திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறையின் மாநில கலந்துரையாடல் கூட்டம் மே மாதத்திலிருந்து இதோ இந்த சனிக்கிழமை சென்னையில் நடக்கும், அடுத்த ஞாயிற்றுக்கிழமை நடக்கும் என்று ஒவ்வொரு வாரமும் மிக்க ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு இறுதியில் சற்றும் எதிர்பாராத வகையில் 12.06.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெறும் என்று நமது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்த போது ஏற்பாடுகள் செய்ய இடையில் 10 நாட்களே இருந்தன! இருப்பினும் ஆசிரியர் அவர்கள் தன்னுடைய இடைவிடாத சுற்றுப்பயணத்தின் இடையே நமக்கும் தேதி கொடுத்தது மிக்க மகிழ்ச்சி அளித்தது. அடுத்த நாள் ஆசிரியர் அவர்களைச் சந்தித்த போது நமக்காக ஆசிரியர் அவர்களே கழகத்தின் திருச்சி மாவட்டத் தலைவர் ஆரோக்கியராஜ் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நமக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொண்டதை அறிந்த போது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்!!
உடனே தொடங்கியது எங்கள் வேலையும்! சென்ற ஆண்டு மகளிருக்கான பெரியாரியல் பயிற்சி வகுப்புகள் நடத் திய போது அனைத்து மண்டலங்களையும் நான்கு குழுக் களாகப் பிரித்து நான்கு மாநில மகளிர் பொறுப்பாளர்களின் மூலம் நெறிப்படுத்தப்பட்டது. இப்போதும் அதே நான்கு பொறுப்பாளர்கள் அவரவர் மண்டலங்களுக்குப் பொறுப் பேற்று மண்டல மகளிர் செயலாளர்களுடன் தொடர்பு கொண்டு திருச்சிக்கு மகளிரின் வருகையை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். அதோடு மகளிரின் மூத்த முன்னோடிகளுடனும் தொடர்பு கொண்டு அவர்களின் அறிவுரையும் ஒத்துழைப்பும் நாடப்பட்டது. பலர் வருவதாக உறுதி அளித்தனர். சிலர் அடுத்த நாள் (13.06.2022) கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதைக் கூறி ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெறும் கலந் துரையாடலுக்கு வர இயலாமைக்கு வருந்தினர். எங்களுக்கோ எவ்வளவு மகளிர் திருச்சிக்கு வருவார்களோ என்ற அய்யம் தொடர்ந்தது!
அரசியல் நிலைப்பாடுகள்
இயக்கத்தின் பல்வேறு அணிகளின் மாநாடாக இருந் தாலும் சரி கலந்துரையாடல் கூட்டமாக இருந்தாலும் சரி, அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை அன்றைய அரசியல் நிலைப்பாடுகள், தேவைகளுக்கேற்ப வடிவமைத்து மெருகூட்டும் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் அவர்களின் வழிகாட்டலில் மகளிர் சார்ந்த, மகளிருக்கு அவசியமான 13 தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெற்று அவற்றை ஆசிரியர் அவர்களின் பார்வைக்கு அனுப்பி வைத்தோம்.
ஆசிரியர் அவர்களின் வழிகாட்டலில் மாநில மகளிர் பொறுப்பாளர்கள் சிலர் 11.06.2022 (சனிக்கிழமை) அன்றே திருச்சி பெரியார் மாளிகைக்குச் சென்று முன்னேற்பாடுகள் செய்தோம். ஆசிரியர் அவர்களின் 90ஆவது அகவையைக் கருத்தில் கொண்டு அவரின் சிறுவயது முதல் இன்றுவரையான முக்கிய காலகட்டங்களை நினைவு கூறும் வகையில் 90 ஒளிப்படங்களைத் தேர்வு செய்து கைகளில் ஏந்தும் பதாகைகள் தயாரித்தோம். தேர்வு செய்த படங்களை அச்சிட பேருதவி செய்தவர் திருச்சி மாவட்ட மகளிர் பாசறை தலை வர் அ.அம்பிகாவும் அவரது மகள் யாழினியும். பதாகைகள் தயாரித்து பேருதவி செய்தவர் திருச்சி மாவட்ட கழகத் தோழர் ஙிபிணிலி ஆண்டிராஜ் அவர்கள். நமக்குச் சிக்கனத்தை வலியுறுத்தியவர் நமது அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள். அதை நினைவில் கொண்டு பதாகையின் ஒரு புறம் ஆசிரியர் அவர்களின் ஒளிப்படங்களும், மறுபுறம் ஆசிரியர் அவர்களைக் குறிக்கும் வாசகங்களும் வைக்கப் பட்டன.
சிறப்பான ஏற்பாடுகள்
அடுத்த நாள் வந்தது - அதிகாலையில் இருந்தே தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் - வெளி மாவட்ட மகளிரிடமிருந்து - அவர்கள் திருச்சியை அடைந்து விட்டதைத் தெரிவிக்கும் வகையில். அனைவரும் திருச்சி பெரியார் மாளிகைக்கு வெகு அருகில் மாவட்டத் தலைவர் ஆரோக்கி யராஜ் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண நிலையத்திற்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டனர். மகளிர் காலையில் சிரமமின்றி தயாராகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
காலை 8.00 மணி அளவில் நாங்கள் பெரியார் மாளிகைக்குச் சென்ற போது எங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி! முதல்நாள் (11.06.2022) இரவு இராஜபாளையம் பொதுக் கூட்டத்தில் உரையாற்றி விட்டு 2-2.30 மணி வாக்கில் பெரியார் மாளிகையை வந்தடைந்த ஆசிரியர் அவர்கள் காலையில் நடைப்பயிற்சிக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்தார். ஆசிரியர் அவர்களைப் பார்த்து மகளிரும், வந்திருந்த மகளிரைப் பார்த்து ஆசிரியர் அவர்களும் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்! எங்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டுச் சென்றார் ஆசிரியர். மகளிர் அனைவரும் மாவட்டத் தலைவர் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காலை சிற்றுண்டியைச் (பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார்) சாப்பிட்டு விட்டு தமிழர் தலைவர் அவர்களை வரவேற்கத் தயாரானோம். ஆசிரியர் அவர்களின் நேரடி வழிகாட்டலில் ஏற்கெனவே எழுதப்பட்ட 13 தீர்மானங்களுடன் மேலும் மூன்று தீர்மானங்கள் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களால் எழுதப்பட்டன.
மகளிர் உரிமைகளுக்காக...
காலை 11 மணி அளவில், பெரியார் மாளிகையில் இருந்து அன்னை மணியம்மையார் அரங்கம் வரை 90 மகளிர் ஆசிரியர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் குறிக்கும் 90 ஒளிப்படங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி வரிசையாக நின்று வரவேற்பளித்தனர். நமது அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் வழியில் மகளிரின் உரிமை களுக்காக அன்றாடும் பாடுபடும் ஆசிரியர் அவர்களை வாழ்த்தி வரவேற்கும் ஒலி முழக்கங்கள் இடையே ஆசிரியர் அவர்கள் வரவேற்பளித்த அனைத்து மகளிரையும் வணக்கம் கூறி புன்முறுவலுடன் அங்கீகரித்து அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளித்தார். அன்னை மணியம்மையார் அரங்கத்தின் நுழைவாயிலில் தருமபுரி, வேலூர் மண்டல மகளிர் சிலர் ஆசிரியர் அவர்களின் உயிர் மூச்சான விடுதலை ஏட்டிற்குச் சந்தா வழங்கி ஆசிரியரை மகிழ்வித்தனர்!
தொடர் ஒலிமுழக்கங்கள்
அரங்கினுள் நுழைந்து அமர்ந்த ஆசிரியர் அவர்களை வாழ்த்தி தொடர்ந்து ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கலந்துரையாடல் கூட்டத்தின் முதல் நிகழ்வாக கடவுள் மறுப்பு வாசகங்களை த மரகதமணி கூறினார். எவ்வளவு மகளிர் வருவார்களோ என்று சற்று அச்சத்துடன் இருந்த எங்களை கூடியிருந்த 300-350 மகளிர் ஒருங்கிணைந்து எழுப்பிய கடவுள் மறுப்பு வாசகங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தின. தொடர்ந்து கழகத்தின் துணைப் பொதுச்செய லாளர் ச.இன்பக்கனி தந்தை பெரியார், அன்னை மணியம் மையார் ஆகியோருக்குப் பிறகு அவர்களால் அடையாளம் காணப்பட்டு அவர்கள் போட்டுத் தந்த பாதையில் கழகத்தைத் தொடர்ந்து 44 ஆண்டுகள் வழிநடத்தி 45ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களையும், அவருக்கு உற்றத் துணையாக இருந்து இயக்கத்தின் எதிரிகள் திரித்துக் கூறும் அனைத்துப் பொய்யானச் செய்திகளுக்கும் உடனுக்குடன் ஆதாரங் களுடன் மறுப்பெழுதி மின்சாரமாகப் பணியாற்றும் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் அவர்களையும், தந்தை பெரியார் வாழ்ந்த காலகட்டத்தில் பிறக்கவே இல்லாத இன்றைய இளைஞர் சமூகத்தினரிடையே தன் பேச்சுத் திறனால் தொலைக்காட்சி மற்றும் இணையத்தின் வாயிலாகத் தந்தை பெரியாரைப் பரப்பி வரும் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்களையும், இயக்கத்தின் மூத்த பெண் முன்னோடிகளையும், மாநில, மண்டல, மாவட்ட மகளிர் பொறுப்பாளர்களையும், தமிழர் தலைவர் அவர்களின் தலைமை உரையைக் கேட்க ஆவலுடன் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் திரண்டிருந்த மகளிர் தோழர்களையும் அவர்களுக்கு மேலும் உற்சாகம் அளிக்கக் கூடியிருந்த கழகத்தின் ஆண் தோழர்களையும் வரவேற்று கலந்துரை யாடல் கூட்டத்தின் நோக்கத்தினையும் மகளிரின் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்தும் தெளிவு படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அகிலா (மாநில மகளிரணி பொரு ளாளர்), அம்பிகா (திருச்சி மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) மற்றும் செல்வி (ஓசூர் மாவட்ட மகளிரணி தலைவர்) ஆகியோரால் வாசிக்கப்பட்டது.
விடுதலை ஆசிரியராக 60 ஆண்டுகள்
* 60 ஆயிரம் விடுதலை சந்தா சேர்ப்பில் மகளிரின் முக்கிய பங்கு.
* தந்தை பெரியாரின் பிறந்தநாள் சமூகநீதி நாள், அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் சமத்துவ நாள், அன்னை ஈ வெ ரா மணியம்மையார் சிலை அமைந்துள்ள சாலைக்கு அவர் பெயர் - பாராட்டுதலுக்கு உரியவை.
* அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் பாலிடெக் னிக்கில் சேரும் மாணவிகளுக்கு உயர்கல்வி முடியும் வரை அரசின் நிதியுதவி - பாராட்டத்தக்கது.
* பெண்களை ஆபாசமாகச் சித்தரிக்கும் வலைதளங் களைத் தடை செய்க.
* பாலியல் வன்முறையாளர்களுக்குக் கடும் தண்டனை அவசியம்.
* பெண்களே பங்கேற்கும் பயிற்சிப் பட்டறைகள் நடத் துதல்.
* பள்ளிகளில் அனுமதி பெற்று அறிவியல் கருத்தரங் கங்களை நடத்துதல்.
மகளிரணி - மகளிர் பாசறை
மாநில மாநாடு நடத்துதல்
* நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு சட்டத்தை உடனே நிறைவேற்றுக.
போன்ற முத்தான 16 தீர்மானங்களை அரங்கத்தில் கூடியிருந்த அனைத்துத் தோழர்களும் எழுந்து நின்று பலத்த கரவொலி எழுப்பி நிறைவேற்றி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து தகடூர் தமிழ்ச் செல்வி (மாநில மகளிரணி செயலாளர்) கரோனா கட்டுப்பாடுகளால் மகளிரால் நேரடியாக நடத்த இயலாமல் இணையத்தில் வாரந்தோறும் நடத்தப்பட்ட மகளிர் உரிமைப் பேரிகை நாள் கூட்டங்கள் (அன்னை நாகம்மையாரின் நினைவு நாளான மே 11ஆம் நாளையொட்டி), தந்தை பெரியார் அவர்களின் 142ஆவது பிறந்தநாளையொட்டி "பெரியார் - 142" வீடியோ வெளியீட்டு கூட்டம், ஆசிரியர் அவர்களின் 88ஆவது பிறந்தநாள் கருத்தரங்கக் கூட்டங்கள், பெண்களுக்கு மட்டுமே ஆன பெரியாரியல் பயிற்சி வகுப்புகள் (நான்கு குழுக்களாக), 'பெரியார் - 1000' போட்டிகள், கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்களால் நடத்தப்பட்ட "பெண்ணியம்" வகுப்புகள், அன்னை மணியம்மையார் பிறந்தநாள் கருத்தரங்கக் கூட்டங்கள், தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட கவிதை மற்றும் பேச்சுப் போட்டிகள், கழகக் கொள்கை பிரச்சாரக் கூட்டங்கள், என ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட இணையவழி ஜூம் செயலி கூட்டங்கள் பற்றிய 'மகளிர் செயல்பாட்டு அறிக்கை'யை வாசித்தார்.
உணர்வுபூர்வமாக...
தொடர்ந்து வழக்குரைஞர் வீரமர்த்தினி (மாநில வழக் குரைஞர் அணி அமைப்பாளர்), பேராசிரியர் மு.சு.கண்மணி (காரைக்குடி), ரேவதி (வாலாஜாபாத்), ரூபியா (திருச்சி), வழக்குரைஞர் தில்ரேஷ் (திண்டுக்கல்), கற்பகவள்ளி (திருப்பத்தூர்), பேராசிரியர் பெரியார் செல்வி (சென்னை), சாந்தி (திருவெறும்பூர்) ஆகிய மகளிர் தாங்கள் தந்தை பெரியாரின் பெண்ணடிமைத்தன ஒழிப்புக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண் டதைப் பற்றி உணர்வு பூர்வமாக எடுத்துரைத்தனர்.
அவர்களைத் தொடர்ந்து வழக்குரைஞர் அ.அருள்மொழி, கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் ஆகியோர் பெண்கள் தங்கள் அடிமைத்தனத்தை ஒழித்து சுயமரியாதையுடனும் கொள்கைப்பிடிப்புடனும் தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் ஆற்றலுடனும் வாழ்வது மட்டுமின்றி சமுதாயத் தில் மகளிர் சார்ந்த பிரச்சினைகளுக்குப் போராடும் வலிமை யையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
கொள்கைத் துடிப்பும், வேகமும்!
இறுதியாகத் தலைமை உரையாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் குறுகிய காலத்தில் 300-350 மகளிர் எழுச்சியுடன் திருச்சியில் கூடியதைப் பாராட்டி இந்தக் கொள்கைத் துடிப்பும் வேகமும் இனிவரும் காலங்களிலும் தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார். கரோனா கால கட்டத்தில் நேரடியாக களப்பணி ஆற்ற இயலா விட்டாலும் இனி திட்டமிட்டு சீரிய களப்பணியாற்றுவதுடன் மகளிருக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க மாவட்டம் தோறும் தொடர் பயணம் செய்து மகளிருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மகளிருக் காகத் தாயுமாகி உழைத்த தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு கருத்துக்களே பெண்களிடையே அதிகமாக இருக் கும் மதம் சார்ந்த மூடநம்பிக்கைகளை ஒழிக்க உன்னத மருந்து என்றும், அக்கருத்துகளை வீடு தோறும் ஒவ்வொரு பெண்களிடமும் எடுத்துச் செல்வது இயக்க மகளிரின் தலை யாய கடமை என்றும் எடுத்துரைத்தார். அதற்கான செயல் திட்டத்தினை மாநில மகளிர் பொறுப்பாளர்கள் இணைந்து வகுத்து இடையூறின்றி செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இருபால் தோழர்களுக்கும்...
வழக்குரைஞர்கள் பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர்) , சே.மெ.மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர்) ஆகியோர் இக்கலந்துரையாடல் நிகழ்வினைச் சிறப்புடனும், சுவாரசியமாகவும் ஒருங்கி ணைத்தனர். இறுதியாக ந.தேன்மொழி (மாநில மகளிரணி அமைப்பாளர்) நன்றி உரையாற்ற மாநில திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறையினரின் கலந் துரையாடல் கூட்டம் இனிதே முடிவுற்றது. முத்தாய்ப்பாகக் கூட்டத்தில் கலந்துகொண்ட 450-க்கும் மேலான இருபால் தோழர்களுக்கும் சுவையான பிரியாணி விருந்தளித்து அசத்தினார் மாவட்டத் தலைவர் ஆரோக்கியராஜ். அவருக்கு நமது நன்றிகள் பலப் பல.
திராவிட மாடல் ஆட்சியில்...
கலந்துரையாடல் நிகழ்ச்சியின் இடையே செய்தியாளர் களுக்குப் பேட்டி அளித்த ஆசிரியர் அவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 அரியத் தீர்மானங்கள் குறித்தும், மானமிகு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான 'திராவிட மாடல்' ஆட்சியின் சிறப்பான செயலாக்கங்கள் குறித்தும் குறிப்பிட்டதுடன் அல்லாமல் உள்ளாட்சியில் மகளிருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கி சாத னைப் படைத்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தினைக் குறை கூற அதனைச் செய்யாமலேயே ஆட்சியில் இருந்த வர்களுக்கு உரிமை இல்லை என்பதையும் இடித்துரைத்தார்.
கலைகள்மூலம் பிரச்சாரம்
கலந்துரையாடல் கூட்டத்தின் தொடர்ச்சியாக மாலை 6.30 மணி அளவில் திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களை ஆசிரியர் அவர்களுக்கு பல்வேறு அமைப்புகளால் வழங்கப்பட்ட பட்டங்கள் மற்றும் அவ ரையும் அவரது தொண்டினையும் குறிக்கும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கி வரிசையாக நின்று வரவேற்றனர். அதே சமயம் ஒலிபெருக்கியில் ஆசிரியர் அவர்களை வரவேற்று கழக மகளிரால் எழுப்பப்பட்ட ஒலி முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன! நமது இயக்கக் கொள்கைகளை இன்றைய இளைய தலைமுறையினரைக் கவரும் வண்ணம் கலைகள்மூலம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற கூற்றின்படி முதல் நிகழ்வாக அமைந்த கலைநிகழ்ச்சியில் ரெஜினா பால்ராஜ் (திருச்சி மாவட்ட மகளிரணி தலைவர்) புதிய தேசிய கல்விக் கொள்கை மற்றும் நீட் தேர்வு எதிர்ப்புப் பற்றி தானே எழுதிய பாடல் ஒன்றைத் தன் இனிமையான குரலில் பாடி அனைவரையும் கவர்ந்தார்! அதனைத் தொடர்ந்து பெரியார் பிஞ்சு நன்மதி அவர்கள் "வெற்றி வெற்றி என்று வீர முழக்கம்" என்ற பாடலுக்கு ஆற்றலோடு சிலம்பம் சுழற்றி கூடியிருந்தோருக்கு எழுச்சி யூட்டினார்!!
அனைவரின் மனதையும்....
அவரைத் தொடர்ந்து வந்த பெரியார் பிஞ்சு யாழினி "தூங்கும் புலியைப் பறை கொண்டு எழுப்புவோம்" என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பாடலுக்கு உணர்ச்சி மிகு பாவங்களுடன் சீறும் புலியினைப் போன்றே நாட்டியமாடி அனைவரின் மனதையும் தட்டி எழுப்பினார்!!!
மாலை 7 மணி அளவில் குழந்தை தெரேசா (லால்குடி மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) அவர்களின் வரவேற் புரையுடன் பொதுக்கூட்டம் தொடங்கியது. காலங்காலமாகப் பெண்களுக்கு கல்வியை மறுத்து அவர்களை அடிமைப் படுத்தி, சனாதனத்தைத் தூக்கிப் பிடிக்கும் மனு ஸ்மிருதி யையும் அதைச் சட்டமாக்கி மீண்டும் குலக்கல்வியைக் கொண்டு வரத்துடிக்கும் காவிக் கூட்டத்தையும், அந்தச் சனாதனத்தை ஆதரித்து அனைவரும் அதைப் பின்பற்ற வேண்டும் என்று இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு எதிராகக் குரலெழுப்பும் தமிழ் நாட்டு ஆளுநரையும் ஒருங்கே ஒடுக்கும் திறன் வாய்ந்த இயக்கம் தந்தை பெரியாரின் திராவிடர் கழகமே என்று அறைகூவல் விடுத்தார் மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை. தன் உரையில் பெண்களை ஒடுக்க அவர்கள் மீது திணிக்கப் படும் மதரீதியான மூட நம்பிக்கைகளையும் அவர் சாடினார்.
குலக்கல்வித் திட்டத்தை...
அடுத்து வந்த மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ்நாட்டு மாணவர்களை ஒடுக்கும் வண்ணம் அவர்கள் மீது புதிய தேசிய கல்விக் கொள்கை, நீட், கியூட் என்று பல்வேறு தேவையற்ற தேர்வுகளைச் சுமத்தும் ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்தும் தமிழ் நாட்டு மாணவர்களுக்கு இவற்றிலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி தளபதி மு க ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு இருமுறை மசோதாக்கள் இயற்றி அனுப்பியும் தமிழ் நாட்டு ஆளுநர் அந்த மசோதாக்களின் மேல் முடிவெடுக்க சட்டம் எந்தவித கால வரையறையையும் நிர்ணயிக்கவில்லை என்று கூறி அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருப்பதை தமிழ் நாட்டு மாணவர்களும் மக்களும் அறியும் வண்ணம் 21 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை வரை சுற்றுப்பயணம் செய்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பணியை விளக்கியுரைத்தார். சுற்றுப்பயணம் சென்னையில் முடிவடைந்த போது எப்படி இராஜாஜி அவர்களின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்த தந்தை பெரியாரின் போராட்ட முடிவில் இராஜாஜி முதலமைச்சர் பதவியைத் துறந்து அவ்விடத்தில் கல்வி வள்ளல் காமராஜர் அவர்கள் வந்து இராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தாரோ அதுபோல் ஆசிரியர் அவர்களின் சுற்றுப்பயணம் முடியும் போது ஆளுநர் நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார் என்பதையும் கூடியிருந்த மக்களுக்கு எடுத்துரைத்தார். தமிழ் நாட்டில் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை குறியீடு இந்திய சராசரியை விட இரு மடங்காக இருப்பதைப் புள்ளிவிவரங்களுடன் விளக்கினார். தமிழ் நாட்டு மாணவர்களின் உரிமைகளை மீட்க மக்களும் புதிய தேசிய கல்விக் கொள்கை மற்றும் நீட் கியூட் தேர்வுகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு தங்கள் முழு ஆதரவையும் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மொழி பிரச்சினையால்...
அவரைத் தொடர்ந்து வந்த துணைப் பொதுச்செயலாளர் ச. இன்பக்கனி, புதிய தேசிய கல்விக் கொள்கை மூலம் திணிக்க நினைக்கும் தமிழ்நாட்டின் இருமொழி கொள்கைக்கு எதிரான மும்மொழிக் கொள்கை நடைமுறைக்கு வந்தால் அடுத்த அய்ந்து ஆண்டுகளில் தமிழ் நாட்டில் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் மாவட்டத்துக்கு ஒன்றாகக் கட்டமைக்கப்பட்ட நமது அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் இந்தி பேசும் வடநாட்டு மருத்துவர்கள் வந்து அமர்ந்துக் கொண்டு நமது மக்கள், குறிப்பாக கிராமப்புற மக்கள், மொழிப் பிரச்சினையால் தங்கள் உடல் உபாதைகளை எடுத்துச் சொல்லக்கூட முடியாதவர்களாக ஆக்கப்படுவர்கள். இந்த நிலை ஒழிந்து நமது மாணவர்களின் உரிமைகள் மீட்கப்பட திராவிடர் கழகம் முன்னெடுக்கும் உரிமை மீட்பு போராட்டங்களுக்கு மக்கள் பேராதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு
தலைமையுரை ஆற்ற வந்த கழகத்தின் பிரச்சாரச் செயலா ளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி 60-70 ஆண்டுகளுக்கு முன்பு நம்மில் படித்தவர்கள் எத்தனை பேர் என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் கேட்டுத் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். 1982-1983 ஆம் ஆண்டுகளில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் "வஞ்சிக்கப்படும் தமிழ் நாடு" என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுக்கத் சுற்றுப்பயணம் செய்து நம் கல்வி வேலை வாய்ப்புக்கள் பறிக்கப்படுவதை மக்களுக்கு விளக்கினார். அப்போது உருவான முழக்கங்கள் தான் "கான்ஸ்டபிள் தான் நம்மாளு, அய்.ஜி. எல்லாம் அவாளு"; "கண்டக்டர் எல்லாம் நம்மாளு, கலெக்டர் எல்லாம் அவாளு"; "வானொலி நிலையமா? பூனூல் வளையமா?" எல்லாம். அச் சுற்றுப்பயணத்திலும் அதனைத் தொடர்ந்து பலப்பல மேடை களிலும் ஆசிரியர் அவர்கள் பேசியதாலும் பல ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை ஆசிரியர் தலைமையில் தமிழ்நாடு முழுக்க நடத்தியதின் விளைவுதான் நாம் வெறும் கான்ஸ்டபிள்களாகவும் கண்டக்டர்களாகவும் இருந்த நிலை மாறி இன்று அய்.ஜி. மட்டு மல்ல அதைவிட உயர்ந்த டி.ஜி.பி.களாகவும், கலெக்டர்களாகவும், பேராசிரியர்களாகவும், பல்கலைக்கழகத் துணை வேந்தர் களாகவும், மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், வழக்கு ரைஞர்களாகவும், ஏன் நீதிபதிகளாகவும் நாம் வரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த 2014ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு, படித்த தமிழர்களுக்கு தமிழ் நாட்டில் வேலை வாய்ப்பில்லாத நிலைமை ஏற்பட்டிருக் கிறது. இந்த நிலை மாற என்றென்றும் தொடர்ந்து சிந்திப்பது உழைப்பது திராவிடர் கழகம் மட்டுமே. இதை உணர்ந்து மக்கள் திராவிடர் கழகத்தின் போராட்டங்களுக்கு உற்றத் துணையாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
நூற்றாண்டு கண்ட ஒரு சமூகப்புரட்சி இயக்கம்
அடுத்து வந்த திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் தொடக்கத்திலேயே உள்ளூர் பிரச்சினை பற்றி பேசப்போவதாக அறிவித்தார். அதற்குக் காரணம் பொதுக் கூட்டத்திற்கான உரிய அனுமதி பெற்றிருந்தும் திருச்சி காவல்துறையினர் கொடுத்த கெடுபிடிகள் தான். திருச்சி பெரியார் மாளிகையைச் சுற்றியும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றியும் கழகத் தோழர்கள் சிரமத்துடன் நட்ட கழகக் கொடிகள் பிடுங்கி எறியப்பட்டு. கூட்டத்திற்கு பொதுமக்கள் வராதவாறு அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டதுடன் நுழையும் இடத்தில் மெட்டல் டிடெக்டர் வைக்கப்பட்டு மக்கள் அதன் வாயிலாகச் செல்லுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். இத் தகையப் செயல்கள் சென்னை காவல்துறை மேலதிகாரிகளிடம் பேசியப் பிறகே கைவிடப்பட்டன. திராவிடர் கழகம் நூற்றாண்டு கண்ட ஒரு சமூகப் புரட்சி இயக்கம். அதை தீவிரவாத இயக்கம் போல் நடத்தியதை வன்மையாகக் கண்டித்தார் கவிஞர். அதோடு காலம் காலமாக திராவிடர் கழகம் பேசிவரும் கடவுள், மதம் ஆகியவற்றைப் பற்றி பேசக்கூடாது என்று கூறப்பட் டதையும் வன்மையாகக் கண்டித்ததுடன், நாங்கள் என்ன ராமபஜனை செய்ய வேண்டுமா என்றும் வினா எழுப்பினார். சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் தான் சமூகநீதி தொடர்ந்து நிலைநாட்டப் படுகிறது. பொதுக்கூட்டம் நடந்த அதே நாளில் ஜிழிறிஷிசியின் தலைவராக முனியநாதன் என்ற அருந்ததியர் சமூகத்தினைச் சார்ந்தவர் முதன்முதலாக நியமிக் கப்பட்டார். இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இப்படி இதுவரை நியமிக்கப்படவில்லை. காவல்துறையினர் பதவிகளில் வந்திருப் பதும் இந்த இயக்கத்தினால் - இயக்கத்தினரின் தன்னலமற்ற தொண்டினால் தான் என்பதை மறந்து செயலாற்ற வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது
இறுதியாகக் கூட்டத்தினரின் கரவொலிக்கிடையே சிறப்புரை யாற்ற வந்தார் தமிழர் தலைவர் அவர்கள். இது மகளிரால் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம். இதற்கு ஆண்களான எங்களை அழைத் திருப்பது அவர்களின் பெருந்தன்மை. தந்தை பெரியார் அவர் களின் மறைவுக்குப் பிறகு இதே திருச்சி பெரியார் மாளிகையில் தான் 06.01.1974 அன்று அன்னை மணியம்மையார் திராவிடர் கழகத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போது இதே திருச்சியில் அவரை அழைத்து திராவிடர் கழக மாநாடு பெரிய அளவில் நடத்தப் பட்டது. அப்போது பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றியவர் திருமதி திலகவதி மிறிஷி. பெண்கள் வரலாறு படைத்த மாநகரம் திருச்சி. 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த மாநாட்டில் ஆண்களுக்கு இணையான அனைத்து உரிமைகளையும் பெண்களுக்கும் வழங்க வேண்டும் என்று தீர்மானம் இயற்றப் பட்டது. அப்படி உரிமை பெற்ற பெண்களால் நடத்தப்படும் பொதுக்கூட்டம் எங்கே நடக்கப் போகிறது என்று வினவிய போது 'குறத்தெருவில்' என்ற பதிலைக் கேட்டு சற்று அதிர்ச்சி அடைந்தேன் என்று கூறிய ஆசிரியர், தந்தை பெரியாரின் நூற்றாண்டு நினைவாக அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தெருக்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயரை நீக்க அரசாணை வெளியிட்டுச் செயல் படுத்தினார். ஆனால் இத்தெரு பெயருக்கு அம்மாற்றம் இன்னும் ஏற்படவில்லை. சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான இந்த திராவிட மாடல் ஆட்சியில் இப்பெயர் நீக்கப்பட்டு சமூக நீதிக்காக உழைத்த யாராவது ஒருவர் பெயரை வைக்கும்படி திருச்சி மாநகராட்சியின் மேயர், துணை மேயர் மற்றும் உறுப்பினர்களையும் 'திராவிட மாடல்' ஆட்சி நடத்தும் இவ்வரசையும் இக்கூட்டத்தின் வாயிலாகக் கேட்டுக் கொள்கிறோம் என்று அறிவித்தார்.
சுமார் 70-80 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டில் பார்ப்பன ரல்லாத விலி படித்த வழக்குரைஞர்களே இல்லை. அப்போது திருநெல்வேலியில் கா.சுப்ரமணியம் பிள்ளை என்ற தமிழர் ஒருவரே விலி படித்திருந்தார். அவரை அனைவரும் விலி பிள்ளை என்றே அழைப்பார்கள் என்று கூறிய ஆசிரியர் தற்போது அந்த நிலை மாறி நம் பிள்ளைகளும் விலி படிப்பதற்கு காரணம் தந்தை பெரியாரின் கொள்கைகள், அவர் வலியுறுத்திய சமூகநீதி, இவ்வியக்கம் கண்ட போராட்டக் களங்கள் மற்றும் இன்று நடக்கும் திராவிட மாடல் ஆட்சியுமே. அதனை நினைவில் கொண்டு பெண்கள் படிப்பறிவு பெறுவதுடன் பகுத்தறிவையும் பெற வேண்டும். நிர்வாகம் செய்யும் பொறுப்பில் இருப்பவர்கள் அதனுடன் பட்டறிவையும் பெற்றிட வேண்டும் என்று வலி யுறுத்தி, இக்கூட்டத்தைத் திறம்பட ஒருங்கிணைத்த திராவிடர் கழக மகளிரணி மற்றும் மகளிர் பாசறை தோழர்களுக்கு வாழ்த் துகளைத் தெரிவித்தார். திருச்சி மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் த சங்கீதா அவர்கள் நன்றி கூற பொதுக்கூட்டம் இரவு 9.45 மணி அளவில் முடிவுற்றது.
ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தொடர் சுற்றுப்பயணத்தின் இடையேயும் மகளிர் கலந்துரையாடல் நடத்த எங்களுக்குத் தேதி கொடுத்ததுடன் இன்றைய இக் கட்டான சூழ்நிலையிலும் ஒரு பொதுக்கூட்டத்தை ஒருங்கி ணைக்க எங்களுக்கு அனுமதி அளித்த ஆசிரியர் எங்களுக்கு வழிகாட்டியாக இருந்த கவிஞர் ஆகியோருக்கும், கூட்டத்தைச் சிறப்பாக நடத்த அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கிய திருச்சி மாவட்டத் தலைவர் ஆரோக்கியராஜ், லால்குடி மாவட்டத் தலைவர் வால்டேர்,திருச்சி மண்டலச் செயலாளர் ஆல்பர்ட், திருச்சி மாவட்ட மகளிர் தோழர்கள் கிரேஸி, ரெஜினா பால்ராஜ், அம்பிகா, சாந்தி, சங்கீதா மற்றும் லால்குடி மாவட்ட மகளிர் தோழர்கள் அரங்கநாயகி, குழந்தை தெரேசா மற்றும் அனைத்து மகளிரணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்களுக்கும், பெரியார் பிஞ்சுகள் நன்மதி, யாழினி ஆகியோருக்கும் மாநில மகளிரணி மற்றும் மகளிர் பாசறை சார்பில் நன்றிகளும், வாழ்த்துகளும்!
- ச.இன்பக்கனி,
துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
The latter are typically generally known as|often identified as} "excessive restrict" machines, and machines configured to permit for such wagers are often situated in devoted areas . The machine automatically calculates the number of credits the player receives 코인카지노 in trade for the money inserted. Newer machines usually enable gamers to choose from|to select from} a number of denominations on a splash screen or menu. The inaugural video games within the highly-anticipated James Bond sequence are now are|are actually} available! The video games are offered in both a near-area progressive model, nicely as|in addition to} a model consists of a|that options a} single-level wide-area progressive that's part of of} Scientific Games’ Cash Connection® or Reel Adventures™ WAP hyperlinks.
பதிலளிநீக்கு