புதன், 28 பிப்ரவரி, 2018

சவுதி அரேபியாவில் துணை அமைச்சராக முதல் முறையாக பெண் நியமனம்


துபாய், பிப். 28- எண்ணெய் வளம் மிகுந்த சவுதி அரேபியா வில் மன்னர் ஆட்சி நடக்கிறது. சல்மான் மன்னர் ஆக இருக் கிறார். அவரது மகன் முகமது பின் சல்மான் பட்டத்து இளவ ரசராக உள்ளார்.

இவர் பொறுப்பு ஏற்றதும் சவுதி அரேபியாவில் இருந்து பல அதிரடி சீரமைப்பு நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. பெண்கள் கார் ஓட்டவும், தொழில் தொடங்கவும், கால்பந்து போட்டிகளை கண்டுகளிக்கவும் அனுமதி வழங்கினார். ஏற்கெ னவே இருந்த தடைகளை நீக் கினார்.

லஞ்ச ஊழலில் ஈடுபட்ட இளவரசர்கள், அமைச்சர்கள், கோடீஸ்வரர்கள் என 50-க்கும் மேற்பட்டோரை கைது செய் தார். அவர்களை ரியாத்தில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் சிறை வைத்தார்.

இந்தநிலையில் சவுதி அரே பியாவில் ராணுவ தளபதிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ள னர். ராணுவம், விமானப்படை தளபதிகள் மற்றும் உயர் அதி காரிகள் பணிநீக்கம் செய்யப் பட்டனர். இந்த நிலையில் துணை அமைச்சராக பெண் ஒருவரையும் மன்னர் சல்மான் நியமித்துள்ளார். சமூக முன் னேற்றம் மற்றும் தொழிலாளர் நலத்துறை துணை அமைச்சராக டாக்டர் தாமாதர் பின் யூசுப் அல்-ரம்மா என்ற பெண் நிய மிக்கப்பட்டுள்ளார்.

இதுபோன்ற முக்கிய துறை யில் பெண் ஒருவர் துணை அமைச்சராக நியமிக்கப்படுவது அந்த நாட்டில் இதுவே முதல் முறையாகும். இவர் மான் செஸ்டர் பல்கலைக்கழகத்தில் ரோடியோலஜி மற்றும் மருத் துவ பொறியியல் துறையில் பி.எச்.டி. படித்தவர். 2016இல் சவுதி அரேபியாவின் மனித உரி மைகள் ஆணைய உறுப்பினராக இருந்தார்.

- விடுதலை நாளேடு, 28.2.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக