இந்தியா, ஆங்கில ஆதிக்கத்திலிருந்து அற வழியில் சுதந்திரம் பெற்ற பிறகு, நாம் தனி சுதந்திர நாடாக செயல்பட, அரசியல் அமைப்பு சாசனம் இயற்றுவது அவசியம் என்ற காரணத் தால், ஒரு குழு அமைக்கப்பட்டது.
பல கருத்து பரிமாற்றங்கள், விவாதங்களோடு, நடைமுறையிலிருக்கும் பல நாட்டு அரசியல் அமைப்பு சாசனங்களின் உள் அமைப்பினையும் உற்று நோக்கி, நம் ஜனநாயகத்துக்குத் தேவையான விஷயங்களை சேகரித்து, இவை அனைத் தையும் ஒன்றிணைத்து டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் உள்பட பல தலைவர்களின் முயற்சியால் இந்திய அரசியல் அமைப்பு சாசனம் 1949 நவம்பர் 30 அன்று இயற்றப்பட்டு, 1950 ஜனவரி 26இல் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பேணிக் காப்பதில் பெரும் பங்கு வகித்து வருகிறது. நம் நாட்டின் சட்டங்கள் அனைத்துக்கும் ஒரு தாய் சட்டமாக, முதுகெலும்பாக விளங்குவதுதான் இந்த அரசியல் அமைப்பு சாசனம்!
நம்முடைய அரசியல் அமைப்பு சாசனத்தின் ஷரத்து 14, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட் டையே வலியுறுத்துகிறது. ஒருவர் பின்பற்றும் மதத்தின் அடிப்படையிலோ, ஜாதியின் அடிப்படையிலோ, ஆண்- பெண் வித்தியாசத்தின் அடிப்படையிலோ அரசியல் அமைப்பு சாசனம் செயல்படவில்லை.
இதன் ஷரத்து 15(1) மதம், சாதி, பாலினம், பிறந்த இடம் மற்றும் இனத்தின் () அடிப்படையில் எந்தவித பாகுபாடும் இல்லை என வலியுறுத்துகிறது. அதன் ஷரத்து 15(3)ன் கீழ், பெண் களுக்கும் குழந்தைகளுக்குமான சிறப்புச் சட்டங்கள் இயற்றவும், சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளவும் வழி செய்யப்பட்டுள்ளது.
ஆணாதிக்க சிந்தனை மிக்க சமுதாயத்தில் அடுப் பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என எண்ணப் பட்ட நிலையில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வந்திருக் கிறது. ஆண்களுக்கு நிகராக பெண்கள் எந்தவொரு செயலையும் தன்னிச்சையாக செய்ய முடியாத நிலையும் இருந்திருக்கிறது. பெண்களின் நலனுக்காகவும் விடுதலைக் காகவும் குரல் கொடுத்த தந்தை பெரியார், ராஜாராம் மோகன்ராய், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போன்ற பலரின் முயற்சியால் பெண்களுக்கு எதிரான பல இன்னல்கள் படிப்படியாக குறைக்கப்பட்டன.
பெரும் முயற்சியால் பெண்களுக்கு கல்விக் கண் திறக்கப்பட்டது. தடைகள் எல்லாவற்றையும் கடந்து, இன்று பெண்கள் ஆண்களுக்கு நிகராக கல்வியறிவு பெறுவ துடன், அவ்வாறு கற்ற கல்வியின் மூலம் நல்லதொரு பணி செய்து பொருளாதார ரீதியாக முன்னேறி வருகிறார்கள்.
இந்நிலை சாத்தியமானதற்கு நமது அரசியல் அமைப்பு சாசனமும் முக்கிய காரணம். அதன் ஷரத்து 16இன் கீழ், ஒருவரின் பணி நியமனத்தின்போதோ, பணி உயர்வின் போதோ ஆண் - பெண் என்ற பேதமை பார்க்கப்படாம லிருப்பதற்கும், அனைவரையும் ஒரே கண்ணோட் டத்துடன் பார்ப்பதற்கும் வழிவகை செய்துள்ளது. ஷரத்து 39 (டி) ஒரே பணி செய்யும் ஆணுக்கும், பெண்ணுக்கும் அந்தப் பணிக்கான சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்துகிறது.
அரசியல் அமைப்பு சாசனத்தின் ஷரத்து 42ன் கீழ், அனைவருக்கும் பாது காப்புடன் கூடிய பணியிடமும் மற்ற வசதிகளும் செய்து தரவேண்டும். தாய்மைப்பேறு அடைந்த பெண்களுக்கு பேறுகால உதவியும் சலுகைகளும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயேதான் மகப்பேறு நல சட்டம் 1961, சம ஊதிய சட்டம் 1976 ஆகியவை இயற்றப்பட்டு பணிபுரியும் பெண்களுக்கு ஒரு நல்வாய்ப்பாக இருந்து வருகின்றன.
இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தில் ஷரத்து 39(ஏ)ன் படி இந்த சமுதாயத்தில் எந்தவித வித்தியாசமும் இன்றி ஆணும் பெண்ணும் சமமாக வாழ வழிவகை செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. ஷரத்து 39(ஏ)இன் கீழ் சமநீதியை நிலை நாட்டும் வகையில், தேவைப்படும் அனைவருக்கும் இலவச சட்ட உதவி கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக... பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கட்டாயமாக இந்த இலவச சட்ட உதவி கிடைக்க இந்த ஷரத்து வலியுறுத் துகிறது. எந்த நிலையிலும் ஒரு பெண்ணுக்கு நீதி மறுக்கப் படக் கூடாது என்ற அடிப்படையிலேயே இந்த ஷரத்து இயற்றப் பட்டுள்ளது. இன்று பெண்களுக்கு எதிரான வன்முறை களும் குற்றங்களும் பெருகி வரும் நிலையில் நம் நாட்டுப் பெண்கள் அவர்களுக்கான சட்ட உரிமை களையும் கடமைகளையும் அறிவது அவசியமாகிறது.
இன்றைய நிலையில் என்னதான் பெண்கள் கல்வியறி வில் மேம்பட்டிருந்தாலும் பொருளாதார வளர்ச்சியை தொட்டுக் கொண்டிருந்தாலும் அனைத்து இந்தியப் பெண்களும் இந்த நிலையை எட்டிவிட்டார்களா என்றால் கண்டிப்பாக இல்லை என்ற பதிலே மிஞ்சி நிற்கும். ஆணுக்கு நிகரான ஒரு நிலையை அடைய பெண்கள் அரும்பாடுபட்டுக் கொண்டிருந்தாலும், நம் நாட்டுப் பெண்கள் அந்த நிலையை அடைவதற்கு இன்னும் பயணம் செய்ய வேண்டிய தூரம் மிக அதிகம்.
நம் நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்களும் பயனளிக்கும் சட்டங்களும் ஏராளமாக உள்ளன. எனினும், இந்தச் சமுதாயம் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டிய சமமான அங்கீகாரத்தை, இன்றும் எல்லா நிலைகளிலும் கொடுக்க மறுக்கிறது என்பதுதான் நிதர்ச னமான உண்மை. இப்பாகுபாட்டைக் களைய இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தின் ஷரத்து 46 பெரிதும் முயல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-விடுதலை,2.9.14
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக