பக்ரைன், ஜூலை 1- சவுதிஅரேபியாவில் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் பொறுப்பு ஏற்றபின் அங்கு பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொண்டு வருகிறார். ஊழலற்ற ஆட்சிக் காக அரசு அலுவலகங்கள் கண்காணிக்கப்படுகின் றன. சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டன. பல ஆண்டுகளாக இங்கு பெண்கள் கார் ஓட்ட அனுமதி இல்லை.
ஆனால் அவர் பெண்கள் கார் ஓட்ட அனுமதி வழங்கினார். அத்துடன் விளையாட்டு போட்டிகளை பெண்கள் நேரில் கண்டு ரசிக்கவும் ஒப்புதல் கொடுத்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த பெண்கள் கார் ஓட்டுவதற்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சவுதி அரேபியாவில் கார் ஓட்டும் (டிரைவிங் லைசென்சு) உரிமம் பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை சாரம்மா தாமஸ் பெற்றுள்ளார்.
கேரள மாநிலம் பத்தினம் திட்டா பகுதியை சேர்ந்தவர். இவர் சவுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நர்சு ஆக பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே இந்திய ஓட்டு நர் உரிமம் வைத்துள்ளார். இந்த நிலையில் சவுதி அரேபியா வில் கார் ஓட்டுவதற்கான உரிமத்துக்கு விண்ணப்பித்திருந்தார். அவருக்கு கார் ஓட்டும் சோதனையும் கண் பரிசோதனையும் நடத்தப்பட்டது. இவற்றில் அவர் தேறியதால் ஓட்டுநர் உரிமம் வழங் கப்பட்டது. இளவரசர் உத்தரவை தொடர்ந்து ஊபர் உள்ளிட்ட கார்களின் ஓட்டுநர் பணிக்காக சவுதியில் உள்ள பெரும்பாலான பெண்கள் கார் ஓட்டும் பயிற்சி பெறுகின்றனர்.
- விடுதலை நாளேடு, 1.7.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக