வெள்ளி, 2 மார்ச், 2018

பெண்களிடம் அவசியமாய் இருக்க வேண்டிய அவசர உதவி எண்கள்

♦    தமிழக அரசின் பெண்கள் அவசர உதவி எண்:1091. திடீர் ஆபத்துகள் வரும் பொழுது பெண்கள் இந்த எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம். எங்கே ஓர் இடத்தில் தனித்து விடப்பட்டாலும் அல்லது தங்க இடமில்லாதபோதும் இந்த எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம். 1091 என்ற இலவச அழைப்பு எண் எடுக்கப்படவில்லை என்றால் 044-_23452365 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். பெண் குழந்தை என்றால் 1098 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

♦    குடும்பத்தில் கணவன் மூலம் வன்கொடுமைக்கு ஆளானாலோ அல்லது வேலை செய்யுமிடத்தில் ஆண்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாலோ 044_28551155 என்ற தமிழ்நாடு மகளிர் ஆணையம் எண்ணைத் தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெற்றுக் கொள்வதோடு புகாரும் கொடுத்து உங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்குத் தீர்வையும் காண முடியும்.

♦    மனரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களையோ ஆதரவற்ற பெண்களையோ கொண்டுபோய் பாதுகாப்பாய் வைக்க வேண்டுமென்றால் 044_26530504, 044_26530599 இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம். இது, சென்னை முகப்பேரிலுள்ள விழுதுகள் தொண்டு நிறுவனத்தின் எண்ணாகும். மத்திய அரசின் நிதியுதவியுடன் இது செயல்படுகிறது.

♦    வாடகைத் தாய்களாகப் போய் புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள், “உலக வாடகைத் தாய்களின் உரிமைகள் அமைப்பு’’ எண்ணான 044_26184392, 91713 133424 என்ற இரு எண்களைத் தொடர்பு கொண்டு வாடகைத் தாய் என்றால் என்ன? எப்படிச் செல்ல வேண்டும்? எப்படி ஏமாறக் கூடாது என்ற விழிப்புணர்வை அடைய முடியும்.

♦    ரயிலில் செல்லும்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டாலோ அல்லது ரயில் சம்பந்தப்பட்ட தகவல்களை தெரிந்து கொள்ளவோ 044_25353999 மற்றும் 9003161710, 9962500500 எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

♦    சென்னை கல்லூரிகளில் மாணவர்களால் கேலி, கிண்டல் செய்து பரிகாசம் செய்யப்பட்டால் 9500099100 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி கொடுத்தால் போதும், உடனடியாக காவல் துறையால் நடவடிக்கை எடுக்கப்படும்.

♦    பள்ளிக் குழந்தைகளை வாகனங்களில் அளவுக்கு அதிகமாய் ஏற்றிச் சென்றாலோ, அதி வேகமாய் வாகனத்தை ஓட்டிச் சென்றாலோ 044_24749002 மற்றும் 044_26744445 என்ற எண்களைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

    நாம் வாங்கும் பொருட்களின் தரம் மற்றும் எடை குறைவாக இருந்தாலோ, ஏமாற்றப்படுகிறீர்கள் என்று உணர்ந்தாலோ மாநில நுகர்வோர் புகார்களுக்காகவே தொடங்கப்பட்டிருக்கும் இலவச அழைப்பு எண்: 180011440 மற்றும் 9445464748, 7299998002, 7200018001, 044_28592828 என்ற எண்களை தொடர்பு கொண்டு புகார் கொடுப்பதோடு ஆலோசனைகளையும் பெறலாம்.

♦    பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது. நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது, குடித்துவிட்டோ, அலைபேசி பேசிக்கொண்டோ ஓட்டுநர் வாகனத்தை இயக்குவது போன்ற புகார்களுக்கு 9383337639 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி மற்றும் புகார் அளிக்கலாம்.

    நீங்கள் காவல் நிலையத்தில் கொடுக்கும் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத காவலர் மீதே புகார் கொடுக்க 044_25615086 என்ற எண்ணைப் பயன்படுத்தலாம்.

- இந்துமதி, சென்னை

 - உண்மை இதழ், 1-15.11.17

பெரும் பளு தூக்க பெண்ணால் முடியும்! 70 கிலோ தூக்கி 8 தங்கப் பதக்கம்!

காமன்வெல்த் போட்டியில் சேலம் மாணவி சாதனை!

நிவேதா படித்த பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த, இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில், பேண்டு வாத்தியங்கள் முழங்க, கழுத்தில் தொங்கிய தங்கப் பதக்கங்களுடன், வழிநெடுகிலும் மக்களின் உற்சாக வரவேற்பைப் பெற்றபடி சேலம் நகரை கம்பீரமாக வலம் வந்தார் நிவேதா.

பிளஸ்_டூ மாணவியான நிவேதா, சென்ற ஆண்டு ராஜஸ்தான் உதய்பூர் நகரில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பளு தூக்கும் போட்டியில் 19 வயதுக்குரிய பிரிவில் 4 தங்கப் பதக்கங்களை வென்றே காமன்வெல்த்துக்குத் தகுதிபெற்றார்.

20 நாடுகள் கலந்துகொண்ட இந்தப் போட்டிகள் இந்த வருடம் செப்டம்பர் 10 முதல் 17ஆம் தேதிவரை தென்ஆப்பிரிக்காவின் பாட்செப்ஸ்ட்ரூம் நகரில் நடந்தது. இதில் 19 வயதுக்குட்பட்டோருக்கான (சப்_ஜூனியர்) பளு தூக்கும் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் தமிழ்நாட்டிலிருந்து சென்ற ஒரே வீராங்கனை நிவேதா மட்டுமே. அந்தப் போட்டிகளில் எக்யுப்டு பிரிவில் 4 தங்கங்களையும், அன் எக்யுப்டு பிரிவில் 4 பதக்கங்களையும் வென்றதுடன், அன் எக்யுப்டு பிரிவில் டெட் லிப்ட்டில் 95 கிலோ எடையும் பெஞ்ச் பிரிவில் 45 கிலோ எடையும் மற்றும் ஸ்குவாடில் 70 கிலோ எடையும் தூக்கி இதற்கு முந்தைய காமன்வெல்த் சாதனைகளை முறியடித்து வரலாற்றுச் சாதனைப் படைத்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்கிறார்.

“என் அப்பாதான் என் ரோல் மாடல். மூன்றாம் வகுப்பு முதலே இந்தப் பயிற்சியில் ஈடுபட்டு பல போட்டிகளில் பங்கேற்று மாவட்டம், மாநில அளவில் முதலிடமும் தேசிய அளவில் பல பரிசுகளையும் வென்றேன். இப்போது, பெருமைக்குரிய காமன்வெல்த் போட்டிகளிலும் இந்தியாவின் சார்பில் பதக்கங்களை வென்றதுடன், புதிய சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளேன். நான் படிக்கும் பள்ளியான விநாயகா வித்யாலயாவின் நிர்வாகமும் என் முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருந்ததைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.’’

இவரது தந்தை வெங்கடேஸ்வரன் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில், பொறுப்பாளராக, குறைவான வருமானமே ஈட்டி வருகிறார். பளு தூக்குவதில் சிறு வயதில் ஏற்பட்ட ஈர்ப்பினாலும், வாய்ப்புகளின்றி தன்னால் சாதிக்க முடியாததைத் தன் பிள்ளைகள் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலும் வீட்டிலேயே சொந்தமாக உடற்பயிற்சிக் கூடம் (ஜிம்) அமைத்து, தம் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் பயிற்சி தந்து வருகிறார். எட்டாம் வகுப்பு படிக்கும் இவரது தங்கை சோனா லட்சுமியும் பளு தூக்குவதில் சாதித்து வருகிறார்.உலகப் போட்டியிலும் அவர் சாதனை படைக்க நமது வாழ்த்துகள்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரியார் விரும்பிய புரட்சிப் பெண்2013ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு அடித்துச் செல்லப்பட்ட ஊர்களில் ஒன்று டியோலி வானிகிராம். இந்த ஊர் கேதார்நாத்திலிருந்து 75 கி.மீ. தூரத்தில் உள்ளது. அந்த வெள்ளத்தில் இந்த ஊரைச் சேர்ந்த 34 ஆண்கள் உயிரிழந்து விட்டனர். அதனால் அவர்களின் மனைவியர் விதவைகளாகி விட்டனர். அவர்களில் ஒருவர்தான் வினிதா தேவி என்கிற 20 வயதுப் பெண்.

அவள் அவர்களுடைய சம்பிரதாயப்படி விதவைக் கோலத்தில் வாழ்ந்து வந்தாள். கணவன் இறந்த இரண்டே மாதங்களில் தான் புகுந்த இல்லத்தை விட்டு தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாள். உடல்நலமில்லாத தாய்க்கு உதவியாய் வாழ்ந்தார். அப்போது இந்தச் சமூகத்தில் விதவையாக இருப்பது எவ்வளவு கொடுமை என்பதை உணர்ந்தார். அவளிடம் மற்றவர்கள் பேசக்கூடத் தயாராக இல்லை.

இந்த நிலையில்தான் ராகேஷ் என்ற இளைஞரைச் சந்திக்கிறார். அதே கிராமத்தில் வசித்த தன் பாட்டியைச் சந்திப்பதற்காக ராகேஷ் அடிக்கடி அங்கு வந்துகொண்டிருந்தார். ஓர் 20 வயதுப் பெண் வெள்ளைச் சேலையில் இருப்பதைப் பார்த்ததும் அவளை மணந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் உண்டாயிற்று. அவருடைய பெற்றோர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும் மகனின் பிடிவாதத்தால் ஒத்துக்கொண்டனர்.

ராகேஷ்_வினிதா தேவியின் பெற்றோரைச் சந்தித்து அவர்களுடைய அரைமனச் சம்மதத்துன் பதிவுத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் கணவன் மனைவியாக வாழும் நிலையில், இவர்கள் கேவலமாகப் பேசப்பட்டனர்.

மரபுப்படி செய்யப்பட்ட விதவைத் திருமணம்!

அந்த இளம் உள்ளங்கள் வருந்தியதோடு இதை எப்படிச் சமாளிப்பது என்று திட்டமிட்டனர். இறுதியில் நாம் மரபுப்படியே அனைத்து சம்பிரதாய சடங்குகளுடன் மீண்டும் மணம் புரிந்து விதவை மறுமணம் செய்ய முடியும். அது தவறல்ல என்று காட்ட வேண்டும் என்று விரும்பினர்.
அதன்படி, 16.07.2017 அன்று மரபு மணம் செய்துகொண்டனர். இவர்களுடைய திருமணத்தில் பல நூற்றுக்கணக்கான விதவைகள் உற்சாகத்தோடு பங்கு கொண்டனர்! இத்திருமணம் தங்களுக்கெல்லாம் வாழ்வில் ஒரு நம்பிக்கையைத் தந்துள்ளது என்று கூறினர்.

20 வயதில் மரபுகளையும், சமுதாயக் கட்டுப்பாடுகளையும் தகர்த்து தன்னை விரும்பிய ஆணை மறுமணம் செய்துகொண்ட அந்த விதவைப் பெண் பெரியார் விரும்பிய புரட்சிப் பெண் ஆவார்!

- பெரியார் பித்தன்

- உண்மை இதழ், 1-15.11.17

பாரதமாதாவில் மாதரசிகள்?

2017ஆம் ஆண்டில் அரசியலில் பெண்கள் எனும் தலைப்பில் இன்டர் பார்லிமெண்டரி யூனியன் மற்றும்  அய்.நா.பெண்கள் அமைப்பின் சார்பில் பெண்கள் பிரதிநிதித்துவமின்மைகுறித்து ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகையில் சரி பகுதியளவில்   பெண்கள் உள்ளனர். பெண் களின் பிரதிநிதித்துவம் உரிய அளவில் இல்லாத நிலையே  தொடர்ந்து கொண்டி ருக்கிறது.

9 விழுக்காடு பெண்கள் புள்ளிவிவரம் வெளியீடு

நாடுமுழுவதும் உள்ள சட்டமன்ற உறப்பினர்கள் 4,118 பேரில் பெண்கள் 9 விழுக்காட்டளவில்தான் உள்ளனர்.

பீகார், அரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 14 விழுக்காடும், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்க மாநிலங்களில் 13 விழுக்காடும், பஞ்சாப் மாநிலத்தில் 12 விழுக் காடும் பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

நாடாளுமன்ற இரு அவைகளில் பெண்கள் எண்ணிக்கை

2017ஆம் ஆண்டில் அரசியலில் பெண் கள் எனும் தலைப்பில் இன்டர் பார்லி மெண்டரி யூனியன் மற்றும்  அய்.நா. பெண்கள் அமைப்பின் அறிக்கையின்படி, இந்தியாவில் மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 542 பேரில் 64 பேர் பெண்கள் உள்ளனர். மாநிலங்களவையில் நாடாளு மன்ற உறுப்பினர்கள் 245பேரில் 27பேர் பெண்கள் உள்ளனர். அரசு நிறுவனங்கள் மற்றும் நாடாளுமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் கொண்ட 227 நாடுகளின் பட்டியலில் இந்தியா 148ஆம் இடத்தில் உள்ளது.

பெண்களின் உரிமைகளை அரசு ஆதரிக்கும் வகையில், இந்த ஆண்டுக்கான புள்ளிவிவரப் பட்டியல் கொண்ட பிங்க் நிறத்தில் அட்டை கொண்ட ஏட்டை  பொரு ளாதார முதன்மை ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் வெளியிட்டார்.
அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கு தற்கான முற்போக்கு சமுதாயத்தை கட்டிய மைத்திட பெண்களுக்கு உரிமைகள் அளிக் கப்பட வேண்டும் என்பதை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

முத்தலாக் சட்டம் பெண்உரிமை என்றால் பெண்களுக்கான இடஒதுக்கீடு நிலுவை ஏன்?

சமூக ஆய்வு மய்ய இயக்குநர் ரஞ்சனா குமாரி கூறியதாவது:

பாலின பிரச்சினைகளில் அரசியல் ரீதியில் மட்டுமே அரசு அணுகி வருகிறது. முத்தலாக் பிரச்சினையில்  பாலின உரிமை களுக்கானதுதான் அரசின் முடிவு என்றால், பெண்களுக்கான இடஒதுக்கீட்டு சட்டம் ஏன் இன்னமும் நிலுவையில் இருந்துவருகிறது? என்று கேள்வி எழுப் பினார்

- விடுதலை ஞாயிறு மலர், 24.2.18