திங்கள், 30 ஜூலை, 2018

பெண்களுக்குச் சொத்துரிமை

04.10.1931 - குடிஅரசிலிருந்து...

மைசூர் அரசாங்கத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை அளிக்கச்சட்டம்

1931 -வருடம் அக்டோபர் மாதம் 22 தேதி நடைபெற விருக்கும் சட்டசபையில் இந்து லா என்னும் இந்துக்கள் சட்டசம்பந்தமான விஷயங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். கடந்த 2 சட்டசபைகளில் மேற்படி விஷயங்கள் சம்பந்தமான பொதுக் கொள்கைகள் யாவும் ஒப்புக்கொள்ளப்பட்டாய் விட்டன. அதன்மீது ஏற்பாடு செய்திருக் கும் திட்டங்கள் வரப்போகும் சட்டசபையின் விவாதத்திற்குக்கொண்டு வரப்படும்.

அவையாவன:- பெண்களுக்குத் தாங்கள் பெண்களாகப் பிறந்த காரணத்தாலோ, அல்லது அவர்களுக்குச் சொத்துரிமை உண்டு என்பதற்கு மதசம்பந்தமான ஆதாரங்கள் இல்லை என்கின்ற காரணத்தாலோ அவர்களது வாரிசு சொத்துரிமை மறுக்கப்படக் கூடாது. ஒரு பாகம் பிரியாத குடும்பத்தில் உள்ள ஒருவர் தான் சுயராஜிதமாக சம்பாதித்து வைத்திருக்கும் சொத்திலும் பெண் சந்ததிகளுக்கு உரிமை உண்டு. ஒவ்வொரு விதவைக்கும் தானாகவே தத்து எடுத்துக்கொள்ள உரிமையுண்டு. புருஷன் கண்டிப்பாய் தத்து எடுத்துக் கொள்ளக்கூடாது என்று ஏற்பாடு செய்திருந்தால் விதவைக்குத் தத்து எடுத்துக் கொள்ள உரிமை இல்லை.

பெண் பிள்ளைகளுக்கு இப்போது கிடைத்துவரும் வாரிசு உரிமைகளிலும்கூட சொத்துக்களின் வரும்படிகளை அனுபவிக்க மாத்திரம் உரிமை இருக்கின்றதே தவிர, மற்றபடி அவர்கள் அதைத் தங்கள் இஷ்டப்படி சர்வ  சுதந்திரமாய் அனுபோகிக்கவும், வினியோகிக்கவும் உரிமை இல்லாமல் இருக்கின்றார்கள்; ஆதலால் இந்தக்குறையும் நீங்கும்படியாக அதாவது அவர்களுக்கு கிடைக்கும் வாரிசு உரிமை சொத்துக்களை தங்கள் இஷ்டப்படி சர்வசுதந்திரமாய் அனுபவிக்கவும், வினியோகிக்கவும் இந்தப் புதிய சட்டத்தில் அனுமதிக்கப்படுகின்றது.

பாகம் பிரியாத குடும்பத்தில் கணவன் இறந்துவிட்டால் பெண் ஜாதிக்குக்குழந்தை இருந்தாலும், இல்லாவிட்டாலும் குடும்பசொத்தில் கணவனுக்குள்ளபாகம் சர்வ சுதந்திரமாய் பெண்களுக்குக் கொடுத்து விட வேண்டும். குடும்ப சொத்துக்கள் பல  வழிகளில் துர்வினியோகம் செய்யப்பட்டக் காலங்களிலும் அச்சொத்துகளின்மீது பெண்களுக்கு ஜீவனாம்சத்திற்கு உரிமையுண்டு என்பதாகும்.

இன்று கவலையும், துக்கமும் இல்லாத மனிதனைக் காண்பதே அரிதாக இருக்கிறது. எந்த உயர்நிலையில் இருப்பவனுக்கும் கவலையும் துக்கமும் குடிகொண்டிருக்கிறது. கடவுள் எண்ணத்தை ஒழித்தவர்களுக்குக் கவலையில்லை. எல்லாம் இயற்கை என எண்ணியிருப்பவர்கள் துக்கம், கவலை இல்லாமல் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களைத்தான் ஞானிகள், முற்றும் துறந்த மெய்ஞ்ஞானிகள் என்று சொல்லுவார்கள். அந்த நிலையை மனிதன் எய்துவது எளிதல்ல

- விடுதலை நாளேடு, 28. 7. 18

சனி, 28 ஜூலை, 2018

பிறந்தாலும் பெண்களாய் பிறக்கக் கூடாதா?

பெண்களுக்கெதிரான சர்வதேச வன்கொடுமைகள் தடுப்பு நாளாக ஒரு நாள் (ஜூன் 26) உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப் படுகிறது. 1960ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி மிராபெல் சகோதரிகளான மூன்று சகோதரிகள் அரசியல் செயல்பாடுகளுக்காக அந்நாட்டின் ஆட்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டனர். சமூகத்தில் பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாவதை கடுமையாக எதிர்த்து இவர்கள் குரல் கொடுத்து வந்த வர்கள். அவர்கள் படுகொலை செய்யப்பட் டதை அடுத்து மூன்று சகோதரிகளும் மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள் என்று  உலகம் முழுவதும் அடையாளம் காணப்பட்டார்கள். 1999 டிசம்பர் 17இல் அய்.நா சபை கூட்டத்தில், மூன்று சகோதரிகள் இறந்த நவம்பர் 25ஆம் நாளை சர்வதேச பெண்களுக் கெதிரான வன்கொடுமைகள் தடுப்பு நாளாகப் பிரகடனம் செய்யப்பட்டது.

"பெண் என்பவள் பிறப்பதில்லை - உருவாக்கப்படுகிறாள்" என்று பிரஞ்சு தத்துவம் ஒன்று உள்ளது. உண்மையில் பெண் குழந்தையாகப் பிறந்தாலும், அவள் இந்தச் சமூகத்தில் பெண்ணாக வளர முடிவதில்லை. இந்தச் சமூகம் அவளை வளர விடுவதில்லை. பெண் குழந்தை என்று தெரிந்துவிட்டால் அக்குழந்தையைக் கொன்றுவிடும் நிலைமை இப்போதும் உலகெங்கிலும் பரவலாக உள்ளது. ஒருவேளை அந்தப் பெண்  குழந்தை, கொலையிலிருந்து தப்பித்து, பருவ வயதை அடைந்துவிட்டால், பலரின் கண்கள் அப்பெண்ணின் உடலைத் துளைக்கும். ஒரு தலை காதலால் ஆசிட் வீச்சு, ஆணவக் கொலைகள், வரதட்சணைக் கொடுமைகள், சட்டத்தில் ஆண்களுக்கு இணையான சமஉரிமை இல்லாமை என  இப்படிப் பிறப்பு முதல் இறப்பு வரை இப்பூமியில் வாழ்வதற்கு தினம் தினம் தீயில் பெண்கள் எரிந்து கொண்டே இருக்கிறார்கள். இந்தக் காலகட்டத் திலும் கூட பெண்கள் ஆண்களுக்கு ஒருபடி கீழேதான் என்ற நிலைமை உலகெங்கும் உள்ளது.

பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவது பாலியல் ரீதியாகத்தான் என்றும், அதற்கு அடுத்தபடியாக அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுதல் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்று அனைத்து நாடுகளின் கணக்கெடுப்புகளின் முடிவுகளும் சொல்லு கின்றன. அனைத்து நாடுகளின் அரசு களுக்கும் பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் பற்றி நன்றாகத் தெரிந்தி ருக்கிறது. ஆனாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், மற்றும் உரிமைகள் ரீதியிலான கொடுமைகள் குறைந்த பாடில்லை. காரணம் ஒன்றே ஒன்றுதான். என்ன தான் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் கொடிகட்டிப் பறந்தாலும், அவர்களை என்றுமே ஒரு போதைப் பொருளாக, காமப் பொருளாக, ஆண்களுக்கு அடுத்த படியாகப் பார்க்கும் கண்ணோட்டத்தை எந்த நாட்டில் வசிக்கும் ஆண்களும் தவிர்க்கத் தயாராக இல்லை.

கவுரக்கொலை எனப்படும் ஆணவக் கொலைகள்  பெண்களுக்கு எதிரானதாகவே அதிகம் நடக்கிறது. உலக அளவில் ஆணவக் கொலைகள் அதிகம் நடைபெறும் நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது இந்தியாதான். Action Aid   என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில், பாலியல் வன்கொடுமை களால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் நாடுகள், பிரேசில் மற்றும் இந்தியா ஆகும். அதாவது பிரேசிலில் 87 சதவிகித மும், இந்தியாவில் 73 சதவிகிதமும் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சொல்கிறது அந்தக் கருத்துக் கணிப்பு.

பெண்கள் இந்தியாவில் 2015இல் வெளியிடப்பட்ட தேசியக் குற்ற ஆவணப் பதிவேடு ஆண்டறிக்கையின்படி 2014இல் சுமார் 34,530 பாலியல் வன்கொடுமை வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2013-அய் விட இந்த எண்ணிக்கை 7 சதவிகிதம் அதிகம் ஆகும். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் 90 சதவிகிதத்துக்கு மேல் அந்தப் பெண் ணுக்கு அறிமுகம் ஆனவர்களே. இதில் 40 சதவிகிதப் பெண்கள் 19 வயதுக்குக் குறை வான சிறுமிகள் ஆவர். தினமும் 800-க்கும் அதிகமான பெண்கள் பாலியல் கொடுமை களாலும் மற்ற கொடுமைகளாலும் பாதிக்கப் படுகின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு இருபது நிமிடத்துக்கும், ஒரு பாலியல் வன் கொடுமை சம்பவம் நடைபெற்று வருகிறது.  2011ஆம் ஆண்டில் எடுத்த ஒரு கருத்துக் கணிப்பு என்ன சொல்கிறது தெரியுமா? 2010-க்கு முன் 30 ஆண்டுகளில், இந்தியாவில் கருவிலேயே அழிக்கப்பட்ட பெண் சிசுக்களின் எண்ணிக்கை ஒரு கோடியே இருபது லட்சம். இதில் ஒரு சோகமான செய்தி என்ன தெரியுமா? பெண் சிசுக் கொலைக்கு முக்கிய காரணமாக இருப்பது இன்னொரு பெண்தான் என்கிறது அந்த ஆய்வு.

பெண்களுக்கான வன்முறைகள் மற்றும் அவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் அதிகமாக நடக்கும் நாடுகளில், முதல் இடத்தில் ஆப்கானிஸ்தான் இருக்கிறது, இங்கு 19 வயதிலிருந்தே பெண்கள், திருமணம் செய்து கொள்ளக் கட்டயப் படுத்தப்படு கிறார்களாம்.  ஆப்கானிஸ்தானில் 87 சத விகிதப் பெண்கள் கல்வி அறிவு இல்லாத வர்களாக இருக்கிறார்களாம். இரண்டாவது இடத்தில் காங்கோ நாடு இருக்கிறது. இங்கு ஒவ்வொரு நாளும் சுமார் 1100 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். இங்கு பெண் சிசுக் கொலையும் அதிக அளவில் நடந்தேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு அடுத்தபடியாக பெண்களுக்கான அதிக வன்கொடுமைகள் நடப்பது அதாவது பாலியல் கொடுமைகள், உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்துதல், சம உரிமை இல்லாமை போன்றவற்றில் மூன் றாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தி யாவில் மட்டுமே 87 சதவிகிதம் பெண்களுக்கு எதிராக பாலியல்  உடல் மற்றும் மனரீதியான வன்கொடுமைகள் நடப்பதாக ஆய்வறிக்கை சொல்லுகின்றது. இதில் கூட்டு பாலியல் வன்செயல்களும்,  வன்கொடுமைகளும் அடக்கம். மேலும் பெண் சிசு கொலைகள் அதிகம் நடக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என உலக நாடுகள் சொல்லுகின்றன. நான்காவது இடத்தில் சோமாலியா நாடு உள்ளது. இங்கு 4 முதல் 5 வயதுப் பெண்குழந் தைகளின் உறுப்புகள் சிதைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருகின்றன. இது மட்டுமல்லாமல், பாகிஸ்தான், கொலம்பியா, எகிப்து, மெக்சிகோ போன்ற நாடுகள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

உலகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், பொது வெளிப்பகுதிகள், பேருந்து, அலுவல கங்கள் போன்ற இடங்களில் பெண்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், தினம் தினம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

"பெண்கள் ஒரு ஃபீனிக்ஸ் பறவையை போல... இப்பூமியில் வாழ்வதற்கு அவர் கள் மீண்டும் மீண்டும் எரிந்துகொண் டிருக்கிறார்கள், நமக்கெல்லாம் தெரியும் அவர்கள் மீண்டு வருவார்கள் என்று. ஆனால், ஒவ் வொரு முறை எரியும் போதும் அவர்களின் உயிர்போகும் வலியை உணர நாம் தயாராக இல்லை என்பதே நிதர்சனம்."

- ஜெ.அன்பரசன்

(இதில் கூறப்பட்டுள்ள நிலவரம் 2014ஆம் ஆண்டுக்கானது)
- விடுதலை ஞாயிறு மலர், 14.7.18

புதன், 4 ஜூலை, 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட உரிமம் பெற்ற முதல் இந்திய பெண்

பக்ரைன், ஜூலை 1- சவுதிஅரேபியாவில் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் பொறுப்பு ஏற்றபின் அங்கு பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொண்டு வருகிறார். ஊழலற்ற ஆட்சிக் காக அரசு அலுவலகங்கள் கண்காணிக்கப்படுகின் றன. சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டன. பல ஆண்டுகளாக இங்கு பெண்கள் கார் ஓட்ட அனுமதி இல்லை.

ஆனால் அவர் பெண்கள் கார் ஓட்ட அனுமதி வழங்கினார். அத்துடன் விளையாட்டு போட்டிகளை பெண்கள் நேரில் கண்டு ரசிக்கவும் ஒப்புதல் கொடுத்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த பெண்கள் கார் ஓட்டுவதற்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் கார் ஓட்டும் (டிரைவிங் லைசென்சு) உரிமம் பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை சாரம்மா தாமஸ் பெற்றுள்ளார்.

கேரள மாநிலம் பத்தினம் திட்டா பகுதியை சேர்ந்தவர். இவர் சவுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நர்சு ஆக பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே இந்திய ஓட்டு நர் உரிமம் வைத்துள்ளார். இந்த நிலையில் சவுதி அரேபியா வில் கார் ஓட்டுவதற்கான உரிமத்துக்கு விண்ணப்பித்திருந்தார். அவருக்கு கார் ஓட்டும் சோதனையும் கண் பரிசோதனையும் நடத்தப்பட்டது. இவற்றில் அவர் தேறியதால் ஓட்டுநர் உரிமம் வழங் கப்பட்டது. இளவரசர் உத்தரவை தொடர்ந்து ஊபர் உள்ளிட்ட கார்களின் ஓட்டுநர் பணிக்காக சவுதியில் உள்ள பெரும்பாலான பெண்கள் கார் ஓட்டும் பயிற்சி பெறுகின்றனர்.

-  விடுதலை நாளேடு, 1.7.18

செவ்வாய், 3 ஜூலை, 2018

இந்தியாவிலேயே முதல் திருநங்கை வழக்குரைஞர்

சென்னை, ஜூலை 2- ராமநாத புரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள நயினார்கோ விலை சேர்ந்த ஒரு தம்பதிக்கு மகனாக பிறந்தவர் உதயக் குமார். பரமக்குடியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 வரை படித்து, அங்குள்ள கல்லூரியில் பட்டப்படிப்பையும் முடித் தார். பின்னர் சட்டம் படிக்க விரும்பிய அவர், சேலத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் சேர்ந்து 3 ஆண்டு சட்டப்படிப்பை 2007 ஆ-ம் ஆண்டு நிறைவு செய்தார்.

சட்டக்கல்லூரியில் படித் துக் கொண்டிருந்தபோதே திரு நங்கையாக மாறிய அவர், தனது பெயரை சத்யசிறீ என்று மாற்றிக்கொண்டார். இதைத் தொடர்ந்து தனது சொந்த விருப்பத்தின்படி பெற்றோரை பிரிந்துவிட்டார்.

சட்டப் படிப்பை முடித்த தும் அவர் செங்கல்பட்டு நட ராஜ நகரில் தங்கியிருந்து மற் றொரு திருநங்கையான சர்மி ளாவுடன் இணைந்து சமூக சேவை செய்துவந்தார்.

சர்மிளா அவருக்கு ஆதர வாக இருந்ததால் தனது பெயரு டன் சர்மிளா பெயரையும் சத்யசிறீ சேர்த்துக்கொண்டார். இவர், சட்டப்படிப்பை முடித்தபோது திருநங்கை என்ற பாலினத்தின் அடிப்படையில் வழக்குரைஞ ராக பதிவு செய்ய இயலாது என்ற நிலை இருந்தது. திரு நங்கைகளை 3-ஆம் பாலினத் தவர் என்ற அங்கீகாரத்துடன் வழக்குரைஞராக பதிவு செய் யும் அனுமதிக்காக காத்திருந் தார்.

இந்த நிலையில், அவருக்கு வழக்குரைஞராக பதிவு செய்ய இந்திய பார் கவுன்சில் அனு மதி அளித்தது.

இதைத்தொடர்ந்து சத்யசிறீ சர்மிளா வழக்குரைஞராக பதிவு செய்ய தமிழ்நாடு பார் கவுன் சிலுக்கு விண்ணப்பித்தார். அவ ரது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு பார் கவுன்சில் வழக்குரைஞராக பதிவு செய்ய அவருக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பார் கவுன்சிலில் நேற்று முன்தினம் நடந்த பதிவு நிகழ்ச்சியில் சத்யசிறீ சர்மிளா கலந்துகொண்டு வழக்குரைஞ ராக தனது பெயரை பதிவு செய் தார். இதன்மூலம் இந்தியாவி லேயே முதன்முறையாக திரு நங்கையான சத்யசிறீ சர்மிளா வழக்குரைஞராகியுள்ளார்.

அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், எம்.கோவிந்தராஜ், அகில இந்திய பார் கவுன்சில் இணை தலைவர் பிரபாகரன், தமிழ்நாடு பார் கவுன்சில் செயலாளர் ராஜ்குமார் மற்றும் வழக்குரைஞர்கள், திருநங்கை கள் பாராட்டு தெரிவித்தனர். வழக்குரைஞர் தொழிலை சிறப் பாக மேற்கொண்டு நீதிபதியாக வரவேண்டும் என்று அவரை நீதிபதிகள் பாராட்டினர்.

திருநங்கைகள் மட்டுமன்றி ஏழை, எளிய மக்களுக்கு சட்ட உதவி கிடைக்க பாடுபடுவேன் என்று சத்யசிறீ சர்மிளா செய்தி யாளர்களிடம் கூறினார்.

கடந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த திருநங்கையான பிரித் திகா யாஷினி இந்தியாவின் முதல் பெண் உதவி ஆய்வா ளராக சென்னையில் பணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு, 2.7.18