மகளிர் மாண்பு

பெண்களின் சிறப்புகள், பெண்ணுரிமை மற்றும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றி இடம் பெறும் பகுதி!

சனி, 9 ஜூலை, 2022

நோபல் பரிசு பெற்ற முதல் இஸ்லாமிய பெண்



   July 09, 2022 • Viduthalai

பெண்கள் தங்கள் திறமையையும், தைரி யத்தையும் கையாண்டு வாழ்வில் அவ்வப்போது வரும் தடைகளையும், விமர்சனங்களையும் தாண்டி ஜெயித்து வருகிறார்கள். அவ்வாறு, தன் வாழ்க்கை முழுவதுமே, மனித உரிமைகளை மீட் டெடுப்பதிலும், பெண்கள், குழந்தைகள், அகதிகள் ஆகியோரின் உரிமைகளை மேம் படுத்துவதிலும் மற்றும் பாதுகாப்பதிலும் தன்னை அர்ப்பணித் திருப்பவர் ‘ஷிரின் எபாடி’. ஈரான் நாட்டைச் சேர்ந்த இவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். 

ஆரம்ப கால வாழ்க்கை: 

ஈரானில் உள்ள ஹமதானில் 1947ஆம் ஆண்டு பிறந்தார், ஷிரின் எபாடி. அவரின் தந்தை ஒரு பேராசிரியர் என்பதால், தன் மகளை நன்றாக படிக்க வைத்தார். சட்டம் மீது அதிக ஆர்வம் இருந்ததால் கல்லூரி யில் சட்டத் துறையை தேர்ந்தெடுத்தார் ஷிரின். படிப்பை முடித்தவுடன், சட்ட பயிற்சி மேற்கொண்ட பிறகு, 23 வயதில் ஈரானின் முதல் பெண் நீதிபதிகளில் ஒருவரானார். பின்பு 1975ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவருக்கு நெகர் மற்றும் நர்கெஸ் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். 

சட்டத்துறையில் சந்தித்த தடைகள்: 

தீர்ப்புகளை வழங்கும் விதத்தில் வெகுவாக அனைவரையும் கவர்ந்தார். 1975ஆம் ஆண்டு ஈரான் நாட்டின் தெஹ்ரானில் உள்ள 26ஆவது பிரதேச நீதிமன்றத்தின் தலைமை மாஜிஸ்திரேட் டாக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவியை அலங்கரித்த இளம் மற்றும் முதல் பெண்மணி இவரே. 

1979ஆம் ஆண்டு ஈரானில் இஸ்லா மியப் புரட்சி வெடித்தது. புரட்சியாளர்கள், ‘பெண்கள் நீதித்துறையில் இருக்கக் கூடாது. அவர்கள் தீர்ப்பு வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது’ என்று கூறி கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் அனைத்து பெண் நீதிபதிகளும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். 

வழக்குரைஞர் உரிமம் இருந்ததால் 1992ஆம் ஆண்டு தனிப்பட்ட வழக்குரை ஞர் பயிற்சியை தொடங்கினார்.அரசியல் மற்றும் மனித உரிமை வழக்குகளை கையாள்வதில் துணிந்து செயல்பட்டார். நாட்டையே உலுக்கிய பல அரசியல் வழக்குகளை கையாண்டார். இவற்றால் கோபம்கொண்ட ஈரான் குடியரசு, அர சுக்கு எதிராக பொய்களை பரப்பி வரு கிறார் என்று அவரை சிறையில் அடைத் தது. மேல்முறையீடு மற்றும் பன்னாட்டு அழுத்தம் காரணமாக பின்னர் அவரது சிறை தண்டனை அபராதமாக மாற்றப்பட்டது. 

மனித உரிமைகளை மீட்டெடுப்பதற்கு, குறிப்பாக பெண்கள், குழந்தைகளின் உரிமையை பாதுகாக்கும் சேவை செய்த தால் 2003ஆம் ஆண்டு அமைதிக்கான ‘நோபல் பரிசு’ ஷிரின் எபாடிக்கு வழங்கப் பட்டது. நோபல் பரிசு பெற்ற முதல் ஈரானிய மற்றும் முதல் இஸ்லாமிய பெண் ஷிரின். தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை மனித உரிமைகளின் பாது காவலர்களுக்காகவும், அரசியல் கைதி களின் குடும்பங்களை ஆதரிக்கவும் பயன் படுத்தினார். அவர் அமைத்த மய்யம், மனித உரிமை அமைப்புகளில் முக்கிய மானதாகத் திகழ்ந்தது. அதற்கு பன்னாட்டு கவுரவம் கிடைத்தது. 

தொடர்ந்து வலுத்த ஈரான் அரசாங் கத்தின் எதிர்ப்பால், இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் புகுந்தார். நாடு கடத்தப்பட்டார். இருப்பினும் தொடர்ந்து பெண்கள், குழந் தைகள், மனித உரிமைகளை மீட்டெடுப் பதிலும், அகதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் ஈடுபட்டு வருகிறார்.

நன்றி: 'சமரசம்', ஜூன் மாத இதழ்

இடுகையிட்டது parthasarathy r நேரம் முற்பகல் 2:48
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: இஸ்லாமியப் பெண், நோபல் பரிசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)
Powered By Blogger

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

லேபிள்கள்

  • 2018
  • அமைச்சர்
  • அமைச்சரவை
  • அமைதி
  • அரேபியா
  • அவசர எண்கள்
  • அனுமதி
  • ஆட்டோ
  • ஆணையம்
  • ஆர்எஸ்எஸ்
  • ஆஸ்திரேலியா
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீடு
  • இந்துமதம்
  • இரயில்வே
  • இராணுவம்
  • இஸ்லாமியப் பெண்
  • உரிமை
  • ஒலிம்பிக்
  • ஒற்றை பத்தி
  • ஓவியம்
  • கடல்
  • கணவன்-மனைவி
  • கபடி
  • கர்ப்பத்தடை
  • கருக்கலைப்பு
  • கருச்சிதைவு
  • கல்வி
  • கலந்துரை
  • கனடா
  • கார்
  • காவல்துறை
  • காவலர்
  • குங்குமம்
  • கேரளா
  • கொடுமை
  • கோயில்
  • சட்ட திருத்தம்
  • சட்டம்
  • சமத்துவம்
  • சவுதி
  • சாதனை
  • சுயமரியாதை பெண்கள்
  • சொத்து
  • சொத்துரிமை
  • தங்க பதக்கம்
  • தடுப்பூசி
  • தமிழர்
  • தலைமை நீதிபதி
  • திருச்சி
  • திருமணம்
  • துக்ளக்
  • துணைக்கோள்
  • துப்பாக்கி சுடுதல்
  • நடிகை
  • நன்றி
  • நியூசிலாந்து
  • நீச்சல்
  • நீதிமன்றம்
  • நோபல்
  • நோபல் பரிசு
  • படகு
  • படை
  • பதிலடி
  • பழங்குடி
  • பளு
  • பாகிஸ்தான்
  • பார்வையற்றவர்
  • பாரதி
  • பாலியல் வன்கொடுமை
  • பாஜக
  • பெண் அடிமை
  • பெண் பாதுகாப்பின்மை
  • பெண் விடுதலை
  • பெண்கள்
  • பெண்கள் சுவர்
  • பெண்ணுரிமை
  • பெரியார்
  • போராளி
  • மக்களவை
  • மகளிர்
  • மயிலாடன்
  • மருத்துவர்
  • மல்யுத்தம்
  • மலையேற்றம்
  • மறுமணம்
  • மாற்றம்
  • மின்சாரம்
  • முத்துலட்சுமி
  • முதல் திருநங்கை
  • முதல் பெண்
  • முதல் மருத்துவர்
  • முதல்வர்
  • முதன்மை
  • மெக்கா
  • மெட்ரோரெயில்
  • மொட்டை
  • வங்கி
  • விடுமுறை
  • விதவை
  • விமானப்படை
  • விருது
  • வில்
  • விளையாட்டு
  • வைட்டமின்
  • வைரஸ் நோய்
  • ஸ்கை டைவிங்
  • WTO

இந்த வலைப்பதிவில் தேடு

பக்கங்கள்

  • முகப்பு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • ராணுவக்கல்லூரியின் முதல் பெண் முதல்வர்
    புனேவிலுள்ள ராணுவ மருத்துவக் கல்லூரி 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சுமார் 70 ஆண்டு பாரம்பரியம் கொண்ட இந்தக் கல்லூரியின் முதல்வராக முத...
  • முலைவரிச்சட்டம்
    #இந்தியாவில் சாதிக்கொடுமை தலைவிரித்து ஆடிய காலத்தில் '#முலைவரிச்சட்டம்' என்ற பெயரில் ஒரு சட்டம் அமுலில் இருந்தது. அதாவது #தாழ்த்தப்ப...
  • அறிவோம் சட்டம் -பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்
    விடுதலை வாசகர்களே! திராவிடர் இயக்கமும், விடுதலையும், சமுதாய விழிப்புணர்வுக்கும், மறு மலர்ச்சிக்கும், ஆற்றிவரும் தொண்டு அளப்பரியது....
  • திருமிகு முத்துலட்சுமி அம்மாளின் தீர்மானம்
    திருமிகு முத்துலட்சுமி அம்மாள் அவர்கள், பள்ளிக் கூடங்களில் மதக்கல்வி போதிக்கப்பட வேண்டும் என்று ஒரு தீர்மானம் கொண்டு வந்திருப்பதாய் பத்திர...
  • பார்ப்பன பெண்களின் அன்றைய நிலை
  • பெண்களுக்கான சட்டங்கள்
    1925    இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் மனைவி, பெண் குழந்தைகளுக்கு சொத்து உரிமை வழங்கப்பட்டது. 1929  குழந்தை திருமணத் தடைச் சட்டம் இயற...
  • மதராஸ் மாகாணத்தின் ஒரே பெண் அமைச்சர்
    தமிழக மாநில எல்லை வரையறுக்கப்படுவதற்கு முந்தைய மதராஸ் மாகாணத்தின் ஒரே பெண் அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றவர் விடுதலைப் போராட்ட வீராங்...
  • பிராமணர்கள் எப்படிக் கற்பழித்திருக்க முடியும்?- டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பு!
    பி.ஜே.பி. ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்தது என்ன? ராஜஸ்தான் மகளிர் வளர்ச்சித் திட்டத்தில் சத்தீன் திருமதி பன்வாரிதேவி குழந்தைத் திரும...
  • இந்து மதத்தில் பெண்கள் நிலை பெண்களின் அந்தஸ்து பற்றி
    1. நாரதர் (ஸ்மிருதிக்குக் கர்த்தாவான ரிஷி) கூறுகிறார்: “எவனொருவன் வாங்கின கடனையோ, பொருளையோ திரும்பக் கொடுக்கவில்லையோ  அவன், கடன் கொடுத்த...
  • முதல் பெண் கப்பல் பொறியாளர்
    முதல் பெண் கப்பல் பொறியாளர் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழிக்கு சரியான எடுத்துக்காட்டு சிறீலட்சுமி பிரியா. சராசரியாக ஓராண்ட...

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2023 (1)
    • ►  மார்ச் (1)
  • ▼  2022 (7)
    • ►  அக்டோபர் (1)
    • ▼  ஜூலை (2)
      • நோபல் பரிசு பெற்ற முதல் இஸ்லாமிய பெண்
      • திருச்சிக்கு பெருமை சேர்த்த திராவிடர் கழக மகளிர் க...
    • ►  மே (3)
    • ►  ஜனவரி (1)
  • ►  2021 (18)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (1)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (3)
  • ►  2020 (6)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2019 (23)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (5)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (7)
  • ►  2018 (37)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (8)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (1)
  • ►  2017 (25)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (2)
  • ►  2016 (28)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (7)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  பிப்ரவரி (3)
  • ►  2015 (73)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (13)
    • ►  செப்டம்பர் (11)
    • ►  ஆகஸ்ட் (16)
    • ►  ஜூலை (15)
    • ►  ஜூன் (1)
    • ►  மார்ச் (4)
    • ►  ஜனவரி (5)
  • ►  2014 (7)
    • ►  டிசம்பர் (7)
பட சாளரம் தீம். Blogger இயக்குவது.