புதன், 20 பிப்ரவரி, 2019

விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக பொறியாளராக பெண் அதிகாரி நியமனம்பெங்களூரு, பிப்.18 இந்திய விமானப்படை வர லாற்றில் முதல் முறையாக, கினா ஜெய்ஸ்வால் என்ற பெண், விமான பொறியாள ராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீப காலமாக, பெண் களுக்கு அனைத்து துறைகளி லும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வரை, இந்திய விமானப்படையில் விமான பொறி யாளர் பணிக்கு, ஆண்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த பணிக்கு, முதல் முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, ராணுவ அமைச் சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆறு மாதங்கள் கடுமையான பயிற்சிகளை நிறைவு செய்த, சண்டிகாரை சேர்ந்த பெண் அதிகாரி, கிமா ஜெய்ஸ் வால், விமான பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிக்கலான விமான தொழில் நுட்பங்களை கண்காணித்து இயக்கும் பணியை, அவர் மேற்கொள்வார். ஹிமா ஜெய்ஸ்வால், 2015 ஜன., 5இல், இந்திய விமானப்படையில் சேர்ந்தார்.  நிலத்தில் இருந்து விமானத்தை நோக்கி செலுத் தப்படும் ஏவுகணை கண்காணிப்பு பிரிவில், பேட்டரி கமாண்டராகவும், ஏவுகணை செலுத்தும் பிரிவு தலைவ ராகவும், பணியாற்றி உள்ளார்;பின், விமான பொறியியல் படிப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். பயிற்சிகளை வெற்றி கரமாக நிறைவு செய்துள்ள இமா, நாட்டின் முதல், பெண் விமான பொறியாளராக நியமிக்கப்பட் டுள்ளார். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 18.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக