5 வயதில் இருந்து குழந்தைத் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவங்கியவர் பெங்களூரு வாழ் தமிழ் சிறுமி கனகா. தன்னுடைய நம்பிக்கை மற்றும் துணிச்சலான முடிவுகள் காரணமாக வாழ்க்கையில் உயர்ந்து வரும் கனகா உலகக் குழந்தைகள் நாளன்று (நவ.20) இந்திய நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் உரையாற்ற அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கருநாடக மாநிலம் பெங்களூருவில் குடிசை வாழ் பகுதியை சேர்ந்தவர் கனகா (வயது 17). தமிழர்களாக அவர்கள் பெங்களூருவில் தங்கியி ருந்த வேலைபார்த்துவந்தனர். இந்த நிலையில் கனகாவின் தந்தை உடல்நலம் சீர்குலைந்து படுத்த படுக்கையாகிவிட்டார்.
கனகாவின் தாயாருக்கு புற்றுநோய் ஏற்பட்டு அவர் மரணமடைந்தார். அப்போது கனகாவிற்கு 7 வயது. இந்த நிலையில் தனது வீட்டையும் தந்தையைக் காப்பாற்றவேண்டும் என்ற நிலையில் உறவினர்களிடம் உதவி கேட்டபோது அவர்கள் தங்களின் வீட்டுவேலைகளைச் செய்யுமாறு கனகாவை நிர்பந்தம் செய்தனர்.
அப்போது வீட்டுவேலை செய்யச்சென்ற கனகா குழந்தைத்தொழிலாளியாக மாறினார். குப்பை பொறுக்குவது, காகித ஆலையில் வேலைபார்ப்பது, பிளாஸ்டிக் பொருள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிவது போன்ற பல்வேறு பணிகளை இவர் செய்துவந்தார். எந்த ஒரு இடத்திலும் சிறுமி ஒருவர் பணிசெய்கிறாரே என்று யாரும் இரக்கம் காட்டவில்லை, அவருக்கு மேலும் மேலும் பணிச் சுமையைத்தான் தந்தார்கள்.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமண மண்டபம் ஒன்றில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த கனகாவை ஒரு தொண்டு நிறுவனம் மீட்டது, அதன் பிறகு கனகாவின் வாழ்க்கை மாறியது, தற்போது பியுசி படித்துக்கொண்டு இருக்கும் அவர் ஆங்கிலத்தில் நல்ல புலமைபெற்றுள்ளார். இவரை யூனிசெப் அமைப்பு இந்தியப் பிரிவின் ஆலோசகர் என்ற பதவியைத் தந்து கவுரவித்துள்ளது.
ஆங்கிலம் மற்றும் தமிழ், கன்னடம், போன்ற மொழிகளில் திறமைபடைத்த கனகா யுனிசெப் அமைப்பின் சார்பில் பல்வேறு பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு ஆங்கிலத்தில் உரையாற்றியுள்ளார்.
உலகக் குழந்தைகள் நாள் நவம்பர் 20 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதுமிருந்து 30 குழந்தைகள் நாடாளுமன்றத்தில் உரையாற்ற அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் முக்கிய நபராக கனகாவிற்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. அவர் 20ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
இதுகுறித்து கனகா கூறுகையில், குழந்தை களின் உரிமைகளை பாதுகாக்க எவ்வளவோ சட்டங்கள் இருந்தாலும், அவை முறையாக அமலாக்கப் படவில்லை. மேலும் சட்டத்தின் பல ஓட்டைகளைப் பயன்படுத்தி குழந்தைத் தொழி லாளர்களை நியமிப்பவர்கள் தப்பிவிடுகின்றனர்.
குழந்தைத் தொழிலாளர்களின் வாழ்க்கை எவ்வளவு வேதனையானது என்பதை நானே அனுப வித்திருக்கிறேன், இதனை நான் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினேன். என்னைப்போன்று ஆயிரக்கணக் கான குழந்தைகள் பல சுரண்டல்களை எதிர்கொள் கின்றனர். நகரங்களில் உள்ள குழந்தைகள், அவர் களை காப்பாற்றிக்கொள்ள சிலரை அணுகவாவது முடியும். ஆனால், என்னை போன்று குடிசை பகுதிகள், கிராமங்களில் உள்ளவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் உதவிக்கரம் வேண்டும் என கூறினார்.
- விடுதலை நாளேடு,21.11.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக