புதன், 11 மே, 2016

கணவனே கண் “கொன்ற’’ தெய்வம்!

கணவனே கண் “கொன்ற’’  தெய்வம்!



இந்திய திருநாட்டில் ஒவ்வொரு அய்ந்து மணித்துளி களிலும்  ஒரு திருமதி தன் கணவனாலோ அல்லது கணவரின் உறவுகளினாலோ வன்கொடுமைக்கு ஆளாக்கப் படுகிறார்.அந்தத் திருமதியோ புகலிடம் இன்றி எல்லாக் கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு கணவன் வீட்டிலேயே வாழும் நிலை.
2013 ஆம் ஆண்டு பி. பி. சி. மேற்கொண்ட களஆய்வுப் பணியின் முடிவுகள் மிகவும் துயரம் தருவன. எடுத்துக்காட் டாக இரண்டு திருமதிகளின் உண்மை நிகழ்வுகளை கேளுங்கள். என் பெயர் அதிதி.(பெயர் மாற்றப்பட்டுள்ளது)
என்னுடைய தோழி என்னுடைய வருங்காலக் கணவரை அறிமுகம் செய்து வைத்தார். தேர்வு செய்தவரும் அவரே. அவர் நல்ல அழகு.. பழகும் பண்பு மெச்சத்தக்கது.  வியந்தேன், மகிழ்ந்தேன்.     திருமணம் கோலாகலமாக நடந்தது. உலகின் பல பகுதி களிலிருந்து  உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். சில வாரங்கள் ஓடின!  அதோ என் கணவர் வருகிறார். அறைக்கதவு மூடப்பட்டது.
இசைப் பெட்டியின் ஒலி கூட்டப் படுகிறது. இரைச்சல் அறை முழுவதும்  .அவர் இடுப்பிலிருந்த பெல்ட் அவர் கையில். விதி முறைகள் என்னிடம் சொல்லப்படுகின்றன.  கத்தாதே, இந்த அறையை விட்டு எந்த சத்தமும் வெளியே போகக் கூடாது. மீறினால் இந்த பெல்ட்டுக்கு அதிக வேலை"  அடுத்த அரை மணிநேரம் அந்த பெல்ட்டுக்கு நல்ல வேலை. என் உடலை பதம் பார்த்தது. போதாது என்று அவருடைய கையும் முட்டியும் என்னைத் தாக்கியது.. காது கூசும் அளவுக்கு தகாத வார்த்தைகளால் அர்ச்சனை. அவருடைய கொடுஞ்சினம், அப்பப்பா!
கணவருக்கு   எல்லாப் பணிவிடைகளையும் மிகக் கவன மாக செய்தேன்.அவருடைய குறிக்கோளோ குறைகளைக் காண்பதிலேயே. வன்கொடுமை வளர்ந்ததே அன்றி எள்ளள வும் குறையவில்லை.   அவர் வீட்டிற்குள் நுழையும்போதே 'திக் திக் 'திக் இதயம் பட படக்கும்  இன்று என்ன ஆகுமோ என்ற அச்சம்.
என்னுடைய 19ஆம் வயதிலிருந்தே இந்த சவுக்கு அர்ச்சனை அரங்கேறுகிறது. ஆறு வருடங்களாக தொடர் கிறது.  நரகத்திற்கு போனால் எனக்கு அது சொர்க்கமாக இருக்கும்.
நாடினேன் என் பெற்றோர்களுடைய உதவியை  .உடற் காயத்தைக் காண்பித்தேன்.. ஒரு மகள் தன் தாயிடம் சொல்ல முடியாததைக் கூட விளம்பினேன். தாய் இரக்கப் பட்டாள்., ஊக்கமளிக்கவில்லை.. அந்தத் தாயோ இதெல்லாம் எப்படியம்மா உன்னால் என்னிடம் சொல்ல முடிகிறது ?  கணவனிடமே செல், .உன் மணவாழ்வை நீ தான் சரி செய்ய வேண்டும்., சகித்துக் கொள், பொறுத்துக் கொள் , தாங்கிக் கொள் " தந்தையோ குடிகாரர்,  .தாயைக் கொடுமைப்படுத் துவார்  இதுதான் இந்திய திருமதிகளின்  வாழ்க்கை முறையோ  என்றெண்ணினேன்.   நாளாவட்டத்தில் என் வாழ்க்கை சீர்மை அடையும் என்றெண்ணினேன்.   கானல் நீர்தான். கண்ணிலும் நீரில்லை. ஆண்டு 2012, ஏப்ரல் மாதம், நண்பர்கள் உதவியோடு தப்பினேன்.  புகலிடம் ஒரு அரசு சாரா அமைப்பில் - பணி புரிகிறேன். என் கடந்த கால கொடூர வாழ்க்கையைப் புறந்தள்ளிவிட்டேன்.
இதோ திருமதி சுனிதா (பெயர் மாற்றப் பட்டுள்ளது) அவர் சொல்கிறார். நான் வேலை பார்க்கிறேன், என் சொந்தக்  காலில் நிற்கிறேன் திருமணமான  மூன்றாவது நாளே என் கணவரின்   முழங்கை என்னை பதம் பார்த்தது.  அடியின் வேகத்தில் படுக்கையில் விழுந்தேன். குலுங்கிக் குலுங்கி இரவு முழுவதும் அழுதேன். ஆனால், ஒரு வார்த்தை "வருந் துகிறேன்" என்று, அவர் வாயிலிருந்து உதிரவில்லை.. என்னே ஒரு கொடூர நெஞ்சம்!
நான் வேலை பார்க்கிறேன்.,மணவிலக்கு பெறலாமா, மறுமணம் செய்து கொள்ளலாமா என்றெண்ணினேன். மண விலக்கு பெற்றவரை மறுமணம் செய்தவரை சமூகம் என்ன சொல்லுமோ, பரிகசிக்குமோ என்ற அச்சம்.
கணவரை அறிமுகம் செய்த தோழியிடம் சென்றேன். கையை விரித்தாள், அறிவுரை அள்ளி வீசினாள்." மணமாகி விட்டாலே நீ கணவனிடம் தஞ்சமாகி விடவேண்டும்." நான் கேட்டேன் "அவர் என்னைக் கொன்றுவிட்டால்"
அவள் "அவரை கொலை யாளியாக்கிவிடு, மணவிலக்கை விட மரணமே மேல், நான் உன் னுடைய இடத்திலிருந்தால் மரணத்தை வரவேற்பேன்" என் றாள்.  எதற்கும் எல்லையுண் டல்லவா, நான்கே மாதத்தில் நான் என் பெற்றோரிடம் சரணடைந்தேன்.
அதிதி, சுனிதா போன்ற திருமதிகளுக்கு  இந்திய நாட்டில்  பஞ்சமா, என்ன?
பாலியல் வன்கொடுமைகளை விட திருமதிகளுக்கு இழைக் கப்படும் வன்முறைகள் மிக அதிகம். இந்திய திருநாட்டில் களஆய்வு புள்ளிவிவரங்களை சிறிதே  பார்ப்போம்.
2013 ஆம் ஆண்டில் இந்தியப் பெண்களுக்கெதிரான வன் கொடுமைகள்- பதிவு செய்யப்பட்டவை.

பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் அதிகரித்தே வருகின்றன  இந்திய அரசு 2005 ஆம் ஆண்டில் இயற்றிய சட்டத்தின் காரணமாகவே வன்கொடுமை நிகழ்வுகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.
பெண்கல்வி, வேலைவாய்ப்பு, விழிப்புணர்வு, மனவலிமை போன்றவைகளே குற்றங்களை வெளிக் கொணர்கின்றன, பதிவு செய்யப்படுகின்றன.பெரும் எண்ணிக்கை மறைந்தே கிடக்கின்றன" என்கிறார் வழக்கறிஞர் மோனிகா ஜோஷி...
இந்திய அரசு இயற்றிய 2005ஆம் ஆண்டு சட்டம் உரிமை யியல் சட்டமே தவிர, குற்றவியல் வழக்கின் கீழே வரா.   உயிரற்ற சட்டமாக உள்ளது என்ற கருத்து நிலவுகிறது.
குடும்ப வன்முறை நிகழ்வுகள் இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமா? உலகெங்கும் நடைபெறுகின்றன, ஆனால் இந்தக் குற்றங்களுக்கெதிரான மயான அமைதி இந்தியாவின் கலாச் சாரத் தனிப்பண்பு.  பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறை ஆணாதிக்க சமூகத்தில் ஊறிப் போன ஒன்று. ஆணுக்குப் பெண் அடிமை .பெண்ணுக்கெதிரான கொடுமை வழமை யானது .பெண்களை உதாசீனம் செய்., பெண்களை அடிப்பதில் தவறில்லை.
மேற்குறிப்பிட்ட கலாச்சார சீர்கேடு இந்திய மக்களின் ரத்தத்தில் ஊறிய ஒன்று. இதனைச்  சீர் செய்ய பெண் கல்வி, மனவலிமை மற்றும்  அரசு இயற்றிய சட்டங்களை நேர்மையாக செயல்படுத்துதல் வழியாகவே இயலும். (பி.பி.சி.யின் ஆய்வுக் கட்டுரையின் தழுவல்)
சி.நடராசன்
-விடுதலை ஞா.ம.31.1.15,ப3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக