செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

ஏழு கடல்களை வெற்றிகரமாக நீந்திய பெண்உலகில் உள்ள ஏழு கடல்களில் வெற்றி கரமாக நீந்தி கரையேறிய முதல் இந்தியப் பெண்மணி. புலா சவுத்ரி. கொல்கத்தாவில் காலிகஞ் பகுதியில் வாழ்கிறார். தான் பிறந் ததே கடலில் நீந்துவதற்காகத்தான் என்று புலா பலமாக நம்பினார். அதன்படி கடல்களில் நீந்தி சாதனைகளையும் நிகழ்த்திக் காட்டினார். உலக சாதனை எப்படி இந்திய பெண் ணுக்குச் சாத்தியமானது என்பதை புலா விவரிக்கிறார்:

எனக்கு இப்போது நாற்பத்தெட்டு வயதாகிறது. மூன்று வயதிலேயே என்னை அப்பா நீந்தப் பழக்கினார். வங்காளத்தில் கிராமப்புறங்களில் வீட்டிற்கு ஒருகுளம் என்று இருக்கும். அந்தக் குளத்தில் குளிக்க அப்பா என்னை அழைத்துச் செல்வார். அப்படியே நீச்சலையும் கற்றுக் கொடுத்தார். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அப்பா சின்ன வயதில் குளத்தில் குளிக்கப் போய் நீரில் மூழ்கிவிட்டார். அவரை முன்பின் தெரியாத ஒருவர் காப் பாற்றினாராம். அந்த விபத்தை மறக்காத அப்பா நீச்சலை நன்கு கற்றுக் கொண்டதுடன், அவரது வாரிசுகளும் நீச்சலைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தீவிரமாக இருந் தார். அவர்தான் எனக்கும், என்னுடன் பிறந் தவர்களுக்கும் நீச்சலின் அரிச்சுவடிகளைச் சொல்லிக் கொடுத்தார். அவர் கற்றுத் தந்த நீச்சலை சாதனை நிகழ்த்த ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டேன்.

நீச்சலில் புதிய யுக்திகளைக் கற்றுக் கொள்ள நீந்தக் கற்றுத்தரும் அமைப்பில் சேர்ந்து தொழில் ரீதியான பயிற்சி பெற்றேன். அந்தப் பயிற்சி எனது மனதில் நம்பிக்கைகளை விதைத்தது. உலக சாதனை படைக்க வேண்டும் என்ற எனது லட்சியம் நிறைவேறும் என்ற உறுதி என்னுள் விருட்சமாக வளர்ந்தது. நாங்கள் சராசரி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். என்றாலும் நீச்சலை முறையாகக் கற்றுக் கொள்ள பெற்றோர் என்னை பயிற்சி வகுப்பில் தொடரச் செய்தார்கள். நீந்துதலில் எனக்கிருக்கும் ஆர்வத்தைப் பார்த்து நீந்தும் போது அணியும் நீச்சல் உடையை அம்மா தைத்துக் கொடுத்தார். அப்போது அது எனக்கு மிகப் பெரிய பரிசாக இருந்தது.

1982 வாக்கில் என்னுடன் பதினான்கு பெண்கள் நீச்சல் பயிற்சி பெற்றார்கள். நீந்து தலின் போது வேகத்தில் அவர்கள் அனை வரையும் பின்தள்ளி முன்னேறி விடுவேன். எனக்கு பன்னிரண்டு வயதான போது என்னு டைய உயரம் நாலரை அடிதான். எடை முப் பத்திநான்கு கிலோ மட்டுமே. ஆனால் தண் ணீரில் மீன் போல் அதி லாகவமாக நீந்துவேன்.

இந்தியாவில் நீச்சலில் பல புதிய சாதனை களைப் படைத்தேன். பதினைந்து தங்கப் பதக்கங்கள் பெற்றிருக்கிறேன். எனது சில சாதனைகள் உடைக்கப் படாமல் பல ஆண் டுகள் எனது பெருமையைக் கூறி வந்தன. தண்ணீருடன் பந்தம் பாசத்தை ஏற்படுத்திய நான் இந்தியாவின் சார்பில் காமன்வெல்த், ஆசியா விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டேன்.

தேசிய அளவில் பிரபலம் ஆனதும், நீச்சல் குளம் நீந்துவதற்கு சின்னதாகத் தோன்ற ஆரம்பித்தது. நீச்சல் குளத்திற்கு விடை சொல்லி விட்டு விரிந்து பரந்து கிடக்கும் நீலக் கடலை நீச்சல் குளமாக்கிக் கொண்டேன். ஆங்கிலக் கால்வாயைக் கடக்க 1989இல் பயிற்சி மேற்கொண்டேன். அந்தப் பயிற்சி களின் போதுதான் கடல் நீர் எனது தோலுக்கு ஒத்துக் கொள்ளாது என்று தெரிய வந்தது. முன்னே எடுத்து வைத்த காலை பின்னுக்கு எடுக்க விருப்பம் இல்லை. அந்த ஒவ்வா மையைப் பொறுத்துக் கொண்டேன். சகித்துக் கொண்டேன். கஷ்டப்படாமல் கனி கிடைக் குமா என்ன..! கடலில் பயிற்சி முடித்து கரைக்கு வந்தாலும் இரவு முழுவதும் தோலில் எரிச்சல் இருக்கும். இரவு சரிவர தூங்க முடியாது.

1989-இல் நான் கடந்த ஆங்கிலக் கால் வாயை 1999இல் மீண்டும் நீந்திக் கடந்தேன். 2005 - ஆம் ஆண்டு எனக்குப் பொன்னான ஆண்டு. இந்த ஆண்டில்தான் அய்ந்து கண்டங்களில் இருக்கும் சமுத்திரக் கால் வாய்களை ஒன்றன் பின் ஒன்றாக நீந்திக் கடந்து, அய்ந்து கண்டங்களின் சமுத்திர கால் வாய்களை கடந்த முதல் பெண் என்ற பெரு மையைப் பெற்றேன். ஜிப்ரால்டர் கால்வாய், டைர்ஹனியன் கால்வாய், கூக் கால்வாய், கிரீசுக்குப் பக்கத்தில் உள்ள டோரொனியாஸ் வளைகுடா, கலிபோர்னியா கடற்கரையை யொட்டிய கட்டலினா கால்வாய் மற்றும் தென் ஆப்பிரிக்கா, ரோபன் தீவுக்கு செல்லக்கூடிய மூன்று நங்கூர விரிகூடா எனது வெற்றிப் பட்டியலில் அடங்கும்.

நீச்சலில் இலங்கையின் தலைமன்னாருக் கும் தனுஷ்கோடிக்கு இடையிலான நாற்பது கி.மீ தூரமுள்ள பாக் கடல்நீர் சந்திப்பு ஆபத்தும், பெரிய அலைகளும், சக்தி மிகுந்த நீரோட்டமும் உள்ள பகுதியாகும். நீந்தலுக்கு சவால் விடும் கடல் பகுதி. உலகில் நீச்சலில் வாகையராக இருந்தாலும் பெரும்பாலான பேர்கள் பாக் சந்திப்பை நீந்திக் கடந்திருக்க மாட்டார்கள். எனது பயிற்சியாளர், நண்பர்கள், கணவர், சகாரா இந்தியா நிறுவனம் செய்த உதவி, தந்த உற்சாகம் காரணமாக பாக் சந்திப் பையும் 2005-இல் சுமார் பதினான்கு மணி நேரத்தில் நீந்திக் கடந்தேன். பாக் சந்திப்பு எனது ஏழாவது கடல் ஆகும். அப்போது எனக்கு முப்பத்திநான்கு வயது. பாக் சந்திப் பைக் கடந்ததும், உலகில் ஏழு கடல்களை ஒரே ஆண்டில் நீந்திக் கடந்த முதல் பெண்மணி என்ற பெருமை என்னை வந்து சேர்ந்தது, கணவர் சக்ரவர்த்தியும் சர்வதேச தர நீச்சல் வீரர். எங்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். நீச்சல் துறையில் எனது பங்களிப்பினை அங்கீகரிக்கும் விதமாக அர்ஜுனா விருதும், பத்மசிறீ விருதும் வழங்கப்பட்டது. மேற்கு வங்காளத்தில் ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந் துள்ளேன். வங்காளத்தில் நீச்சல் அகாதெமி ஒன்றைத் துவங்கும் வேலையில் ஈடுபட்டிருந் தாலும், தொடர்ந்து நீச்சல் பயிற்சி செய்து வருகிறேன் என்கிறார் புலசவுத்ரி.

-  விடுதலை நாளேடு, 5.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக