வியாழன், 9 ஜூன், 2016

முதல் பெண் தலித் அமைச்சர்


தமிழக அரசியல் வரலாற்றில் ஆட்சிப் பொறுப்பில் இடம்பெற்று, தலித் மக்களுக்காக ஒலித்த முதல் பெண் குரல் சத்தியவாணி முத்துவினுடையது. 1949-இல் திராவிட முன் னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அந்தக் கட்சியின் உறுப்பினராக அவர் இருந்துவந்தார். குலக்கல்வித் திட்டத்துக்கு எதிரான தி.மு.க.வின் போராட்டங்களில் பங்கேற்று, சிறை சென்றிருக்கிறார். தொடர் கட்சிப் பணிகளின் அடுத்த கட்டமாக, தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.
1957 சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்குப் பிறகு தி.மு.க. சார்பில் இரண்டு முறை பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்.
அண்ணா தலைமையிலான தி.மு.க.வின் முதல் ஆட்சிக் காலத்தில் தாழ்த்தப்பட்டோர் நலம் மற்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சராகப் பதவி வகித்தார். அதற்குப் பிந்தைய கருணா நிதி ஆட்சியிலும் தாழ்த்தப்பட்டோர் நலத் துறை அமைச்ச ராகத் தொடர்ந்தார். அவரது காலத்தில்தான் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிப் பெண்கள், மாணவர்கள், குழந்தை களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டன.
அவரது பதவிக் காலத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவதில் கவனம் செலுத்தினார்; தமிழகம் முழுவதும் 200 குழந்தை நல மய்யங்களும், மாவட்டச் சமூகநல மய்யங்களும் ஆரம்பிக்கப் பட்டன. இந்த மய்யங்கள் மூலம் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு வேலையும், கல்வியும் வழங்கப்பட்டன. 1970 இல் பெண் களுடைய சிறுசேமிப்புக்குப் பெரும் ஊக்கமளித்தார். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான விடுதிகளை உருவாக்குவதிலும் முனைப்பு காட்டினார்.
1973 இல் அவரது முயற்சியில்தான் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரின் கல்விக்கு ஊக்கமளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 508 மாணவர் விடுதிகள் ஆரம்பிக்கப் பட்டன. நல்ல நோக்கத்துடன் அவை ஆரம்பிக்கப்பட்டாலும், இன்றைக்கு அவை போதுமான அடிப்படை வசதிகளும் பராமரிப்பும் இன்றி இருப்பது அலட்சியத்துக்கான அடை யாளம்.
இப்படித் தாழ்த்தப்பட்டோர், பெண்கள், மாணவர்கள் நலனில் தொடர்ச்சியான அக்கறையை வெளிப்படுத்திவந்தார் சத்தியவாணி முத்து. அதேநேரம் 1974 இல் கருணாநிதி ஆட்சி யின் அமைச்சர் பதவியைத் துறந்து, கட்சியை விட்டும் விலகி னார். தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கி அவர் நடத்திவந்தாலும், 1977 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வென்ற பிறகு, அந்தக் கட்சியுடன் தா.மு.க. இணைக்கப்பட்டது.
அ.தி.மு.க.வில் சேர்ந்த பிறகு போட்டியிட்ட 1977, 1984 சட்டப்பேரவை தேர்தல்களில் அடுத்தடுத்துத் தோற்றாலும், இடைப்பட்ட காலத்தில் அக்கட்சியின் சார்பாக மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தக் காலத்தில் நாடாளுமன்றத்தின் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலக் குழு, வரதட்சிணைத் தடுப்பு, மதுவிலக்குச் சட்டங்களை அமல்படுத்தும் குழுக்களில் இடம்பெற்றுத் தன் கருத்துகளைத் தைரியமாக முன்வைத்தார்.
1979 இல் சரண் சிங் தலைமையிலான மத்திய ஆட்சியில் சத்தியவாணி முத்து அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அவரும் காரைக்காலைச் சேர்ந்த அரவிந்த பாலா பழனூரும் மத்திய அமைச்சரவையில் முதன்முதலாக இடம்பெற்ற திராவிடக் கட்சி ஒன்றைச் சேர்ந்த அமைச்சர்கள் என்ற பெருமையையும் பெறுகிறார்கள்.
தாழ்த்தப்பட்டோர் சார்பில் ஆட்சி அதிகாரத்தில் பங் கேற்று, பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை நடை முறைப்படுத்திய வகையிலும், பெண்கள் முன்னேற்றத்துக்குத் தொடர்ச்சியாகப் பங்களித்த வகையிலும் தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத முகம் சத்தியவாணி முத்து.
.-விடுதலை,3.5.16

ஞாயிறு, 5 ஜூன், 2016

பெண்கள் விடுதலை அடைய கற்பு என்ற ஏமாற்று ஒழிக்கப்படவேண்டும்




- தந்தை பெரியார்

பெருமைக்குரிய தலைவர் அம்மையார் அவர்களே! தாய்மார்களே, பெரியோர்களே!
இந்த மாநாடு பெண்கள் விடுதலை மாநாடு. நான் பேசப் போகும் கருத்து உங்கள் மனதுக்குக் கசப்பாக இருக்கக்கூடும். புரட்சியாகவும் தோன்றலாம். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் வெறுப்பு விருப்பு இன்றி எதையும் சொல்லக் கூடி யவன். உங்களுக்குச் சரியில்லை என்றால் தள்ளிவிடுங்கள்.
பெண்கள் பிறந்ததிலிருந்து அடிமைப் பிறவிகள். பெண்ணாகப் பிறப்பதே பாவம் என்று கருதப்பட்டவர்கள். பிறந்த உடனேயே கழுத்தைத் திருகி விடுவார்கள். சின்ன வயதிலேயே கல்யாணம் செய்து விடுவார்கள். புருஷன் செத்தால் உடன் வைத்துக் கொளுத்தி விடுவார்கள். சமீப காலம் வரை பெண்ணை ஓர் ஆடவன் அடித்தால் எந்தவிதத் தண்டனையும் கிடையாது.
70 வயது கிழவனைக் கட்டிக்கொண்ட 18 வயது பெண், புருஷன் செத்துவிட்டால் மறுமணம் செய்து கொள்ளும் உரிமை கிடையாது. ஆனால், ஓர் ஆண் எத்தனை பெண்டாட்டி களை வேண்டுமானாலும் இஷ்டத்துக்குக் கட்டிக் கொள்ளலாம் என்ற நிலை தானே சமீப காலம் வரை இருந்தது.
சொல்வார்கள் - வசிஷ்டன் மனைவி அருந்ததியைப் பற்றி. அவள் சொல்லி இருக்கிறாள், உலகத்தில் ஆண்கள் இல்லா விட்டால் தான் பெண் கற்புள்ள வளாக இருக்கமுடியும் என்று.
பாரதம் என்ன பத்தினித் தன்மையைக் கூறுகிறது என்றால், சந்து என்று ஒன்று இருந்தால் பெண் விபச்சாரியாகத் தான் ஆகித் தீருவாள் என்று கூறுகிறது. இவை எல்லாம் தான் பத்தினித் தன்மைக்கு அடையாளமா?
பெண்கள் நிலை ஏன் உயரவில்லை என்றால், பெண்களுக்கு மானம் இல்லை - ரோஷம் இல்லை - அறிவு இல்லை! எப்படியோ தன்னை அடக்கியாள - உதை கொடுக்க ஓர் ஆண் வேண்டும் என்ற எண்ணம் தான் பெண்களுக்கு இருக்கிறது.
பெண்கள் விடுதலை பெற வேண்டுமா னால் இந்தக் கற்பு, பதிவிரதாத்தன்மை என்ற தன்மைகள் ஒழிக்கப்படவேண்டும். அதனால் பெண் கற்புள்ளவளாகவோ, பதிவிரதையாகவோ இருக்கக் கூடாது என்பது என் கருத்தல்ல. ஆணுக்கும் அப்படி இருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து.
நான் கொஞ்ச நாட்களாகவே கூறி வருகிறேன். இந்தக் கல்யாண சுமையே ஒழியவேண்டும் என்று. இந்நாகரிகம் மேல்நாடுகளில் வளர்ந்து வருகிறது.
நமது இலக்கியங்களும், புராணங்களும் எவ்வளவு கேவலமான நிலையில் பெண் களைப் பற்றிக் கூறுகின்றன.  இந்த வள்ளு வனைத் தான் எடுத்துக் கொள்ளுங்களேன்,
“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”
என்ன அக்கிரமம்?
கூடி இருக்கிறீர்களே உங்களைத்தான் கேட்கிறேன். யாராவது பொய் என்று சொல்லி மழையைத் தருவியுங்களேன் பார்ப்போம்.
அப்படி மழை பெய்யவில்லை என்றால் வள்ளுவன் கருத்துப்படி நீங்கள் எல்லாம் என்ன?
இந்தச் சிலப்பதிகாரத்தை தான் எடுத்துக் கொள்ளுங்களேன்! கண்ணகி ஒருத்தி தான் கற்புள்ளவள் என்பதைக் காட்டத்தானே அந்தக் கதை. உங்களுக்கு எல்லாம் மானம் வேண்டாமா? அந்தச் சிலையை இடிக்க வேண்டாமா? யாராவது கேட்டால் சொல்ல வேண்டியது தானே.
இந்தக் கண்ணகி தான் கற்புள்ளவள் என்றால், நான் என்ன கற்பற்றவளா என்று கேட்கவேண்டியதுதானே!
எவ்வளவு நாளைக்குத்தான் இந்தப் பெண்கள் கல்யாணம் செய்து கொள்வது - ஒழிந்த நேரத்தில் குட்டி போட்டுக் கொள்வது என்ற செக்கு மாட்டு வாழ்க்கையையே மேற் கொள்ளுவது?
இந்த நிலைமைகள் மாறவேண்டாமா? கற்பு என்ற வார்த்தையும் பதிவிரதை என்ற வார்த்தையும் நமக்குச் சம்பந்த மானதல்ல.
இன்றைக்குக் கூட மலையாளத்தில் பெரும்பாலான குடும்பங்களில் திருமணம் கிடையாது. அதனால் என்ன கெட்டுப் போய்விட்டது?
அப்படியே திருமணம் செய்து கொள்வது என்றால், 25 வயதுக்குப் பிறகு உன்னோடு ஒத்துப் போகிறவனாகப் பார்த்துச் செய்து கொள்ள வேண்டும். அப்படித் திருமணம் செய்து கொள்ளும்போது பொருளாதாரத்தில் ஆம்பளை ஆளை நம்பிப் பெண் இருக்கக் கூடாது. தானே சம்பாதிக்கக் கூடிய அள விற்குத் தன்னை ஆளாக்கிக் கொள்ள வேண் டும்.
உன்னுடைய கடவுளைத் தான் எடுத்துக் கொள்ளேன். யாரிடம் பதிவிரதத்தன்மை காணப்படுகிறது? என்னடா என்றால், அவன் குதிரைக்குப் பிறந்தான், மானுக்குப் பிறந்தான் என்றுதானே காணப்படுகிறது. இவை எல்லாம் உங்களுக்கு வழிகாட்டிகளா? இவற்றையெல்லாம் பக்தி என்ற பெயரால் ஏற்றுக்கொள்ளும் வரை நமக்கு மாற்றம் ஏது? இழிவு ஒழிவது ஏது?
பெண்களைப் பொறுத்த வரை எவ்வளவு அதிகம் படிக்க முடியுமோ அவ்வளவு அதிகமாகப் படிக்க வேண்டும். மூட நம்பிக்கை சிறிதும் அற்றவர்களாகத் திகழ வேண்டும். சிங்காரித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கக் கூடாது. துணிச்சல் இருந்தால் கல்யாணம் செய்து கொள்வதில்லை என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். ஆண்களால் தொல்லை வரும் என்றால், ஆளுக்கு ஒரு கத்தியை இடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டியது தானே!
மற்றப்படி துணி மணி அணிவதில் மாறுதல் வேண்டும். சிக்கனமான லுங்கி அணியும் பழக்கம் வேண்டும். எதற்காக 16 முழம் 20 முழம் என்று உடலைச் சுற்றிக் கொள்ளவேண்டும்? இந்த அதிகப்படியான காரியத்தாலே எவ்வளவு செலவழிக்க வேண்டி இருக்கிறது? என்ன அவசியம்?
பதிவிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொள்கிறாய். அதே நேரத்தில் பார்க்கிறவர்கள் ஆசைப் படுகிற அளவிற்கு ஏன் சிங்காரித்துக் கொள்கிறாய்?
அதுவும் யாரைப் பார்த்துச் சிங்காரித்துக் கொள்கிறாய்? சினிமாக்காரியைப் பார்த்துத் தானே காப்பி அடிக்கிறாய்? சினிமாக் காரிகளின் யோக்கியதை என்ன? - நமக்குத் தெரியாதா?
இந்தக் காரியங்களால் எல்லாம் என்னவாயிற்று என்றால், நூற்றுக்கு அய்ம் பது பேராக இருக்கக் கூடிய பெண்கள் சமு தாயம் நாட்டிற்குப் பயன்படாத - கேடான கூட்டமாக அல்லவா போய்விட்டது!
நாம் கடவுள் சக்தி என்ற கற்ப னையை நம்பிப் பாழாய்ப் போய்க் கொண்டி ருக்கிறோம். மற்றவன் எல்லாம் மனித சக்தியை நம்பி நாள்தோறும் முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கிறான்.
நமக்குத் தான், புத்தி இல்லை என்றால் மற்றவர்களைப் பார்த்தாவது திருந்த வேண்டாமா? இன்னும் எத்தனை நாளைக்கு நான் இப்படிக் கத்திக் கொண்டிருப்பது? எனக்குப் பின்னால் எவன் இந்தக் கருத்து களை எல்லாம் எடுத்துச் சொல்லப் போகி றான்? எனவே தாய்மார்களே! நீங்கள் எல்லோரும் நன்றாகப் படித்து பட்டம் பெற்ற ஆண்களை விட எந்த வகையிலும் குறைந்தவர்களல்ல என்பதைச் செயல்கள் மூலம் காட்டவேண்டும்.
- 12-3-1972 அன்று திருச்சியில் நடைபெற்ற பெண்கள் விடுதலை மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் உரை, விடுதலை, 14-3-1972
-விடுதலை,6.3.16

ஞாயிறு, 29 மே, 2016

இந்தியாவின் சாதனைப் பெண்


வண்ணங்களைக் குழைத்துத் தான் வரைகிற ஓவியங் களையே சமூக மாற்றத்துக்கான கருவியாக மாற்றுகிற உத்தி கைவரப்பெற்றிருக்கிறார் ஸ்வர்ணலதா. அந்தத் திறமைதான் அவர் இந்தியாவின் நூறு பெண் சாதனையாளார்களில் ஒருவராகத் தேர்வுபெறக் காரணமாகவும் அமைந்திருக்கிறது.
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளில் சாதனைபுரிந்த நூறு பெண்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. அதில் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவில் தேர்வாகியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஓவியக் கலைஞர் ஸ்வர்ணலதா. தென்னிந்திய அளவில் இந்தப் பிரிவில் தேர்வாகியிருக்கும் ஒரே பெண் இவர்தான்.
சிங்கப்பூரில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவர் இவர். விவரம் அறியாத வயதிலேயே அப்பா, அம்மா, சகோதரனை ஒரு பெருவிபத்தில் பறிகொடுத்துவிட்டு தன்னந்தனியாக நின்றார். உறவினர்களின் அரவணைப்பில் வளர்ந்தவருக்கு இளம் வயதிலேயே திருமணம் நடந்தது. அதன் பிறகு சென்னை மருமகளாகிவிட்டார். ஏதுமறியாத இளம் பெண் என்பதால் பிறந்த வீட்டிலிருந்தே உதவிக்கு இரண்டு பெண்களை அனுப்பிவைத்தார்களாம்.
பிறந்த வீட்டில் திடீரென பறிகொடுத்துவிட்ட அன்பு அனைத்தும் ஸ்வர்ணலதாவுக்குப் புகுந்த வீட்டில் இரட்டிப்பாகக் கிடைத்தது. அன்பான கணவர், அனுசரணையான மாமியார், மாமனார் என அனைவரின் பாச வளையத்துக்குள் மகிழ்ச்சியாக இருந்தார் ஸ்வர்ணலதா. ஆனால் இவை மட்டுமே வாழ்வின் பூரணமா? இந்தக் கேள்விதான் ஸ்வர்ணலதாவை வேறொரு தளத்துக்கு அழைத்துச் சென்றது.
எனக்குச் சின்ன வயசுல இருந்தே படங்கள் வரையறது பிடிக்கும். நான் அப்பா, அம்மாவை இழந்துட்டு நின்னப்போ, பாவம் இந்தப் பொண்ணுன்னு சில உறவுக்காரங்க ஆசையா பணம் கொடுத்துட்டுப் போவாங்க. அந்தப் பணத்துல நான் பெயிண்ட்டும் பிரஷ்ஷும்தான் வாங்குவேன்.
அப்படி ஆரம் பிச்சதுதான் என் ஓவியப் பயணம் என்று சொல்லும் ஸ்வர்ண லதா, திருமணத்துக்குப் பிறகும் ஓவியங்கள் வரை வதைத் தொடர்ந்தார். யாரிடமும் முறையாக ஓவியம் கற்றுக் கொண்ட தில்லை. 1993ஆம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் இவர்கள் சொந்தமாக ஒரு வீடு வாங்க, அந்த வீட்டைத் தன் ஓவியங்களால் அலங்கரிக்க நினைத்தார் ஸ்வர்ணலதா. ரவி வர்மாவின் ஓவியங்கள் மீது ஸ்வர்ணா வுக்கு ஈடுபாடு அதிகம். அதனால் அந்தப் பாணி ஓவியங்கள் வரையத் தீர்மானித்தார்.
பாடம் சொன்ன கண்காட்சி
தன் மனைவியின் திறமைக்கு மேடை அமைத்துத்தர வேண்டியது தன் கடமை என நினைத்தார் வழக்கறிஞராகப் பணி யாற்றும் ஸ்வர்ணலதாவின் கணவர். அவரது முயற்சியால் 1998ஆம் ஆண்டில் தன் முதல் ஓவியக் கண்காட்சியை நடத் தினார் ஸ்வர்ணலதா. கிட்டத்தட்ட அனைத்து ஓவியங்களும் விற்றுவிட, அடுத்த வருடமே இன்னொரு கண்காட்சி லலித் கலா அகாடமியில் நடந்தது.
அங்கேதான் திறமையான பல ஓவியக் கலைஞர்களின் அறிமுகம் ஸ்வர்ணலதாவுக்குக் கிடைத் தது. அப்போதுதான், தான் இதுநாள் வரைந்துகொண்டிருந்தவை ஓவியங்கள் அல்ல. அவை வெறும் அடுத்தவர் பாணியை அப் படியே காப்பியடித்து வரைந்தவை என்பதையும் உணர்ந்து கொண்டார்.
ஒரு முறை ஸ்வர்ணலதாவின் வீட்டுக்கு வந்த அவர்களது குடும்ப நண்பர் ஒருவர் இவரது ஓவியங்களைப் பார்த்து வியந்திருக்கிறார். அவற்றைக் கண்காட்சியாக வைக்கலாம் என்று சொன்னதோடு கேரள அரசாங்கத்திடம் அனுமதி வாங்கி அதற்கு ஏற்பாடும் செய்துவிட்டார். ஆனால் சென்னையிலிருந்து அவ்வளவு தூரம் செல்ல வேண்டுமா என்று மாமனாரும் மாமியாரும் தயங்கியதால் அந்தக் கண்காட்சியில் ஸ்வர்ணலதா பங்கேற்கவில்லை.
ஓவியக் கலைஞர்களுடனான சந்திப்பு, ஓவியங்கள் குறித்த என் பார்வையை மாற்றியது. ஓவியம் என்பது தனித்துவமானது, கற்பனைத்திறனும் புதுமைகளும் நிறைந்தது என்பதும் புரிந்தது. அதற்குப் பிறகு எனக்கென ஒரு ஓவியப் பாணியை உருவாக்கிக்கொண்டேன். சிற்பக்கலை நிபுணர் குதிரை கருப்பையா அவர் களிடம் எடுத்துக்கொண்ட பயிற்சி அதற்குக் கைகொடுத்தது என்கிறார் ஸ்வர்ணலதா.
இதற்கிடையே குழந்தையின்மைக்கான சிகிச்சை, மகப்பேறு, மகனை வளர்த்தல் என்று நாட்கள் காலில் இறக்கையைக் கட்டிக் கொண்டு பறந்தன. ஆனால் கிடைக்கிற சில நிமிடங்களிலும் ஓவியங்கள் வரைந்துவிடுவார் ஸ்வர்ணலதா. இவரது கணவர் பணி நிமித்தம் டில்லியில் இருந்ததால் தன் மகனுடன் கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அங்கே சென்றிருந்தார். அப்போது நிர்பயா வழக்கு குறித்த ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் உச்சத்தை அடைந்திருந்தன. அது இவரை வெகுவாகப் பாதித்தது.
நிர்பயாவுக்கு நீதி கேட்டு நின்ற பெண்களின் முகங்கள் அனைத்திலும் நான் நிர்பயாவைப் பார்த்தேன். ஒவ்வொரு பெண்ணும் இந்தச் சமூகத்தால் ஏதோ வொரு வகையில் பாதிக்கப்பட்டிருப்பதாகவே தோன்றியது. எல்லா முகங்களிலும் வலியும் வேதனையும் பரவியிருந்தன. அந்த முகங்களை, அவர்கள் குரலில் ஒலித்த கோபத்தை, நிர்பயாவின் வேதனையை ஓவியங்களாக வரைந்தேன் என்று சொல்லும் ஸ்வர்ணலதாவின் ஓவியங்கள் அனைத்திலும் பெண்களே பிரதானமாக இருப்பார்கள். ஒவ்வொரு ஓவியமும் பெண்களின் வலியையும் வலிமையையும் சுமந்தபடி இருப்பதுதான் இவரது தனிச்சிறப்பு.
கடந்த டிசம்பர் மாதம்  மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திடமிருந்து என்னுடைய புகைப் படத்தை  அனுப்பச் சொல்லி எனக்கு மெயில் வந்திருந்தது. ஏன், எதற்கு என்று கேள்வி கேட்கும் மனநிலையில் நான் அப்போது இல்லை. சில நாட்கள் கழித்து, இந்தியாவின் சிறந்த சாதனைப் பெண்கள் பட்டியலுக்கு நானும் தேர்வாகியிருப்பதாக தகவல் வந்தது.
என் மாமனாரின் இழப்பால் அதைக் கொண்டாடும் மனநிலையில்கூட நாங்கள் இல்லை. ஆனால் பேஸ்புக்கில் பலரும் ஆதரவு தந்து என்னை வெற்றிபெற செய்திருப்பதை அறிந்து மகிழ்ந்தேன் என்றார்.  மேலும் இவர் ஓவியங்கள் மூலம் கிடைத்த வருமானம் அனைத்தையும் ஏழை எளியவர்களுக்குக் கொடுத்து உதவி வருகிறார்.
-விடுதலை,9.2.16

வெள்ளி, 27 மே, 2016

பெண்களுக்குச் சொத்துரிமை


04.10.1931, குடிஅரசிலிருந்து...
மைசூர் அரசாங்கத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை அளிக்கச் சட்டம்
1931-அக்டோபர் மாதம் 22ஆம் தேதி நடைபெற விருக்கும் சட்டசபையில் இந்து லா என்னும் இந்துக்கள் சட்ட சம்பந்த மான விஷயங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். கடந்த 2 சட்டசபைகளில் மேற்படி விஷயங்கள் சம்பந்தமான பொதுக் கொள்கைகள் யாவும் ஒப்புக்கொள்ளப்பட்டாய் விட் டன. அதின் மீது ஏற்பாடு செய்திருக்கும் திட்டங்கள் வரப் போகும் சட்டசபையின் விவாதத்திற்குக் கொண்டு வரப்படும்.
அவையாவன :-
பெண்களுக்குத் தாங்கள் பெண்களாகப் பிறந்த காரணத்தாலோ, அல்லது அவர்களுக்குச் சொத்துரிமை உண்டு என்பதற்கு மதசம்பந்தமான ஆதாரங்கள் இல்லை என்கின்ற காரணத்தாலோ அவர்களது வாரிசு சொத்துரிமை மறுக்கப்படக்கூடாது. ஒரு பாகம் பிரியாத குடும்பத்தில் உள்ள ஒருவர், தான் சுயார்ஜிதமாக சம்பாதித்து வைத்திருக்கும் சொத்திலும் பெண் சந்ததிகளுக்கு உரிமை உண்டு.
ஒவ்வொரு விதவைக்கும் தானாகவே தத்து எடுத்துக் கொள்ள உரிமையுண்டு. புருஷன் கண்டிப்பாய் தத்து எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஏற்பாடு செய்திருந்தால் விதவைக்குத் தத்து எடுத்துக் கொள்ள உரிமை இல்லை.
பெண் பிள்ளைகளுக்கு இப்போது கிடைத்துவரும் வாரிசு உரிமை களிலும் கூட சொத்துக்களின் வரும்படிகளை அனுபவிக்க மாத்திரம் உரிமை இருக்கின்றதே தவிர, மற்றபடி அவர்கள் அதை தங்கள் இஷ்டப்படி சர்வ சுதந்திரமாய் அனுபோகிக்கவும், வினியோகிக்கவும் உரிமை இல்லாமல் இருக்கின்றார்கள்;
ஆதலால் இந்தக்குறையும் நீங்கும்படியாக அதாவது அவர்களுக்குக் கிடைக்கும் வாரிசு உரிமை சொத்துக்களை தங்கள் இஷ்டப்படி சர்வசுதந்திரமாய் அனுபவிக்கவும், வினியோகிக்கவும் இந்தப் புதிய சட்டத்தில் அனுமதிக்கப்படுகின்றது.
பாகம் பிரியாத குடும்பத்தில் கணவன் இறந்துவிட்டால் பெண் ஜாதிக்குக் குழந்தை இருந்தாலும், இல்லாவிட்டாலும் குடும்ப சொத்தில் கணவனுக்குள்ள பாகம் சர்வசுதந்திரமாய் பெண்களுக்குக் கொடுத்து விட வேண்டும். குடும்ப சொத்துக் கள் பல வழிகளில் துர்வினியோகம் செய்யப்பட்டக் காலங் களிலும் அச்சொத்துகளின் மீது பெண்களுக்கு ஜீவனாம் சத்திற்கு உரிமையுண்டு என்பதாகும்.
-விடுதலை,25.3.16

புதன், 11 மே, 2016

கணவனே கண் “கொன்ற’’ தெய்வம்!

கணவனே கண் “கொன்ற’’  தெய்வம்!



இந்திய திருநாட்டில் ஒவ்வொரு அய்ந்து மணித்துளி களிலும்  ஒரு திருமதி தன் கணவனாலோ அல்லது கணவரின் உறவுகளினாலோ வன்கொடுமைக்கு ஆளாக்கப் படுகிறார்.அந்தத் திருமதியோ புகலிடம் இன்றி எல்லாக் கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு கணவன் வீட்டிலேயே வாழும் நிலை.
2013 ஆம் ஆண்டு பி. பி. சி. மேற்கொண்ட களஆய்வுப் பணியின் முடிவுகள் மிகவும் துயரம் தருவன. எடுத்துக்காட் டாக இரண்டு திருமதிகளின் உண்மை நிகழ்வுகளை கேளுங்கள். என் பெயர் அதிதி.(பெயர் மாற்றப்பட்டுள்ளது)
என்னுடைய தோழி என்னுடைய வருங்காலக் கணவரை அறிமுகம் செய்து வைத்தார். தேர்வு செய்தவரும் அவரே. அவர் நல்ல அழகு.. பழகும் பண்பு மெச்சத்தக்கது.  வியந்தேன், மகிழ்ந்தேன்.     திருமணம் கோலாகலமாக நடந்தது. உலகின் பல பகுதி களிலிருந்து  உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். சில வாரங்கள் ஓடின!  அதோ என் கணவர் வருகிறார். அறைக்கதவு மூடப்பட்டது.
இசைப் பெட்டியின் ஒலி கூட்டப் படுகிறது. இரைச்சல் அறை முழுவதும்  .அவர் இடுப்பிலிருந்த பெல்ட் அவர் கையில். விதி முறைகள் என்னிடம் சொல்லப்படுகின்றன.  கத்தாதே, இந்த அறையை விட்டு எந்த சத்தமும் வெளியே போகக் கூடாது. மீறினால் இந்த பெல்ட்டுக்கு அதிக வேலை"  அடுத்த அரை மணிநேரம் அந்த பெல்ட்டுக்கு நல்ல வேலை. என் உடலை பதம் பார்த்தது. போதாது என்று அவருடைய கையும் முட்டியும் என்னைத் தாக்கியது.. காது கூசும் அளவுக்கு தகாத வார்த்தைகளால் அர்ச்சனை. அவருடைய கொடுஞ்சினம், அப்பப்பா!
கணவருக்கு   எல்லாப் பணிவிடைகளையும் மிகக் கவன மாக செய்தேன்.அவருடைய குறிக்கோளோ குறைகளைக் காண்பதிலேயே. வன்கொடுமை வளர்ந்ததே அன்றி எள்ளள வும் குறையவில்லை.   அவர் வீட்டிற்குள் நுழையும்போதே 'திக் திக் 'திக் இதயம் பட படக்கும்  இன்று என்ன ஆகுமோ என்ற அச்சம்.
என்னுடைய 19ஆம் வயதிலிருந்தே இந்த சவுக்கு அர்ச்சனை அரங்கேறுகிறது. ஆறு வருடங்களாக தொடர் கிறது.  நரகத்திற்கு போனால் எனக்கு அது சொர்க்கமாக இருக்கும்.
நாடினேன் என் பெற்றோர்களுடைய உதவியை  .உடற் காயத்தைக் காண்பித்தேன்.. ஒரு மகள் தன் தாயிடம் சொல்ல முடியாததைக் கூட விளம்பினேன். தாய் இரக்கப் பட்டாள்., ஊக்கமளிக்கவில்லை.. அந்தத் தாயோ இதெல்லாம் எப்படியம்மா உன்னால் என்னிடம் சொல்ல முடிகிறது ?  கணவனிடமே செல், .உன் மணவாழ்வை நீ தான் சரி செய்ய வேண்டும்., சகித்துக் கொள், பொறுத்துக் கொள் , தாங்கிக் கொள் " தந்தையோ குடிகாரர்,  .தாயைக் கொடுமைப்படுத் துவார்  இதுதான் இந்திய திருமதிகளின்  வாழ்க்கை முறையோ  என்றெண்ணினேன்.   நாளாவட்டத்தில் என் வாழ்க்கை சீர்மை அடையும் என்றெண்ணினேன்.   கானல் நீர்தான். கண்ணிலும் நீரில்லை. ஆண்டு 2012, ஏப்ரல் மாதம், நண்பர்கள் உதவியோடு தப்பினேன்.  புகலிடம் ஒரு அரசு சாரா அமைப்பில் - பணி புரிகிறேன். என் கடந்த கால கொடூர வாழ்க்கையைப் புறந்தள்ளிவிட்டேன்.
இதோ திருமதி சுனிதா (பெயர் மாற்றப் பட்டுள்ளது) அவர் சொல்கிறார். நான் வேலை பார்க்கிறேன், என் சொந்தக்  காலில் நிற்கிறேன் திருமணமான  மூன்றாவது நாளே என் கணவரின்   முழங்கை என்னை பதம் பார்த்தது.  அடியின் வேகத்தில் படுக்கையில் விழுந்தேன். குலுங்கிக் குலுங்கி இரவு முழுவதும் அழுதேன். ஆனால், ஒரு வார்த்தை "வருந் துகிறேன்" என்று, அவர் வாயிலிருந்து உதிரவில்லை.. என்னே ஒரு கொடூர நெஞ்சம்!
நான் வேலை பார்க்கிறேன்.,மணவிலக்கு பெறலாமா, மறுமணம் செய்து கொள்ளலாமா என்றெண்ணினேன். மண விலக்கு பெற்றவரை மறுமணம் செய்தவரை சமூகம் என்ன சொல்லுமோ, பரிகசிக்குமோ என்ற அச்சம்.
கணவரை அறிமுகம் செய்த தோழியிடம் சென்றேன். கையை விரித்தாள், அறிவுரை அள்ளி வீசினாள்." மணமாகி விட்டாலே நீ கணவனிடம் தஞ்சமாகி விடவேண்டும்." நான் கேட்டேன் "அவர் என்னைக் கொன்றுவிட்டால்"
அவள் "அவரை கொலை யாளியாக்கிவிடு, மணவிலக்கை விட மரணமே மேல், நான் உன் னுடைய இடத்திலிருந்தால் மரணத்தை வரவேற்பேன்" என் றாள்.  எதற்கும் எல்லையுண் டல்லவா, நான்கே மாதத்தில் நான் என் பெற்றோரிடம் சரணடைந்தேன்.
அதிதி, சுனிதா போன்ற திருமதிகளுக்கு  இந்திய நாட்டில்  பஞ்சமா, என்ன?
பாலியல் வன்கொடுமைகளை விட திருமதிகளுக்கு இழைக் கப்படும் வன்முறைகள் மிக அதிகம். இந்திய திருநாட்டில் களஆய்வு புள்ளிவிவரங்களை சிறிதே  பார்ப்போம்.
2013 ஆம் ஆண்டில் இந்தியப் பெண்களுக்கெதிரான வன் கொடுமைகள்- பதிவு செய்யப்பட்டவை.

பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் அதிகரித்தே வருகின்றன  இந்திய அரசு 2005 ஆம் ஆண்டில் இயற்றிய சட்டத்தின் காரணமாகவே வன்கொடுமை நிகழ்வுகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.
பெண்கல்வி, வேலைவாய்ப்பு, விழிப்புணர்வு, மனவலிமை போன்றவைகளே குற்றங்களை வெளிக் கொணர்கின்றன, பதிவு செய்யப்படுகின்றன.பெரும் எண்ணிக்கை மறைந்தே கிடக்கின்றன" என்கிறார் வழக்கறிஞர் மோனிகா ஜோஷி...
இந்திய அரசு இயற்றிய 2005ஆம் ஆண்டு சட்டம் உரிமை யியல் சட்டமே தவிர, குற்றவியல் வழக்கின் கீழே வரா.   உயிரற்ற சட்டமாக உள்ளது என்ற கருத்து நிலவுகிறது.
குடும்ப வன்முறை நிகழ்வுகள் இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமா? உலகெங்கும் நடைபெறுகின்றன, ஆனால் இந்தக் குற்றங்களுக்கெதிரான மயான அமைதி இந்தியாவின் கலாச் சாரத் தனிப்பண்பு.  பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறை ஆணாதிக்க சமூகத்தில் ஊறிப் போன ஒன்று. ஆணுக்குப் பெண் அடிமை .பெண்ணுக்கெதிரான கொடுமை வழமை யானது .பெண்களை உதாசீனம் செய்., பெண்களை அடிப்பதில் தவறில்லை.
மேற்குறிப்பிட்ட கலாச்சார சீர்கேடு இந்திய மக்களின் ரத்தத்தில் ஊறிய ஒன்று. இதனைச்  சீர் செய்ய பெண் கல்வி, மனவலிமை மற்றும்  அரசு இயற்றிய சட்டங்களை நேர்மையாக செயல்படுத்துதல் வழியாகவே இயலும். (பி.பி.சி.யின் ஆய்வுக் கட்டுரையின் தழுவல்)
சி.நடராசன்
-விடுதலை ஞா.ம.31.1.15,ப3

சனி, 13 பிப்ரவரி, 2016

டில்லி உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி


டில்லி உயர்நீதி மன்றம் தொடங்கி 47 ஆண்டுகள் கடந்து விட்ட பிறகும்  தலை மை நீதிபதி நாற்காலி யில் இதுவரை எந்த பெண் நீதிபதியும் நியமிக்கப்படவில்லை. இத்தனை காலமாக தலைமை நாற்காலி அதற்குத் தகுதியான ஒருவரை தேடிக் கொண்டிருந்தது போலும்!
நீதிபதி ரோஹினி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர். ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் அறிவியல் பிரிவில் பட்டம் படித்துவிட்டு விசாகப்பட்டினத்திலுள்ள ஆந்திரா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர்.
இத்தனை காலத்துக்குப் பிறகு  டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நாற்காலி இவரது உழைப்புக்கும் திறமைக்கும் அங்கீகாரம் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் டில்லி உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் தலைமை நீதிபதி ஜி.ரோஹினி என்ற தனி மகுடம் சட்ட வரலாற்றில்  பதியப்பட்டுவிட்டது!
டில்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி  பதவி உயர்வு பெற்று உச்சநீதிமன்றம் செல்வதால், அந்தப் பதவிக்கு ஆந்திர உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான இவர் நியமனமானார்.
2014 ஏப்ரல் 21 அன்று டில்லி உயர்நீதிமன்றத்தில் இவர்  பதவி ஏற்கும்போது அங்கு மொத்தம் 40 நீதிபதிகள் இருந்தனர். அதில் இவரோடு சேர்த்து 10 பெண் நீதிபதிகள். இவரது பதவிக்காலம் 4 ஆண்டுகள்.
முதன்முதலாக இவர் வழக்கு கட்டுகளோடு வாதிட நீதிமன்றத்துக்கு வந்தது 1980இல். கோகா ராகவா ராவ் என்ற மூத்த வழக்கறிஞரிடம் ஜூனியராக சேர்ந்தார். எழுத்துப் பணியிலும் ஆர்வம் செலுத்தினார். ஆந்திராவில் அன்றைய சட்ட ஜர்னலில் ரிப்போர்ட்டராகவும் களமிறங்கினார். பின்னர் எக்சிகியூடிவ் எடிட்டராகவும் பொறுப்பு வகித்தார்.
1995 அரசு வழக்கறிஞராக நியமனமானார். ஆந்திரப் பிரதேசத்தில்  2001ல் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார், அதற்கடுத்த ஆண்டே நிரந்தர நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பார் மற்றும் பெஞ்சுக்கான நல்லுறவு  போன்றவற்றிலும் கவனம் செலுத்தி, சிறப்புற செயல்படுத்தினார்.  ஆந்திரப் பிரதேச பார் கவுன்சிலில் சேர்மனாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
மூத்த நீதிபதியாக ஆந்திரப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் பதவியிலிருந்த ரோஹினி குடியரசுத் தலைவரின் அங்கீகார கடிதம் வெளியானதைத் தொடர்ந்து தலைமை நீதிபதியாக டெல்லிக்கு மாற்றலானார்.
இந்தியன் விமன் நெட்வொர்க் கூட்டத்தில் பெண்கள் மற்றும் மனித உரிமை என்ற தலைப்பில் கையேடு வெளியிட்டுள்ளார் ரோஹினி. டில்லி உயர்நீதி மன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி ஏற்ற பிறகு, வழக்கு விசாரிப்பில் பல அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளார்.
-விடுதலை,15.12.15

பெண்களின் கருப்பை கட்டிகளை கரைக்கும் வெண்கடுகு


உள் உறுப்புகளை தூண்டக் கூடிய தன்மை கொண்டதும், வீக்கம் மற்றும் வலியை போக்க கூடியதும், பெண்களின் கருப்பை கட்டிகளை கரைக்கவல்லதும், செரிமானத்தை தூண்டக் கூடியதும், இருமல், விக்கலை சரிசெய்ய கூடியதும், ரத்த ஓட்டத்துக்கு மருந்தாக பயன்படுவதுமான வெண்கடுகு பல மருத்துவ பலன்களை கொண்டது.
கடுகைப் போன்று பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது வெண்கடுகு. கடுகு வகையை சேர்ந்த இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வெண்கடுகை பயன்படுத்தி கருப்பையில் ஏற்படும் கட்டிகளை கரைக்ககூடியதும், செரிமாணத்தை தூண்டும் மருந்து தயாரிக்கலாம்.
வெண் கடுகை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். அரை ஸ்பூன் வெண்கடுகு பொடி, ஒரு சிட்டிகை மிளகு, சிறிது உப்பு, 2 சிட்டிகை பெருங்காய பொடி சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் 50 முதல் 100 மிலி வரை எடுத்துக் கொண்டால், இது செரிமானத்தை தூண்டும்.
பெண்களின் கருப்பை கோளாறுகளை சரிசெய்யும். வெண்கடுகு உள் உறுப்புகளை தூண்டக் கூடியது. இரையறை கோளாறுகளை சரிசெய்யும் தன்மை உடையது.
சிறுகுடலில் உள்ள மென் திசுக்களை தூண்டக் கூடியது. மாதவிலக்கு கோளாறுகளை சரிசெய்யும். கருப்பையில் உள்ள நீர்கட்டிகளை கரைத்து, கருப்பைக்கு பலம் தரக்கூடியது.
வெண் கடுகை பயன்படுத்தி கெண்டைக்கால் தசையில் வீக்கம், வாயுக்கான மருந்து தயாரிக்கலாம். 2 ஸ்பூன் விளக்கெண்ணெய்யில், ஒரு ஸ்பூன் வெண்கடுகு பொடியை வறுக்கவும்.
பின்னர், நீர்விட்டு கொதிக்க வைத்து, அரிசி மாவு சேர்த்து களி பதத்தில் தயாரிக்கவும். இந்த களியை மெல்லிய துணியில் தடவி வலி, வீக்கம் இருக்கும் இடத்தில் கட்டி வைக்க வேண்டும். இதனால் வலி, வீக்கம் சரியாகும். வெண்கடுகை பயன்படுத்தி விக்கலுக்கான மருந்து தயாரிக்கலாம். அரை டம்ளர் அளவுக்கு நீர் எடுத்து கொதிக்க வைக்கவும்.
தனியாக ஒரு பாத்திரத்தில் அரை ஸ்பூன் அளவுக்கு வெண்கடுகு பொடியை எடுத்துக்கொள்ளவும். இதில் வெந்நீரை ஊற்றி நன்றாக கலந்து 15 நிமிடம் வைத்திருந்தால் நீர் தெளிந்துவிடும். மேலே இருக்கும் தெளிந்த நீரை குடித்தால் விக்கல் சரியாகும். விக்கலை போக்க வெண்கடுகு மருந்தா கிறது.
வெண்கடுகை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம். கால் ஸ்பூன் வெண்கடுகு பொடியுடன் சிறிது தேன் சேர்த்து குழைத்து சாப்பிட இருமல் கட்டுப்படும்.
சுவாச பாதையில் ஏற்படும் அழற்சி, வீக்கத்தை குறைக்கும். வெண்கடுகு, ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், இருமல், சளியை போக்கும். நுண்கிருமிகளை அழிக்கும் தன்மைகொண்டது. வலி நிவாரணியாகிறது. ரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் தன்மை கொண்டது.
-விடுதலை,15.12.15