உலக வர்த்தக அமைப்பின் (WTO) முதல் பெண் தலைவராக நிகோசி ஒகோஞ்சோ இவேலா (66) நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் உலக வர்த்தக அமைப்பின் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த முதல் பெண் நபர் என்ற சாதனையை இவேலா படைத்துள்ளார். 164 உறுப்பு நாடுகளைக் கொண்ட உலக வர்த்தக அமைப்பு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் தொடர்பான விதிகளை முடிவு செய்கிறது.
“கரோனா தொற்று பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சர்வதேச பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முக்கியத்துவம் கொடுக்கப்படும்‘‘ என இவேலா கூறியுள்ளார்.
- உண்மை இதழ் 1- 15. 3.21
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக