ஈரானில் உளவுத்துறை அதிகாரி ஒருவரை கொலை
செய்த வழக்கில் மரண தண்டனை
விதிக்கப்பட்ட 26 வயது இளம் பெண், சனிக்கிழமை தூக்கிலிடப் பட்டார்.
அய்ந்து
ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட் டிருந்த அவரது மரண தண்டனையை நிறை வேற்ற உலகம்
முழுவதிலு மிருந்து எதிர்ப்பு எழுந்தி ருந்த நிலையிலும், அத னைப் பொருள்படுத்தா மல் ஈரான் அவரைத்
தூக்கிலிட்டது.
ரேஹானே
ஜபாரி என்ற அந்தப் பெண், சனிக்கிழமை
அதிகாலை யில் தூக்கிலிடப்பட்டதாக ஈரான் சட்ட அமலாக்க அலுவலகத்தை மேற் கோள்காட்டி
அந்நாட் டின் அரசு செய்தி நிறுவ னமான அய்.ஆர்.என்.ஏ. தெரிவித்துள்ளது.
வீடுகளின்
உள்ளலங் கார நிபுணரான ரேஹானே, கடந்த 2007-ஆம்
மோர் தெஸா அப்துலாலி சர் பண்டி என்ற உளவுத் துறை அதிகாரியை கத்தி யால் குத்திக்
கொன்றதற் காக அவருக்கு மரண தண் டனை விதிக்கப்பட்டது.
எனினும், ரேஹா னேவை பாலியல் வன் முறை செய்ய
அப்துலாலி முயன்றதாகவும், தற்காப் புக்காகத்தான்
அவரை ரேஹானே குத்தியதாக வும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூறி வருகின்றன.
இந்தச்
சம்பவம் குறித்த விசாரணை முறையாக நடைபெறவில்லை எனக் கூறிய மனித உரிமை அமைப்புகள், ரேஹானே வுக்கான மரண தண்ட னையை நிறுத்தி
வைக்க வேண்டும் என வலியு றுத்தி வந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக