வெள்ளி, 11 ஜனவரி, 2019

முதல் திருநங்கை செவிலியர் மாணவி!



தமிழ்ச்செல்வி, வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுகாவில் இருக்கும் புளியங்கண்ணு கிராமத்தைச் சேர்ந்த இவர் பல ஆண்டுகளாகவே செவிலியர் படிப்புக்காக முயன்று கொண்டிருந்தார். கடந்த ஆண்டு பி.பார்ம் படிப்பதற்காக முயன்றார். அவர் திருநர் என்ற காரணத்தால் மெரிட் லிஸ்டில் இடம்பெறவில்லை. பின் தனியார் செவிலியர் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார். ஆறு மாதம் ஆன பிறகு திருநராயிருக்கும் ஒருவர் செவிலியர் படிப்பை படிக்க முடியாது என்று கடிதம் வந்தது. கடிதத்துடன் ஒவ்வொரு அரசு அலுவலகமாக ஏறி இறங்கி போராட செய்தார். பின் இந்த ஆண்டு டிப்ளமோ இன் ஜெனரல் நர்சிங் பிரிவில் திருநர் சமூகத்தைச் சேர்ந்தவரும் செவிலியர் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் எனஅரசு ஆணை பிறப்பித்தது. தமிழ்ச் செல்விக்கு கவுன்சிலிங்கில் மட்டும் பெயர் வந்தது. தகுதிப் பட்டியலில் பெயர் இடம் பெறவில்லை. சட்டத்தின் மூலமாக உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுதாக்கல் செய்து மனித உரிமை ஆணையத்தின் மேற்பார்வையில் செயல்பட்டு அக்டோபர் 31 அன்று வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் படிப்பதற்கான அனுமதி கிடைத்தது.

சமூகத்தில் கல்வி வேலைவாய்ப்பு போன்றவற்றை பாலியல் சிறுபான்மை யினருக்கு இட ஒதுக்கீட்டை அரசு சரியான முறையில் செயல்படுத்தினால் தான் தங்களின் நிலை மாறும் என்கிறார் தமிழ்செல்வி.

-  விடுதலை ஞாயிறு மலர், 22.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக