடியின மாணவர்களின் தேவையை நேரடியாகக் கேட்டறிந்து அரசு உதவினால்இன்னும் நிறைய மாணவர்கள் நல்ல நிலையை அடைவார்கள் என்கிறார் சங்கவி.