பெண்ணை நிலவாகவும், மலராக வும், தெய்வமாகவும் போற்றிப் புகழ் கின்ற நம்
பாரத புண்ணிய பூமியில் பெண்களை ஒரு போகப்பொருளாக மட்டுமே எண்ணி அவர்களிடம் பாலியல்
வன்கொடுமை, வரதட்சணைக்
கொடுமை ஆகியவை நாளும் அரங் கேற்றப்பட்டு வருகின்ற அவலநிலையை நாளேட்டின் வாயிலாக
நாள்தோறும் காண முடிகின்றது.
பெண்கள்
நாட்டின் கண்கள், பெண்களைப்
படிக்க வைப்போம் - நாட்டிற் குப் பெருமை சேர்ப்போம் எனும் வெற்று முழக்கங்களால்
மட்டுமே பெண் களுக்கு பெருமையும், புகழும் வந்து விட்டது.
ஆண்களுக்கு
நிகராக பெண் களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டால் மட்டுமே அவர்களால் முழு
சுதந்திரத்துடனும் - உரிமையுட னும் வாழமுடியும் என்பதற்கு எடுத்துக் காட்டாக
நாள்தோறும் நடக்கின்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொடுமைகள் ஆகியவை நமக்கு உணர்த்தும்
பாடமாகும்.
எனவேதான்
தொலைநோக்குப் பார்வையோடு சமுதாய விஞ்ஞானி தந்தை பெரியார் அவர்கள் செங்கற்பட் டில் 1929-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சுயமரியாதை
மாநாட்டில் மத்திய - மாநில அரசுகள் பெண்களுக்கு கல்வி - வேலைவாய்ப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வருவதற்கு
ஏதுவாக சட்டம் இயற்றவேண்டும் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மா னத்தைக் கொண்டு
வந்து அகிலத் தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
மேலும், ஆண்களுக்கு என்னென்ன உரிமைகள் உள்ளனவோ
அத்தனை உரிமைகளும், பெண்களுக்கும்
கட்டாய மாக வழங்கப்பட வேண்டும் என்று ஓர் ஆணாக இருந்துகொண்டு பெண்களுக் காக
உரிமைக்குரல் கொடுத்தவர் பெண்ணுரிமைக் காவலர் தந்தை பெரியார் அவர்கள் ஆவார்.
பூனைகளால்
எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? ஒரு நாளும் கிடைக்காது. அது போன்று எந்த ஆணும் தான் அனுபவித்து
வருகின்ற உரிமைகளை விட்டுக்கொடுக்க ஒரு போதும் முன்வரமாட்டார்கள். எனவே பெண்கள்
தங்கள் உரிமைகளை தாங்களாகவே எடுத்துக்கொள்ள முன் வரவேண்டும் எனறு கூறிய பெண்ணிய
வாதி தந்தை பெரியார் அவர்களின் தொலைநோக்குச் சிந்தனைதான் இன்றளவும் மக்கள் மனதில்
சுடர் ஒளியாய் எழுந்து நிற்கின்றது.
இவ்வாறு தந்தை பெரியார் அவர் கள் நீண்ட நெடுங்காலமாக பெண்கள் உரிமைக்காகவும், பெண்கள் நலனிற் காகவும், பெண் கல்விக்காகவும், பெண் விடுதலைக்காகவும் ஓங்கிக் குரல் கொடுத்ததின் பயனாய் இன்று பெண்கள் படித்து பட்டம் பெற்று பல்வேறு துறைகளில் உயரதிகாரிகளாகவும், ஊராட்சி - நகராட்சி மன்றத் தலைவர் களாகவும், மாநகராட்சி மேயராகவும் மற்றும் மாநில முதல்வராகவும் கட்சி யின் தலைவர்களாகவும், நாடாளுமன்ற பேரவைத் தலைவராகவும், நாடாளு மன்ற - சட்டமன்ற உறுப்பினர்களாக வும், மத்திய - மாநில அமைச்சர்களாக வும் அங்கம் வகித்து வீட்டிற்கும், நாட் டிற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
இவ்வாறு தந்தை பெரியார் அவர் கள் நீண்ட நெடுங்காலமாக பெண்கள் உரிமைக்காகவும், பெண்கள் நலனிற் காகவும், பெண் கல்விக்காகவும், பெண் விடுதலைக்காகவும் ஓங்கிக் குரல் கொடுத்ததின் பயனாய் இன்று பெண்கள் படித்து பட்டம் பெற்று பல்வேறு துறைகளில் உயரதிகாரிகளாகவும், ஊராட்சி - நகராட்சி மன்றத் தலைவர் களாகவும், மாநகராட்சி மேயராகவும் மற்றும் மாநில முதல்வராகவும் கட்சி யின் தலைவர்களாகவும், நாடாளுமன்ற பேரவைத் தலைவராகவும், நாடாளு மன்ற - சட்டமன்ற உறுப்பினர்களாக வும், மத்திய - மாநில அமைச்சர்களாக வும் அங்கம் வகித்து வீட்டிற்கும், நாட் டிற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
ஒருபுறம்
மகளிர் சமுதாயம் பல்வேறு துறைகளில் - பல்வேறு நிலைகளில் மேம்பட்டு வருவதைக் கண்டு
மகிழ் கின்ற அதே வேளையில் மறுபுறம் அண்மையில் (5.9.2014) தேசிய குற்ற ஆவணங்கள் அமைப்பு புள்ளி
விவரங் களுடன் ஓர் வேதனை மிகுந்த செய்தி யினை வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 92 பெண்கள் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கபடுகிறார்கள்
என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா முழுவதும் 2012-ம் ஆண்டில் 24 ஆயிரத்து 923 வழக்குகள் இவ்வாண்டில் பதிவாகி இருந்தன.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் (2013) 33 ஆயிரத்து 707 ஆக உயர்ந்து உள் ளது. கடந்த ஆண்டில்
பாலியல் வன் முறைக்கு உள்ளான பெண்களில் 15 ஆயிரத்து 556 பேர் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்.
மேலும்
இந்த குற்றத்தில் தலைநகர் டெல்லி முதல் இடத்தில் இருக்கிறிது. அங்கு ஒரு நாளைக்கு
சராசரியாக 4 பெண்கள்
கற்பழிக்கப்படுகிறார்கள். 2012 ஆம்
ஆண்டில் டில்லியில் 706 பாலி யல்
வன்முறை வழக்குகள் பதிவாகி இருந்தன. 2013 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1636 ஆக அதிகரித்துள் ளது. கற்பழிப்பு
குற்றத்தில் நகரங்களை பொறுத்த மட்டில் டில்லிக்கு அடுத்த இடங்களை மும்பை, ஜெய்ப்பூர், புனே ஆகிய நகரங்கள் உள்ளன என்று
அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களை தேசிய குற்ற ஆவணங்கள் அமைப்பு அண்மையில் (5.9.2014)
வெளியிட் டுள்ளது.
மேற்கண்ட
அதிர்ச்சி மிகுந்த செய்தியை நாளேட்டின் வாயிலாக அறிந்த மகளிர் அமைப்பினர், மாதர் சங்கங்கள், மகளிர் உரிமை மாண்பாளர் கள், சமுதாய ஆர்வலர்கள், முற்போக் குச் சிந்தனையாளர்கள், மனிதநேயப் பண்பாளர்கள், பகுத்தறிவாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோர் சொல்லொண்ணாத்
துயரத்தில் மூழ்கி னர். அவர்களால் பேச முடியாமல் நா தழுதழுத்தது, உதிரம் உறைந்து போனது, செய்வதறியாது திகைத்து நின்றனர்.
சுதந்திரம்
அடைந்து 67 ஆண்டுகள்
ஆன நிலையில் இளைஞர்களை அதிகம் கொண்டுள்ள இந்திய நாடு வளர்ந்த நாடாக - வளர்ச்சி
பெற்ற நாடாக உலக அரங்கில் ஏற்றம் பெற முடியாமல் போனதற்கு முக்கியக் காரணம்
பெண்ணினத்தை மதிக்கத் தவறியதாலும், பெண்களுக்கு எதிராக நாளும் நடைபெறுகின்ற
பாலியல், வன் கொடுமை, வரதட்சணைக் கொடுமை, கொலை - கொள்ளை ஆகியவற்றை குறித்த
நேரத்தில் தடுக்கத் தவறிய தாலும் இந்திய நாடு முன்னேற முடியா மல் இருப்பதற்கு
அடிப்படைக் காரண மாகும்.
இத்தகைய
அவல நிலையில் இந்தியா ஒளிர்கிறது - மிளிர்கிறது மற்றும் இந்தியா முன்னேறுகிறது -
முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று ஆட்சியாளர்களால் மிகைப்படுத்திக் கூறப்படுவதை
நகைப்புக்குரிய ஒன் றாகவே மக்கள் கருதுகின்றனர்
- லட்சுமிபதி, தாம்பரம்
விடுதலை,16.10.14,ப2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக