புதன், 20 பிப்ரவரி, 2019

விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக பொறியாளராக பெண் அதிகாரி நியமனம்



பெங்களூரு, பிப்.18 இந்திய விமானப்படை வர லாற்றில் முதல் முறையாக, கினா ஜெய்ஸ்வால் என்ற பெண், விமான பொறியாள ராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீப காலமாக, பெண் களுக்கு அனைத்து துறைகளி லும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வரை, இந்திய விமானப்படையில் விமான பொறி யாளர் பணிக்கு, ஆண்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த பணிக்கு, முதல் முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, ராணுவ அமைச் சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆறு மாதங்கள் கடுமையான பயிற்சிகளை நிறைவு செய்த, சண்டிகாரை சேர்ந்த பெண் அதிகாரி, கிமா ஜெய்ஸ் வால், விமான பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிக்கலான விமான தொழில் நுட்பங்களை கண்காணித்து இயக்கும் பணியை, அவர் மேற்கொள்வார். ஹிமா ஜெய்ஸ்வால், 2015 ஜன., 5இல், இந்திய விமானப்படையில் சேர்ந்தார்.  நிலத்தில் இருந்து விமானத்தை நோக்கி செலுத் தப்படும் ஏவுகணை கண்காணிப்பு பிரிவில், பேட்டரி கமாண்டராகவும், ஏவுகணை செலுத்தும் பிரிவு தலைவ ராகவும், பணியாற்றி உள்ளார்;பின், விமான பொறியியல் படிப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். பயிற்சிகளை வெற்றி கரமாக நிறைவு செய்துள்ள இமா, நாட்டின் முதல், பெண் விமான பொறியாளராக நியமிக்கப்பட் டுள்ளார். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 18.2.19

வியாழன், 14 பிப்ரவரி, 2019

பிரபல வரலாற்றாளர் இராமச்சந்திர குகாவின் 82 வயது தாயாரை பெண்ணியவாதியாக்கிய பெரியார்!

ஆய்வறிஞர் ஆ.இரா.வெங்கடாசலபதி அவர்களின் ஆன்றவிந்த அரிய படைப்புகள் குறித்த இருநாள் விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் (8, 9.2.2019) இரு நாள்களிலும் நடைபெற்றது.

ஆய்வாளர்கள் பலரும் பங்குகொண்ட அக்கூட்டத் தில் பிரபல வரலாற்றாளர் இராமச்சந்திர குகா அவர்கள் உரைத்ததாவது:

தன்னுடைய மேக்கர்ஸ் ஆஃப் இந்தியா' நூலில் வெங்கடாசலபதியின் பங்களிப்பை நினைவு கூர்ந்தார். புத்தகத்தில் சேர்ப்பதற்காக பெரியாரின் எழுத்துகளைத் தானே தேர்ந்தெடுத்து, மொழி பெயர்த்துக் கொடுத்தார். இத்தகைய பெருந்தன்மை ஆய்வாளர்களுக்கிடையே மிகமிக அரிதானது. வெங்கடாசலபதி மொழி பெயர்த்துத் தந்த பெரியாரின் எழுத்துகளை என் 82 வயது அம்மா படித்துவிட்டு, பெண்ணியவாதி ஆகிவிட்டார்'' என்றார்.

('இந்து தமிழ்' நாளிதழ், 12.2.2019, பக்கம் 7)
- விடுதலை நாளேடு, 14.2.19

செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

ஒலிம்பிக்கில் மல்யுத்தப் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்



ஒலிம்பிக்கில் மல்யுத்தப் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை  பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே அழுத்தமான முத்திரையைப் பதித்த அந்தப் பெண், சாக்சி மாலிக்.

அரியானாவில் உள்ள ரோட்டக் என்ற நகரம்தான் சாக்சியின் சொந்த ஊர். அவருடைய தாத்தா, மல்யுத்த வீரர். சிறு வயதிலிருந்தே தனது மல்யுத்தப் பராக்கிரமங்களை பேத்தி சாக்சியிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். அவர் சொன்ன மல்யுத்தக் கதைகளால் சாக்ஷிக்கு அந்த விளை யாட்டு மீது ஆர்வம் பிறந்தது. குஸ்தி, சண்டை என்றாலே ஒதுங்கிச் செல்லும் சிறுமிகளுக்கு மத்தியில் தாத்தா வழியில் மல்யுத்த விளையாட்டில் குதித்தார். மல்யுத்த பயிற்சியில் ஈடுபட்டபோது சாக்சிக்கு 12 வயது. மல்யுத்த விளையாட்டைத் தேர்வுசெய்தது என் வாழ்வில் நான் எடுத்த மிகச் சிறந்த முடிவு என்று பின்னாளில் சாக்சி குறிப்பிடும் அளவுக்கு அந்த விளையாட்டில் புகழ்பெற்றார்.

தடைகள் தாண்டி

மல்யுத்த விளையாட்டில் ஈடுபடத் தொடங்கிய காலத்தில், வீட்டில் அதற்குப் பெரிய அளவில் ஆதரவில்லை. மல்யுத்த விளையாட்டில் ஈடுபட அவருக்குப் பலவிதத் தடைகள் ஏற்பட்டன. அவற்றைத் தாண்டித்தான் சாக்சியால் பயிற்சியில் ஈடுபட முடிந்தது. தன் மீது அவருக்கு இருந்த அபாரமான நம்பிக்கையால், விடாமுயற்சியுடன் பயிற்சிசெய்து அந்த விளையாட்டில் முன்னேறி வந்தார். மாநில அளவிலும் தேசிய அளவிலும் விளையாடத் தொடங்கி பிறகு, அவர் பெற்ற வெற்றிகள், சர்வதேசப் போட்டிகளில் அவருக்குச் சிவப்புக் கம்பளத்தை விரித்துக்கொடுத்தன.

மறக்க முடியாத ஆண்டு

2010இல் சர்வதேச அளவிலான போட்டிகளில் சாக்சி பங்கேற்கத் தொடங்கினார். இளையோர் உலக வாகையர் பட்டப் போட்டியில் பங்கேற்ற சாக்சி, 58 கிலோ ப்ரீ ஸ்டைல் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்று கவனம் ஈர்த்தார். முதல் சர்வதேசத் தொடரையே அமர்க்களமாகத் தொடங்கிய சாக்சியின் பக்கம் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் வெற்றிக் காற்று வீசியது. 2014இல் அமெரிக்காவில் நடந்த சர்வதேச மல்யுத்தத் தொடரில் 60 கிலோ எடைப் பிரிவில் முதன் முறையாகத் தங்கப் பதக்கம் வென்றார்.

அதே ஆண்டில் கிளாஸ்கோவில் நடந்த காமன் வெல்த் போட்டியில் நைஜீரிய வீராங்கனையை வீழ்த்தி வெள்ளிப் பதக்கம் வென்றார். 2014இல் தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டி யில் வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார். ஒரே ஆண்டில் மூன்று சர்வதேசத் தொடர்களில் சாக்சி பெற்ற வெற்றி, அவரது ஒலிம்பிக் கனவை அதிகப் படுத்தியது.

ஒலிம்பிக் வாய்ப்பு

ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக 2015இல் ஆசிய மல்யுத்த வாகையர் பட்டப் போட்டி, பயிற்சியாக அமைந்தது. அந்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று திரும்பினாலும், ஒலிம்பிக் போட்டிக்கு முழுமையாகத் தயாராக அது உதவியது. சாக்சி மாலிக் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறவில்லை.

2016 தொடக்கத்தில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று தான் ஒலிம்பிக் வாய்ப்பைப் பெற்றார்.  மேலும் மல்யுத்தப் போட்டிகளில் சாக்சி மாலிக் முன்னேறி வந்தார். இந்தச் சுற்றில் மங்கோலிய வீராங்கனையை வீழ்த்தி, வெண்கலப் பதக் கத்துக்கான போட்டிக்குத் தகுதி பெற்றார்.  2016இல் இந்தியா பதக்கப் பட்டியலில் இடம்பெற சாக்சி வென்ற வெண்கலப் பதக்கம் உதவியது. இதன் பிறகுதான் பாட்மிண்டனில் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதற்கு முன்னர் பளு தூக்குதலில் கர்ணம் மல்லேஷ்வரி, குத்துச்சண்டையில் மேரிகோம், பாட்மிண்டனில் சாய்னா நேவால் என மூன்று பெண்கள் மட்டுமே ஒலிம்பிக்கில் பதக்கம் வென் றிருந்தனர். அந்தப் பட்டியலில் சாக்சியும் சேர்ந்தார்.

மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் சாக்சிக்குக் கிடைத்தது.

-  விடுதலை நாளேடு, 5.2.19

ஏழு கடல்களை வெற்றிகரமாக நீந்திய பெண்



உலகில் உள்ள ஏழு கடல்களில் வெற்றி கரமாக நீந்தி கரையேறிய முதல் இந்தியப் பெண்மணி. புலா சவுத்ரி. கொல்கத்தாவில் காலிகஞ் பகுதியில் வாழ்கிறார். தான் பிறந் ததே கடலில் நீந்துவதற்காகத்தான் என்று புலா பலமாக நம்பினார். அதன்படி கடல்களில் நீந்தி சாதனைகளையும் நிகழ்த்திக் காட்டினார். உலக சாதனை எப்படி இந்திய பெண் ணுக்குச் சாத்தியமானது என்பதை புலா விவரிக்கிறார்:

எனக்கு இப்போது நாற்பத்தெட்டு வயதாகிறது. மூன்று வயதிலேயே என்னை அப்பா நீந்தப் பழக்கினார். வங்காளத்தில் கிராமப்புறங்களில் வீட்டிற்கு ஒருகுளம் என்று இருக்கும். அந்தக் குளத்தில் குளிக்க அப்பா என்னை அழைத்துச் செல்வார். அப்படியே நீச்சலையும் கற்றுக் கொடுத்தார். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அப்பா சின்ன வயதில் குளத்தில் குளிக்கப் போய் நீரில் மூழ்கிவிட்டார். அவரை முன்பின் தெரியாத ஒருவர் காப் பாற்றினாராம். அந்த விபத்தை மறக்காத அப்பா நீச்சலை நன்கு கற்றுக் கொண்டதுடன், அவரது வாரிசுகளும் நீச்சலைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தீவிரமாக இருந் தார். அவர்தான் எனக்கும், என்னுடன் பிறந் தவர்களுக்கும் நீச்சலின் அரிச்சுவடிகளைச் சொல்லிக் கொடுத்தார். அவர் கற்றுத் தந்த நீச்சலை சாதனை நிகழ்த்த ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டேன்.

நீச்சலில் புதிய யுக்திகளைக் கற்றுக் கொள்ள நீந்தக் கற்றுத்தரும் அமைப்பில் சேர்ந்து தொழில் ரீதியான பயிற்சி பெற்றேன். அந்தப் பயிற்சி எனது மனதில் நம்பிக்கைகளை விதைத்தது. உலக சாதனை படைக்க வேண்டும் என்ற எனது லட்சியம் நிறைவேறும் என்ற உறுதி என்னுள் விருட்சமாக வளர்ந்தது. நாங்கள் சராசரி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். என்றாலும் நீச்சலை முறையாகக் கற்றுக் கொள்ள பெற்றோர் என்னை பயிற்சி வகுப்பில் தொடரச் செய்தார்கள். நீந்துதலில் எனக்கிருக்கும் ஆர்வத்தைப் பார்த்து நீந்தும் போது அணியும் நீச்சல் உடையை அம்மா தைத்துக் கொடுத்தார். அப்போது அது எனக்கு மிகப் பெரிய பரிசாக இருந்தது.

1982 வாக்கில் என்னுடன் பதினான்கு பெண்கள் நீச்சல் பயிற்சி பெற்றார்கள். நீந்து தலின் போது வேகத்தில் அவர்கள் அனை வரையும் பின்தள்ளி முன்னேறி விடுவேன். எனக்கு பன்னிரண்டு வயதான போது என்னு டைய உயரம் நாலரை அடிதான். எடை முப் பத்திநான்கு கிலோ மட்டுமே. ஆனால் தண் ணீரில் மீன் போல் அதி லாகவமாக நீந்துவேன்.

இந்தியாவில் நீச்சலில் பல புதிய சாதனை களைப் படைத்தேன். பதினைந்து தங்கப் பதக்கங்கள் பெற்றிருக்கிறேன். எனது சில சாதனைகள் உடைக்கப் படாமல் பல ஆண் டுகள் எனது பெருமையைக் கூறி வந்தன. தண்ணீருடன் பந்தம் பாசத்தை ஏற்படுத்திய நான் இந்தியாவின் சார்பில் காமன்வெல்த், ஆசியா விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டேன்.

தேசிய அளவில் பிரபலம் ஆனதும், நீச்சல் குளம் நீந்துவதற்கு சின்னதாகத் தோன்ற ஆரம்பித்தது. நீச்சல் குளத்திற்கு விடை சொல்லி விட்டு விரிந்து பரந்து கிடக்கும் நீலக் கடலை நீச்சல் குளமாக்கிக் கொண்டேன். ஆங்கிலக் கால்வாயைக் கடக்க 1989இல் பயிற்சி மேற்கொண்டேன். அந்தப் பயிற்சி களின் போதுதான் கடல் நீர் எனது தோலுக்கு ஒத்துக் கொள்ளாது என்று தெரிய வந்தது. முன்னே எடுத்து வைத்த காலை பின்னுக்கு எடுக்க விருப்பம் இல்லை. அந்த ஒவ்வா மையைப் பொறுத்துக் கொண்டேன். சகித்துக் கொண்டேன். கஷ்டப்படாமல் கனி கிடைக் குமா என்ன..! கடலில் பயிற்சி முடித்து கரைக்கு வந்தாலும் இரவு முழுவதும் தோலில் எரிச்சல் இருக்கும். இரவு சரிவர தூங்க முடியாது.

1989-இல் நான் கடந்த ஆங்கிலக் கால் வாயை 1999இல் மீண்டும் நீந்திக் கடந்தேன். 2005 - ஆம் ஆண்டு எனக்குப் பொன்னான ஆண்டு. இந்த ஆண்டில்தான் அய்ந்து கண்டங்களில் இருக்கும் சமுத்திரக் கால் வாய்களை ஒன்றன் பின் ஒன்றாக நீந்திக் கடந்து, அய்ந்து கண்டங்களின் சமுத்திர கால் வாய்களை கடந்த முதல் பெண் என்ற பெரு மையைப் பெற்றேன். ஜிப்ரால்டர் கால்வாய், டைர்ஹனியன் கால்வாய், கூக் கால்வாய், கிரீசுக்குப் பக்கத்தில் உள்ள டோரொனியாஸ் வளைகுடா, கலிபோர்னியா கடற்கரையை யொட்டிய கட்டலினா கால்வாய் மற்றும் தென் ஆப்பிரிக்கா, ரோபன் தீவுக்கு செல்லக்கூடிய மூன்று நங்கூர விரிகூடா எனது வெற்றிப் பட்டியலில் அடங்கும்.

நீச்சலில் இலங்கையின் தலைமன்னாருக் கும் தனுஷ்கோடிக்கு இடையிலான நாற்பது கி.மீ தூரமுள்ள பாக் கடல்நீர் சந்திப்பு ஆபத்தும், பெரிய அலைகளும், சக்தி மிகுந்த நீரோட்டமும் உள்ள பகுதியாகும். நீந்தலுக்கு சவால் விடும் கடல் பகுதி. உலகில் நீச்சலில் வாகையராக இருந்தாலும் பெரும்பாலான பேர்கள் பாக் சந்திப்பை நீந்திக் கடந்திருக்க மாட்டார்கள். எனது பயிற்சியாளர், நண்பர்கள், கணவர், சகாரா இந்தியா நிறுவனம் செய்த உதவி, தந்த உற்சாகம் காரணமாக பாக் சந்திப் பையும் 2005-இல் சுமார் பதினான்கு மணி நேரத்தில் நீந்திக் கடந்தேன். பாக் சந்திப்பு எனது ஏழாவது கடல் ஆகும். அப்போது எனக்கு முப்பத்திநான்கு வயது. பாக் சந்திப் பைக் கடந்ததும், உலகில் ஏழு கடல்களை ஒரே ஆண்டில் நீந்திக் கடந்த முதல் பெண்மணி என்ற பெருமை என்னை வந்து சேர்ந்தது, கணவர் சக்ரவர்த்தியும் சர்வதேச தர நீச்சல் வீரர். எங்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். நீச்சல் துறையில் எனது பங்களிப்பினை அங்கீகரிக்கும் விதமாக அர்ஜுனா விருதும், பத்மசிறீ விருதும் வழங்கப்பட்டது. மேற்கு வங்காளத்தில் ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந் துள்ளேன். வங்காளத்தில் நீச்சல் அகாதெமி ஒன்றைத் துவங்கும் வேலையில் ஈடுபட்டிருந் தாலும், தொடர்ந்து நீச்சல் பயிற்சி செய்து வருகிறேன் என்கிறார் புலசவுத்ரி.

-  விடுதலை நாளேடு, 5.2.19

துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை



துப்பாக்கிச் சுடுதலில் இரண்டாவது இன்னிங்ஸ் எல்லோருக்கும் அமைந்து விடாது. ஆனால், இந்திய துப்பாக்கிச் சுடும் வீராங்கனை ஒருவருக்கு அந்த அரிய வாய்ப்பு வாய்த்திருக்கிறது. 2010இல் உலகத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைத் தட்டிசென்ற அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு காமன்வெல்த் துப்பாக்கிச் சுடும் போட்டியில் புதிய மைல் கல்லை எட்டினார். அவர், மகாராட்டிரத்தைச் சேர்ந்த தேஜஸ்வினி சாவந்த்.

மகாராட்டிரத்தில் உள்ள கோலாப்பூரில் தேஜஸ்வினி பிறந்தார். அப்பா ரவீந்திர சாவந்த் கடற்படை அதிகாரி என்பதால், அவர் சாகச நிகழ்ச்சிகளுக்கும் ரைபிள் கிளப்பு களுக்கும் செல்லும்போது தேஜஸ்வினியும் உடன் சென்றார். அப்படிச் சென்றபோதுதான் துப்பாக்கிச் சுடுதல் மீது தேஜஸ்வினிக்குக் ஆசை பிறந்தது. கோலாப்பூரில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியாளர் ஜெய்சிங் குசலே மூலம் பயிற்சி பெறத் தொடங்கினார் தேஜஸ்வினி. 13 வயதில் துப்பாக்கியைப் பிடித்த அந்தக் கைகள், 25 ஆண்டுகளாக இலக்கை அடைய முயன்று கொண்டிருக்கின்றன.

துப்பாக்கிச் சுடுதல், பொருட்செலவு அதிகம்கொண்டது. தேஜஸ்வினி நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இருந்தாலும் தன் மகளுக்குப் பிடித்த விளையாட்டு என்பதால் செலவைப் பற்றியெல்லாம் தேஜஸ்வினியின் தந்தை கவலைப்படவில்லை. மகளின் ஆசைக்குத் தடைபோடாமல், வங்கியிலும் நண்பர்களிடமும் கடன் பெற்று, துப்பாக்கிச் சுடுதலுக்குத் தேவையான உபகரணங்களை வாங்கிக் கொடுத்தார். கடன் வாங்கி விளை யாட்டுப் பொருட்களை வாங்கிக்கொடுப்பதை அவருடைய உறவினர்கள் விமர்சித்தார்கள். ஆனால், அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல், மகளின் தேவையைப் பூர்த்தி செய்தார். தேஜஸ்வினியின் துப்பாக்கிச் சுடுதலுக்குப் பக்கபலமாக இருந்தார்.

சர்வதேசப் பயணம்


துப்பாக்கிச் சுடுதலில் படிப்படியாக முன்னேறிவந்த தேஜஸ்வினி, 2000-க்குப் பிறகு மாநில அளவிலும் தேசிய அளவிலும் கால்பதித்து, கவனம் ஈர்க்கத் தொடங்கினார். அடுத்த சில ஆண்டுகளிலேயே சர்வதேசப் போட்டியில் காலடி வைக்கும் வாய்ப்பு தேஜஸ்வினிக்குக் கிடைத்தது. 2004இல் இஸ் லாமாபாத்தில் நடந்த தெற்காசிய விளை யாட்டுப் போட்டியில் தங்கம் வென்று தன் சர்வதேசப் பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கினார். 2006இல் நடந்த மெல்போர்ன் காமன் வெல்த் போட்டி, அவரது திறமையை உல கறியச் செய்தது. அதில் மகளிர் தனி நபர் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவு, 10 மீ. ஏர் பிஸ்டல் மகளிர் இரட்டையர் பிரிவு என இரண்டு தங்கப் பதக் கங்களை தேஜஸ்வினி சுட்டார். தொடர்ந்து, துப்பாக்கிச் சுடுதலில் பிரகாசிக்கத் தொடங் கினார்.

தேஜஸ்வினியின் முன்னேற்றத்தைக் கண்டு அவருடைய தந்தை பெரும் மகிழ்ச்சியில் இருந்தார். ஆனால், அந்த மகிழ்ச்சி அடுத்த சில ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது. 2010இல் எதிர்பாராதவிதமாக அவரது தந்தை காலமானார். ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பால், தேஜஸ்வினி மன உளைச்சலுக்கு ஆளானார். அடுத்த சில மாதங்களில் உலகத் துப்பாக்கிச் சுடும் வாகையர் பட்டப் போட்டி இருந்த நிலையில், அவர் தேறிவருவாரா என்ற சந்தேகம் எல்லோருக்குமே இருந்தது. ஆனால், போட்டியில் பங்கேற்பது தன் அப்பாவுக்குச் செய்யும் மரியாதை என்பதில் உறுதியாக இருந்த தேஜஸ்வினி, உலக வாகையர் பட்டப் போட்டிக்குத் தயாரானார்.

ஜெர்மனியில் நடைபெற்ற உலகத் துப் பாக்கிச் சுடும் போட்டியில் இந்திய வீராங் கனைகள் இதுவரை யாரும் செய்யாத சாதனையை தேஜஸ்வினி படைத்தார். அந்தத் தொடரில் தங்கப் பதக்கம் வென்று, அதைத் தன் தந்தைக்கு அர்ப்பணித்தார். துயரமான தரு ணத்திலிருந்து குறுகிய காலத்தில் மீண்டு, தங்கப் பதக்கம் வென்றது தேஜஸ்வினி யின் மனஉறுதியைக் காட்டியது. இந்தத் தங்கப் பதக்கம் மூலம் உலகத் துப்பாக்கிச் சுடும் போட்டி யில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெரு மையையும் பெற்றார்.

அதே ஆண்டில் டில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இரண்டு வெள்ளிப் பதக்கங் களையும் ஒரு வெண்கலப் பதக்கத் தையும் வென்று அசத் தினார். 2010இல் அவர் செய்த சாதனைகளை அங்கீகரிக்கும் வகை யில் 2011இல் மத்திய அரசு அவருக்கு அர்ஜூனா விருது வழங்கிக் கவுரவித்தது.

மறு வருகை


2010இல் கிடைத்த தொடர் வெற்றிகளுக்குப் பிறகு ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் எனத் தொடர்ந்து பல போட்டிகளில் தேஜஸ்வினி பங்கேற்ற போதும் பெரிதாக வெற்றிபெறவில்லை. 2016 இல் தேஜஸ்வினி திருமணம் செய்துகொண்ட பிறகு, துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளிலிருந்து விலகி விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

திருமணத்துக்குப் பிறகு மீண்டும் துப் பாக்கிச் சுடுதலில் தீவிரமாகப் பயிற்சி எடுக்கத் தொடங்கினார். கடந்த ஆண்டு ஆஸ்தி ரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடை பெற்ற காமன் வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியோடு ரீஎன்ட்ரி கொடுத்தி ருக்கிறார் தேஜஸ்வினி.

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் நீண்ட நாள் கழித்து மீண்டும் இரண்டாவது இன் னிங்ஸைத் தொடங்கியிருக்கிறார். எல்லோ ருக்கும் அமையாத இந்த வாய்ப்பைப் பயன் படுத்திக்கொள்ள மீண்டும் தீவிரமான பயிற்சியில் அவர் களமிறங்கியுள்ளார். காமன் வெல்த் போட்டிகளில் மட்டும் ஏழு பதக் கங்களை வென்று அசத்தியுள்ள தேஜஸ்வினி, அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடை பெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் நாளுக்காகக் காத்திருக்கிறார்.

-  விடுதலை நாளேடு, 12.2.19