திண்டுக்கல், பிப். 10- திருநங்கைகள் சமுதாயத்தில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கு போராடி வருகின்றனர். அதே நேரம் திருநங்கைகளுக்கு வேலை கிடைக்குமா? என்ற கேள்வியை தகர்த்து ஒரு சில திருநங்கைகள் திறமையால் சாதித்து வருகிறார் கள். சுயதொழில் மட்டுமின்றி ஒன்றிய, மாநில அரசு பணிகளிலும் திரு நங்கைகள் அசத்தி வருகின்றனர்.
அந்த வகையில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டுப் பரிசோதகராக திருநங்கை சிந்து 8.2.2024 அன்று பதவி ஏற்றார். இதன்மூலம் தெற்கு ரயில்வேயின் முதல் திருநங்கை பயணச்சீட்டுப் பரிசோதகர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.
இதுதொடர்பாக திருநங்கை களுக்கு முன்னுதாரணமாக திகழும் சிந்து கூறுகையில், எனது சொந்த ஊர் நாகர்கோவில் ஆகும். நான் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் எர்ணா குளத்தில் ரயில்வே பணியில் சேர்ந் தேன். 14 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லுக்கு மாறுதலாகி வந் தேன். ரயில்வே மின்சாரப் பிரிவில் பணியாற்றினேன்.
இதற்கிடையே சிறு விபத்தில் எனக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மின்சாரப் பிரிவில் இருந்து வணிக பிரிவுக்கு மாற்றப் பட்டேன். பயணச்சீட்டுப் பரிசோ தகர் பயிற்சியை முடித்து, பதவி ஏற்றுள்ளேன். இது எனது வாழ் நாளில் மறக்க முடியாத நிகழ்வு ஆகும். திருநங்கைகள் மனம் தளர்ந்து விடக்கூடாது.
கல்வி, உழைப்பு மூலம் எந்த உயரத்தையும் எட்ட முடியும். அதை மனதில் கொண்டு திருநங் கைகள் முன்னேற வேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக