புதுடில்லி, ஜூலை 7 வட மாநிலங்களில் பெண் குழந்தை களின் கல்வி சதவீதம் குறைவாக உள்ளதாக புள்ளி விபர ஆய் வறிக்கை தெரிவித்துள்ளது.
2014ஆம் ஆண்டு ஆய்வ றிக்கையின்படி, கல்வி நிலை குறித்து ஆய்வு நடத்தப்பட்ட 21 முக்கிய மாநிலங்களில் குஜராத் 20ஆவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் 21 ஆவது இடத்தில் உள்ளது. குஜராத்தில் 15 முதல் 17 வயதிற்குற்பட்ட சுமார் 26.6 சதவீதம் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல் லாதவர்களாகவோ அல்லது பள்ளி படிப்பை பாதியில் நிறுத் தியவர்களாகவோ உள்ளனர்.
பீகாரில் பள்ளி செல்லும் பெண் குழந்தைகளின் எண் ணிக்கை 83.3 சதவீதமாகவும், அசாமில் 84.8 சதவீதமாகவும், ஜார்கண்டில் 84.1 சதவீத மாகவும், சட்டீஸ்கரில் 90.1 சதவீதமாகவும், ம.பி.,யில் 79.2 சதவீதமாகவும், உ.பி.,யில் 79.4 சதவீதமாகவும், ஒடிசாவில் 75.3 சதவீதமாகவும் உள்ளன. அதே சமயம் குஜராத்தில் பள்ளி செல்லும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 73.4 சதவீதமாக வும், ராஜஸ்தானில் 72.1 சதவீத மாகவும் உள்ளன.
-விடுதலை,7.7.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக