செவ்வாய், 10 நவம்பர், 2015

பெண்கள் சுதந்திரத்தில் தமிழ்நாட்டுக்கு முதலிடம்

பெண்கள்சுதந்திரத்தில்தமிழ்நாட்டுக்குமுதலிடம் கடைசி இடத்தில் மேற்கு வங்காளம்


தேசிய அளவில் குடும்ப நலன் தொடர்பாக 2011ஆ-ம் ஆண்டு நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் பெண்களிடையே கருத்து கேட்கப்பட்டது. திருமணமான குடும்பப் பெண்களில் படித்தவர்களின் செல்வாக்கு வீட்டில் எப்படி இருக்கிறது? அவர்கள் பேச்சு எடுபடுகிறதா? குடிநீர்த் தேவையை எப்படி சமாளிக்கிறீர்கள்? மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்களா? என்பது குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் நாட்டிலேய மேற்கு வங்காளத் திலும், ராஜஸ்தான் மாநிலத்திலும்தான் குடும்பத்தில் பெண்கள் நிலை மிகவும் பின்தங்கி உள்ளது. மேற்கு வங்காளத்தில் பெண்கள் கருத்துரிமை கூட இல்லாத நிலையில் வாழ்கின்றனர் என்ற கசப்பான உண்மையை சுட்டிக் காட்டியுள்ளது. குடிநீர் பிடிப்பதற்காக அன்றாடம் 2 மணி நேரத்தை பெண்கள் செலவிடுவதாகவும், அடுப்பு எரிப்பதற்காக விறகு சேகரிக்க 6 மணி நேரம் மேற்குவங்க பெண்கள் அலைவதாகவும் இந்த அறிக்கை வருத்தத்துடன் குறிப்பிடுகின்றது.
அம்மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் வாதிகள், எழுத்தாளர்கள், சிந்தனை வாதிகள் என்று புகழப்படும் வெகு சில பெண்களின் முன்னேற்றத்தை மட்டுமே அளவுகோலாக வைத்து பார்க்காமல், ஆழ்ந்து நோக்கினால் ஆண்- பெண் பிறப்பு விகிதாச்சாரம், பெண்கள் கல்வியறிவு ஆகியவற்றை எல்லாம் பின்னுக்கு தள்ளும் வகையில் குடும் பங்களில் கருத்து கூறுவதற்கு கூட பெண் களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கப் படாத நிலையில் ஆணாதிக்கம் ஓங்கி உள்ளது. கணவனின் அனுமதி இல்லாமல் பெற்றோரைப் பார்ப்பதற்கு கூட பெண்களால் முடியவில்லை. வீட்டிற்குத் தேவையான சாதனங்களை வாங்குவதில் தொடங்கி என்ன சமையல் செய்ய வேண்டும் என்பது வரை பெண்ணின் ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டுள் ளன. 1 கோடியே 70 லட்சம் பெண்கள் திறந்தவெளி கழிப்பிடங்களையே உபயோகிக்கின்றனர். 58 சதவீத பெண்களுக்கு பள்ளிகளில் போதிய கழிப்பிட வசதி இல்லை. மேற்கு வங்க மாநிலம் நிலையான முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்றால் சமு தாயத்தில் நிலவும் பெண்களுக்கு எதி ரான அடக்குமுறைகள் முடிவுக்கு வர வேண்டும் என்றும் அந்த ஆய்வு பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில் பெண்கள் கல்வியறிவு, அதிகபட்ச இலக்கு 65 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மேற்கு வங்க பெண்கள் 71 சதவீத கல்வி யறிவில் தேறியவர்களாக இருந்தபோதும் பெண்ணுரிமை செயலாக்கத்தில் அம் மாநிலம் மிகவும் பின் தங்கியே உள்ளது. தேசிய அளவிலான பெண்ணுரிமை இலக்கு 37 சதவீதமாக உள்ளது. ராஜஸ் தான் மாநிலமும் மேற்கு வங்காளத்தை போலவே உள்ளது.   ஆனால் இந்தி யாவிலேயே சர்வசுதந்திரத்துடன் குடும்பத் தலைவியாக நிர்வாகம் செய்யும் ஒரே மாநிலமாக தமிழ்நாடு தலை சிறந்தும், தலை நிமிர்ந்தும் நிற்கின்றது. தமிழ்நாட்டில் 49 சதவீதம் பெண்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப் படுகிறார்கள். தமிழகத்துக்கு அடுத்த இடத்தில் மராட்டியத்தில் பெண்கள் சுதந் திரம் 45 சதவீதமாகவும், ஆந்திராவில் 40 சதவீதமாகவும் உள்ளது.
-விடுதலை ஞா.ம.,28.9.13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக