ஞாயிறு, 16 அக்டோபர், 2016

உலகின் முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவையின் பெண் அமைச்சர்

எழுத்தாளர்... சிந்தனையாளர்... புரட்சியாளர்... ரஷ் யாவில் லெனின் அமைச்சரவையில் இடம்பெற்ற ஒரே பெண் அமைச்சர்...  அயல்நாட்டுத் தூதராகவும் பணியாற்றிய முதல் பெண் அலெக்சாண்ட்ரா!
1872ஆம் ஆண்டு வசதியான பெற்றோருக்கு மகளாகப் பிறந்தார் அலெக்சாண்ட்ரா. உக்ரைனிலும் பின்லாந்திலும் வளர்ந்தார்.
வீட்டிலேயே அவருக்குக் கல்வி அளிக்கப் பட்டது. தன் வீட்டுக்கு அருகில் வசித்த விவசாயக் குழந்தைகள் தன்னைப் போல வசதியாக இல்லை என்கிற விஷயம் அலெக்சாண்ட்ராவை மிகவும் யோசிக்க வைத்தது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று நினைத்தார். அவருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரி யரும் குடும்ப நண்பரும் அலெக்சாண்ட்ராவுக்குப் பல விஷயங்களை அறிமுகம் செய்தனர். அவர் எழுத்தாளராக வாய்ப்பிருப்பதாகக் கூறினார்கள்.
வீட்டிலேயே கல்வி கற்ற அலெக்சாண்ட்ராவுக்குப் பல்கலைக்கழகம் சற்று அச்சத் தைத் தந்தது. அவர் கூச்ச சுபாவம் கொண்டவராகவும் இருந் தது ஒரு காரணம். படிப்பை முடித்தவுடன் திருமணத்துக்கு ஏற்பாடு செய்ய  ஆரம்பித்தார்கள்  பெற்றோர்.  அக்காலத்தில் இளம்பெண்களுக்கு வயதான முதியவரைத் திருமணம் செய்து கொடுக்கும் வழக்கம் இருந்தது. அலெக்சாண்ட் ராவின் அக்காவுக்கு வசதியான 70 வயது முதியவரைத் திருமணம் செய்து வைத்தார்கள்.
அதனால் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணத்தை வெறுத்தார் அலெக் சாண்ட்ரா. காதலித்துதான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார். உறவினரான விளாடிமிர் கொ லோண்டையைத் திருமணம் செய்துகொண்டார். பொறியாளராக இருந்தாலும் கொலோண்டை எந்த வேலைக்கும் செல்லவில்லை. அவரிடம் பணமும் இல்லை.
காதலுக்குப் பணம் அவசியம் இல்லை என்ற கருத்தில் உறுதியாக இருந்தார் அலெக்சாண்ட்ரா. ஒரு மகனையும் பெற்றெடுத்தார். 1896ஆம் ஆண்டில் ஆடைகள் தயாரிக்கும் மிகப்பெரிய தொழிற்சாலைக்குச் சென்றார். அங்கே 12 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண் டிருந்தனர். தினமும் 12 மணி நேரத்திலிருந்து 18 மணி நேரம் வரை வேலை செய்துகொண்டிருந்தனர்.
இடையில் கிடைக்கும் சிறிது நேரத்தில், அங்கேயே தூங்கி எழுந்து, மீண்டும் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். தொழிலாளர்கள் தொழிற்சாலைக்குள் ளேயே சிறைபட்டுக் கிடந்ததைக் கண்ட அலெக்சாண்ட்ரா அதிர்ச்சியில் உறைந்து போனார். இந்த நிகழ்ச்சி அலெக்சாண்ட்ராவின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தொழிலாளர் நலனுக் காகப் பாடுபட உறுதி எடுத்துக்கொண்டார். தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கினார்.
அரசியல் பொருளாதாரம் படிப்பதற்காக ஜுரிச், லண்டன் சென்றார். சிந்தனையாளர்களைச் சந்தித்தார். தன்னை நன்றாக வளர்த்துக்கொண்டு, ரஷ்யா திரும்பினார். தடை செய்யப் பட்ட ரஷ்ய ஜனநாயகக் கட்சியில் சேர்ந்தார். கொள்கைப் பரப்பாளராகவும்  எழுத்தாளராகவும்  பணி யைத் தொடர்ந்தார்.
முதலில் நான் ஒரு மனிதன். அடுத்து ஒரு பெண். கடைசியாகத்தான் ஒருவரின் மனைவி, ஒருவரின் தாய் என்ற தெளிவு அலெக்சாண்ட் ரா வுக்குள் வந்தது. கணவரை விட் டுப் பிரிந்தார். மகனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டார்.
ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி இரண் டாகப் பிரிந்தது. லெனின் தலைமையில் போல்ஷ் விக் கட்சியில் இணைந்தார் அலெக்சாண்ட்ரா. பல் வேறு போராட்டங்களில் பங்கு பெற்றார்.
முதல் உலகப் போர் நடைபெற்றபோது, போர் எதிர்ப்புப் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டார். பல்வேறு உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று உரை நிகழ்த்தினார். கட்டு ரைகள் எழுதினார். ஜார் மன்னருக்கு எதிரான போராட் டங்களில் தீவிரமாகக் கலந்துகொண்டார். ரஷ்யாவில் அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் லெனின் தலைமையில் கம்யூனிஸ்ட் அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்தது.
இந்த அரசாங்கத்தின் ஒரே பெண் அமைச்சராகப் பொறுப்பேற்றார் அலெக்சாண்ட்ரா. அவருக்குச் சமூக நலத்துறை ஒதுக்கப்பட்டது.
சமூக நலத்துறையில் என் னென்ன விஷயங்கள் வரவேண்டும் என்ற முன்மாதிரி எதுவும் இல்லை. அவர்தான் உலகத்துக்கே ஒரு முன்மாதிரியை உருவாக்க வேண்டியிருந்தது. இரவு, பகலாக உழைத்தார் அலெக்சாண்ட்ரா. பெண்கள், தொழிலாளர்கள், குழந்தைகள் நலன் மேம்பட பல சட்டங்களை இயற்றினார்.
ஒரே  வேலை செய்யும்  ஆணுக்கும் பெண்ணுக்கும் சம மான சம்பளம் வழங்கப்பட வேண்டும். பணிபுரியும் இடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.  ஆணுக்கும் பெண்ணுக்கும் விவாகரத்து எளிதாக்கப்பட்டது. பெண் தன் விருப்பப்படி தந்தை அல்லது கணவனின் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக் கொள்ளலாம்.  திருமண உறவு மூலம் பிறக்காத குழந்தைகள் முறையற்ற குழந்தைகள் என்று சொல்வது தடை செய்யப்பட்டு, அவர்களும் மற்ற குழந்தைகள் போலவே நடத்தப்பட்டனர்.
பெண் ஊழியர்களுக்குப் பிரசவ காலத்தில், சம்பளத் துடன் கூடிய 16 வாரங்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இப்படிப் பல சீர்திருத்தங்கள்! 1922ஆம் ஆண்டு நார்வேக் கான ரஷ்யத் தூதராக நியமிக்கப்பட்டார் அலெக்சாண்ட்ரா.
உலகின் முதல் அயல்நாட்டுத் தூதுவர் என்ற சிறப் பையும் பெற்றார். நார்வேக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்தினார். மெக்சிகோ, ஸ்வீடன், நார்வே என்று பல ஆண்டுகள் தூதுவராகச் சிறப்பாகச் செயலாற்றினார் அலெக்சாண்ட்ரா.
உலக அரசியலிலும் ரஷ்ய அரசியலிலும் தவிர்க்க முடியாத ஆளுமையாகவும் இன்று பெண்கள், தொழி லாளர்கள் ஓரளவு உரிமைகளைப் பெறுவதற்குக் காரண மாக  இருந்தவருமான  அலெக்சாண்ட்ரா 80ஆவது வயதில் மறைந்தார்.
-விடுதலை,23.8.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக