வியாழன், 2 ஜூலை, 2015

மதத் தடைக்கு அளவேயில்லையா? முசுலிம் பெண்ணுக்கு விநோதத் தடை

     

பரேய்லி, ஜூலை 2_ தார்கா ஆலா ஹஸ்ரத் பகுதியில் சன்னி பரேல்வி மார்காஸ் கடைகளில் முசுலீம் பெண்களுக்கு விநோதமான தடையை விதிக்கப்பட்டுள்ளதாம். அந்த கடையில் பெண்கள் வியாபாரம் செய்யலாம் ஆனால், பெண்களிடம் மட்டுமே வியாபாரத்தை செய்திட வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது. ஆண்களி டம் வியாபாரத்தை செய் யக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. அய்க்கிய பேரரசான இங்கிலாந்தின் பக்கிங்காம் பகுதியில் சாய்மா ஷெயிக் என்பவர் வணிகம் செய்து வருகிறார். அவருக்குத் தான் அவரைச்சார்ந்த வகுப்பினர் இத்தகைய விநோதமான தடையை விதித்துள்ளனர்.

பெண்கள், ஆண்களி டம் வியாபாரம் செய்யக் கூடாது என தடை விதித்துள்ளவரான முப்தி மொகம்மத் சலீம் நூரி என்பவரிடம், முசுலீம் வகுப்பில் பெண்கள் வியா பாரம் செய்ய அனுமதி இருக்கிறதா? என்று கேட்டபோது, ஷேக்குகள் பதிலாகக் கூறியது மிகவும் அதிசயிக்கதக்கதாக இருந் தது. அவர் பதில் அளித்த போது, மொகம்மத் நபி யின் முதல் மனைவி ஹஸ் ரத் கதீஜா மெக்காவில் பெரு வணிகராகத் திகழ்ந் தவர் ஆவார். உணவு தானியங்களை சிரியா, லெபனான், ஏமன் மற்றும் பிற நாடுகளுக்கு இடைத் தரகர்கள்மூலமாக அந்தக் காலத்திலேயே ஏற்றுமதி செய்துவந்த பெருவணிகர் ஆவார் என்று கூறினார்.
இருபாலரும் சந்தித் துக் கொள்ளும்போது ஒரு சில கட்டுப்பாடுகளை முசுலீம் விதித்துள்ளது.  நூரி கூறும்போது, பெண்கள் வணிகத்தில் ஈடுபடும்போது, ஆண்களி டம் வணிகத்தைச் செய்ய வேண்டுமானால், இடை யில் ஒருவரை நியமித்தாக வேண்டும் (குடும்ப உறுப் பினராக இருந்தால், பர்தா அணியவேண்டிய அவ சியம் இல்லை) வியா பாரம் செய்யக்கூடிய பெண்சார்பிலோ அல்லது இடைத்தரகராகவோ ஆண்களிடம் வியாபாரம் குறித்து தொடர்பு கொள்ள வேண்டியவர் ஆவார். அதேபோல் பெண்கள் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள தொழில்களாக இசுலாம் நெறிக்கு முரணாக உள்ள தொழில்களாக பன்றி மற்றும் மது ஆகிய தொழில் களில் ஈடுபடுவதற்குத் தடை உள்ளது என்றார்.
ஆண்களிடையே பெண்கள் வியாபாரம் செய்யக்கூடாது என்கிற அறிவிப்பானது கடும் விமர்சனத்துக்கு ஆளாகி யுள்ளது.
சுபான் பதிப்பக நிறுவ னத்தின் இயக்குநரான ஊர்வசி பட்டாலியா என்பவர் கூறுகையில், இந்தத் தடை என்பது (ஃபத்வா) அறிவிப்பு தானே ஒழிய அதுவே சட்டம் அல்ல. இந்த அறிவிப்பில் எழும் கேள்வி என்னவென்றால், மாபெரும் தொகுப்பாக உள்ள மக்களிடம் இது போன்ற அறிவிப்புகளை, மக்கள் இதைச் செய்ய வேண்டும் அல்லது இதைச் செய்யக்கூடாது என்று கூறிட, அதிகாரம் செய்வ தற்கு யார் உரிமை வழங் கினார்கள் என்று ஊர்வசி பட்டாலியா கேட்டுள்ளார்.

வியாழன், 02 ஜூலை 2015   விடுதலை நாளேடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக