ரியாத், பிப். 27- ராணுவத்தில் இனி பெண்களும் சேர்ந்து பணியாற்றலாம் என்று சவுதி அரேபிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சவுதி அரேபியாவின் நீடித்த வளர்ச்சியினை உறுதி செய்யும் பொருட்டு சவுதி அரேபிய இள வரசர் முகமது பின் சல்மான் ‘சவுதி அரேபியா விசன் 2030’ என்ற தொலைநோக்குத் திட் டத்தை அறிமுகம் செய்துள்ளார்.
அந்த திட்டத்தின் அடிப் படையில் சில நாட்களுக்கு முன்னதாக ஆண்களின் அனு மதி இல்லாமலேயே பெண்கள் தொழில் தொடங்கலாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்திருந் தது. அடுத்ததாக இவ்வாண்டு ஜனவரியில் பெண்கள் கார் ஓட் டுவதற்கு முன்பு விதிக்கப்பட்டி ருந்த தடையும் ரத்து செய்யப் பட்டுள்ளது.
அந்த வரிசையில் தற்போது பெண்களும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற அனுமதி வழங்குவதாக ஞாயிற்றுக் கிழமை அரசு அறிவித்துள்ளது. முதல்கட்டமாக ரியாத், மக்கா, அல்-குசைம் மற்றும் அல் மதினா உள்ளிட்ட மாகாணங் களைச் சேர்ந்த பெண்கள் ராணு வத்தில் முதல்நிலை வீராங்க னையாக சேர விண்ணப்பிக் கலாம் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது.
இனி நாட்டின் பொருளா தாரத்தினை விரிவு செய்யும் வகையில், பெண்கள் பொருள் ஈட்டும் வாய்ப்புகள் அதிக அளவில் உருவாக்கித் தரப் படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
-விடுதலை நாளேடு, 27.2.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக