டாக்டர் இள.பதக், அகமதாபாத் பெண்கள் செயற்குழுவை நிறுவியவர்; இன்றைய அதன் தலைவர்.
குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, இந்திய வணிக மற்றும் தொழில் கூட்டமைப்பின் (Ficci)
பெண்கள் அமைப்பின் 29ஆவது அமர்வில் பேசி யுள்ளதை ஊடகங்கள் செய்தியாக்கி யுள்ளன. அந்த பெண்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு டாக்டர் பதக் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
பெண்கள் அமைப்பின் 29ஆவது அமர்வில் பேசி யுள்ளதை ஊடகங்கள் செய்தியாக்கி யுள்ளன. அந்த பெண்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு டாக்டர் பதக் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதம் தான் இது:
ஊடகங்களில் வெளியாகும் செய்திகளிலிருந்து நமது முதல்வர் நரேந்திரமோடியின் சரளமான பேச்சைக் கண்டும் கேட்டும் நீங்கள் வியப்படைந்திருப்பீர்கள். குஜராத்தில் உள்ள பெண்களைப் பற்றியா அவர் பேசியுள்ளார்? இல்லை. குஜராத்தில் உள்ள உண்மை நிலையை உங்களுக்குத் தெரிவிக்க ஆசைப்படுகிறோம்.
குஜராத்தில் பெண்களின் எண் ணிக்கை குறைந்து போய் விட்டது. 2001-இல் 1000 ஆண்களுக்கு 921 பெண்கள் இருந்தனர். 2011இல் 918 ஆகக் குறைந்துவிட்டது. இதே பத்தாண்டுகள் கட்டத்தில் டில்லியில் அது 45ஆகவும் ராஜஸ்தானில் 4 ஆகவும் உயர்ந்துள்ளது.
18ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த பெண் சிசுக் கொலையைப்பற்றி மோடி பேசியுள்ளார்.
2011இல் அரசு பெண் களுக்கான சோனோகிராபி (Sonography) மருத்துவமனைகளை மூடியுள்ளது 2012லும் மற்றும் சில மூடப்பட்டன. மேற்கொண்டு எந்த செயல்பாடும் இல்லை. இதுதான் மோடியின் அரசு!
திருமணமான பெண்களைப்பற்றிய 2006ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 15 முதல் 49 வயதான பெண்களில் 55லு விழுக்காடு சோகை நோய் பிடித்தவர்களாக உள்ளனர்.
60.8 விழுக்காடு கருவுற்ற பெண்கள் ஊட்டச்சத்து குறைந்தவர்களாகவும் சோகை பிடித்தும் உள்ளனர். 1998-_99 இல் 74.05 விழுக்காடு பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்டோரின் 6.-38 மாதங்கள் வயது கொண்ட குழந்தைகள் ஊட்டச் சத்து குறைந்தவர்களாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2005-_2-006ல் அந்த எண்ணிக்கை 79.8 விழுக்காடு ஆக உயர்ந்துள்ளது. சென்ற தேர்தலின் போது இது எடுத்துப் பேசப்பட்ட பொழுது, அதற்கான அமைச்சர், குழந்தைகளுக்கான செறிவூட்டப்பட்ட அந்த உணவுப் பொட்டலங்கள் எங்கே என்று தேடப் போனார்? இதுதான் குஜராத்தின் நிர்வாகம்!
தாய்மார்களின் மரண எண் ணிக்கையும் சிசுக்களின் மரண எண் ணிக்கையும் குறையவில்லை. குஜராத் தில் ஒன்று, அவர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்; அல்லது நோஞ் சான்களாக வாழ்ந்து கொண்டுள்ளனர்!
அரசு மருத்துவமனைகளிலும், தாலுகா அல்லது மாவட்ட மருத்துவ மனைகளிலும் மகப் பேறு மருத்துவர்கள் நியமிக்கப்படாததால், இளம் தாய்மார்கள் மடிகிறார்கள். பெரும் நகரங்களில் அத்தகைய மருத்துவர்கள் உண்டு. அதனால் பல பெண்கள் ஆம்புலன்சுகளிலும், பேருந்துகளிலும் குழந்தை பெற நேரிடுகிறது. இளம் பெண்களின் உயிர் பற்றி அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இளம் பெண்களின் உயிர் பற்றியோ, ஏன் இளம் ஆண்களின் உயிர் பற்றியோ அரசு கவலைப்படுவதாகத் தெரிய வில்லை. அவர்களைக் காப்பாற்றுவதற் கான எந்தத் திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை. அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனை மருத்துவர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தார். குஜ ராத்தில் பலர் பறவைக் காய்ச்சலால் தினமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெண்களுக்கான கல்வி இலவசம் என்று சொல்லப்படுகிறது. சென்ற இரண்டு வருடங்களாக, அதற்கான பள்ளிகளையும் கல்லூரிகளையும் ஊக்குவிப்பதை நிறுத்தி விட்டது. நல்ல கல்வி வேண்டுமானால் தற்பொழுது பெண்கள், மிக அதிகமான பணம் கொடுத்தால்தான் பெற முடியும் அதுதான் குஜராத்தின் நிர்வாகம்! உள்ளாட்சி நிர்வாகங்களில் பெண் களுக்கு 50 விழுக்காடு இடம் வேண்டும் என மோடி பேசுகிறார். ஆனால், டாக்டர் திருமதி க. மாலானி குஜராத்தின் கவர்னர்தான் ஒரு பெண்ணாக இருந்தும் கூட அந்த சட்டம் நிறைவேறுவதற்கான கையெழுத்தை இடவில்லை. ஏனென் றால், கட்டாய வாக்களிப்பு பற்றிய மற்றொரு தீர்மானத்துடன் அது இணைக்கப்பட்டிருந்தது. தனித் தனியாகப் பிரித்து சட்டமுன் வரைவு களை நிறைவேற்றி அனுப்பினால், தான் கையெழுத்து இடத் தயாராக இருப்ப தாகச் சொல்லி, கவர்னர் திருப்பி அனுப்பி விட்டார். அதற்காக கவர்னர் தான் ஒரு பெண்ணாக இருந்தும், கையெழுத்திடாமல் திருப்பி விட்டார் என்று குற்றம் சுமத்தப்படுகிறது. அவர் பெண்ணாக இருந்தாலும்கூட என்பது அழுத்தம் கொடுத்துச் சொல்லப் படுகிறது. இதே போல அரை உண்மைகளே மட்டும் சொல்வதுதான் மோடியிசத்தின் சிறப்பு.
மோடி, குஜராத் கவர்னரைச் சிறுமைப்படுத்த வேண்டும். ஏனென் றால், அவர் விரும்பாத லோக் ஆயுக் தாவை நிறுவ கவர்னர் நடவடிக்கை எடுத்தார். நீண்ட நாட்களாக கொண்ட அந்தத் தொடர் சண்டை உச்சநீதிமன்றத்தில் உள்ளது.
2012 மே மாதத்தில் குஜராத்தில் 422 மகளிர் பஞ்சாயத்துக்கள் அமைக்கப் பட்டன. ஓட்டெடுப்பு இல்லாமல் ஒப்புதல் மூலமே பெண்கள் நியமிக்கப் பட்டனர். இந்த முறை ஜனநாயக உரிமையை மறுப்பதுடன், கிராம அளவில் வல்லமையோ செல்வாக்கோ மிக்கவர்களுக்கே சாதகமாக அமையும். பல நேரங்களில் கணவன்மார்களின் பிரதிநிதிகளாக பெண்கள் செயல் புரிய நேருகிறது. பெண்கள் தனிமைப் பொறுப்பிலிருக்கும் பஞ்சாயத்துக் களைப் பற்றி பெருமையாகப் பேசும் மோடி, அரசியல் சட்டப்படி உயர்நிலையிலுள்ள ஒரு பெண்ணான கவர்னரைப்பற்றி, சுயமரியாதைபற்றி கவலைப்படவில்லை. கூட்டம் முடிந்த வுடன் மக்கள் சிரித்துக் கொண்டே வீடு திரும்பும் வரை மோடியின் ஒட்டுகளுக்கும் பஞ்சமில்லை. அதனால் அவர் ஏன் மற்றவர் மான மரியாதை பற்றி கவலைப்பட வேண்டும்?
சென்ற பத்தாண்டுகளாக குஜராத் தில் குற்றங்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. ஒவ்வொரு நாளும் கொள் ளைகள், முதியவர் மற்றும் பெண்கள் கொலைகள் கூடி வருகின்றன.
குற்றம் ஆண்டு ஆண்டு 2001 2012
பாலியல் வன்முறை 235 413
ஆட் கடத்தல் 731 1329
மற்ற குற்றங்கள் குறைந்தனவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. காவல் நிலையங்கள் குற்றங்களைப் பதிவு செய்ய விரும்புவதில்லை. காரணம், குற் றங்கள் மிகுந்தால், அவர்கள் கண்டிக் கப்படுவார்கள். அரசின் கண்ணோட் டத்தில் குறைந்த குற்றப் பதிவுகள், மாநிலத்தை குற்றமில்லாததாகக் கூட்டும் அல்லவா?
வாணிகம் குஜராத்திகளின் ரத்தத் தில் ஊறிப்போன ஒன்று பல பெண்கள் சொந்தத் தொழில்களை நடத்துகின்றனர்.
அவர்கள் உணவு வகைகள் மட்டுமில்லாமல் ஆடை அணிகலத் தொழில் உரிமையாளர்களாகவும் உள்ளனர்; சிறந்தும் விளங்குகின்றனர். ஆனால் லிஜ்ஜாத் அப்பளம் பழங்குடி பெண்களால் தயாரிக்கப்படுவதில்லை. அது ஒரு தவறான செய்தி.
மோடி முதல்வராக இருந்தும்கூட, குஜராத்தில் நீண்ட நாட்களாக பெண்கள் வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்து வருகின்றனர்.
-விடுதலை ஞா.ம.,27.4.13
பாலியல் கொடுமைகளிலிருந்து மகளிரைக் காப்பாற்றக் கூடிய "ஷாக்' அடிக்கும் உள்ளாடைகள் வந்து விட்டன. சென்னையைச் சேர்ந்த ஆட்டோமொபைல் பொறியாளர்கள் பிரா போன்ற பெண்களின் உள்ளாடையில் 3800 கிலோ வாட் ஷாக் அடிக்கும் அமைப்பு, குளோபல் நிலைநிறுத்தும் சிஸ்டம் (GPS) மற்றும் மொபைல் தொலை தொடர்பு (GSM) கருவிகளை இணைத்து புதியதொரு சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். மனிஷா மோகன், ரிம்பி திரிபாதி, நீலாத்ரி பாசுபால் ஆகிய மூவரும் இணைந்து மேற்சொன்ன சாதனத்துக்கு "சமூக கவச சாதனம்' எனப் பெயரிட்டுள்ளனர். இந்த உள்ளாடையை பயன்படுத்தும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும்போது காவல்துறை மற்றும் பெண்ணின் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பும். சம்பவம் நடைபெறும் இடத்தை ஜி.எஸ்.எம். கருவி காட்டிக் கொடுத்துவிடும். இதுமட்டுமின்றி, 3800 கிலோ வாட் திறன் கொண்ட மின்சாரத்தை வெளிப்படுத்தி ஷாக் அடிக்கும். பெண்ணை நாடி வந்தவன் அப் பெண்ணைத் தொடுவதற்குக் கூடப் பயப்படுவான். இந்தக் கருவி 82 முறை இதுபோல ஷாக் அடிக்குமாம்!
-விடுதலை ஞா.ம.,27.4.13
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக