ரியாத், டிச. 14-_ மன்னர் ஆட்சி நடைபெறும் சவுதி அரேபியாவில் இதுவரை பெண்களுக்கு ஓட்டு உரிமை கிடையாது. பெண் கள் தேர்தலில் போட்டியி டவும் முடியாது. பெண் கள் வாகனங்கள் ஓட்டவும் அனுமதி இல்லை.
கடந்த ஜனவரி மாதம் மன்னர் அப்துல்லா மரணம் அடைவதற்கு முன்பாக சில சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். இதில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதும் அடங்கும்.
இந்தநிலையில், சவுதி அரேபியாவில் உள்ள 2 ஆயிரத்து 100 உள்ளாட்சி கவுன்சில் இடங்களுக்கு நேற்று தேர்தல் நடந்தது. மேலும், 1,050 இடங்களில் மன்னர் ஒப்புதலுடன் நிய மனங்கள் செய்யப்படும். பொதுவாக்கெடுப்புக்கான தொகுதிகளில் 900 பெண்கள் உள்பட 6,440 பேர் போட்டியிட்டனர்.
நேற்று வாக்கு எண் ணிக்கை நடைபெற்றது. இதில் சவுதியின் பல்வேறு பகுதிகளில் போட்டி யிட்ட பெண்களில் 17 பேர் வெற்றி பெற்றுள்ள னர். இவர்களுக்கு சட்டம் இயற்றுவதில் எவ்வித அதிகாரமும் இல்லை என்ற போதிலும், அதி காரிகளுக்கு ஆலோசனை வழங்குவது, உள்ளூர் வரவு செலவு திட்டங் களை மேற்பார்வை செய் வது போன்ற பணிகளில் ஈடுபட முடியும்.
-விடுதலை,14.12.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக