வெலிங்டன், மார்ச் 30- ஆண் களுக்கு இணையாக பெண் களும் அரசு அலுவலங்களில் வேலை செய்து வருகிறார்கள். திருமணம் ஆன பெண்கள் குழந்தை பெறுவதற்கான ஊதி யத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. உலகில் ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும் இது நடை முறையில் இருந்து வருகிறது.
பெண்கள் குழந்தைகளை பெறுவதைத் தவிர மற்றும் சில விஷயங்களிலும் வேலைக்கு வரும்போது துன்பப்படும் நிலை உள்ளது. கருவுற்ற சில வாரங்களில் கெட்டவாய்ப்பாக கருச் சிதைவு ஏற்பட்டால், அது பெண்களுக்கு உடலளவிலும், மனதளவிலும் மிகப்பெரிய வேதனையைக் கொடுக்கும். இந்த வேதனையுடன் அலு வலகத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும். அல்லது விடுமுறை எடுக்க வேண்டும். இதனால் கூடுதல் வேதனை யுடன் மன அழுத்தமும் ஏற் படும்.
இதை கருத்தில் கொண்டு நியூசிலாந்து அரசு ஒருவேளை பெண் ஊழியர்களுக்கு கருச் சிதைவு ஏற்பட்டால், அவர் களுக்கு மூன்று நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடு முறை கொடுக்க முடிவு செய் தது. இதுகுறித்த மசோதா கடந்த 24.3.2021 அன்று அந் நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்பட அனைவரும் இதற்கு ஆதரவு தெரிவிக்க ஒருமன தாக சட்டம் நிறைவேறியது.
இதனைத் தொடர்ந்து நியூசிலாந்தில் கருச்சிதைவு ஏற்பட்டால், பெண்கள் மூன்று நாட்கள் ஊதியத்து டன் கூடிய விடுமுறை எடுத் துக்கொள்ளலாம் என்பது நடைமுறைக்கு வருகிறது.
இச்சட்டத்தை இயற்றி, செயல்முறைக்கு கொண்டு வரும் முதல் நாடு நியூசிலாந் தாகிறது. இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்த தொழிலாளர் கட்சி எம்.பி. (Labour MP) ஜின்னி ஆண்டர்சன், ‘‘நாம் உலகில் முதலாவது நபராக இருக்கும் போது, கடைசி நபராக இருக்கமாட்டோம் என் பதை என்னால் உறுதியாக நம்ப முடியும். நம்நாட்டை பார்த்து மற்ற நாடுகளும் அதன் வேதனையை அறிந்து ஊதியத்துடன் கூடிய விடு முறையை அங்கீகரிக்கும் சட் டத்தை தொடங்குவார்கள்’’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக