வெள்ளி, 20 மே, 2022

தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் நியமனம்

 

சென்னை, பிப்.19 தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவராக ஏ.எஸ்.குமாரியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் மாநில மகளிர் ஆணைய தலைவி மற்றும் 9 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். இந்த ஆணை யம் பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறது.பெண்கள் பாதுகாப்புக்கு தேவையான அதிகாரங்களைப் பெற்ற ஒரு சட்ட ரீதியான அமைப்பாகும். தமிழ்நாடு மகளிர் ஆணையம் பெண்கள் சம்பந்தப்பட்ட சட்டங்கள் பற்றி பொதுமக்களிடையே விழிப் புணர்வு ஏற்படுத்த பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்தாண்டு தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக் கப்பட்டனர். இந்நிலையில், இந்த ஆணையம் தற்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு மகளிர் ஆணைய தலை வராக ஏ.எஸ்.குமாரியை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. மேலும், ஆணையத்தின் உறுப்பினர்களாக, மாலதி நாரா யணசாமி, கீதா நடராஜன், சீதாபதி, மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்பி எஸ்.கே.பவானி ராஜேந்திரன்,   சட்டமன்ற உறுப்பினர்கள் கே.சிவகாமசுந்தரி, எம்.வரலட்சுமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக