ஞாயிறு, 8 நவம்பர், 2015

இரண்டாவது மனைவிக்கு ஓய்வூதியம் மறுத்த கணக்கு அதிகாரியின் உத்தரவு ரத்து

சென்னை, ஜூலை 4_ முதல் மனைவியை விவா கரத்து செய்யாமல், இரண் டாவது திருமணமான பெண்ணுக்கு, ஓய்வூதியத் தொகை மறுத்தது சரி யல்ல என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
கோவை மாவட்டத் தில், தலைமை கான்ஸ்ட பிளாக பணியாற்றியவர், ஸ்டான்லி. 1973 இல், சுகந்தி என்பவரை திரு மணம் செய்தார். கருத்து வேறுபாட்டால், 1975 இல், இருவரும் பிரிந்தனர்.
அதைத்தொடர்ந்து, 1976 இல், சுசிலா என்ற மேரி மார்கரெட் என்ப வரை, திருமணம் செய் தார். முதல் திருமணம் நிலுவையில் இருக்கும் போதே, இரண்டாவது திருமணம் நடந்தது. ஈரோடு நீதிமன்றத்தில், சுகந்தி வழக்கு தொடுத்து, 2003 இல், திருமண முறிவு பெற்றார்; 2005 இல், சுகந்தி இறந்தார். பணி யில் இருந்து, 2001 இல் ஓய்வு பெற்ற ஸ்டான்லி, ஓய்வூதியம் பெற்று வந் தார்.
2011 அக்டோபரில், ஸ்டான்லி இறந்தார். குடும்ப ஓய்வூதியம் வழங் கும்படி, சுசிலா, விண் ணப்பித்தார். அதை, முதன்மை கணக்கு அதி காரிக்கு, கோவை மாவட்ட காவல்துறை  கண்காணிப் பாளர் பரிந்துரைத்தார்.
விண்ணப்பத்தை, முதன்மை கணக்கு அதி காரி நிராகரித்தார். 'முதல் திருமணம் நிலுவையில் இருக்கும் போது, இரண் டாவது திருமணம் நடந் ததால், குடும்ப ஓய்வூதியம் பெற, சுசிலாவுக்கு தகுதி யில்லை' என, கூறப்பட் டது. முதன்மை கணக்கு அதிகாரியின் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சுசிலா, மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த, நீதி பதி அரிபரந்தாமன் பிறப் பித்த உத்தரவு வருமாறு:
மனுதாரர் உடன், 1976 முதல், சாகும் வரை, ஸ்டான்லி வாழ்ந்துள் ளார். இருவருக்கும், 1976 இல், திருமணம் நடந் துள்ளது. அந்த திருமணம் செல்லாது என்று யூகித் தாலும், சுசிலா உடன் தான் சேர்ந்து வாழ்ந்துள் ளார் என்பதை, கணக்கு அதிகாரி கூட மறுக்க வில்லை. இறந்தவரின் மனைவி சுசிலா தான் என, ஓய்வூதியம் விண் ணப்பத்தை, கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பரிந்துரைத்துள்ளார். மேலும், 2003 இல், முதல் திருமணம் முடிவுக்கு வந்து விட்டது.
எனவே, குடும்ப ஓய்வூ திய விண்ணப்பத்தை, முதன்மை கணக்கு அதி காரி நிராகரித்தது சரி யல்ல. முறையான திரும ணம் இல்லாமல், சேர்ந்து வாழும் உறவு முறை, ஏற்றுக் கொள்ளப்படு கிறது. அதன் மூலம், சட் டப்பூர்வ உரிமை கோர வும், உரிமை உள்ளது. முதன்மை கணக்கு அதி காரியின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது.
கணவர் இறந்த நாளில் இருந்து, இதுநாள் வரை, குடும்ப ஓய்வூதியத்தை அனு மதித்து, தொடர்ந்து வழங்கவேண்டும்.  இவ் வாறு, நீதிபதி அரிபரந் தாமன் உத்தரவிட்டுள்ளார்.
-விடுதலை,4.7.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக