வெள்ளி, 2 மார்ச், 2018

பாரதமாதாவில் மாதரசிகள்?


2017ஆம் ஆண்டில் அரசியலில் பெண்கள் எனும் தலைப்பில் இன்டர் பார்லிமெண்டரி யூனியன் மற்றும்  அய்.நா.பெண்கள் அமைப்பின் சார்பில் பெண்கள் பிரதிநிதித்துவமின்மைகுறித்து ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகையில் சரி பகுதியளவில்   பெண்கள் உள்ளனர். பெண் களின் பிரதிநிதித்துவம் உரிய அளவில் இல்லாத நிலையே  தொடர்ந்து கொண்டி ருக்கிறது.

9 விழுக்காடு பெண்கள் புள்ளிவிவரம் வெளியீடு

நாடுமுழுவதும் உள்ள சட்டமன்ற உறப்பினர்கள் 4,118 பேரில் பெண்கள் 9 விழுக்காட்டளவில்தான் உள்ளனர்.

பீகார், அரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 14 விழுக்காடும், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்க மாநிலங்களில் 13 விழுக்காடும், பஞ்சாப் மாநிலத்தில் 12 விழுக் காடும் பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

நாடாளுமன்ற இரு அவைகளில் பெண்கள் எண்ணிக்கை

2017ஆம் ஆண்டில் அரசியலில் பெண் கள் எனும் தலைப்பில் இன்டர் பார்லி மெண்டரி யூனியன் மற்றும்  அய்.நா. பெண்கள் அமைப்பின் அறிக்கையின்படி, இந்தியாவில் மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 542 பேரில் 64 பேர் பெண்கள் உள்ளனர். மாநிலங்களவையில் நாடாளு மன்ற உறுப்பினர்கள் 245பேரில் 27பேர் பெண்கள் உள்ளனர். அரசு நிறுவனங்கள் மற்றும் நாடாளுமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் கொண்ட 227 நாடுகளின் பட்டியலில் இந்தியா 148ஆம் இடத்தில் உள்ளது.

பெண்களின் உரிமைகளை அரசு ஆதரிக்கும் வகையில், இந்த ஆண்டுக்கான புள்ளிவிவரப் பட்டியல் கொண்ட பிங்க் நிறத்தில் அட்டை கொண்ட ஏட்டை  பொரு ளாதார முதன்மை ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் வெளியிட்டார்.
அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கு தற்கான முற்போக்கு சமுதாயத்தை கட்டிய மைத்திட பெண்களுக்கு உரிமைகள் அளிக் கப்பட வேண்டும் என்பதை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

முத்தலாக் சட்டம் பெண்உரிமை என்றால் பெண்களுக்கான இடஒதுக்கீடு நிலுவை ஏன்?

சமூக ஆய்வு மய்ய இயக்குநர் ரஞ்சனா குமாரி கூறியதாவது:

பாலின பிரச்சினைகளில் அரசியல் ரீதியில் மட்டுமே அரசு அணுகி வருகிறது. முத்தலாக் பிரச்சினையில்  பாலின உரிமை களுக்கானதுதான் அரசின் முடிவு என்றால், பெண்களுக்கான இடஒதுக்கீட்டு சட்டம் ஏன் இன்னமும் நிலுவையில் இருந்துவருகிறது? என்று கேள்வி எழுப் பினார்

- விடுதலை ஞாயிறு மலர், 24.2.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக