கேள்வி: அரசியலில் ஆண்களுக்கு இருக்கும் ஒற்றுமை மற்றும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, பெண்களுக்கு இல்லையே ஏன்?
பதில்: இதற்கு நான் பதில் அளித்தால் பெண்ணுரிமையாளர்கள் என்னை வசைபாடுவார்கள். இருந்தும் துணிந்து பதில் கூறுகிறேன். சக பெண்களுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அவர்களுக்குக் கிடையாது. எனவே, அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. என்னதான் ஆணும் பெண்ணும் சமம் என்று பேசினாலும், படைப்பில் இருவருக்கும் வித்தியாசம் இருக்கவே செய்கிறது.
(‘துக்ளக்’கில் குருமூர்த்தி 17.2.2021, பக்கம் 11)
* * *
“பெண்கள் இந்தக் கடமையிலிருந்து விலகிவிட்டால் அந்தப் பெண்ணை விலக்கி விடுவது நல்லது. திருமணம் என்பது ஓர் ஒப்பந்தம் (சோசியல் காண்ட்ராக்ட்) மாத்திரமே’’ என்று தன்னுடைய பேச்சில் கூறினார். “மனைவி என்பவள் கணவனின் தேவைகளை நிறைவேற்றுவதை மட்டுமே தலையாய கடமையாகக் கொள்ள வேண்டும். வீட்டைக் கவனிக்க வேண்டும். கணவனின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். கணவனுக்கு இன்பம் தர வேண்டும். இது பெண்ணின் கடமை; இந்தக் கடமையிலிருந்து ஒரு பெண் விலகிவிட்டால் அவள் தேவையில்லை. அவர்களுக்கான ஒப்பந்தம் முடிந்து விட்டது. விலக்கிவிட வேண்டும். கணவனின் தேவைகளை நிறைவேற்றாத மனைவியை உடன் வைத்திருப்பதால் கணவனுக்கு என்ன பலன்? ஆகையால் திருமணம் என்னும் ஒப்பந்தத்தை முடித்து விடவேண்டும்’’ என்று கூறினார் ஆர்.எஸ்.எஸ். தலைவர்.
மோகன் பகவத் 8.11.2014 அன்று அசாமில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, “கற்பழிப்புகள் இந்தியாவில் தான் நடக்கும்; பாரதத்தில் கற்பழிப்புகளே நடப்பதில்லை’’ என்று சொல்லியிருக்கிறார். மேலும், “இந்தியாவின் கிராமப்புறங்களிலோ காடுகளிலோ இது போன்ற கற்பழிப்புச் சம்பவங்கள் நடப்பதே இல்லை என்றும், நகரங்களில் மட்டுமே நடப்பதாகவும், பழங்கால பாரதக் கலாச்சாரத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
மனு முதல் உச்சநீதிமன்ற நீதிபதி பாப்டே வரை, பெண்களைப் பற்றிய மனோபாவம் இதுதான். இதனைக் கண்டித்துத்தான் திராவிடர் கழக மகளிர் பாசறை சார்பில் உலக மகளிர் நாளில் (கடந்த 8ஆம் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- உண்மை இதழ், மார்ச் 16- 31 .21