சீனா முதன்முறையாக பெண் விண்வெளி வீரர் ஒருவருடன் விண்கலமொன்றை இன்று விண்ணுக்கு ஏவுகிறது. ஒரு பெண் உட்பட 3 விண்வெளி வீரர்கள் அடங்கலாக ஷென்ஷோவு 9 எனும் விண்கலம் ஜூன் 2012 16ஆம் தேதி, இற்கு ஜியூக்குவான் ஏவுதளத்திலிருந்து செலுத்தப்பட்டது.
விண்ணில் இயங்கி வரும் சீனாவின் விண் நிலையமான டியாங்கொங் - 1 உடன் சேர்ந்து விண்வெளி குறித்து ஆய்வு செய்யவிருக்கிறது இவ்விண்கலம். எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரை இது போன்று பல விண்கலங்களைப் படிப்படியாக ஏவி, இந்த டியாங்கொங் - 1 எனும் விண் நிலையதில் பல வீரர்கள் தங்கி ஆய்வு செய்யக் கூடியவாறு அதனை நாசாவின் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஒப்பாக கட்டி எழுப்புவதே சீனாவின் நோக்கம் ஆகும்.
இவ் விண்கலத்தில் செல்லவுள்ளவர்களில் ஜிங் ஹைப்பெங், லியூ வாங் ஆகிய இரு ஆண் வீரர்களும், லியூ யாங் எனும் பெண் வீரரும் அடங்குவர். 33 வயதான லியூ யாங் எனும் சீன வான்படையின் தளபதியாகக் கடமையாற்றியவர்.
-விடுதலை,21.8.12
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக