முதல் பெண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதல் பெண் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

தஞ்சையில் முதல் பெண் எஸ்.பி. கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து

தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப் பேற்றிருக்கும் ரவளரிப்பிரியா (தஞ்சை மாவட்ட முதல் பெண் காவல்துறை கண்காணிப்பாளர்அவர்களை சந்தித்து தந்தை பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்?" ஆங்கில புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டதுஉடன் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங்மண்டலத் தலைவர் முஅய்யனார்செல்வரத்தினம்.

திங்கள், 22 மார்ச், 2021

உலக வர்த்தக அமைப்புக்கு முதல் பெண் தலைவர்

சனி, 14 மார்ச், 2020

கிரீஸின் முதல் பெண் அதிபர் பதவியேற்பு

ஏதென்சு, மார்ச் 14- தென் கிழக்கு அய்ரோப்பிய நாடான கிரீ ஸின் முதல் பெண் அதிபரா கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கேதரீனா சாகில்லாரொ போலு, வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கிரீஸ் அரசியலில் பெண் கள் மிகக் குறைந்த எண்ணிக் கையிலேயே உயர் பதவிக்கு வருவதாகவும் பிரதமர் கிரி யாகோஸ் மிட்ஸோதாகிஸ் தலைமையிலான அமைச்சர வையில் ஏறத்தாழ அனைவ ருமே ஆண்களாக இருப்பதா கவும் விமர்சிக்கப்பட்டு வரு கிறது.

இந்த நிலையில், அந்த நாட்டின் அதிபர் பதவிக்கு உயர்நீதிமன்ற முன்னாள் நீதி பதியான கேதரீனா சாகில்லா ரொபோலுவின் பெயரை மிட்ஸோதாகிஸ் கடந்த ஜன வரி மாதம் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில், அவருக்கு ஆதரவாக 261 வாக் குகளும், எதிராக 33 வாக்கு களும் பதிவாகின.

இந்த நிலையில், சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு அவர் நாட்டின் அதிபராக தற்போது பொறுப்பேற்றுக் கொண்டு உள்ளார்.

கரோனா வைரஸ் பரவ லைத் தடுப்பதற்கான முன் னெச்சரிக்கை நடவடிக்கை யாக, அவரது பதவியேற்பு நிகழ்ச்சியின்போது நாடாளு மன்றத்துக்கு ஒரு சில உறுப் பினர்களே வந்திருந்தனர் என்று தகவல்கள் தெரிவிக் கின்றன.

- விடுதலை நாளேடு 14 3 20

திங்கள், 9 டிசம்பர், 2019

இந்திய கடற்படையில் முதல் பெண் விமானி பொறுப்பு ஏற்பு

கொச்சி, டிச.3 இந்திய கடற்படை யில் பயிற்சியை முடித்து விமானி களாக 2 பெண்கள் தேர்வு செய்யப்பட் டுள்ளனர்.

பிரதிபா சிங் மற்றும் ஷிவாங்கி சிங் ஆகியோர் சமீபத்தில் விமானி களாக பயிற்சிகளை முடித்து சான்றிதழையும் பெற்றுள்ளனர். இவர்கள் இருவருக்கும் இந்தியா முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

மேலும், இந்த 2 பெண்களும் விமானிகளாக இணைந்துள்ளது, இந்திய கடற்படைக்கே பெருமையை சேர்த்துள்ளது என்று சச்சின் டெண்டுல்கரும் தனது சுட்டுரையில் பிரதிபா சிங் மற்றும் ஷிவாங்கி சிங் ஆகியோருக்கு பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் ஷிவாங்கி நேற்று கேரள மாநிலம் கொச்சி கடற்படையில் தனது பணியை தொடங்கினார்.

இதன் மூலம் இந்திய கடற்படையில் இணைந்த முதல் பெண் விமானி என்ற பெயரையும் அவர் தட்டிச்சென்றார்.

ஷிவாங்கி பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்தவர். நாளை (புதன்கிழமை) இந்தியாவின் கடற்படை தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்திய கடற்படையில் முதல் பெண் விமானியாக ஷிவாங்கி பணியை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு 3 12 19

புதன், 20 பிப்ரவரி, 2019

விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக பொறியாளராக பெண் அதிகாரி நியமனம்

பெங்களூரு, பிப்.18 இந்திய விமானப்படை வர லாற்றில் முதல் முறையாக, கினா ஜெய்ஸ்வால் என்ற பெண், விமான பொறியாள ராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீப காலமாக, பெண் களுக்கு அனைத்து துறைகளி லும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வரை, இந்திய விமானப்படையில் விமான பொறி யாளர் பணிக்கு, ஆண்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த பணிக்கு, முதல் முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, ராணுவ அமைச் சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆறு மாதங்கள் கடுமையான பயிற்சிகளை நிறைவு செய்த, சண்டிகாரை சேர்ந்த பெண் அதிகாரி, கிமா ஜெய்ஸ் வால், விமான பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிக்கலான விமான தொழில் நுட்பங்களை கண்காணித்து இயக்கும் பணியை, அவர் மேற்கொள்வார். ஹிமா ஜெய்ஸ்வால், 2015 ஜன., 5இல், இந்திய விமானப்படையில் சேர்ந்தார்.  நிலத்தில் இருந்து விமானத்தை நோக்கி செலுத் தப்படும் ஏவுகணை கண்காணிப்பு பிரிவில், பேட்டரி கமாண்டராகவும், ஏவுகணை செலுத்தும் பிரிவு தலைவ ராகவும், பணியாற்றி உள்ளார்;பின், விமான பொறியியல் படிப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். பயிற்சிகளை வெற்றி கரமாக நிறைவு செய்துள்ள இமா, நாட்டின் முதல், பெண் விமான பொறியாளராக நியமிக்கப்பட் டுள்ளார். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 18.2.19

செவ்வாய், 3 ஜூலை, 2018

முதல் பார்வையற்ற பெண் அய்.ஏ.எஸ். அதிகாரி துணை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்பு

புதுடில்லி, ஜூலை 2- மகாராஷ் டிரா மாநிலம் உஹான்ஸ்நகரைச் சேர்ந்தவர் பிரன்ஞால் பாடில். சிறு வயதில் கண்பார்வையை இழந்த இவர் தனது தன்னம் பிக்கையை கைவிடவில்லை.

பெற்றோரின் உதவியுடன் தனது பட்டப்படிப்பை முடித் தார். 2014ஆம் ஆண்டு சிவில் சர்விஸ் தேர்வு எழுதினார். அதில் 773ஆவது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்றார். இருப்பினும் அவரால் மாவட்ட ஆட்சியராக முடியவில்லை. இதையடுத்து 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்று அய்.ஏ.எஸ். அதிகாரியானார். பின்னர் லால் பகதூர் சாஸ்திரி தேசிய அகாடமியில் பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில், கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திற்கு துணை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள் ளார். இரண்டு கண் பார்வையையும் இழந்த பெண் அய்.ஏ.எஸ். அதிகாரியாக பொறுப்பேற்ற சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் இந்தியாவின் முதல் பெண் பார்வையற்ற பெண் அய்.ஏ.எஸ். அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. விடா முயற்சியால் உயரத்தை தொட்ட இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

- விடுதலை நாளேடு, 2.7.18

புதன், 28 பிப்ரவரி, 2018

சவுதி அரேபியாவில் துணை அமைச்சராக முதல் முறையாக பெண் நியமனம்

துபாய், பிப். 28- எண்ணெய் வளம் மிகுந்த சவுதி அரேபியா வில் மன்னர் ஆட்சி நடக்கிறது. சல்மான் மன்னர் ஆக இருக் கிறார். அவரது மகன் முகமது பின் சல்மான் பட்டத்து இளவ ரசராக உள்ளார்.

இவர் பொறுப்பு ஏற்றதும் சவுதி அரேபியாவில் இருந்து பல அதிரடி சீரமைப்பு நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. பெண்கள் கார் ஓட்டவும், தொழில் தொடங்கவும், கால்பந்து போட்டிகளை கண்டுகளிக்கவும் அனுமதி வழங்கினார். ஏற்கெ னவே இருந்த தடைகளை நீக் கினார்.

லஞ்ச ஊழலில் ஈடுபட்ட இளவரசர்கள், அமைச்சர்கள், கோடீஸ்வரர்கள் என 50-க்கும் மேற்பட்டோரை கைது செய் தார். அவர்களை ரியாத்தில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் சிறை வைத்தார்.

இந்தநிலையில் சவுதி அரே பியாவில் ராணுவ தளபதிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ள னர். ராணுவம், விமானப்படை தளபதிகள் மற்றும் உயர் அதி காரிகள் பணிநீக்கம் செய்யப் பட்டனர். இந்த நிலையில் துணை அமைச்சராக பெண் ஒருவரையும் மன்னர் சல்மான் நியமித்துள்ளார். சமூக முன் னேற்றம் மற்றும் தொழிலாளர் நலத்துறை துணை அமைச்சராக டாக்டர் தாமாதர் பின் யூசுப் அல்-ரம்மா என்ற பெண் நிய மிக்கப்பட்டுள்ளார்.

இதுபோன்ற முக்கிய துறை யில் பெண் ஒருவர் துணை அமைச்சராக நியமிக்கப்படுவது அந்த நாட்டில் இதுவே முதல் முறையாகும். இவர் மான் செஸ்டர் பல்கலைக்கழகத்தில் ரோடியோலஜி மற்றும் மருத் துவ பொறியியல் துறையில் பி.எச்.டி. படித்தவர். 2016இல் சவுதி அரேபியாவின் மனித உரி மைகள் ஆணைய உறுப்பினராக இருந்தார்.

- விடுதலை நாளேடு, 28.2.18